Thursday 30 June 2016

இசையோடு கலந்த இன்ப வெள்ளம் - ஆலத்தூர் சகோதரர்கள்



விரும்பிக்கேட்ட கச்சேரி.  திரும்பக் கேட்ட கச்சேரி- 26th ஜூன் 2௦16
எஸ் எல் நரசிம்மன் அவர்கள் concertopedia என்ற அமைப்பின் மூலம் அந்த காலத்து கர்நாடக இசைப் பாடகர்களின் கச்சேரியை, ஒரு ஹால் வாடைக்கும் எடுத்து, மெனக்கட்டு எல்லாருக்கும் இ-மெயில் மூலமாக தெரிவித்து, ஒரு ஆடியோ சிஸ்டம் அமைத்து, ஆப்பிள் LAPTOP கொண்டு வைத்துக்கொண்டு, அழகாக நடத்தி வருகிறார்.  ARKAY CONVENTION அரங்கத்தில் சத்தான சுமார் நாற்பது பேர்கள் அமர்ந்திருக்க ஒரு அருமையான கச்சேரியில் மனது கரைந்தது என்பது என்னமோ உண்மை தான்.
இந்த காலத்து தொழில் நுட்பம் அவருக்கு கை கொடுக்க, அந்த காலத்து கச்சேரிகளை தூசி தட்டி அனாவசியமான ஒலிகளை அகற்றி “லட்டு” மாதிரி காதுக்கு இனிமையாக தருகிறார். அந்தக்காலத்தில், இந்த கச்சேரிகளை நேரில் கேட்டவர்கள் இந்த CLARITY யுடன் கேட்டிருப்பார்களா என்பது சந்தேகம் தான்.

இதற்காகவே அவருடைய தொப்பியில் ஒரு இறகு கூட வைக்கலாம். (One more feature in his cap).  சங்கீதத்தில் மிக ஆழமான ஈடுபாடு இருந்தால்தான் இப்படி மெனக்கட முடியும். ஸ்ரீ யஞ்ஜராமன் டிரஸ்ட் மூலமாக ஏற்பாடு செய்திருந்தார்.

மைலபூரில் இருந்தால் இது ஒரு சௌகர்யம். போன வாரம் மதுரை மணி அய்யர் அவர்களின் இதே போன்று ஒரு கச்சேரி கேட்க நேர்ந்தது. அது சர்க்கரைப் பந்தலில் தேன் மழை பொழிந்து போன்றது என்றால், இதுவும் இன்னொரு சர்க்கரை பந்தல் இன்னொரு தேன் மழை. 

மதுரை மணி அய்யர் கச்சேரியில்  சுருட்டியின் “அங்காரகமாஸ்ரயாம்யஹமும்”, பைரவியின் “கொலுவையும்” பேகடாவின் “அனுதினமுவும்”, போறதாதிற்கு ரசிகர் விருப்பமாக “பாமாலைக்கு” என்னை வேறு ஒரு உலகத்திற்கு கொண்டு போக,

ஆலதூராரின் ரீதிகௌளையில் “சேரராவதேயும்”, கேதாரத்தில் “ராமா நீ பையும்”. தோடியில் “தாசுவும்” என்னை தூங்கவிடாமல் செய்தது.  முகாரியின் ‘”எந்தா நின்னே” அவர்களுடைய கிரீடத்தில் பதித்த வைரம்.
சரஸ்வதி வாக்கியக்கார டிரஸ்டின் செக்ரெடரி N V சுப்பிரமணியன் அவர்களின் “ஆலத்தூர் சகோதரர்கள்” பற்றிய பேச்சு, கச்சேரியை போல் அருமையாக இருந்தது என்பதும் உண்மை. கச்சேரி முடிந்தவுடன் இவர் பேசியதால், ஆலத்தூர் சகோதரர்களின் “சங்கீத பாரம்பர்யத்தை, அதன் வீச்சை” புரிந்து கொள்ள முடிந்தது.

இது போன்ற கச்சேரிகளில் ஒரு சௌகர்யம் உண்டு.  வேண்டாத வயலினை cut பண்ணிவிடலாம். தனி ஆவர்த்தனம் வேண்டாம். போறும் என்றால் நிறுத்தி விடலாம். பல வித கச்சேரிகளில் இருந்து best kritis எடுத்துப் போடலாம். எல்லாவற்றிற்கும் மேலாக பாடியாவர்களுக்கு“பணம்”தரவேண்டாம்.

