Tuesday 31 March 2015

MY RECENT EXPERIENCE WITH SEER OF KANCHI

Jaya Jaya shankara

Hara hara shankara

Iam one person who believes in Guru. I don’t differentiate between Gurus. Whether it is Ramana maharishi, Sadguru Jnanandar, living God, KalyAni mami, brother of Swami Haridas Giri or Sringeri Jagadhguru or Kanchi Jagadhguru etc.,

My daily visit to Sringeri mutt at Madaiveli had me blessed to visit Sringeri to have the dharshan of Sri.Bharati theertha swamiji. I have a written a separate blog on this.

Kanchi paramAcharya is in our nerve system. My mother was offered a small piece of banana, when she was a kid, at Semmangudi, Tanjore Dist, by mahAperiavA, during His visit to Semmangudi. This might have sown the seed for our Guru bhakthi and we are fortunate, in one way or other, to have associated with Maha periava (MP) and other seers of kanchi. I need to mention here that my brother Sri.K.Manikandan is also so devoted to Maha periava and he named his house in Bangalore- “MahA periavA Gruham”. My another brother’s Father In Law Sri. Sivarama Krishna Sastrigal, who was closely associated to MP and he was even staying in PeriavA’s house (matam) at Tiruvanaikkoil, abode of Akilandeswari “sameda” jambugeshwarar.

Coming back to present days, Sri. Jayendra sarawathi, present seer of Kanchi and Sri. Shankara Vijayendra saraswathi, known as chinna periava (SSVS) have been camping behind Kamakshi temple, near RA Puram, Chennai. They are here for performing vasantha navarathri and extending Their stay for some more days. In our opinion, They will be staying till 14th April 2015. We are so fortunate that the living Gods come to bless us to our place instead of other way.

As I was yearning for an opportunity, I was so fortunate and I along with my wife and kids perform regular darshans/chanting/bhakthi geet etc., We are so lucky and blessed to have a situation like this and even today, we plan to go for SSVS’s evening pooja.

My daughter is studying 12th Standard in Sivasamy kalalaya in Accountancy group and she aspires to become a professional. Obviously I thought of taking her to CPT, enroute to Chartered Accountancy. As I keep an eye on her to become a graduate first and then to CA, CPT was a no-nonsense area and after all, it gives more insight into Accountancy .

Next come to Coaching class for CPT. As Iam in Madaiveli, Chennai, I have more than half a dozen coaching classes each of which is offering CPT classes with different fees structure and different class timings, venues etc., besides Institute is conducting coaching classes. So, as usual, I consulted many friends and articled clerks of CA to select a better coaching class but my confusion reigned.

As my daughter was restless and my wife was worried about the 6AM – 1PM timing, I had almost decided not to send her to tuitions as her CBSE background + Study materials are just enough to cope up with the course.

As my daughter leans music from Smt.Padma Narayanaswamy, wife of the great musicians (late) Sri.K.V.Narayanaswamy, she had gone to the Pooja and enjoyed the darshan. She also sang some kritis (songs) in front of SJS Swamji in the evenings. It was our good fortune that Swamji made some corrections in her song. It was also my fortune to have a wife devoted to Swamiji so she took our daughter for darshan regularly.

Day before yesterday was the Rama navami concluding day and myself along with my daughter went to witness the 8 PM pooja. Swamiji performed Rama pattAbhishekam in the afternoon session, it was so vibrant and as the situation warranted, I asked my daughter to sing a song on Rama – Pattabhishekam. The song started with “pavanaja”. It was in Raga Kurinji and one of the beautiful compositions’ of Saint Thyagaraja. By the time, the Pooja completed and we were expecting Him to come out to give darshan. So, I asked my daughter to sing, “Sadguru swamiki” in raag Ritigowla.

When she was about to finish, Swamiji came out and started talking and giving prasadams to many bhakthas. Swetharanyam Sisters, musicians, were also present and they were also blessed by Swamiji. His amazing remembrance power enabled to interact with some of the bhakthas in personal level.

My daughter was also blessed and offered Kumkum prasadams. She was so happy and we returned.

The next day the miracle had happened. I was in my office and again started to think about her CPT coaching classes. As I interacted with my daughter and few of my friends, I spotted Sankara Coaching Centre. I called the centre and had a long discussion and finally I found out the following:

• Sankara Coaching Centre is offering classes in Mylapore

• Timing is very convenient 9 AM to 3.30 PM. Ironically, 9AM classes were conducted in T.Nagar and recently, they decided to have it in Mylapore

• Daughter had already got scholarship in this Coaching centre and so, fees has been reduced. (Though I knew this, I did not pay much attention to this earlier)

• The last date of the fees was today. From tomorrow, the fees will be increased.

