Wednesday 24 February 2016

MahAmaham-2016- My Pilgrimage to Temple Town – Part 1



Anya kshetre kritam paapam punya kshetre vinasyati
Punya kshetre kritam paapam Vaaraanasyaam vinasyati
Vaaranasyaam kritam paapam Kumbhaghone vinasyati
Kumbhaghone kritam paapam Kumbhaghone vinasyati

It is a true statement. One has to experience of divine air of this city and that to especially during mahAmaham festival !!!!

It is not a customary statement and whoever made the above verse, is a saint who has experienced the spiritual background of Kumbhakonam. 

Krupananda variAr, the famous “upanyAsakA” mentioned, while talking about vaLLi kalyAnam, “valli, in order to marry Lord Muruga, started from Valli malai (a mountain nearby Tiruttani) to Tiruttani.   Lord Muruga came all the way from “KailAya” to Tiruttani.  The distance between tiruttani and kailayam is immeasurable. 

What it means, if a bhakta takes one step towards God, God takes a giant step to reach the bhakta”

The same experience happened to me. When I was thinking whether to go or not, because of crowd factor, pollution factor and train, Bus etc, I decided, at last, to go because of “Guru’s grace”.  After I completed the pilgrimage, I felt so happy and felt, had I missed this, that could have been a great loss in my “spriritual journey”.

My wife was adamant to go as she was born and brought up in kumbakonam (kumb) and in laws’ big house could be a bonus for me as shelter and food are taken care of.

Leave balance in my office which, otherwise  get lapsed if not taken before March 16, was an added advantage for me to visit Kumbakonam.
So, I took off from Chennai by Rockfort express to Trichy as all the trains to Kumbakonam was full.  I had to stay with my parents  on Friday and visited “ShEEtalAmbha” in Anbil, a small place near Lalgudi, Trichy.   Goddess is said to be the younger sister of Samayapuram mAriamman and so powerful.  It was a good start from me as I prayed to magamAyi,  (Goddess of protector from evil) before I left for Kumb.

Saturday, morning train to Kumbakonam from Trichy was fully crowded indicating the intensity of the festival.  After getting down at dArAsuram, with great difficulty I reached my home at Soliappan Street.
As my wife joined me only on Sunday morning, Saturday, I had a field day and had two “divine” happenings.
1
 I   I could take a holy bath in mahAmaga tank, poRRamrai kulam and Cauvery. 
“It was the first time, I came here for mahAmagam, so it was a great experience of seeing so many “wells” in the tank and taking the water from each of the tank and pouring on the head.  Sprinklers also assisted in pouring water on your head.  The crowd enjoying the moment….”

       I had a darshan of kAnchi seers and could witness PradOsha pUja of kAnchi Mahan.

Sunday, after my wife joined me, we again went for a dip. It was an ordeal for us as the crowd was heavy in our second-PK- and we were asked to wait in a hot temperature and in a tAr road.  It took 4 hours to complete the full circle of “bath” in all the three kuLams. (tanks)

That day evening, we again went to Sankara mutt with our cousins to get the blessings and there, again, we met both the seers.

As I mentioned in the first parA, it was the blessings of my parents, Guru that we could get the darshans without any problem, despite the crowd and with no transport (auto,taxi) within the city etc.,

….to be continued.

