Sunday 26 December 2021

ராமகிருஷ்ணன் மூர்த்தி - Mylapore Fine Arts - 19-12-21

 

19.12.21

மைலாபூர் ஃபைன் ஆர்ட்ஸ் ல் ராமக்ருஷ்ணன் மூர்த்தி:

பக்க வாத்யங்கள்:  காரைக்குடி மணி, டெல்லி சுந்தர்ராஜன், சுரேஷ் (கடம்)

கொஞ்சம் கச்சேரியைப் பற்றி எழுத்துவதற்க்கு முன்:

நேரில் கச்சேரி என்பது இந்த வருடமும், அத்திப் பூத்தாப்போல் தான். பாரதிய வித்யா பவனம் துணிந்து ஆரம்பிக்க, மைலாபூர் ஃபைன் ஆர்ட்ஸ் அதைத்தொடர்ந்து. தியாகராய நகரில் கிருஷ்ண காண சபா வும் ஆர்ம்பித்து இருக்கிறார்கள். நானும் 2-3 கச்சேரிகள் KGS போனேன்.  இப்போது துணிந்து நிறைய சபாக்கள் ...

எனக்கு என்னமோ இந்த யூ டியூப் கசேரிகளை விட, நேரில் கச்சேரி தான் பிடித்தது. வித்தியாசம் என்று கேட்டால், முதலில் சாப்பாடு, சாஸ்தா கேட்டரிங் என்று ஒன்று MFAC ல் இசை விழாவுக்காக arrange பண்ணி இருக்கிறார்கள். Rs 400 ஒரு சாப்பாடு. வடையும், வெங்காய சாம்பாரும் மணக்க மணக்க. அந்தப் பக்கம் கதவை திறந்து யாராவது அரங்கத்து உள்ளே வந்தால், அவர்களோடு கீரை வடை வாசனை, நெய் வாசனையும் கூடவே வருகிறது. சுகர் பேஷண்டுக்கெல்லாம் ராஜ யோகம்.  இதெல்லாம் எங்க ஸார் வீட்டிலே பண்றாங்க.? நிறைய பணம் இருந்து ரெண்டு இட்லி பொங்கல் கூட கிடைக்காமல் போன மாதம் கஷ்டப்பட்ட சென்னை வாசிகளை நான் பார்த்தேன்.

பல சபாக்களுக்கு, கேட்டரிங் சாப்பாட்டினால்தான் கூட்டம் வருகிறது. இதோ MFAC ல் உள்ளே இடைவெளி விட்டு உட்கார்ந்த ரசிகர்கள், இடைவெளியே இல்லாமல் இங்கே சாப்பிட உட்கார்ந்து இருந்தார்கள்.

மேலும் ரசிகர்களின் முக பாவங்களைப் பார்க்கலாம். உதாரணத்திற்கு  ரா.மூ. நேற்றைய கசேரியில் நாடகப்ரியா ராகம் பாடம், பாதி பேர், ஏதோ புத்தகத்தை புரட்டினார்கள். மொபைல் நோண்டினார்கள். என்ன தேடினார்கள் என்று புரியவில்லை. ஆனால் காமெடியாக இருந்தது. இதி சமயமு” என்று வாசுதேவாசர்யார் கிருதியை பாடுவதற்கு முன்பு, ரா.மூ ராகத்தின் பெயரைச் சொல்ல, வெள்ளம் வடிந்த சென்னை போல் மக்கள் முகத்தில் திருப்தி.  மேலும் நேரில் கச்சேரி, முக்கியமாக, பாடுபவர்களுக்கும், பக்க வாத்யக்காரர்களுக்கும் ஒரு பிடிப்பு, ரசிகர்களைப் பார்த்துப் பாடுவது என்பது பெரிய பலம்.

ராமக்ருஷ்ணன் மூர்த்தி மாதிரி ஒரு பாடகரின் பாட்டை, நேரில் பார்க்காமல், யூ ட்யூபிலும், மொபைல் போனில் வரும் லிங்க் களிலும் பார்ப்பது “மகா பாவம்” என்பேன்.

ரா.மூ பற்றி:

என்ன சங்கீதம் சார் !. என்ன ஆளுமை ! . அவர் சரஸ்வதி தேவி நமக்காக அனுப்பிவைத்த சங்கீத தூதர்.  நான் அவ்வப்போது நினைப்பதுண்டு. ஒவ்வொரு காலத்திலும். ஆன்மீக செழிப்புக்காக,  ஆதி சங்கரர் முதல் கொண்டு யாரோ நாம் நாட்டில் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். நல்ல சொற்பொழிவு, சங்கீதம் என்று சொன்னால், முன்னோர் காலத்தில் ஒரு அனந்த ராம தீக்ஷிதர், கிருபானந்த வாரியார், சம காலத்தில், ஸ்ரீ. சுந்தர்குமார், நொச்ச்சூர், செங்காளிபுரம் தீக்ஷிதர் பரம்பரை சொற்பொழிவாளர்கள். இந்தப் பக்கம்  அரியக்குடி முதல்..இசை வித்தகர்கள்.  கொஞ்சம் முன்பு, சேஷாகோபாலன், TVS, மகாராஜபுரம் சந்தானம்,. சினிமாவில் ஒரு எம்‌எஸ்‌வி பிறகு இளையராஜா என்று. சம கால சங்கீததில் சஞ்சய். மாயோன் ர.கா

2021 ல் ரா.மூ.

அது எப்படி சார், எந்தப் பாட்டைப் பாடினாலும் அழகாக இருக்கிறது ? நான் செம்மங்குடியில் பிறந்தாலும், பல பாடகர்களின் தீவிர ரசிகன். பல நண்பர்கள் ஒரு பாடகரை உயர்த்திப் பேசும்போது குறுக்கே பேசாமல், கேட்டுக்கொண்டு இருப்பேன். “எப்படி அந்த பாடகரின் இசை, இவர்களை ஆட்கொண்டு இருக்கிறது. எப்படி அந்த பாடகர்களின் ஆளுமையை ரசித்து இருக்கிறார்கள்” என்று ஆச்சர்யப்படுவேன். மதுரை மணி அய்யரின் (மைலாபூர்) ரசிகர்கள் கூடும் சபையில் நானும் இருப்பேன்.

என் தந்தை, மதுரை சோமுவின் பரம ரசிகர். இப்போ பாடும் பாடகரைப் பற்றிப் பேசினால் அவருக்கும் மிகுந்த கோபம் வரும். சஞ்சய் சுப்ரமண்யனைத் தான் கொஞ்சம் ஒத்துக் கொண்டிருக்கிறார். அவர் சொல்லுவார். “சோமு இரவு 9.30 மணிக்கு ஆரம்பித்து, காலை 3 மணிக்கு 45 நிமிஷம் ஒரு காம்போதி பாடுவான் பாரு ! கட்டிப்போட்டா மாதிரி எல்லோரும் உட்கார்ந்து இருப்பான். பக்க வாத்யக்காரன்கள் (full bench கச்சேரி) எல்லோரும் 3 தடவை “பாத் ரூம்” போயிட்டு வந்துருவான். இந்த கடன்காரன் (இதை விட மோசமான கெட்ட வார்த்தை சொல்லுவார்) அப்படியே உட்கார்ந்து இருப்பான்” என்பார்.  சொல்லும்போது அவர் கண்களில் கர்வம் மின்னும். இப்படி பல பேர்களை நான் பார்த்து இருக்கிறேன். GNB சங்கீததுக்காக, கிராமத்தை விட்டு, சென்னை வந்து, வக்கீல் ஒருவரிடம் டைப் ரைட்டர் ஆக சேர்ந்த ஒருவர். , இன்று சென்னையில் மிகவும் பிரபலமான ஆடிட்டரின் தந்தை.