• Today being Ekadashi day, another auspicious day in line with my thinking.

• As my daughter wanted to join some coaching centre contrary to my thinking, she got this Coaching classes which made both of us happy.

Sadhguru’s katAksham on my daughter made wonders. How ?

• See the Coaching class name – “Sankara”

• See the timing- 9AM to 3.30 PM. She can practice her music in the morning and have a good food and go to class. Evening her music practice with the teacher is at 5.30 PM. She need not be absent for that.

• Scholarship was used judiciously

• Fees not only reduced because of scholarship but also “not increased” as before 1st April, we were able to pay the fees.

By offering 2 songs on Sadhguru, my daughter’s confusion got cleared and I had a sigh of relief and also saw my wife smile.

This strengthened my belief on Sadhguru. I was awestruck to see His blessings and how all my confusions in my daughter’s future got cleared less than 24 hours after my daughter had the prasadams from Him.

Jaya Jaya Shankara

Hara hara Shankara

Friday 20 March 2015

Concet of Gayatri Mantram- Part I - Article in Tamil

காயத்திரி மந்திரம் என்பது சூரிய வழிபாட்டைத்தான் குறிக்கும்.



ஓம்

பூர்: புவ: ஸுவ:

தத் ஸவிதுர் வரேண்யம்

பர்கோ தேவஸ்ய தீமஹி

தியோ: யோந: ப்ரசோதயாத்



அந்தப் பரம ஜோதி சொரூபமான சத்தியத்தை நாம் தியானிக்கிறோம். பூ உலகம், மத்திய உலகம், மேல் உலகம் மூன்றுக்கும் சக்தி அது. அந்தப் பரம சக்தி நமது புத்தியை வெளிச்சப்படுத்தட்டும் என்பது இதன் பொருள்.



24 அட்சரங்களைக் கொண்டது காயத்ரி மந்திரம். இதைத் தினசரி ஜபித்து வந்தால் பூர்வ ஜென்ம பாவங்கள் அகலும். சக்திகள் பெருகும். வைராக்கியம் உண்டாகும். காயத்ரி என்பதற்குத் தன்னை ஜபிப்பவனைக் காப்பாற்றுவது என்று பொருள். இதை ஜபித்து வர எல்லாவித ஆபத்துக்களும் நீங்கும். மற்ற எல்லா மந்திரங்களுக்கும் தாய் போன்றவள் காயத்ரி. காயத்ரி சந்தசமம் மாத எனப்படும்.



இந்த ஜென்மத்தில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவம் அகலும். அதற்காக வேண்டும் என்றே தெரிந்தே பாவங்களைச் செய்து விட்டு காயத்ரி மந்திரம் ஜபித்தால் பலன் கிடைக்காது.



காயத்ரி என்ற மந்திரத்திற்குச் சாவித்ரி என்றும் சரஸ்வதி என்றும் பெயர்கள் உண்டு. இந்த மந்திரம் காலையில் காயத்ரிக்காகவும், நடுப்பகலில் சாவித்ரிக்காகவும், மாலை சந்தியா வந்தனத்தில் சரஸ்வதிக்காகவும் ஜபிக்கப்படுகிறது.



காயத்ரி மந்திரம் ஜபிக்கப்பட்ட பின்னரே மற்ற மந்திரங்கள் ஜபிக்கப்படுகின்றன. மந்திர வழிபாட்டில் காயத்ரிக்குத் தான் முதல் இடம். காயத்ரி ஜபம் செய்யாத எந்த ஜபமும், ஆராதனையும் பயனற்றது.



இந்த மந்திரத்தில் ஓம் என்ற பிரணவமும், பிறகு மூன்று வியாஹ்ருதிகளும் பிறகு மூன்று பாதங்களுள்ள காயத்ரி மந்திரமும் உள்ளது. இதை ஒரே மூச்சில் சொல்லாமல் ஓம் என்ற பிரணவத்திலும், இரண்டாவது வியாஹ்ருதிகளிலும், மூன்றாவது தத்ஸவிதுர்வரேண்யம் என்ற முதல் பாதத்திலும், நான்காவது பர்க்கோ தேவஸ்ய தீமஹி என்ற இரண்டாவது பாதத்திலும், ஐந்தாவது தியோ யோ ந; ப்ரசோதயாத் என்ற மூன்றாம் பாதத்திலும் நிறுத்திச் சொல்ல வேண்டும்.