குறுமுனி நோக்கில் கும்பேஸ்வரர் கோயில்

Another amazing article about Kumbakonam



இந்த மகாமகத் திருவிழா வினை மகோன்னதமாகக் கொண்டாடி நிறைவு பெறும் தருணத்தில், இப்படி ஒரு வைபவத்துக்குக் காரணமாக இருந்த கும்பேஸ்வரர் கொலுவிருக்கும் கும்பேஸ்வரர் ஆலயம் பற்றி குறுமுனி அகத்தியர் தமது நாடியில் குறிப்பிட்டிருப்பதைப் படித்து மகிழலாம் - பிரளய காலம் என்பது ஓவ்வொரு யுகம் முடியும் தருவாயில் வரும். அப்படி க்ருத யுகம் முடிவடையும்போது, வெள்ளம் பெருக்கெடுத்து பூமியை சூழ்ந்து கொண்டது. அப்போது படைக்கும் தொழிலை புரியும் பிரம்மன் உயிர்களையெல்லாம் சேர்த்து அமிர்தத்துடன் கலந்து ஒரு மண் பானையில் வைத்து, அதனை மாவிலை போன்ற திரவியங்களால் அலங்கரித்து, கலச பூஜை செய்து மகாமேரு மலை மீது வைத்தார். பிரளய வெள்ளம் அளவுக்கு அதிகமாய் பீறிட்டு ஜீவன்கள் நிரப்பப்பட்ட பானையை அடித்துக் கொண்டு பாரத நாட்டின் தென் திசையை நோக்கி மின்னல் வேகத்தில் வந்தது. தேவர்கள் சிவபெருமானை பிரார்த்தித்து ஜீவன்கள் அடைக்கப்பட்ட பானையை நிறுத்தும்படி வேண்ட சிவனும் தனது தோற்றத்தை கிராதமூர்த்தி வடிவு கொண்டு பாணம் ஒன்றால் அப்பானையை உடைத்தார். அப்படி அந்த கும்பம் என்ற பானை உடைந்து அதிலிருந்து அமிர்தமும் ஜீவன்களும் வெளிப்பட, மீண்டும் பூமியில் ஜீவராசிகள் உண்டாயின. இதனை அகத்தியர் தமது நாடியில்,

பிரளய நீரில் நீந்திய ஜீவ கும்பத்தை பாணமொன்றால் கயிலாயநாதன்
தகர்க்க கண்டோமே; அமிர்தமது நின்ற துவித்தலமும்
மகாமகமொடு பொற்றாமரை பொய்கையானதே
சிவனே தன்னமிர்த கரத்தால் கும்பத்தைக் கூட்டி
மலரசஞ்சாய்ந்து மணலிங்கமாக்கிட்டானே

- என்கிறார்.
ஆக கும்பத்தில் இருந்து வெளிப்பட்ட அமிர்தமது இரண்டு இடங்களில் தேங்கி நின்றது. அதனையே மகாமகக் குளம் என்றும் பொற்றாமரைக் குளம் என்றும் நாம் போற்றி வணங்குகிறோம். பிரம்மதேவரே இந்த கும்பேசுவரரை நிறுவினார். இங்குள்ள சிவன், கும்பத்தினாலும், மணல் மற்றும் தேன் கலந்து ஈசனே உருவாக்கியது என்று புலனாகிறது. மந்திர வடிவமாய் அன்னை மங்களாம்பிகை கோயில் கொண்டுள்ள புண்ணிய தலம் இது. சனிதசை, ஏழரை சனி, அஷ்டம சனி, கண்டக சனி போன்றவற்றின் உக்கிரம் தணிய இந்தக் கோயிலி லுள்ள தலமரமான வன்னி மரத்தடியில் வீற்றிருக்கும் கணபதியை வணங்கினால் உடனடி நிவாரணம் கிட்டும். இது கண்கண்ட உண்மை. பன்னி ரண்டு ஆண்டுக ளுக்கு ஒரு முறை சூரியனின் ஆட்சி வீடான சிம்மத்தில் குரு பகவான் கொலு விருக்க, மக நட்சத்திர தினத்தன்று மாசி மாதத்தில் மகாமக விழா கொண்டாடப்படுகிறது. அன்றைய நாளில் குருபகவான் வேண்டுதலின்படி மகாமக குளத்தில் வாயுதீர்த்தம், கங்கா தீர்த்தம், பிரம்ம தீர்த்தம்யமுனை தீர்த்தம், குபேர தீர்த்தம், கோதாவரி தீர்த்தம், ஈசான தீர்த்தம், நர்மதா தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், இந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம், காவேரி தீர்த்தம், யமன் தீர்த்தம், குமரன் தீர்த்தம், நிருருதி தீர்த்தம், தேவ தீர்த்தம், வருண தீர்த்தம், சரயு தீர்த்தம், கன்யா தீர்த்தம் போன்ற தீர்த்தங்கள் பூலோகத்தில் இருந்தும் தேவலோகத்தில் இருந்தும் வந்து சங்கமமாவதாக ஐதீகம். அப்படி புண்ணிய தீர்த்தங்கள் எல்லாம் கலந்த இத்திருக்குளத்தில் ஈசனே பத்து விதமான வடிவங்களில் அரூபமாய் நீராடுவார். அப்படி அவர் நீராடி மகிழ்கையில் அவருடைய வடிவங்களை தனது ஞானக் கண்ணால் கண்ட அகத்தியர் அத்திருக்கோலங்களை இப்படி வர்ணிக்கிறார்:

கோலமது ஐயிரண்டு ஆதிசிவனே
எடுத்து நீராடி நிற்கக் கண்டோமே
பிரம்ம முகுந்தனாய தனத்து விருக்ஷிபமென
பானீ கோணீ பக்தீயெனும் பயிரவா வகஸ்திய
வ்யானேனென விளங்க -வானோரும்
வழிபட்டு தம் மெய் மறந்தனரே

-அதாவது திருமால் பத்து அவதாரங்கள் எடுத்தது போலவே ஈசனும் பத்து வடிவங்கள் கொண்டு மகாமகக் குளத்தில் தானும் நீராடி, தேவர்களையும், பிற அனைவரையும் மகிழ வைத்தார் என்று நாடி வாயிலாக அறிகிறோம். அன்று ஈசன் எடுத்த திருவுருவங்கள் பிரம்ம தீர்த்தீஸ்வரர், முகுந்தீஸ்வரர், தன ஈஸ்வரர், வ்ருஷப ஈஸ்வரர், பாநீஸ்வரர், கோணீஸ்வரர், பக்தீஸ்வரர், பைரவ ஈஸ்வரர், அகஸ்தீஸ்வரர், வியானேஸ்வரர் ஆகும். இந்த மூர்த்தங்கள் யாவும் அரை நொடியில் தோன்றி நீராடி மறையும் என்கின்றனர் சித்தர்கள்.பொதிகை மலை செல்லும் வழியில் அகத்தியர் ராம பிரானை இலக்கு மணனுடன் சந்திக்கிறார். அனுமன் இந்த குள்ள மான முனிவன் தான் அகத்தி யன் என்று ராமனுக்கு அறிமுகப் படுத்தினார். வாட்டம் கொண்ட ராமபிரான் முகத்தை இந்த மகாமக குளக்கரையில் கண்ட அகத்தியர், அவரை ஆறுதல் படுத்த முயன்றார். குடமது உடைந்து ஜீவன் வெளிப்பட்ட இந்த இடத்தை ராமனுக்கு அகத்தியர் விளக்கி, இது குடம் உடைந்து நின்ற தலம் என்பதால் குடந்தை என கூறி கும்பேசு வரரை வணங்கிட அழைத்து சென்று அந்த சந்நதியில் ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத் திரத்தை ராமபிரானுக்கு உபதேசம் செய்து, பஞ்சமுகம் கொண்ட ருத்ராட்சம் ஒன்றை ராமனுக்கு தந்து ஆசி கூறினார். மூன்று முறை ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்து பின் ருத்ராட்ச பீடத்தை தியானித்து ராமபாணத்தை ராவணன் மேல் ஏவ, ராமனின் பக்கம் வெற்றி வர, ராவணனின் பத்து தலைகளும் தலையில் உருள மண்டோதரியின் மங்கலநாண் அறுந்தது என்கிறார் அகத்தியர் தன் நாடியில்.

அருணகிரண ஸ்தோத்திரந் தன்னுடனே
ருத்ராட்ச பீடணங்கூட்டி எய்த ராமபாணமதால்
மண்டோதரியின் மங்கல நூலது
எரிந்து சாம்பலானதே

- என்ற செய்யுள் அகத்தியர் நாடியுள் உண்டு.  எல்லா சித்தர்களும், தேவர்களும் நீராட விரும்பும் பொய்கை இந்த மகாமகக் குளம். இதற்கு இணையான ஒரு பொய்கை ஈரேழு லோகங்களிலும் இல்லை. இந்த 2016 ஆண்டில் மகாமகத் திருவிழாவின்போது அதில் நீராடியோர்  பெறும்பேறு எய்துவர். இதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு வருடம் மாசி மாத மக நட்சத்திர நாளன்றும் இந்தத் திருக்குளத்தில் நீராடி, ஈசனை வழிபட்டு, அடுத்து வரும் மகாமக நீராடலுக்கு அவரது அருளை வேண்டுவோம்; வெற்றி மேல் வெற்றி பெற்று வாழ்வில் வளம் காண்போம்.

Wednesday 17 February 2016

MahAmaham-2016



As the stage is set for a grand galA “tEErtha snAnam”.  (holy dip), let us know some facts about mahAmaham-2016.

The focal point of this festival, which falls on Feb 22 this year, is the Mahamaham tank located in the heart of Kumbakonam town, to the southeast of the famous Adhi Kumbheswarar temple.     A holy dip for salvation once in 12 years.