மதுரை சோமு உட்பட. பாலக்காடு கே.வீ. நாராயணஸ்வாமி அவர்களின் “வெண்ணைக் குரலுக்கு” நான் எப்பவுமே அடிமை. என் பெண் அவர் துணைவியாரிடம் (ஸ்ரீமதி பத்மா நாராயணஸ்வாமி) தான் பாட்டு சொல்லிக் கோண்டிருக்கிறாள்.   ரா.மூர்திக்கு அதே குரல் வளம். அதே வெண்ணை  !!!

காரைக்குடி மணி போன்ற பெரிய வித்வான்களோடு நேரில் பார்த்தபோது, நிஜமாகவே அத்தி பூத்தா மாதிரியே இருந்தது.

ஆனால், பெரிய வித்வான்களோடு பாடும்போது, பக்க வாத்யம் கொஞ்சம் தூக்கலாக வைத்துக் கொண்டு விடுகிறார்கள். ரெகார்ட் பண்ணி பிறகு கேட்கும்போது, “சும்மா அதிருதல்ல” என்று தனியாக மிருதங்கம் அதிருகிறது. உமாயாள்புரம் சிவராமன் அவர்களிடம் இதே பிரச்னை தான்.

இனி கச்சேரியைப் பார்ப்போம்

சும்மா என்ன பாடினார் என்று லிஸ்ட் கொடுப்பதற்க்கு முன்பு, மிகவும் பிரமாதம் என்ன என்று தேடுவோம்.  கல்யாண சாப்பாட்டில் எல்லா அயிட்டமும் பிரமாதமாகத்தான் இருக்கும். திடீரென்று, ஒரு “அன்னாசி ரசம்” என்று ஒன்று போடுவான். அது நம்மை கிறங்க அடிக்கும். அது போல்.

சாவேரி ராகம் தானம் பல்லவியை முதலில் எடுத்துக் கொள்வோம். பல்லவி என்னமோ “சங்கரி சங்குரு.... அகிலாண்டேஸ்வரி” தான். அதில் பேகட, காபியையும் சேர்த்து குழைத்து ஒரு ஸ்வரம் பாடினார் பாருங்கள். அடடா....மூன்று கயிறைப் பிடித்துக் கொண்டு குதிரை ஓட்டுபவர்கள், எந்த குதிரையை இழுக்க வேண்டும், எதை லேசாக விடவேண்டும் என்று தெரிந்து, கயிற்றை நகத்துவார். அது போல் ஒரு ஸ்வரத்தை மாற்றி, 3 ராகத்தையும் மாற்றி மாற்றி பாடினார், குருக்ஷேத்திரத்தில், கிருஷ்ண பரமாத்மா, தேரை எவ்வளவு லாவகமாக வழி நடத்திச் சென்றாரோ, அது மாதிரி. டெல்லி கொஞ்சம் திணறித்தான் போனார்.

1.ரகுவர அப்ரமேய என்ற காம்போதி தியாகராஜா கிருதியை வைத்து ஆரம்பித்தார். அதில் உள்ள சிட்டை ஸ்வரத்திலேயே களை கட்டிவிட்டது

ராமனை சூரியனுக்கு ஒப்பிட்டு காட்டும் தியாகராஜரின் ஒரு அருமையான பாட்டு. ஞாயிற்றுக் கிழமை என்பதால், நன்கு பொருந்தியது.

2. கொஞ்சம் வராளியை காட்டி, திருப்பாவை. “ஆழி மழை” யை எடுத்தார். நிரவல் “வாழ உலகினில் பெய்திடாய், நாங்களும் ..... பாவாய்”. இந்த situation க்கு ஏற்ற நிரவல்.

3. நாடகப்ரியா ராகத்தை தேனாகக் குழைத்து கொடுத்தார். “இதி சமயமு” என்ற வாசுதேவாச்சார்யார் பாடலை பாடினார். ஸ்வரத்துடன் அழகாக முடிந்தது.  இதில் ஒரு சந்தேகம் எனக்கு வந்தது.  “கருண தோணு” என்ற சரணத்தில் ஸ்வரம் எடுத்தார்.  ஆனால் சங்கீத சுதாவிலும்” கர்நாடிக்” வரிகளைப் பார்க்கும்போது, “கருண ஜேஸி” என்று இருந்தது எது தவறு எது சரி. இரண்டுமே அர்த்தம் ஒன்றாக இருந்தாலும் இருக்கலாம்.

4. அருணாசல நாதம் – சாரங்கா வில் தீக்ஷிதர் கிருதி அடுத்து.

5. மனசுலோனி என்ற ஹிந்தோள ராக தியாகராஜர் கிருதி. வரமு, மார்க ஹிந்தோளம் என்று பாடாய் படுத்தினாலும், எனக்கு ஹிந்தோளம் தான். ஸ்வரத்தில் “மனசுலோனி” யை ஒரு பிடி பிடித்தார்.

6. முன்பே சொன்ன RTP. பல்லவியை பியாகடாவையும், காபியில் குழைத்துக் கொடுத்தார்.

7. தனி முடிந்தவுடன். சங்கரி சங்குரு பாடலை முழுவதும் பாடினார்.

8  நீலாம்பரி, ஆகிரி, சிந்து பைரவி, பெஹாக்

  விருத்தம்: “லோகானா பூய சர்வாம்.......பிரணத பயஹரம்.... கலயதி

  நடனம் யத் சபாயாம் நடேசஹ”

  “இரக்கம் வராமல் போனதென்ன காரணம்” - கோ.பா

9. தில்லானா- கானடா ராகம்

மங்களம்.

வயலின் டெல்லி, என்னமோ எனக்கு ரொம்பவும் ஒஸ்தியாகப் படவில்லை. மூர்த்தியின் அசகாய புடிகளைத் திரும்பப் புடிக்கசில சமயம் திணறினார்.  அங்கே குரு காரைக்குடி மணி போல் இங்கே குரு ஸ்ரீராம் குமார் இருந்தால் மிக அருமையாக இருந்திருக்கும்.  ஸ்ரீ ராம் குமார் லாவகமாக தலையை லேசாக கோதிக்கொண்டு, ஜம் ஜம் என்று வாசித்து இருப்பார்.