இந்த சகோதரர்களைப் பற்றி சில விஷயங்களை சொல்லியே அக வேண்டும். திருவையாறு தியாகராஜ ஆராதனை யில் 192எட்டில் ஆரம்பித்த அவர்களுடைய இசைப்பயணம் 1939 ல் MUSIC அகாடெமியில் வளர்ந்து பல வித பரிமாணங்களைத் தொட்டது.

1964- மியூசிக் அகாடமி சங்கீத கலாநிதி விருது சுப்பையருக்கு கொடுக்க வந்தபோது, சுப்பையர் அதை வாங்க மறுத்ததோடு ஸ்ரீ நிவாச அய்யருக்கும் சேர்த்து கொடுக்க வேண்டும் ஏன்று நிர்பந்தித்தார். அந்த காலத்தில் சகோதரர்களுக்கு சங்கீத கலாநிதி கொடுக்கும் வழக்கம் இல்லை என்பதால் இந்த பிரச்னை. சுப்பையர் மேலும், அப்படி இல்லை என்றால் அடுத்த வருடம் இன்னொருவருக்கு கொடுக்க வேண்டும் என்றும் வற்புறுத்தினர்.  ஸ்ரீனிவாச அய்யர் வயதில் பெரியவர் என்பதால் அவருக்கு முதலில் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்ய, அதை ஸ்ரீ நிவாச அய்யர், சுப்பையருக்குத்தான் முதலில் கிடைக்க வேண்டும் என்று அடம் பிடித்து வாங்க மறுத்தார்.  சுப்பையரின் தந்தை வெங்கடேச அய்யர் படத்தின் முன் சீட்டு குலுக்கி போட்டதில் சுப்பையரின் பெயர் வந்தது. அடுத்த வருடம் ஸ்ரீனிவாச அய்யருக்கு கொடுக்க வேண்டும் என்ற உத்தரவாதத்துடன்.  (தேங்க்ஸ் டு தஞ்சாவூரான் இன் ரசிகாஸ்.org)

ஆடுத்த வருடம் ஸ்ரீனிவாச யாருக்கு கொடுக்கும் போது, சுப்பையர் உயிருடன் இல்லை.என்பது உண்மையான சங்கீத சோகம்.

என்னுடைய தந்தையாருடன்.ஆலத்தூர் சகோதரரகளைப் பற்றி பேசும் வாய்ப்பு கிடைத்தது.  என் தந்தை மதுரை சோமுவின் பரம ரசிகர். இருந்தாலும் அவர் அந்த காலத்து வித்வான்களிடம் வைத்து இருந்த மரியாதை மிகவும் உசத்தியானது. அவர் சொலும்போது அந்தக்காலத்தில் தனித் தனியாக ரசிகர்கள் இருந்தார்கள்.  சோமுவுக்கு என்று ஒரு கூட்டம். GNB க்கு என்று ஒரு கூட்டம். அதே போல் ஆலத்தூர் சகோதரர்களுக்கு என்று ஒரு கூட்டம் இருந்தது  ஒவ்வொரு கூடத்திலும் இருப்பவர்கள் அசகாய சூரர்களாக இருப்பார்கள்.  அந்த கச்சேரியை அக்குவேறு ஆணி வேறு என்று விமர்சனம் செய்வதில் சமர்த்தர்கள்.