மனம் ஒரு புறம் எதையோ நினைத்துக் கொண்டிருக்க வாய் மட்டும் இந்த மந்திரத்தை 1008 அல்லது 108 தடவை உச்சரித்தால் பலன் கிடையாது. முறையாக 27 தடவை முழு மன ஒருமைப்பாட்டுடன் கூறினால் மட்டுமே பலன் கிடைக்கும்.



காலையில் கிழக்கு முகமாகச் சூரியனைப் பார்த்து நின்று கொண்டு இரு கைகளையும் முகத்திற்கு எதிராகக் கூப்பிக் கொண்டும், மதியம் கிழக்கு முகமாக உட்கார்ந்து கொண்டு கைகளை மார்புக்கு எதிரே கூப்பிக் கொண்டும், மாலையில் மேற்கு முகமாக அமர்ந்து கைகளை நாபிக்குச் சமமாக கூப்பிக் கொண்டும் ஜபம் செய்ய வேண்டும்.



தினமும் குறைந்தது 108 முறை ஜபிக்கவும். ஆபத்துக் காலத்தில் 28 அல்லது 10 தடவை ஜபிக்கவும். உடலும், உள்ளமும் தூய்மையான குழந்தைகளும், வயதான பெண்களும் காயத்ரி மந்திரத்தை ஜபிக்கலாம்.



காயத்ரி மந்திரத்தின் பதவாரியான பொருள் பின்வருமாறு:



யோ -எவர்

ந -நம்முடைய

தியோ -புத்தியை

தத் -அப்படிப்பட்ட

ப்ரசோதயாத் -தூண்டுகிறாரோ

தேவஸ்ய -ஒளிமிக்கவராக

ஸவிது -உலகைப் படைத்த

வரேண்யம் -மிகவும் உயர்ந்ததான

பர்கோ -சக்தியை

தீமஹி -தியானிக்கிறோம்



நமது புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள். காயத்ரி மந்திரத்தின் சிறப்பை உலகுக்கு உணர்த்தியவர் பிரம்ம ரிஷி விஸ்வாமித்திரர்.









--

ஸ்வாமிக்கு அர்த்தம் என்ன?- Maha Periava

வைகுண்டத்தில் ஸ்வாமி இருக்கிறார், ஹ்ருதயத்தில் இருக்கிறார், கோயிலிலிருக்கிறார் - என்றெல்லாம் நமது பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள். கோயிலில் இருக்கிறார் என்பதால் அங்கு நமஸ்காரம் செய்கிறோம்.



ஹ்ருதயத்தில் இருக்கிறார் என்பதால், சிவபூஜை செய்கிறவர்கள் முதலில் தங்கள் ஹ்ருதயத்தில் ஈச்வரனுக்கு உபசாரம் செய்துவிட்டு, அங்கிருந்து அவரை மூர்த்தியில் ஆவாஹனம் செய்து, பிறகு மூர்த்தி பூஜை செய்வது வழக்கம். வைகுண்டத்தில் இருக்கிறார் என்பதுபோல் கைலாஸத்தில் இருக்கிறார் என்றும், பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.



வைகுண்டம் என்பது பரமபதம். தத் விஷ்ணோ; பரமம் பதம் என்று, வேதம் சொல்லியிருக்கிறது. யாராவது காலமாகி விட்டால் ‘பரமபதத்திற்கு ஏறிவிட்டார்’ என்று வைஷ்ணவர்கள் சொல்வார்கள். அதற்கு வைகுண்டத்துக்கு எழுந்தருளி விட்டார் என்று அர்த்தம். வைகுண்டத்தில் இருக்கிறார் என்று சொல்லும் ஸ்வாமியைப் ‘புருஷோத்தமன்’ என்று சொல்வதுண்டு.



‘புருஷோத்தமன்’ என்ற வார்த்தைக்குப் ‘பெரும் ஆள்’ என்று அர்த்தம். ஆகையால் ‘பெருமாள்’ என்கிறார்கள். புருஷோத்தமன் என்ற சொல்லில் ‘உத்’ என்பதற்குப் ‘பெரியவர்’ என்பது அர்த்தம். ‘உத்தமர்’ என்றால் ‘மிகப் பெரியவர்’ என்பது பொருள்; புருஷ உத்தமன் அல்லது உத்தமபுருஷன் பெருமாள். வைஷ்ணவர்கள்தான் ஸ்வாமியைப் பெருமாள் என்கிறார்கள்.