தனி – குரு காரைக்குடி மணி சுரேஷ் அவர்களுடன் சேர்ந்த தனி. சர்க்கரைப் பந்தலில் தேன் மழை பொழிந்தது போல்.....

ரா.மூ போன்ற விதவான்கள் இருக்கும் வரை, க இசை சிரஞ்சீவியாக இருக்கும். இதோ, கொரொனா, ஓமைக்ரான் என்று சொல்லி கடவுள் நாம் தூக்கத்தை தொலைக்க வைத்துக் கொண்டிருக்க, அதே கடவுள், ராமகிருஷ்ணன் மூர்த்தியின் கச்சேரி யையும் கேட்க வைத்து, இதுதான் மருந்து என்று சொல்லாமல் சொல்லுகிறாரோ.  என்று தோன்றுகிறது.

 

 

 

 

 

Friday 10 December 2021

VIJAY SIVA at Bharathiya Vidya bhavan on 10.12.21

 10-12-21- Bharadiya vidhya bhavan.

Vijay Siva

Lalgudi Vijayalakshmi

Mridangam- Melakkaveri balaji

After listening to this concert I wondered whether it was thematic concert titled “sarvam vishnumayam jagat” directed to “Chettinaad vidyaashram” as he rendered all songs except one on “Vishnus and his avataarams”. Even that single kriti in ghanta raagam “kamalaambaa”, there is a word with meaning that “ten avataarams of Vishnu came out of Ambaal’s finger nails”.  So it is a concert full of vishnuparam.

I always tried to attend Vijay Siva and Ramakrishnan murthy concerts. For me, they are singing for their souls and in this process take  us as part of their wonderful music journey…..

After a long time, I attended a live concert in BVB,  though it started a fortnight back.   BVB is always a “darling sabha” for mylaporeans like me because it is free and concerts starting early  before the mega music event.  Worst case,  In between buying vegetables and going to kapAli temple, you can enter this sabha and listen to couple of songs at least !!!

 Slowly, live programmes are coming up and people are scattered in the sabha as a precaution.  Instead of Third wave, music wave is slowly engulfing us. Good sign.

I somehow do not vote for youtube live. Only sitting in the sabha and looking at the reaction of rasikas is a real fun.

Coming to VS concert:

VS concert always has  some “fixed agenda”

Singing in BVB, that to near Kapaali koil, he will sing one Kapaali song or Karpagambaal or at least “eppO varuvArO” as tukkada.

He always takes a majestic main raagam  (Top 5 ragaas) and gives an exceptional rendering.

Unfortunately, to my surprise, none was there. 

Ghanta (meaning bell) is one Ragam which none explored better the MD. He has another kriti on Mangalaamba (kumbakonam) on this raagam.  MD always has the knack of bringing the raga name in his kriti. In this kriti, he says “she has big doors with big bells, which advertises the fruits of mukthi”

He took Kamaas as main- Brocheva….   Oops.  (This song, if not come in Sankarabharanam film, would not be famous at all !!!, I still wonder non-musicians or ordinary music lovers were singing the swaram in this song fluently)

List

Followed by his Bhujangam “sadA bAla”

1)    Vinnagath thevarum -  Tiruppalli yezuchi – boopalam

2)    Nee bhati bhagya sudha- Jeyamanohari- T  - beautiful neraval in “nAdaatmaka thyaagaraaja nAtha apramEya sadA”  (S)

3)    Todi- Ragam- Kodinanulu  (T)  - Swaram

4)    Kalyaani Raagam- Nambi kettavar illarO – Dasar – Normally neraval is taken in “garudagama shree purandara…..”.  He took it in “ambuja nAbhana akhila lokeshana”…..  

5)    Kamalaamba- kantAA- MD

6)    Kamas- brochevA – Mysore Vasudevacharyar – S in “aturamukha karirajulu”….

7)    Tani

8)    Krishnam Kalaya sakhi= Tarangam- Mukhari

9)    Vruthan- Nadanamakriya, chencurutti, followed by “Ninnai charanadaindhen’ - Bharatiyaar

10)                       Eru mayil eri vilayaadu mukam- Tiruppugazh – Ananda bairavi

Those who could not see live  DKJ-LGJ  would have been satisfied seeing VS –LV, LV’s so many “anAsAya pudis” in Todi and kamas are typical father’s training.  Very nice.

MB is always plays his part perfectly.  Getting few “besh” from VS showed his vidwat.

There is no comment on VS’ music as it is always impeccable.  Carnatic music is dedicated to him.  He never pricks in to the eyes of violinist. Just folding his hands, he goes to panchamam.  Gr8 to see him sitting live after a long time

Two things came out of my mind while driving back home:

As AnantarAma Dikshitar says, in his discourse, any one who gets up in the morning and starts reading the newspaper, finds, the paper was yesterday’s, never even touches it again and throws it.  (meaning yesterday’s news was a stale)  But we have been listening Todi and kalyaani from Ariyakkudi days to Post-corona days, still we don’t feel bored.  That is the beauty of Carnatic Music.  Thanks to the musicians who are born to make us happy always.

Attending live programme first time after almost 2 years, I could not forget few of my close friends, exceptional music lovers and critics,   lost because of epidemic. Life goes on.

 

 

 

 

 

 

Wednesday 2 June 2021

இரை தேடும்போது இறையையும் தேடு

 

எப்போ பார்த்தாலும் காசு காசு என்று காச நோய்” வந்தவனைப் போல் அலைகிறோம்.  அறுவது வயதுக்காரனும் அப்படிதான் இருக்கான். இருவது வயதும் அப்படியேதான்.

ஓரிடம் தனிலே, நிலை இல்லா உலகினிலே, உருண்டோடிடும் பணம் காசெனும் உருவமான பொருளே.... என்று அந்த காலத்து பாட்டு ஒன்று உண்டு.

அப்படி சேர்த்த செல்வத்தை அனுபவிக்கிறோமா என்றால் அதுவும் இல்லை. செல்வம், செல்வம் –செல்வோம் என்று சரஸ்வதி சபதம் படத்தில் சிவாஜி சொல்வாரே அது மாதிரி...... யாரோ சம்பாதிக்கிறான். ஒழுங்கான சம்பாத்யம் என்றால், சந்ததிகள் அனுபவிக்கும், இல்லையேல் வக்கீலும், தூரத்து சொந்தக்காரன் எவனாவது அனுபவிப்பான். திடீரென்று, இறந்துவிட்டால், எந்தப் பணம் எங்கு இருக்கிறது என்றே தெரியாது. எவனுமே அனுபவிக்க முடியாமல் போய் விடும். ஏதாவது பேங்க் அதை வட்டிக்கு விட்டு சம்பாதிதத்துக் கொண்டு இருப்பான்.

“அர்தாதுராணம் ந பந்துஹு ந மித்ரா” என்று சம்ஸ்க்ருதத்தில் ஒரு பழமொழி உண்டு.  பணம் இருக்கும் மனிதனிடம் நண்பன், உறவுக்காரன் இருக்கமாட்டான். ஏனெனில் இவன் அவர்களை நம்ப மாட்டான். விரட்டி விடுவான்.

அவ்வையார் போல் அறத்தை, நல்ல விஷயங்களை நமக்கு போதித்தவர் வேறு யாரும் இல்லை. அவர் எழுதிய நல்வழி என்ற ஒரு நூலில் ஒரு அருமையான பாடலில் மூலம் இந்த அவலத்தை விளக்குகிறது

சேவித்தும், சென்று இரந்துன் தெண் நீர்க்கடல் கடந்தும்

பாவித்தும் பாராண்டும் பாட்டு இசைத்தும் போவிப்பம்

பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால்

நாழி அரிசிக்கே நாம்

இதற்க்கு அர்த்தம் தேவை இல்லை. ஒரு கவளம் சாப்பாட்டுக்காக நாம் பண்ணும் “அலப்பறைகள்” பல.

நாம் ஜோசியரிடம் செல்கிறோம். அவர் பல பிராயசிசித்தம் என்ற பெயரில், பல தானங்களை செய்யச் சொல்கிறார். நாமும் செய்கிறோம். நாம் நினைத்தது நடக்கிறதோ இல்லையோ, நமக்கு ஒரு மன திருப்தி கிடைக்கிறது.

இதில் கூர்ந்து கவனித்தோம் என்றால், நாம் நம் பணத்தைச செலவு செய்து தான் இவ்வளவும் செய்கிறோம். ஏதோ ஒரு வகையில் நாம் நம் பாவத்தை தொலைப்பதர்க்காக நம் செல்வத்தை யூஸ் பன்னுகிறோம். 

இந்த கொரொனா சமயத்தில், பல உயிர்கள் திடீரென திடீரென மரணம் அடைகின்றன. எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், இவர்கள் பணத்தை எங்கு வைதிருக்கிறோம் என்று தான் குடும்பத்தில் சொல்லிச் “சென்றார்களா”. எத்தனை “லாக்கர்”. எத்தனை பேருக்கு கடன் கொடுத்து இருக்கிறார்கள்..... மேலும் மேலும்

நினைத்தாலே உடல் நடுங்குகிறது. உறவுக்காரர்கள் தன் முகத்தைக் கூட பார்க்க முடியாமல், யாரோ, எவரோ, இடுகாட்டுக்கு கொண்டு செல்வது என்ன கொடுமை.  இரையை வைத்தென்ன செய்ய ?  இறைதான் கூட வரும். இங்கு இறை என்பது நாம் செய்த புண்ணியங்களும், தர்மங்களும் தானே >>>>

கொஞ்சம் இதை இங்கிலீஷ் ல் பார்க்கலாம்

In Bhaja Govindam by Adi shankara, He enumerates four unavoidable “musts” in the daily programme of a sincere seeker

1 Geeta Study

2. Worship of Narayana

3. Company of the good

4. Serving the needy

“Deyam deenajanaaya ta vittam” – He says for Point No 4.  Spend your wealth to feed the needy…..  This is one of the ways to attain mukthi.  It is relevant here to say “Relighion withut philosophy is superstition and Philosophy without religion is lunatic dream”.

திருப்பி தமிழ்

பஜ கோவிந்தத்தில் 5 வது ஸ்லோகத்தில் ஒரு முக்கியாயமான விஷயத்தைச் சொல்கிறார்,

உன்னிடம் செல்வம் இருக்கும் வரை, உன் உறவினர்களும், உன்னைச் சார்ந்து இருப்பவர்களும், குளிர் காய்வார்கள்.  வயதான காலத்தில், உன்னிடம் பேசுவதற்க்குக் கூட ஒரு நாதியும் இருக்காது.

அதனால் இரையை தேடு, இறையையும் தேடு

Tuesday 1 June 2021

கம்பன் – “தாயினும் தொழ தக்காள் மேல் தங்கிய.....”

 எனக்குத் தெரிந்த கம்பனை சிறிது “அசை” போடலாம் என்றுதான்..

இராவணன் இறந்து கிடக்கிறான்.  இராமன் இராவணனைப் பார்க்கிறான்.  இலங்கை வேந்தன் விழுந்து கிடப்பதைக் கண்டு சற்று மனம் கலங்குகிறான். அப்போது அவன் முதுகில் புண் இருக்கிறது.

’சீ சீ, இவன் புறமுதுகு காட்டியவனா, பெரிய வீரன் என்று நினைத்தேனே” என்று ஒரு நிமிடம் ராமன் அவனை இகழ்ந்து நோக்குகிறான். அப்போது விபீஷணன் அங்கு வருகிறான். “ராவணன் முதுகில் உள்ள தழும்புகள் எட்டு திசைகளிடம் உள்ள யானைகளிடம் சண்டை போட்டு, அந்த யானைகள் இராவணன் மார்பில் தங்கள் தந்தத்தால் குத்தி, அது முதுகின் வழியாக வந்த புண்ணே அன்றி, புற முதுகு புண் அல்ல” என்கிறான். ஒரு போதும் புற முதுகு கண்டவன் அல்ல. சுத்த வீரன் என்கிறான்.

கார்தாவீர்யன், வாலி இவர்கள் மிகவும் சிரமப்பட்டு, ராவணனை வென்றார்கள்.  இராவணன் தோற்றதற்க்குக் காரணம் அவன் பெற்ற சாபங்களே அன்றி, அவன் வீரம் இன்மை அன்று- என்கிறான் விபீஷணன்.

தாயினும் தொழத்தக்க சீதை மேல் அவன் வைத்திருந்த காதல் நோயும், உன் சினமும் அவனை வீழ்த்தியதே அன்றி அவன் கோழைத்தனத்தால் அல்ல.

கம்பன் பாடல்:

ஆயிரம் தோளினாலும் வாலியும் அரிதின் ஐய,

மேயின வென்றி விண்ணோர் சாபத்தின் விளைந்த; மெய்ம்மை     

தாயினும் தொழ தக்காள்மேல் தாங்கிய காதல்- தன்மை நோயும் நின் முனிவும், அல்லால், வெல்வரோ, நுவலர்பாலார்  

காமம் கொடியது  !!!

இதையே மண்டோதரியும் சொல்லி புலம்புகிறாள். அவனை ஒரு அம்பு கொன்றது என்றதைக் கேட்க அதிர்ச்சியும், ஆச்சர்யமும் அடைகிறாள். ஒடி வருகிறாள் யுத்த பூமிக்கு. அங்கு மாண்டு கிடக்கும் தன் கணவனப் பார்த்து கதறுகிறாள்.

ஒரு மானுடனுக்கு அவ்வளவு வலிமையா ? பிறகு தீர்மானமாய் சொல்கிறாள். ராவணனைக் கொன்றது:

அவன் ஜானகி மேல் கொண்ட காதல்

சூர்ப்பனகையின் மூக்கு

தசரதனின் கட்டளை (காட்டுக்குப் போகச் சொல்ல)

அதை ஏற்ற ராமனின் பணிவு

ஜானகியின் கற்பு

இந்திரனின் தவம்

மேலும் அவள் சொல்கிறாள். மன்மதன் விட்ட பாணம் தான் ராவணனைக் கொன்றது என்கிறாள். மன்மதன் ஒருவனுக்குத்தான், ராவணின் மேல் பாணத்தைப் போடுவதற்க்கு தைர்யம் இருக்கிறது. அந்த மன்மதன் மலர்க் கணைகளை தொடுக்காமல் இருந்தால், இராவணனுக்கு, சீதை மேல் ஆசை வந்திருக்காது” என்று சொல்கிறாள்.

அது தான் உண்மை என்றும் நமக்குத் தோன்றுகிறது. பெரிய வீரன் வீழ்ந்ததற்கு பதி விரதை மண்டோதரி சொல்லும் காரணத்தின் உண்மை – நமக்கு உணர்த்துவது. –காமம்

விபீஷணன், ராவணனின் உடலில் வீழ்ந்து கதறுகிறான். அவன் சொல்கிறான்- “எந்த விஷமும் உண்டால்தான் உயிரைப் பறிக்கும். ஆனால் இந்த சீதை என்ற விஷமோ கண்ணில் பட்டவுடனே உன் உயிர் பறிக்கப்பட்டு விட்டதே- என்கிறான்.

“அண்ணாவே அண்ணாவே, அசுரர்கள் தம் பிரளயமே, அமர்களின் எமனே, ஜானகி என்ற பேரு நஞ்சு உன்னைக் கண்ணால் நோக்கவே போக்கியதே உயிர்” – என்கிறார் கம்பர்.

விபீஷணன் மேலும் சொல்கிறான் –

வீரத் திருமகளின் அருள் பெற்று, எல்லா வெற்றியையும் பெற்றாய்.

கலை மகளை வெற்றி கொண்டு ஞானம் எல்லாம் பெற்றாய்.

புகழ் மகளை அடைந்து எல்லாப் புகழும் பெற்றாய்             

இத்தனை புகழை அடைந்த நீ, தெய்வக் கற்பின், பேர் மகளை தழுவ நினைத்து அதனால் உயிர் நீத்து, நில மகளை அனைத்துக் கிடந்தாயோ” என்று அழுகிறான்

Friday 2 April 2021

கலைக் கோவில் – பட விமர்சனம் !!

 

இந்தப் பழைய படத்தைப் பற்றி நிறைய பேருக்குத் தெரிய வாய்ப்பில்லை.  காதலிக்க நேரமில்லை என்ற படத்தைப் பற்றித் தெரிந்திருந்தால், இந்தப் படத்தை நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும்.  ஏனெனில், காதலிக்க நேரமில்லை படத்தை எடுத்து “மிக பிரம்மாண்ட வெற்றியைக் கொடுத்த ஸ்ரீதர், உடனே, அடுத்து, எம். எஸ். விஸ்வநாதனை தயாரிப்பாளராக வைத்து, சுட சுட எடுத்த அடுத்த படம், கலைக் கோவில்.

26 நாளில் எடுத்த படம். வீணை இசைக் கலைஞரைப் பற்றிய படம்

பயங்கர அடி வாங்கிய படம். டைரக்டர் ஸ்ரீதர், இந்தத் தோல்வியை, ஜீரணிக்க முடியாமல் ஒரு வாரம் ஜுரம் வந்து படுத்து விட்டார், என் MSV சொல்லியதாக இன்றும் you tube ல் இருக்கிறது.

பல நூறு படங்கள் MSV- கண்ணதாசன் combination ல் இருக்க நான் இந்தப் படத்தின் பாடல்களைப் பற்றி ஏன் எழுதுகிறேன் என்றால், திரு. அண்ணாதுரை கண்ணதாசன் அவர்கள் ஒரு பேட்டியில், இந்தப் படத்தின் பாடலகை அலசும்போது, அவர் சொன்ன விஷயங்கள் மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. எனவே,- இந்தப பதிவு.

சாதாரணாமாகவே, MSV சங்கீதம் என்பது அருமையாக இருக்கும். அதுவும், சொந்தப் படம் என்பதால், கண்ணதாசனும், MSV யும் அற்புதமான பாடல்களைத் தந்திருந்தார்கள், இந்தப் படத்தில் ஒரு பாடலில் “சரணங்களை”  பற்றி என் பதிவு இது. எப்படியெல்லாம் அழகு படுத்தலாம் என்று, கண்ணதாசன் யோசித்திருப்பார் என்று நினைக்கிறேன். விஸ்வநாதனிடம் உள்ள அளவு கடந்த பாசத்தினால். அளவு கடந்த “கற்பனையுடன்” எழுதிய பாடல் என்று நினைக்கிறேன்

ஒரு காதலன், காதலி மிகவும அன்யோன்யமாக இருக்கும்போது பாடும் பாடல் இது.  “நான் உன்னைச் சேர்ந்த செல்வம்” என்று ஆரம்பிக்கும் பாடல் இது. இதில், சரணத்தில் கண்ணதாசனின் வரிகளைப் பார்ப்போம்:

“உன் அச்சம், நாணம் என்ற நாலும்

என் அருகில் வந்தவுடன் அஞ்சும்

இதழ் பருகும்போது நெஞ்சம் ஆறும்

அது பாடும் இன்ப ஸ்வரம் ஏழும்”

நாலும், அஞ்சம், ஆறும், எழும். என்று அழகாக.. ஆஹா என்ன கற்பனை.

இதில் இன்னொரு சரணத்தில்,

மீட்டும், வாட்டும், கூட்டும், காட்டும் என்று முடிவது போல் ஒரு சரணம் இருக்கும்.

பி சுசீலாவின் தேன் குரலில் பாடும் இந்த வரிகள்

“உன் விழிகள் என் உயிரை வாட்டும்

உன் விரல்கள் என் அழகை மீட்டும்

உன் குரலும் என் பெயரைக் கூட்டும்

அதில் கோடி கோடி இன்பம் காட்டும்”

இதில் சுசீலா அவர்கள் இரண்டாவது முறை பாடும்போது, PBS ஒரு ஹம்மிங் கொடுப்பார். அது “ஹெட் போன்” போட்டுக் கேட்டால் தான் கேட்கும். அதி அற்புதம்.

இப்போது கொஞ்சம் தமிழ் இலக்கணத்திற்க்கு செல்வோம்..

இதில் முதல் மூன்று வரிகள் சீர் எல்லாம் “உன்” ல் ஆரம்பிக்கும்

சரணத்தில் முதல் வரியில் இரண்டாவது எழுத்து ஒரே மாதிரியாக இருந்தால் அதற்க்குப் பெயர் இலக்கணத்தில்:

“அடி எதுகை” என்று பெயர். 

அடுத்தது, முதல் சீர், மூன்றாம் சீர் இவைகளைப் பார்த்தால் ஒரே வரிகள், அதாவது “உன், என்” – இப்படி இருந்தால் அதற்குப் பெயர்

“பொழிப்பு எதுகை”

சரணத்தில் முதல் வரி, ஒரே எழுத்தில் ஆரம்பித்தால், அதற்கு

அடி மோனை  என்று பெயர். (இங்கு உ)

கடைசி நான்கு வரிகள் “ட்டும்” என்று முடிகிறது, அப்படி முடிந்தால் அதற்கு “அடி இயபுத் தொகை” என்று பெயர்.

கண்ணதாசனுக்கு இந்த இலக்கணம் தெரியுமோ தெரியாதோ, இந்தப் பாட்டின் இலக்கணமே எனக்கு “வேறு”.

தமிழ் இலக்கண வகுப்பு முடிந்தது

இன்னொரு சரணத்தில்

ஸ்ரீ ராமன் நெஞ்சில் நின்ற சீதை

மலர் கண்ணன் தேடிக் கொண்ட ராதை

மனம் உருகி சூடிக் கொண்ட கோதை

ஒன்று சேர்ந்து வந்ததிந்த பாவை”

இன்னொரு சரணத்தில்

நம் உள்ளம் கலைக்கோவில்

இரு கண்கள் கோவிலுக்கு வாசல்

நமதாசை கோவில் மணி ஓசை

அதில் அன்பு வண்ண மலர் பூஜை

 

பி,பி ஸ்ரீநிவாஸ், சுசிலாவின் மதுரக் குரல்களில் குழைந்து வரும் இந்த பாட்டு. 

இப்போதும் 65000 பேர் கேட்ட பாட்டு, you tube இல் இருக்கிறது.

கண்ணதாசனைப் பற்றி பல பேர் பல விதமாக எழுதிவிட்டார்கள். நான் எழுதுவதற்க்கு ஒன்றுமில்லை. சமீபத்தில் இந்தப் பாடலைக் கேட்கும்போது, சத்தியமாக என் நெஞ்சை அள்ளியது.

இது “நிலவும் மலரும் பாடுது” என்று தேன் நிலவு படத்தில் ஒரு பாட்டு வரும். அதன் சாயலில் இருப்பது போல் தோன்றும்.  அது A M ராஜா அவர்கள் இசை.  ஆனால் எந்த வித்ததிலும் மெருகு குலையாமல் அருமையாக அமைந்த பாடல். 

இந்தப் படத்தின் மற்ற பாடல்கள் இதற்க்கு இணையானது தான்

தங்க ரதம் வந்தது – பாடியவர் ஸ்ரீ பால முரளி க்ருஷ்ணா, இது “ஆபோகி ராகத்தில் அமைந்த பாடல் என்று கருதுகிறேன்”

முள்ளில் ரோஜா – எல் ஆர் ஈஸ்வரி (நடுவில் பி பி ஸ்ரீநிவாஸ் ஒரு ஹம்மிங்க் கொடுத்து இருப்பார்- கேளுங்கள் – out of the world.

மற்றும் சில எனக்கு “நான் உன்னை சேர்ந்த செல்வம்” பாடலின் வரிகள் நெஞ்சை அள்ளியதால் இந்தப் பதிவு.

அண்ணாதுரை கண்ணதாசன் அவர்களுக்கு மிகவும் நன்றி.

 

 

 

Saturday 30 January 2021

என்னுள்ளிலும் புட்டபர்த்தி சாய் பாபா

 

இன்று என் வாழ்க்கையில் ஒரு பொன்னாள்.  இன்று புட்டபர்த்தி சாய் பாபாவின் சரித்திரத்தில், இரண்டு பாகங்களைப் படிக்கும் பேறு பெற்றேன்.

சாதரணமாக நடக்கக் கூடியது இல்ல. நான் புட்டபர்த்தி மகானின் தீவிர பக்தனோ அல்லது அடிக்கடி பிரஸாந்தி நிலையம் சென்று சேவை செய்தவனோ அல்லது அவரை எங்கேயாவது நேரே தரிசித்தவனோ கிடையாது.

இதில் மிகுந்த ஆச்சர்யம் என்னவென்றால், இப்பொழுது, நான் இருக்கும் மந்தவெளியில் இருந்து, 10 நிமிடத்தில் புட்டபர்த்தி சாய் பாபாவின் கோவில் உள்ளது. மிகவும் அற்புதமாக நிர்வகித்து, சாய் பாக்தர்களின் தன்னலமற்ற சேவையுடன் அமைந்து இருக்கிறது.  ஓரே ஒரு முறை, வீபூதி வாங்குவதற்கு சென்றேன். அப்போது உள்ளே சென்று பார்க்கும்போது, அங்கே தனித்தனியாக பெண்களும் ஆண்களும் அமர்ந்து இருந்து மந்திரம் ஜபித்துக் கொண்டிருந்தார்கள்

பிறகு நேற்று இரண்டாவது முறையாக  “தபோவனம்” என்ற அவரில் அற்புத லீலைகள் அடங்கிய புத்தகம் வாங்கச் சென்றேன்.  அந்தக் கதையை பின்னால் சொல்கிறேன்

என்னுடைய குழந்தைப் பருவம் பற்றி கொஞ்சம், சாய் பாபாவைப் பற்றி படிக்க நினைப்பவர்கள், “புட்டபர்த்தி சாய் பாபா அனுபவம்” என்ற பகுதிக்குப் போகலாம்:

நான் சாய் பாபா கோவில், சாய் சரிதம் இவைகளில் இருந்து விலகியே இருந்தேன். அதற்கு இன்னொரு காரணமும் உண்டு. நான் பிறந்த செம்மங்குடி கிராமத்தில், நான் அம்மா என்று அழைக்கும் என் பாட்டி, முதலில் காண்பித்த கோவில், சிவன் கோவில், பிறகு பெருமாள் கோவில். ஆனந்தவல்லி உடனுறை அகச்தீஸ்வரரும், வரதராஜப் பெருமாளும்தான்.

என் அப்பா (தாத்தா) வை நான், செம்மங்குடியில் நினவு தெரிந்து பார்க்கும்போது, அவர் சிவ பூஜை, (சாளக்ராம பூஜை) செய்து கொண்டே இருப்பார். ஒரு நாள் கூட தவறியதே இல்லை. த்ரி கால சந்த்யாவந்தனம், சிவ பூஜை இரண்டும் என் வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருப்பது என் தாத்தாவிடம் நான் வாங்கிய பிச்சை என்று கூட சொல்லலாம்.  என் அப்பாவிற்கு, வில்வம் பறித்துக் கொடுப்பது, ஜலம் எடுத்துக் கொடுப்பது என்ற சேவை ஒன்றுதான், இன்று என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது என்று சத்தியமாக நம்புவன் நான். அதனால் எனக்கு அனுஷ்டானம், சாளக்ராம பூஜை தான் மிக முக்கியம்.