Interestingly,  Srinivasa Iyer’s son, Mr.S.Thyagarajan was working as Principal of National College, Trichy where my father worked as Vice Principal.   Both of them are thick friends even now. 
என்னுடைய தந்தை எஸ். தியாகராஜன் அவர்களைப் பற்றிச் சொல்லும்போது, அவர் சொன்னதாகச் சொல்லுவார் “எனக்கு பாட்டு வராததிற்கு காரணம் என்னுடைய தந்தை சிஷ்ய பரம்பரையை வளர்க்காதது தான்.” என்றார்.  திருச்சியில் இருந்த மிகப் பெரிய தந்தையின் வீட்டை குடும்பச் சந்தையில் பிரிக்க நேர்ந்ததை நினைத்து இன்றும் வருதப்பட்டுக்கொண்டிருக்கிறார்”. என்பதும் ஒரு சோகம்.
என் வீ சுப்ரமணியம் அவர்களின் பேச்சின் சில பகுதிகளைக் கேட்டாலே ஆலத்தூர் சகோதர்களைப் பற்றி பல விஷயங்களை புரிந்து கொள்ள முடியும் அதனால், முதலில் இதைப் பாப்போம்..
-     
      19th Century யில் கர்னாடக சங்கீதம் ஒரு தனி விதமாக இருந்தது. அப்போது ராகம் தானம் பல்லவி தான் பிரதானம். தியாகராஜ கீர்த்தனைகள் துக்கடாவாக பாடப்பட்டன.  வர்ணம், ராகம் தானம் பல்லவி தான் முக்கியமாக இருந்தது.

-        20th century யில் தான் கீர்த்தனைகளுக்கு மதிப்பு கொடுத்து பாடத்தொடங்கிய காலம்.  So, composition music started only in 20th century beginning, and 19th century end. அதனால் கீர்த்தனைகளை பிரதானமாக பாடுவதற்கு சில எதிர்ப்புகள் கூட இருந்தது.  மேலும் இந்த கீர்த்தனைகளை ஸ்வரப்படுத்தி ஒரு கச்சேரிக்கு வாகாக கொண்டு வருவது என்பதும் ஒரு CHALLENGE என்றே சொல்லலாம்.  அதற்கு முக்கிய பங்கு வகித்தவர் அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் (ARi).
-     
அதன் பிறகு பட்டமாள் ஸ்கூல் என்று ஒன்று உருவாயிற்று.  பட்டம்மாள் ஸ்கூல் என்றால் authentic. அப்போது எந்த ஒரு கீர்த்தனையும் முறையாக பாடாந்திரம் செய்ய வேண்டும் என்றால் பட்டம்மாள் ஸ்கூல் தான் முன்னோடியாக் இருந்தது. அதனால் பாடாந்திரம் மிக முக்கியம் என கருதப்பட்ட காலம். 

ஆலத்தூர் சகோதரர்கள் அவ்வாறாக பாடாந்திர சுத்தம் personified.

Excellence in singing, innovative outpour are two different factors of a singing pattern.
Alathur brothers music is excellence in singing wherein GNB’s singing is innovative outpour.  

இவர்களின் சங்கீதத்தில் ஒரு உண்மை இருக்கும். frankness. சங்கீதத்திற்கு, அந்த மேடைக்கு அவர்கள் கொடுத்த மரியாதை அலாதியானது.  ரசிகர்களுக்காக அவர்களுடைய ரசனைக்காக தன்னுடைய மேடை தர்மத்தை அவர்கள் விலை பேசியதில்லை.

Alathur பாணி became a Standard reference like pattammal school and so, they were double careful as to maintain the பாணி and not to truncate the kriti and bring the full “bhAvam” of the kriti.  They were particular not to face the wrath of Thyagaraja by singing it improperly.

அவர்களுடைய கச்சேரியை கேட்டு முடித்து வெளியில் வரும்போது முழு திருப்தியுடன் வரலாம்
-    
     மறி மறி நின்னே- காம்போதியில் தியாகராஜ கிருதி இவர் பாடாந்தரம் போல் எங்கும் கிடையாது.  ஆணித்தரமான ஒரு உண்மை.

-   ஜாம்பவான்களான GNB, MADURAI MANI IYER, ARI, FLUTE MALI இருந்த காலத்தில் இவர்கள் ENTRY ஆனதால் தனக்கென்று ஒரு இடம் பிடிக்க மிகவும் கஷ்டப்பட்டார்கள்.

- 
b இரட்டையர்கள் பாடுவது அந்தக்காலத்தில் புதிது என்பதால்.இந்த பரீக்க்ஷார்த்த முயற்சியில் பல வித சோதனைகளை சந்திக்க வேண்டி இருந்தது.

- பழனி சுப்ரமணியம் பிள்ளையுடன் ஆலத்தூர் சகோதரர்கள் செயத கச்சேரிகள் மிகவும் உசத்தியானது.  Unobstrusive playing.  Later on  Sri.Vellore Ramabhadran.

-         பல்லவி பாடும் திறமை, திருப்புகழில் அவர்களுக்கு இருந்த ஒரு பற்று.
திருப்புகழை தனியாக ஒரு கச்ச்ரியாக நான்கு மணி நேரத்திற்கு பாடி இருக்கிறாகள். திருப்புகழின் சந்ததம் பிசகாமல் மாறாமல் அடுமையாக பாடுவதி வல்லவர்கள்.

சீரியஸ் மியூசிக் கேட்க வேண்டுமென்றால் பட்டம்மாள் ஸ்கூல் அல்லது ஆலத்தூர் ஸ்கூல்.என்று அந்தக் காலத்தில் வரையறுக்கப் பட்டிருந்தது.

மீண்டும் இப்படி ஒரு அருமையான கச்சேரியை கேட்ட்டதற்கு கேட்கவைத்ததிற்கு எஸ். எல்.நரசிம்ஹானுக்கு ஒரு –oh- போடலாம்

Saturday 25 June 2016

ஹிந்தி படம் .TE3N.. விமர்சனம். (தமிழ் கௌரவம் =கொஞ்சம் comparison).



சினிமா விமர்சனம் தமிழில் எழுதுவது ஒரு சௌகர்யம்.  தமிழில் சில வார்த்தைகள் சரளமாக உபயோகிக்கலாம்.  ஆங்கிலத்தில் கஷ்டப்பட்டு இலக்கணபிழை இல்லாமல் ஒரு கட்டுரை எழுதவது கொஞ்சம் கஷ்டம்.

தாய்மொழி என்பது இன்னொரு சௌகர்யம். உதாரணமாக சல்லி அடித்தான் என்ற வார்த்தைகள் சுஜாதா அவருடைய கதைகளில் உபயோகப்படுத்துவார்.  அது அந்த situation க்கு அழகாக இருக்கும்.  இதற்கு ஆங்கில வார்த்தை தேடுவது கஷ்டம்

சுஜாதாவின் கதைகள், கட்டுரைகள் மேல் எனக்கு தீராக்காதல் உண்டு. சோகக்கதைகள் எழுதும்போது கூட அதில் இழையோடும் ஒரு நகைச்சுவை அலாதியானது.  தமிழ் கதைகள் எழுதும் யாரும் அவரது தாக்கம் இல்லாமல் எழுதவே முடியாது.

சில ஹிந்தி படங்கள் மிக சிறந்த கதைகளுடன், நேர்த்தியான தொழில் நுட்பத்துடன் வருகின்றன என்பதை மறுக்கமுடியாது.

சமீபத்தில் TE3N என்ற ஒரு ஹிந்தி படம் பார்த்தேன். அது அமிதாப்பச்சன், நவாஸ்உதின் சித்திக் மற்றும் வித்யா பாலன் நடித்த ஒரு த்ரில்லர்.  எனக்கு நவாஸ்உதின் சித்திக்கின் நடிப்பு மிகவும் பிடிக்கும்.  பத்லாபூர் என்ற ஒரு ஹிந்தி படத்தில் மிக அருமையாக வில்லன் வேடத்தில் நடித்திருந்தார். ஒரே டைப்பான ரோல் என்றில்லாமல் வில்லன், காமெடியன், ஹீரோ என்று ஒவ்வொரு படத்திலும் விதம் விதமாக பரிமளிக்கும் சிறந்த நடிகர்.
 
அவருடை பஜ்ரங் பாயிஜான் படத்தில் சல்மான் கான் ஹீரோவாக நடிக்க இவர் மிக முக்கியமான கதாபத்திரத்தில் மிக அருமையாக நடித்திருந்தார். 
அதனால் இந்தப் படம் பார்த்தேன். ஒரு கொரியா படத்தின் தழுவல் தான் இந்தப படம் என்பது டைட்டில் பார்க்கும்போது புரிந்தது.