Hindus taking a holy dip in Mahamaham on this day, consider this as a great blessing and people from all over India come for the sacred bath.

The last Mahamaham was held on March 6, 2004.  Mahamaham tank located in the heart of Kumbakonam town, to the southeast of the famous Adhi Kumbheshwarar temple.  It covers an area of 6,2 acres and is trapezoidal in shape.  The temple is surrounded by 16 small mandapams (shrines).  The tank has 20 holy wells named after the 20 holy rivers of India. People take bath in these wells which are called tirthams (holy waters).

It is said that river Ganga and other holy rivers approached lord Shiva with a prayer, a wish that had long remained unfulfilled.  “Oh Lord, crores of human beings come to us to seek absolution for their sins and take bath.  We have to carry all the sins they leave with us, some of them unspeakably horrific.  Give us a way to cleanse ourselves of these sins we have had to take from humans. “

Lord replied, “Oh tirtha dEvatas..! Visits kumbakonam on Mahamaham day which is a sacred day.  Take a dip of Mahamaham tank and you will be cleaned fully.  This is an incontrovertible truth.”

All the holy rivers of our punya bhoomi assemble here on the Mahamaham day every 12 years and any one who has a bath in the tank gets the benefit of having bathed in all these punya tirthAs.

Some Tamil reading of

முழு யுக சக்கரத்தின் முடிவில் ஏற்படும் பெரும் பிரளயத்திலிருந்து தன்னுடைய படைப்புகளையெல்லாம் பாதுகாக்க அவற்றையெல்லாம் பிரம்ம தேவர் ஒரு குடத்திலிட்டு இமய மலையின் உச்சியில் வைத்தார் என்றும், பிரளயத்தில் இமயமலை உச்சி வரை சென்ற கடல் நீரில் அடித்துச்செல்லப்பட்டு தெற்கே அக்குடம் தரைதட்டிய இடம் தான் 'கும்பகோணம்' என்றழைக்கப்படுகிறது.

அப்படி கரைதட்டிய அமிர்தம் நிரம்பிய  குடத்தை அம்பெய்தி உடைத்து அந்த அமிர்தத்தில் நனைந்த மணலை கொண்டு லிங்கம் ஒன்றை செய்து சிவபெருமான் அதனுள் ஆதிகும்பேஸ்வரராக ஐய்யிக்கியமானர் என்றும் சொல்லப்படுகிறது.

மேலும் அக்குடத்தில் இருந்து வெளிப்பட்ட அமிர்தமே மகாமக குளமாக மாறியது என்றும் அதோடு ஐந்து குரோசம் தொலைவு அதாவது கிட்டத்தட்ட 24கி.மீ அளவுக்கு பரவியதென்றும் கூறப்படுகிறது.

இந்த 24கி.மீ சுற்றளவுக்குள் இருக்கும் திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், தாராசுரம், சுவாமிமலை, திருப்பாடலவனம் ஆகிய இடங்கள் பஞ்சகுரோசத்தலங்கள் என்றழைக்கப்படுகின்றன.  
கும்பகோணம் நகரின் பிராதன கோயிலாக இருப்பது ஆதிகும்பேஸ்வரர் கோயிலாகும். அப்பர், சம்பந்தர் ஆகிய சைவக்குரவர்களால் பாடப்பெற்ற சிறப்புடைய சிவாலயமாகும்.  காவிரியின் தென்கரையில் அமைந்திருக்கும் இக்கோயில் 1300ஆண்டுகள் பழமையானதாகும்.

இக்கோயிலின் திருக்குளமாக இருக்கும் மகாமக குளத்தில் தான் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாசி மாதத்தில் மகாமகத் திருவிழா நடக்கிறது.

மாசி மகக்குளம் கும்பகோணம் நகரின் மையத்தில் 6.2ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது. இந்தியாவில் இருக்கும் மிகப்பெரிய புனித குலங்களுள் இதுவும் ஒன்றாகும்.  

இக்கோயிலின் திருக்குளமாக இருக்கும் மகாமக குளத்தில் தான் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாசி மாதத்தில் மகாமகத் திருவிழா நடக்கிறது.

மாசி மகக்குளம் கும்பகோணம் நகரின் மையத்தில் 6.2ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது. இந்தியாவில் இருக்கும் மிகப்பெரிய புனித குலங்களுள் இதுவும் ஒன்றாகும்.  