பிறகு, மேலே படித்து, பெங்களூர், பாம்பே, துபாய் என்று ஒரு ரவுண்டு அடித்துவிட்டு, சென்னையில் மைலாப்பூரில் வந்த போது எனக்கு விட்ட குறை, தொட்ட குறையாக, கற்பகத்திடமும், காபாலியிடமும் இருந்த காதல், வேறு யாரிடமும் இல்லாமல் போனது உண்மை. பாவாடை கட்டினால், சிறுமி போல, புடவை காட்டினாள், மணப் பெண் போல, மடிசாறு கட்டினால் தாலி தொங்க தொங்க மங்களகரமாக இருக்கும் “மாமி” போல – என் மனதை இன்றும் கற்பகத்திடம் பறி கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

கொரோனா சமயத்தில் கூட, கோபுரத்தைப் பார்த்துவிட்டாவது வரும் ஆசாமி நான்.

என் மனைவி அடிக்கடி மைலாபூரில் இருக்கும் ஷீரடி சாய் பாபா கோவிலுக்கு  செல்வாள். நாங்கள் இந்தக் கோவிலுக்கு பின்புறம் 2 வருடம் வாடகை வீட்டில் வேறு இருந்தோம். நிதமும் ஆரத்தி பாட்டுக்கள், கணீரென்று கேட்கும்.

முடிந்தபோது நானும் அவளுடம் செல்வேன். எந்த ஒரு குருநாதரையும் நான் வணங்கவேண்டும. என் மனது பாக்குவப்படவேண்டும் என்ற ஒரு பிரார்த்தனையும் அவரிடமே வைப்பேன். அந்த பக்குவம்தான் எனக்கு திருக்கோவிலூர் அருகில் இருக்கும் தபோவனம் ஞானானந்தரிடம் பக்தி செய்யத் தூண்டியது. பாத பூஜையில் மகத்துவத்தை அறிய வைத்தது. பல முறை சென்று திரும்பி வரும் போது,, அம்மாவைப் பிரிந்து வரும் சிறு குழந்தை போல மனது வருத்தப்படும் அளவுக்கு என்னை கொண்டு விட்டு இருக்கிறது. அவரை நினைக்காத நாள் இல்லை என்ற அளவுக்குக் கொண்டு விட்டது. இதுவும் குருவின் அளப்பரிய கருணையே அன்றி என்னிடம் ஒன்றுமே இல்லை.

ஒரே ஒரு முறை, நான் ஷீரடி கூட போய் இருக்கிறேன். ஆபீஸ் விஷயமாக பூனா போய் இருந்த பொது, நேரே கிளம்பி ஷீரடி போய், அங்கே ரூமில், பச்சை தண்ணீரில் விடியற்காலை குளித்து விட்டு, (அன்று ஏகாதசி) சாய் பாபாவை வணங்கி விட்டு வந்தேன். 

புட்டபர்த்தி சாய் பாபா அனுபவம்

திருப்பி விஷயத்திற்கு வருவோம். போன வாராம் முழுவதுமே எனக்கு மிகவும் டென்ஷன் ஆன வாரம் என்று சொல்லலாம். வீடு மாறி, மந்தவெளியில், திருவேங்கடம் தெரு (விரிவு) குடி போனேன்.

வீடு மாற்றுவது என்பது பெரிய கொடுமை. ஒரு வாரம் ஆன பின்பும்,  எதை எங்கே வைப்பது, பல சாமான்கள் எங்கு இருக்கிறது என்று இன்னும் புரியவில்லை.

தை பூசம் ஒரு பக்கம் அமக்களப் பட்டுக் கொண்டிருக்க, கொரோனா கொஞ்சம் கொஞ்சம் ஆக குறைந்து வரும் நிலையில், மயிலாப்பூர், தெப்பத்திற்காக, திமிலோகப் பட்டுக் கொண்டிருந்தது.

From now, You have to read carefully – the sequence of Events

போன வாரம், நான் மிகவும் மதிக்கும், நடமாடும் பெரியவாளாக நான் கருதும், மஹாதானபுரம் மாமா அவர்களின் பெண், சௌ.பாரதி (என் மச்சினனின் மனைவி) எனக்குப் போன் செய்து, “புட்டபர்த்தி சாய் பாபாவின் சரித்திரம் படிக்க ஒரு சான்ஸ் கிடைத்து இருக்கிறது, நீங்கள் படிக்கிறீர்களா” என்று என் மனைவியிடம் கேட்க, என் மனைவி ஓகே சொல்லி என்னிடம் சொன்னாள். நான் பார்க்கலாம் என்று சொன்னேன்.

வீடு மாறியதால், மிகவும் டெண்ஷன், மிகவும் களைத்துப் போய், இது ஏறக்குறைய மறந்தே விட்டது/

நேற்று, வெள்ளிக்கிழமை, என்னிடம் சாவி இருந்தது தெரியாமல், வீட்டை தெரியாமல் பூட்டி விட,, என் மனைவி எனக்கு போன் பண்ணி பேசியதில், நான் “வருவதற்கு 6 மணியாகும். நீ அப்படியே பொடி நடையாக சாய் பாபா கோவிலுக்கும் போய் வா” என்று சொன்னேன். பர்ஸ், பணம், செல் போன் ஒன்றுமே கிடையாது.  சரி என்று அவள் கிளம்பி சென்று, பாபா தரிசனம் முடிந்து, திரும்பி வந்து, வீட்டின் அருகே உள்ள, பிள்ளையார் கோவிலில் பிரதட்சிணம் செய்து கொண்டு இருந்தாள்.

அப்போது நான்கு வீடு தள்ளி, கும்பல், போலீஸ் வேன் இருக்க, விஜாரித்ததில், “அஹோபில மட” ஜீயர் வந்திருக்கிறார், என்று கேள்விப்பட்டு, எனக்கு உடனே போன் செய்ய, எனக்கு வெள்ளிக்கிழமை ஆபீஸ் பூஜை இருந்ததால், அதையும் முடித்துவிட்டு, வீட்டுக்கு நேரே வந்து, பஞ்சகச்சம் கட்டிக் கொண்டு, உடனே அங்கே சென்றேன். என் மனைவி அதற்கு முன்பே, சேவித்து விட்டு திரும்பி வர, நான் போய் நமஸ்காரம் செய்து திரும்பி வந்தேன்.

வரும்போது, மணி 6, அப்போதுதான், எனக்கு புட்டபர்த்தி சாய் பாபாவின் “திவ்ய சரித்ரம்” படிப்பதற்கு புஸ்தகம் இல்லையே என்று உறைத்தது. என்ன செய்வது, எனக்கு pdf அனுப்புகிறேன் என்று சௌ. பாரதி சொன்னபோது கூட, புத்தகத்தை ஸ்வாமியிடம் வைத்து, ஒரு புஷ்பத்தை சமர்ப்பித்து, பிறகு எடுத்துப் படிப்பது தான் சிறந்தது என்று நினைத்தேன்

சாய் மகான் எனக்களித்த ஆச்சரியங்களின் பிரவாகம் – இனி வருவது

உடனே கிளம்பி புட்டபர்த்தி சாய் பாபா கொவிலுக்கு சென்று புத்தகம் இருக்கா என்று பார்க்கலாம் என்று கிளபினேன். அங்கு போய், வண்டியை நிறுத்திய போது, கோவில் அமைதியாக இருந்தது. யாருமே இல்லை. “சரி,