கதை என்னவோ இதுதான். தன் பேத்தி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட அதனுடைய தாக்கத்திலிருந்து மீள முடியாமல் 8 வருடம் மன உளைச்சலில் வாழ்கிறார் அமிதாப்பச்சன்.  அவருடைய மனைவி அந்த அதிர்ச்சியில் சக்கர நாற்காலியில், போலீஸ்காரராக இருந்து இப்போது பாதிரியராக இருக்கும் அவரது நண்பர். (நவாஸ்உதின் சித்திக்)  தற்போது கிரைம் ப்ராஞ்சில் இருக்கும் வித்யா பாலன்.  இவர்கள் மூன்று பேருக்கும் இடையே நடக்கும் இந்த கதை ஒரு thriller  க்கு உண்டான எல்லா   ingredients உள்ள ஒரு படம்.  படம் பேர் இந்த மூவரை சுற்றி கதை என்பதால் “தீன்” என்று வைத்திருக்கிறார் போலும்.

மனதை தளர விடாமல் பச்சன் தினமும் போலீஸ் ஸ்டேஷன் சென்று வித்யா பாலனிடம் விசாரிக்கிறார். போலீஸ் இந்த கேசை கை கழுவி விட தான் மட்டும் “சற்றும் தளராமல்- விக்கிரமாதித்தன் போல” எதாவது தடயம் கிடைக்குமா என்று தேடுகிறார்.  

பாதிரியாரும் அமிதாபின் வைராக்யத்தை புரிந்துகொண்டு மனம் இளகி உதவி செய்ய ஆரம்பிக்கிறார்.

மெதுவாக சிறு சிறு தடயங்களை வைத்து போலிசின் உதவி இல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய கண்டுபிடிக்கும் முயற்சியில் முன்னேறிக்கொண்டிருக்கும்போது, அதே போல் இன்னொரு குழந்தை கடத்தப்படுகிறது.  எட்டு வருடம் முன்பு போல், இந்த கடத்தல் இருப்பதால் போலீஸ் மிக ஜாக்கிரதைய குற்றவாளியை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறது. குற்றவாளியை அதே பாணியில் பிடிக்கப்போக ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. அந்தக்குழந்தையை கடத்தியவர் அந்த சிறியவனின் தாத்தா என்பதுதான்.

இரண்டாவது’ பகுதி பல வித twists & turns உடன் நகருகிறது. கடைசியில் அந்த சிறியவனின் தாத்தா தான் அமிதாபின் பேரனைக்கொன்றவன் என்று படம் முடிகிறது. சந்த்தர்ப்ப வசத்தால் அமிதாபின் பேத்தி இறக்க நேர்ந்தது என்பதும் துரதிர்ஷ்டவசமாக சித்திக்கும் அதற்கு ஒரு காரணம் என்பதும் அதனால் சித்திக் பாதிரியாராக போனார் என்பதும் இன்னொரு twist.

அமிதாப் தான் அந்த குற்றவாளியை கண்டுபிடித்து அவருடைய பேரனேயே கடத்தி அவரையே மாட்டிவிடுகிறார் என்பதும் தெரிய வரும்போது உண்மையாகவே ஒரு த்ரில்லர் படத்தி பார்த்த அனுபவம்

வினை விதைத்தவன் வினை அறுப்பான், திணை விதைத்தவன் திணை அறுப்பான் என்ற பழமொழி போல, குற்றவாளி சட்டம் தண்டிக்க மறந்தாலும் கடவுள் தண்டிப்பார் என்பதை போல இந்த கதையின் அமைப்பு இருந்ததது.

கௌரவம் படம் சிவாஜி அவர்கள் நடித்த அற்புதமான படம். இந்தப் படத்தை இங்கே சொல்வதன் காரணம், இந்தப் படத்தின் கதையும் TE3N படத்தின் கதையும் ஏறக்குறைய ஒரே கதையாம்சத்தை கொண்டது.  வியட்நாம் வீடு சுந்தரம் அவர்களின் அருமையான கதை வசனத்தில் சிவாஜி இரட்டை வேதத்தில் கலக்கியிருந்த படம் இது.

நிஜமாகவே கொலை செய்த ஒருவனை தன்னுடைய வாதத்திறமையால் நிரபராதி என்று விடுதலை வாங்கித் தருகிறார்.ஒரு திறமையான வக்கீல். விடுதலை ஆனபிறகு அந்த நிரபராதி செய்யாத ஒரு கொலைக்கு மாட்டிக்கொண்டு குற்றவாளி ஆகிறான்.  வக்கீலின் திறமையான வாதத்தால் கூட அவனை விடுவிக்க முடிவதில்லை.  கை தேர்ந்த வக்கீலை அவருடைய மகன் ஜூனியர் வக்கீல் வெற்றி பெற்று அந்த நிரபராதிக்கு தண்டனை வாங்கித் தருகிறான்.