மற்றவர்கள் ஸ்வாமி என்றே சொல்லுகிறார்கள்; ஸ்வாமி என்ற வார்த்தையில் ‘ஸ்வம்’ என்பதற்கு ‘ஸொத்து’ என்பது அர்த்தம், உடைமை என்று இலக்கணமாகச் சொல்லலாம். ஸ்வம் உடையவர் ஸ்வாமி. அதாவது ஸொத்தை உடையவர். ஸொத்து எது? நாம்தான். ‘என் ஸ்வாமி’ என்றால், ‘என்னை ஸொத்தாக உடையவர்’ என்று அர்த்தம்.



- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

இங்கிலீஷ் ஃபாஷன்! - Maha Periava

ஏழையோ, பணக்காரனோ எல்லார் குடும்பத்திலும் கல்யாணம் மாதிரியான சுபகாரியங்கள், சாவு மாதிரியான அசுப காரியங்கள் வருகின்றன. இவற்றுக்காக எவனும் கடன்படுகிற மாதிரி நாம் விட்டால் அது நமக்குப் பெரிய தோஷம். அவரவரும் தன்னாலானதை ஐந்தோ, பத்தோ ஏழைப்பட்ட பந்துக்களின் சுபாசுபகார்யங்களுக்கு உதவ வேண்டியது ஒரு பெரிய கடமை. இதை முன்காலங்களிலெல்லாம் ஸஹஜமாகச் செய்து வந்தார்கள். ‘பரோபகாரம்’ என்று யாரோ மூன்றாம் மனிதர்களுக்குச் செய்வதற்கு முன்னால், ‘பந்துத்வ’த்தோடு நம்முடைய ஏழைப்பட்ட உறவினர்களுக்கு உதவி செய்ய வேண்டும். இரண்டு தலைமுறைக்கு முந்தி இதைச் சொல்ல வேண்டிய அவச்யமே இருக்கவில்லை.





அப்போது கிழவர் பராமரிப்பு இல்லம், விதவை விடுதி என்றெல்லாம் வைக்க வேண்டிய அவச்யமே இல்லாதிருந்ததற்கு என்ன காரணம்? பந்துக்களே இவர்களைப் பராமரித்து வந்தது தான். அநேகமாக எல்லா வீடுகளிலும் ஒரு அத்தை, பாட்டி, மூன்று தலைமுறை விட்டு ஒரு மாமா, தாத்தா என்கிற மாதிரி கிழங்கள் இருக்கும்! தற்காலத்தில் ரொம்பவும் பணக்காரர்களும் கூட வெறும் ‘ஷோ’வாக பார்ட்டியும் ஃபீஸ்டும் கொடுக்கிறார்கள். அல்லது பேப்பரில் போடுகிற மாதிரி டொனேஷன் கொடுக்கிறார்கள்; ஆனால் பந்துத்வத்தோடு தங்கள் குடும்பத்திலேயே வசதி இல்லாதவர்களை ஸம்ரக்ஷிப்பது என்பது இப்போது அநேகமாகப் போயே போய்விட்டது.





அவிபக்த குடும்பமுறை (Joint family system)போனபின் அண்ணன், தம்பி என்பதே போய்விட்டது. முன்பெல்லாம் இப்படி ஜாயின்ட்- ஃபாமிலியாக இருக்கும்போது, தாயார், தகப்பனார், சிற்றப்பா பெரியப்பாமார்கள், அவர்களுடைய பத்னிகள், பிள்ளைகள், மாட்டுப்பெண்கள், பேரக்குழந்தைகள் என்று ஒரு வீட்டிலேயே 20, 25 பேர் இருப்பார்கள். இவ்வளவு பேர் இருக்கிறபோது, அநாதரவான தூர பந்துக்கள் நாலைந்து பேரைக்கூட வைத்துக்கொண்டு சோறு போடுவது ஒரு பாரமாகவே தெரியவில்லை. இப்போதோ அவனவனும் பெண்டாட்டியோடு கத்திரித்துக்கொண்டு தனிக்குடித்தனம் என்று போவதால் கூட ஒருத்தரை வைத்துக்கொள்வது என்றால்கூடச் சுமையாகத் தெரிகிறது. எத்தனையோ ஆயிரம், பதினாயிரம் வருஷங்களாக இருந்து வந்த ஏற்பாடுகள் இந்த இரண்டு, மூன்று தலைமுறைகளில் வீணாகப் போய், இங்கிலீஷ் ஃபாஷன் வந்ததில், உயர்ந்த தர்மங்கள் எல்லாம் நசித்துப் போய்விட்டன.