நமக்கு pdf  தான் என்று நினைத்து உள்ளே போனால், “Library மூடலை சார், நீங்கள் போங்கள்” என்று ஒருவர் சொல்ல “முதல் ஆச்சரியம்”

உள்ளே போய், “தபோவனம்” புத்தகம் இருக்கிறதா என்று விசாரிக்க, அங்கு இருந்த பக்தர், இங்கிலீஷ், தமிழா என்று கேட்டார். அப்போது எனக்கு தெரியும், இது பல மொழகளில் இருக்கிறது. என்று. நான் தமிழ் என்று சொன்னேன். “சாரி சார், தமிழ் இல்லை” என்று சொன்னார். நான் மனதிக்குள் “நமக்குப் ப்ராப்தம்” அவ்வளவு தான். என்று கிளம்பும்போதுதான் – அந்த அதிசயம் நடந்தது

அவர் “என்னிடம் ஒரே ஒரு தமிழ் புத்தகம் இருக்கிறது. என் நண்பருக்குக் கொடுப்பதற்காக வைத்து இருக்கிறேன் அதை உங்களுக்குத் தருகிறேன்” என்று சொன்னார்” நான் அப்படியே “விக்கித்து நின்று விட்டேன்”. இப்படி ஒரு கருணையா, நான் இந்த கருணையை பெறுவதற்கு என்ன செய்தேன். மாணிக்கவாசகர் சொன்னது போல் “கொண்டது என் தன்னை, தந்தது உன் தன்னை, சங்கரா யார் கொலோ சதுரர்” என்ற வாக்கியத்தின் உண்மையை நான் அப்போது புரிந்து கொண்டேன்.  எனக்கு அழுகையே வந்து விட்டது.

அது மட்டும் இல்லை. என்னிடம் 500 ரூபாய் நோட்டுதான் இருந்தது. சில்லறை இல்லை. அவரிடமும் இல்லை. நான் மீண்டும் என் பர்சில் தேடியதில் 10 ரூபாய் குறைந்தது.  என்னடா இது என்று சொல்லி அவரைப் பார்க்க,  அவர் சிறிது யோசித்து. சற்று இருங்கள் என்று, ஒரு டிராயரைத் திறந்தார். அதில் கொஞ்சம் ரூபாய் நோட்டுகள் இருந்தன. என்ன ஆச்சர்யம், மிச்சம் அதில் இருந்தது. நான் வெல வெலவெலத்துப் போய் விட்டேன்.

இன்னும் முடியவில்லை”

இன்று, காலையில், திவ்ய சரித்ரம் படிப்பதற்கு சங்கல்பம் செய்து கொண்டு ஆரம்பித்தேன். இன்றுதான் முதல் முறையாக இந்த புத்தகத்தை தொடுகிறேன். எனக்கு  5 மேலும் 6 பகுதிகள் “படிப்பதற்காக அனுமதி அளித்து இருந்தார்கள். 5 வது பகுதி நானும் 6- என் மனைவியும் படிப்பதாக முடிவு செய்தோம்.

நான் “சாளக்ராம பூஜை” செய்து வருகிறேன். “சாம்ப பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்” என்ற ஒரு வரி என் சங்கல்பத்தில் வரும். திவ்ய சரித்ரத்தை படிப்பதற்கு முன்பு சங்கல்பத்தில் “சாம்ப பரமேஸ்வர” என்று வந்துவிட்டது. நான் சரிதான், தவறு ஒன்றுமில்லை என்று நினைத்து, புட்டபர்த்தி சாய் பாபாவையும், பிரார்த்தனை செய்து கொண்டு, படிக்க ஆராபித்தேன்.

என்ன ஆச்சர்யம். 5 வது chapter ல் “சாம்பா” என்ற வார்த்தைக்கு “அர்த்தம்” சொல்வது போல் ஒரு பாரா வந்தது.  எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அது மட்டும் இல்லாமல், ஹோமம், பூஜை ஒரு பிராமணனுக்கு எவ்வளவு முக்கியம் என்பதும் விளக்கப் பட்டு இருந்த்து. எனாக்காவே, அவரைப் புரிந்து கொள்ளாமல், இத்தனை காலமாக இருந்த எனக்காகவே அவர் எழுதியது போல இருந்து.

ஷீரடி சாய் பாபா தான் நான் என்று அர்த்தத்துடனும் ஒரு பாரா இருந்தது.

நான் காண்பது, கனவா, நனவா, நான் இருக்கும் உலகத்தில், எனக்கென்று இவ்வளவு, இறங்கி வந்து, தன்னைப் பற்றி, நான்தான் சர்வமும், நானும் உனக்கு குருநாதர் தான் என்று “சர்வ சுலபனாக” புட்டபர்த்தி சாய் பாபா பெய்த கருணை மழை – நான் நனைந்து நனைந்து ஆனந்தப் பட்டுக் கொண்டு இருக்கிறேன்.

நான் முன்னமே சொன்னாற்போல், எனக்கு இதற்க்கு இம்மி அளவு கூட அருகதை கிடையாது. புட்டபர்த்தி சாய் பாபா கோவிலில் சேவை செய்யும் மாந்தர்களில் கால் தூசு கூட நான் பெற மாட்டேன். எனக்கு அவர் செய்த கருணை நினைத்து மெய் சிலிர்க்கிறது.

என் மனைவி படித்த 6 வது பகுதியிலும், பல விஷயங்கள், நாங்கள் வாழ்ந்த வாழ்கையை, திரும்பிப் பார்க்க வாய்த்த விஷயங்கள் நிறைய.

சாய் பாபா கோவில், எதேச்சையாக சென்ற என் மனைவி, இன்று புட்டபர்த்தி சாய் பாபா சரித்ரம் படித்த நான்.  என் மனைவி வழி காட்ட, அபிராமி பட்டர் சொன்னது போல், “நின்றும், இருந்தும் கிடந்தும்” நினைப்பது உன்னை – என்று நான் சொல்ல, அருளுகிறார் இந்த மகான்.

ஒரு பாபநாசம் சிவன் அவர்களின் பாட்டு உண்டு “நெக்குருகி உன்னை பனியா கல் நெஞ்சன் எனக்கு அருள்வாய்- முருகா”  என்று

எனக்கு அருளி இருக்கிறார் என்றே சொல்லத் தோன்றுகிறது

சர்வம் சாய் மயம். சத்குரு புட்டபர்த்தி சாய் பாபாவின் சரணங்களிலும், அவருடைய கோடி கோடி பக்தர்களுக்கும், என் கண்ணீரை காணிக்கை ஆக்குகிறேன்.

பின் குறிப்பு : ஒரே மூச்சில் நான் தமிழில் என் “பதிவேடுகளில்” கட்டுரை எழுதியே இல்லை. ஒரு ஒரு பக்கமாக ஒரு வாரமாவது ஆகும். இது ஒரே மூச்சில், இடத்தை விட்டு எழுந்திராமல் – எழுதிய பதிவு.

இதுவும் குருநாதர் கருணை.