Wednesday 2 June 2021

இரை தேடும்போது இறையையும் தேடு

 

எப்போ பார்த்தாலும் காசு காசு என்று காச நோய்” வந்தவனைப் போல் அலைகிறோம்.  அறுவது வயதுக்காரனும் அப்படிதான் இருக்கான். இருவது வயதும் அப்படியேதான்.

ஓரிடம் தனிலே, நிலை இல்லா உலகினிலே, உருண்டோடிடும் பணம் காசெனும் உருவமான பொருளே.... என்று அந்த காலத்து பாட்டு ஒன்று உண்டு.

அப்படி சேர்த்த செல்வத்தை அனுபவிக்கிறோமா என்றால் அதுவும் இல்லை. செல்வம், செல்வம் –செல்வோம் என்று சரஸ்வதி சபதம் படத்தில் சிவாஜி சொல்வாரே அது மாதிரி...... யாரோ சம்பாதிக்கிறான். ஒழுங்கான சம்பாத்யம் என்றால், சந்ததிகள் அனுபவிக்கும், இல்லையேல் வக்கீலும், தூரத்து சொந்தக்காரன் எவனாவது அனுபவிப்பான். திடீரென்று, இறந்துவிட்டால், எந்தப் பணம் எங்கு இருக்கிறது என்றே தெரியாது. எவனுமே அனுபவிக்க முடியாமல் போய் விடும். ஏதாவது பேங்க் அதை வட்டிக்கு விட்டு சம்பாதிதத்துக் கொண்டு இருப்பான்.

“அர்தாதுராணம் ந பந்துஹு ந மித்ரா” என்று சம்ஸ்க்ருதத்தில் ஒரு பழமொழி உண்டு.  பணம் இருக்கும் மனிதனிடம் நண்பன், உறவுக்காரன் இருக்கமாட்டான். ஏனெனில் இவன் அவர்களை நம்ப மாட்டான். விரட்டி விடுவான்.

அவ்வையார் போல் அறத்தை, நல்ல விஷயங்களை நமக்கு போதித்தவர் வேறு யாரும் இல்லை. அவர் எழுதிய நல்வழி என்ற ஒரு நூலில் ஒரு அருமையான பாடலில் மூலம் இந்த அவலத்தை விளக்குகிறது

சேவித்தும், சென்று இரந்துன் தெண் நீர்க்கடல் கடந்தும்

பாவித்தும் பாராண்டும் பாட்டு இசைத்தும் போவிப்பம்

பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால்

நாழி அரிசிக்கே நாம்

இதற்க்கு அர்த்தம் தேவை இல்லை. ஒரு கவளம் சாப்பாட்டுக்காக நாம் பண்ணும் “அலப்பறைகள்” பல.

நாம் ஜோசியரிடம் செல்கிறோம். அவர் பல பிராயசிசித்தம் என்ற பெயரில், பல தானங்களை செய்யச் சொல்கிறார். நாமும் செய்கிறோம். நாம் நினைத்தது நடக்கிறதோ இல்லையோ, நமக்கு ஒரு மன திருப்தி கிடைக்கிறது.

இதில் கூர்ந்து கவனித்தோம் என்றால், நாம் நம் பணத்தைச செலவு செய்து தான் இவ்வளவும் செய்கிறோம். ஏதோ ஒரு வகையில் நாம் நம் பாவத்தை தொலைப்பதர்க்காக நம் செல்வத்தை யூஸ் பன்னுகிறோம். 

இந்த கொரொனா சமயத்தில், பல உயிர்கள் திடீரென திடீரென மரணம் அடைகின்றன. எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், இவர்கள் பணத்தை எங்கு வைதிருக்கிறோம் என்று தான் குடும்பத்தில் சொல்லிச் “சென்றார்களா”. எத்தனை “லாக்கர்”. எத்தனை பேருக்கு கடன் கொடுத்து இருக்கிறார்கள்..... மேலும் மேலும்

நினைத்தாலே உடல் நடுங்குகிறது. உறவுக்காரர்கள் தன் முகத்தைக் கூட பார்க்க முடியாமல், யாரோ, எவரோ, இடுகாட்டுக்கு கொண்டு செல்வது என்ன கொடுமை.  இரையை வைத்தென்ன செய்ய ?  இறைதான் கூட வரும். இங்கு இறை என்பது நாம் செய்த புண்ணியங்களும், தர்மங்களும் தானே >>>>

கொஞ்சம் இதை இங்கிலீஷ் ல் பார்க்கலாம்

In Bhaja Govindam by Adi shankara, He enumerates four unavoidable “musts” in the daily programme of a sincere seeker

1 Geeta Study

2. Worship of Narayana

3. Company of the good

4. Serving the needy

“Deyam deenajanaaya ta vittam” – He says for Point No 4.  Spend your wealth to feed the needy…..  This is one of the ways to attain mukthi.  It is relevant here to say “Relighion withut philosophy is superstition and Philosophy without religion is lunatic dream”.

திருப்பி தமிழ்

பஜ கோவிந்தத்தில் 5 வது ஸ்லோகத்தில் ஒரு முக்கியாயமான விஷயத்தைச் சொல்கிறார்,

உன்னிடம் செல்வம் இருக்கும் வரை, உன் உறவினர்களும், உன்னைச் சார்ந்து இருப்பவர்களும், குளிர் காய்வார்கள்.  வயதான காலத்தில், உன்னிடம் பேசுவதற்க்குக் கூட ஒரு நாதியும் இருக்காது.

அதனால் இரையை தேடு, இறையையும் தேடு

No comments: