நாரதர் உபதேசித்த ராமாயணம்
முதல் ஸர்கம், நாரதர் வால்மீகிக்கு உபதேசம் செய்த ராமாயணம்.
ராமாயணத்தை முழுவதுமாக சுருக்கி சொன்ன அற்புதமான ஒரு ஸர்கம்
இதை மையமாக வைத்துத்தான், வால்மீகி 24000 ஸ்லோகங்கள் கொண்ட ராமாயணம் எழுதுகிறார்...
ராமாயணத்தில் பல இடங்களில், ராமாயணம் முழுவதும்
சொல்லப்பட்டிருக்கிறது. சுந்தர காண்டத்தில் சில இடங்களில் ஆஞ்சநேயர், முழு
ராமாயணத்தைச் சொல்கிறார்.
சாதாரணமாக் ஒரு ஸர்கம் முடிந்தவுடன், பல ஸ்ருதி என்று ஒன்று
உண்டு. பல இடங்களை கேட்பவர்க்கு, சகல செல்வங்களும், புகழும் கிடைக்க வேண்டும்
என்று தான் இருக்கும்.
அனால், நாரதர் உபதேசித்த இந்த முதல் ஸர்க்கத்தில், , படிப்பவர்க்கு சகல ஸௌபாக்யங்களும் கிடைக்கும் என்று கூறுகிறார். இப்படி சொல்கிறார்
“ராமாயணம் என்ற கதையைக் படிப்பவர்க்கு, மகன்கள், பேரன்கள்,
உறவினர்கள் கூட சேர்ந்திருக்கும் நீண்ட ஆயுள் கிடைக்கிறது அவர் உயிர் துறந்தபின்
ஸ்வர்க்கத்திர்க்குச் சென்று அங்கே கௌரவிக்கப்பட்டு நிலையாக தங்கி விடுவார்”
இது மிகவும் விசேஷமாகும். விஸ்வாமித்ரர், ஸ்கந்த ஜனனம்
பற்றி சொல்லும்போது பல ஸ்துதியில், கேட்பவர்களுக்கு சர்வ மங்களமும் உண்டாகட்டும்
என்று சொல்கிறார். இப்படி பல இடங்கள்.
ஏன், நாரதர்
சொல்லும் ஸங்க்ஷேப ராமாயணத்தில்,
“சொல்பவரை” ப் பற்றி குறிப்பிடுகிறார் என்றால் “நாரதர் குணத்தைப் பொறுத்து, -அவர் சொல்லும்
இருக்கிறது.” அவருக்கு சொல்லி சொல்லி
பழக்கம். அவர் ஒன்று தம்புராவை மீட்டிக்கொண்டு “கல்யாண குணங்களை” பாடிக் கொண்டு
இருப்பார். இல்லையென்றால் “யாருக்காவது உபதேஸம்”. இதை கலகம் என்று நாம் நினைத்தால்,
அது நமது அறியாமை
No comments:
Post a Comment