தெய்வம் நின்று கொல்லும் என்ற கூற்றை மெய்ப்பிக்கும் கதைஅம்சம் உள்ள இரண்டு படமும் மிகச்சிறப்பான நடிப்பால் உயர்ந்து நிற்கிறது.

சிவாஜியையும் அமிதாப்பச்சனையும் COMPARE பண்ணுவது என் நோக்கோமல்ல.  கதையின் ஒற்றுமைக்காக இந்த COMPARISON.

As an Old man, Amithabh excels in the character of a “helpless”old man.  He portrays the feelings of a grandfather who lost his loving daughter.

Nawazudding siddique is calm and composed.

வித்யா பாலன், சற்று குண்டாக அழகாக இருக்கிறார்.  அவர் வரும் சீனில் ஒரு அழகு இருப்பது உண்மை

Friday 24 June 2016

Kanna dAsan on mahA periavA- இன்று கண்ணதாசன் பிறந்த நாள்.24-06-2016 (24-06-1927)



கண்ணதாசன் எழுதிய சங்கர பொக்கிஷம் நூலிலிருந்து
பூணூல் அணிந்தவனா, இல்லாதவனாஎன்று பார்த்துக் கொண்டிருப்பதை விட்டு விட்டு காஞ்சிப் பெரியவரின் பெயரால் எல்லாரும் ஒன்று படுவதே நல்வாழ்வுக்கு நல்ல வழி.
மனிதாபிமானத்திலிருந்து  மதாபிமானம் வரை;   விஞ்ஞானத்திலிருந்து மெய்ஞானம்  வரைமனித மனோ பாவத்திலிருந்து தெய்வ குணங்கள் வரை காஞ்சி பெரியவர்கள் தொடாத துறை எதுவுமே இல்லை.
அவர் விளக்கிச் சொன்னதுபோல, வேறு எந்த ஞானியும், மேதையும் விளக்கிச் சொன்னதாகவும் எனக்கு நினைவில்லை.
அவரது தனிமை, கல்விஅறிவு நுண்மாண் நுழைபுலம், தீர்க்கதரிசனம்எந்தப் பொருளின் மீதும் ஒரு தெளிவுதெளிவான பொருளில் கூட தன் அபிப்ராயம் என்ற தெளிவான முத்திரை இவையெல்லாம் வேறு எவரிடமும் காணமுடியாத அம்சங்களாகும்.
பல இடங்களில்அனுபவப்பட்ட சம்சாரிகள் கூடக் காண முடியாத கருத்துக்களைஅப்பழுக்கற்ற துறவியான அவர் காண்கிறார்.
ஜாதியைக் கடந்த ஒரு நியதியை, சமமாகப் போதிக்கிறார்.
அவரது எழுத்துகளை கல்கியில் படித்த போதுஅவற்றை எல்லாம் தொகுத்து புத்தகமாக வெளியிட வேண்டும் என்ற ஆவல் எனக்குள் எழுந்தது.
அந்த வேலையை வேறு நண்பர்கள் வெகு அழகாகச் செய்து வருகிறார்கள்.
இந்து சமயமும்இந்திய நாடும் அவர்களுக்குக் கடமைப் பட்டிருக்கின்றன.
ஒரு மாபெரும் மேதையின் கருத்துகள் வீணாகி விடாமல், குறைந்த பட்சம் தமிழறிந்தோர் அனைவரின் மத்தியிலும் வைக்கப்பட வேண்டும்.
அதற்காகவே முக்கியமான சில கருத்துக்களைத் தொகுத்துகுறைந்த விலையில் இப்படிக் கொண்டு வந்தேன்.
ஓராண்டுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சி….
காஞ்சிபுரத்தில் சங்கர பக்த ஜன சபை‘  என்று ஒன்றிருக்கிறது.
பலருடைய ஒத்துழைப்போடு அதை நிர்வகித்து வருபவர்கள்,  “வைத்தி“,  “வைத்தா”  இருவரும்.
அந்த பக்த ஜன சபை ஆண்டு தோறும் ஒரு மலர் வெளியிடுகிறது.