இந்நாளில் முப்பத்துமுக்கோடி தேவர்களும் இக்குளத்திற்கு வந்து புனித நீராடி  செல்வதாக நம்பப்படுகிறது.

தேவர்கள் மட்டுமில்லாது கங்கை, யமுனை, சரசுவதி, நர்மதை, சிந்து, காவிரி, கோதாவரி சரயூ, பொருநை ஆகிய நதிகளும் கன்னியர் ரூபமாக வந்து மகாமகக்குளத்தில் நீராடி தங்கள் பாவத்தை போக்கிக்கொள்வதாக ஐதீகம்.

மகாமகக் குளத்தை சுற்றிலும் பிரம்மதீர்த்தேஸ்வரர், முகுந்தேஸ்வரர், தானேஸ்வரர், விருஷபேஸ்வரர், பரணேஸ்வரர், கோணேஸ்வரர், பக்திகேஸ்வரர், பைரேஸ்வரர், அகஸ்தீஸ்வரர், வியாசகேஸ்வரர், உமாபகேஸ்வரர், நிருதீஸ்வரர், பிரம்ளேஸ்வரர், கங்காதேஸ்வரர், முக்ததீர்த்தேஸ்வரர், சேஷஸ்தரபாலேஸ்வரர் என 16 சிவலிங்கங்கள் மற்றும் 21 கிணறுகள் அமைந்துள்ளன.

குளத்தை சுற்றியிருக்கும் 21கிணறுகளில் வாயு தீர்த்தம்,கங்கா தீர்த்தம்,பிரும்ம தீர்த்தம்,யமுனா தீர்த்தம்,குபேர தீர்த்தம்,கோதாவரி தீர்த்தம்,ஈசான தீர்த்தம்,நர்மதை தீர்த்தம்,சரஸ்வதி தீர்த்தம்,இந்திர தீர்த்தம்,அக்னி தீர்த்தம்,காவிரி தீர்த்தம்,யம தீர்த்தம்,குமரி தீர்த்தம்,நிருதி தீர்த்தம்,பயோஷினி தீர்த்தம்,தேவ தீர்த்தம் சிவன்,வருண தீர்த்தம், சரயு தீர்த்தம்,கன்யா தீர்த்தம் ஆகிய தீர்த்தங்கள் இருக்கின்றன.
இவற்றில் நீராடுவது பெரும் பாக்கியமாக கருதப்படுகிறது.  

12ஆண்டுகள் கழித்து இவ்வருடம் நடக்கும் மாசி மகத்தில் கலந்துகொண்டு ஆதிகும்பேஸ்வரரை வழிபட்டு மகாமக குளத்தில் நீராடி பெறற்கரிய ஆன்மீக அனுபவத்தை பெற்றிடுங்கள்.



63 நாயன்மார்களில் ஒருவராகிய நற்சூதர் என்ற மூர்க்கநாயனார் சிவனடியார்களுக்கு உணவளித்து தொண்டாற்றி வாழ்ந்து சிவனடியடைந்த தலமாகும்.  ஈசன் வேடன் ரூபம் தரித்து அமுத கும்பத்தை சிதைத்தபோது வில்வம் விழுந்த இடம் நாகேஸ்வரர் கோயிலாகவும், உறி விழுந்த இடம் சோமேஸ்வரர் கோயிலாகவும், பூனூல் விழுந்த இடம் கவுதமேஸ்வரர் கோயிலாகவும், தேங்காய் விழுந்த இடம் அபிமுகேஸ்வரர் கோயிலாகவும், வேடுவர் உருவம் தரித்து பாணம் எய்த இடம் பாணபுரீஸ்வரர் கோயிலாகவும், பூக்கள் விழுந்த இடம் ஆதிகம்பட்ட விஸ்வநாதர் கோயிலாகவும், கலசத்தின் மற்ற உதிரி பாகங்கள் விழுந்த இடம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலாகவும், கொட்டையூரில் கிணற்றில் அமிர்தம் விழுந்ததால் இடம் கோடீஸ்வரர் கோயிலாகவும், சந்தனம் விழுந்த இடம் காளஹஸ்தீஸ்வர் கோயிலாகவும், கலசத்தின் நடுப்பாகம் விழுந்த இடம் அமிர்தகலசநாதர் கோயிலாகவும் உருவெடுத்துள்ளது.