அந்த மலரில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டுதான் பெரியவரின் தேனம்பாக்கம் தனிமைக் குடிலும்அங்கிருக்கும் பசுவும், சிறு நிலமும் பாதுகாக்கப்படுகின்றன.
சென்ற ஆண்டுமலரை நான் வெளியிட வேண்டும் என்று  வைத்தியும்வைத்தாவும்  அழைத்தார்கள்.
அந்த விழாவுக்கு தலைமை வகித்தவர்உயர் நீதி மன்ற நீதிபதி திரு. பாலசுப்ரமணியன் அவர்கள்.
நான் விழாவில் பேசி முடிக்கும்போது மணி ஒன்பது பதினைந்து ஆகி விட்டது.
ஜஸ்டிஸ் பாலசுப்ரமணியன் விழா துவங்குவதற்கு முன்பே,   தேனம்பாக்கம் சென்று பெரியவரைப் பார்த்து வந்து விட்டார்.   நானும்வைத்தியும்வைத்தாவும்  சென்ற போது, மணி ஒன்பது நாற்பத்தைந்து.
கொட்டகைக்குள்ளே துயில் கொள்ளத் தொடங்கிய பெரியவர்,   என் பெயரை வைத்தி சொன்னதும் எழுகின்ற அரவம் கேட்டது.
அரிக்கேன் விளக்கு மெதுவாகத் தூண்டப்படுவது தெரிந்தது.
கொட்டகைக்குள் சிறு கடன்களை முடித்து விட்டு பெரியவர் வெளியே வந்துஅதன் வாயிற்படியிலேயே ஒரு பழம் பாயை எடுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தார்.
என்னிடம் அவர் கேட்ட கேள்விகள் அனைத்தும் என்னைப் பற்றி அவர் முன்பே அறிந்திருந்ததைக் காட்டின.
நான் கிணற்றோரமாக நின்று கொண்டே இருந்தேன்.
இந்த நாட்டின் பிரதம மந்திரிக்குக் கூட கிடைக்காத வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
பெரியவர் சுமார் ஒரு மணி நேரம் என்னோடு பேசிக் கொண்டிருந்தார்.
நான் எழுதிய பல விஷயங்கள் பற்றி என்னிடம் கேள்விகள் கேட்டார்.
சேர நாட்டு மன்னராக இருந்து,   திருமால் பக்தியில் ஆழ்வாராக மாறிய குலசேகர ஆழ்வாரைப் பற்றி  அவர் முன்பே எழுதியிருப்பார் போலிருக்கிறது.   அந்த விஷயத்தையே சற்று அதிகமாகக் கேட்டார்.
பிறகு சேர நாட்டுக்கும் தமிழ் நாட்டுக்கும் உள்ள ஒற்றுமையை விளக்கினார்.
கொங்கு நாட்டில் திருச்செங்கோடு‘  என்ற ஒரு ஊர் இருக்கிறது.  கேரளாவில் கொல்லங்கோடு  என்று ஊர் இருக்கிறது.   ‘கோடு‘  என்ற சொல் தமிழிலே மலையைக் குறிக்கும் என்பது உனக்குத் தெரியும்.   அப்படி பார்க்கப் போனால் சேர நாடு என்பது பழங் காலங்களில் தமிழ் நாடாகவே இருந்திருக்க வேண்டும்.  இல்லையென்றால் கொங்கு நாடு சேர நாட்டின் ஒரு பகுதியாக இருந்திருக்க வேண்டும்”  என்றார்.
அவர் மற்றொன்றும் சொன்னார்.
மலையாள மொழிக்கும் தமிழ் மொழிக்கும் உள்ள ஒரு வித்தியாசத்தைப் பார் கண்ணதாசன்.  தமிழிலே வந்தான்என்று சொன்னாலே ஒரு ஆண் மகன் வந்தான்என்று அர்த்தம்.  ‘வந்தாள்என்றால் ஒரு பெண்மகள் வந்தாள்என்று அர்த்தம்.  மலையாளத்தில் வந்நூ’  என்கிறார்கள்.   அந்த வினைச் சொல்லில் வந்தது ஆணா பெண்ணா என்று தெரியவில்லை.   அதனால் அவனாஅவளா’  என்பதைச் சொல்லியாக வேண்டியிருக்கிறது.   ஆங்கிலத்திலும் அந்தக் கதிதான்”   என்றார்.
இளமைக் காலத்து ஞாபக சக்தி எனக்கு இன்னும் இருக்குமானால் அந்த ஒரு மணி நேர விவாதத்தையே  நான் ஒரு புத்தகமாக்கி இருப்பேன்.  பல அற்புதமான விஷயங்கள் மறந்து போய் விட்டன.
இரவு ஹோட்டலுக்குத் திரும்பிய போது மணி பதினொன்று.
வெகு நேரம் அந்தச் சந்திப்பு என் கண்ணிலும் கருத்திலும் நின்றது.
மற்றும் ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து ஆறு மாதங்களுக்குப் பிறகு மறுபடியும் தேனம்பாக்கத்துக்குப்  போனேன்.
ஆனால், அன்று கூட்டம் அதிகம்நான் பேச முடியவில்லை.
இப்போதெல்லாம் மனதில் ஏதாவது கவலைகள் தோன்றினால் ஒரு முறை காஞ்சிபுரம் போய் வரலாமா’  என்று தோன்றுகிறது.
நான் எவ்வளவோ பேரை வாழ்க்கையில் சந்தித்திருக்கிறேன்.   யாருக்கும் இவ்வளவு தீட்சண்யமான  கண்கள் இல்லை.
எதிரிகளும் களங்கம் சுமத்த முடியாதபடி துல்லியமான வாழ்க்கை வாழ்ந்து வரும் அவரைத் தமிழ் ஜாதி முழுவதும் புரிந்து கொள்ள வேண்டும்.
துரதிர்ஷ்டவசமாக  அவரை பிராமண ஜாதியின் தலைவர் என்று, பிராமணரல்லாதார் பலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள்.
இது பிராமணர்கள் செய்த தவறாநாம் செய்த தவறா ?
இந்தத் தவறிலே இருவருக்கும் பங்கிருக்கிறது.
பிற ஜாதியினர் விரும்ப முடியாதபடி பிராமணர்கள் நடந்து கொண்டார்கள் என்பதும் உண்மை.
அது போலவே நமக்குச் சம்பந்தமில்லாதவர்  போல நாமும் நடந்து கொண்டோம் என்பதும் உண்மை.
இந்த நிலைமை இருவருமே மாற்றியாக வேண்டும்.
உலகமே அறிந்து கொள்ள வேண்டிய ஒரு மேதையைஒரு ஜாதியினர் தங்களுக்குள் அடக்கிக் கொள்வதன் மூலம்பக்தி மார்கத்துக்கு மட்டுமின்றிதத்துவ மார்க்கத்துக்கும்உலகத்துக்குமே அவர்கள் துரோகம் செய்திருக்கிறார்கள்.
அவரைக் கண்டு கொள்ளாதிருப்பதன் மூலம் பிற ஜாதியினர்ஞானம் என்னும் பெரும் பொருளையே இழந்து விடுகிறார்கள்.
சாதித் துவேஷத்தை மாற்றக் கூடியதும்,   நீக்கக் கூடியதும் பக்தி மார்க்கம் ஒன்றே.    நாத்திகம் அதை வளர்க்குமேயல்லாதுநீக்காது  என்பதைக் கண்கூடாகக் கண்டிருக்கிறோம்.
ஆத்திகம் தழைத்தோங்கி வரும் காலம் இது.
தமிழக மக்கள் அனைவருமே அய்யப்பனாகவும்பழனியப்பனாகவும்  அவதாரம் எடுக்கும் காலம் இது.
அற்புதமான எதிர்காலத்தை நோக்கி நாடு நடை போடுகிறது.
இந்த நேரத்தில்,  ‘பூணூல் அணிந்தவனாஇல்லாதவனா‘  என்று பார்த்துக் கொண்டிருப்பதை விட்டு விட்டு காஞ்சிப் பெரியவரின் பெயரால் எல்லாரும் ஒன்று படுவதே நல்வாழ்வுக்கு நல்ல வழி.