Thursday 5 March 2015

கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் — ஆசை

வாழ்க்கை எதிலே ஓடிக்கொண்டிருக்கிறது? ஆசையிலும் நம்பிக்கையிலுமே ஓடிக்கொண்டிருக்கிறது. சராசரி மனிதனை ஆசைதான் இழுத்துச் செல்கிறது. துக்கத்துக்கெல்லாம் அதுவே காரணமாகிறது. ‘வேண்டும் என்கிற உள்ளம் விரிவடைந்து கொண்டே போகிறது. ‘போதும்’ என்ற மனம் சாகும்வரை வருவதில்லை. ஐம்பது காசு நாணயம் பூமியில் கிடந்து, ஒருவன் கைக்கு அது கிடைத்துவிட்டால், வழிநெடுக நாணயம் கிடைக்கும் என்று தேடிக்கொண்டே போகிறான். ஒரு விஷயம் கைக்குக் கிடைத்துவிட்டால் நூறு விஷயங்களை மனது வளர்த்துக்கொள்கிறது. ஆசை எந்தக் கட்டத்தில் நின்றுவிடுகிறதோ, அந்தக் கட்டத்தில் சுயதரிசனம் ஆரம்பமாகிறது. சுயதரிசனம் பூர்த்தியானவுடன், ஆண்டவன் தரிசனம் கண்ணுக்குத் தெரிகிறது.

ஆனால் எல்லோராலும் அது முடிகிறதா?

இலட்சத்தில் ஒருவருக்கே ஆசையை அடக்கும் அல்லது ஒழிக்கும் மனப்பக்குவம் இருக்கிறது. என் ஆசை எப்படி வளர்ந்ததன்று எனக்கே நன்றாகத் தெரிகிறது.

சிறுவயதில் வேலையின்றி அலைந்தபோது “மாதம் இருபது ரூபாயாவது கிடைக்கக்கூடிய வேலை கிடைக்காதா” என்று ஏங்கினேன். கொஞ்ச நாளில் கிடைத்தது. மாதம் இருப்பத்தைந்து ரூபாய் சம்பளத்திலே ஒருபத்திரிகையில் வேலை கிடைத்தது.

ஆறு மாதம்தான் அந்த நிம்மதி.

“மாதம் ஐம்பது ரூபாய் கிடைக்காதா?” என்று மனம் ஏங்கிற்று.

அதுவும் கிடைத்தது. வேறொரு பத்திரிக்கையில் பிறகு மாதம் நூறு ரூபாயை மனது அவாவிற்று. அதுவும் கிடைத்தது. மனது ஐநூறுக்குத் தாவிற்று. அது ஆயிரமாக வளர்ந்தது. ஈராயிரமாகப் பெருகிற்று. யாவும் கிடைத்தன. இப்பொழுது நோட்டடிக்கும் உரிமையையே மனது கேட்கும் போலிருக்கிறது!

எந்தக் கட்டத்திலும் ஆசை பூர்த்தியடையவில்லை.

‘இவ்வளவு போதும்’ என்று எண்ணுகின்ற நெஞ்சு, ‘அவ்வளவு’ கிடைத்ததும், அடுத்த கட்டத்திற்குத் தாண்டுகிறதே, ஏன்?

அதுதான் இறைவனின் லீலை!

ஆசைகள் அற்ற இடத்தில், குற்றங்கள் அற்றுப் போகின்றன. குற்றங்களும், பாபங்களும் அற்றுப்போய் விட்டால் மனிதனுக்கு அனுபவங்கள் இல்லாமல் போய் விடுகின்றன. அனுபவங்கள் இல்லையென்றால், நன்மை தீமைகளைக் கண்டுபிடிக்க முடியாது. ஆகவே தவறுகளின் மூலமே மனிதன் உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, இறைவன் ஆசையைத் தூண்டிவிடுகிறான்.

ஆசையை மூன்று விதமாப் பிரிக்கிறது இந்து மதம்.

மண்ணாசை!

பொன்னாசை!

பெண்ணாசை!

மண்ணாசை வளர்ந்துவிட்டால், கொலை விழுகிறது.

பொன்னாசை வளர்ந்துவிட்டால், களவு நடக்கிறது.

பெண்ணாசை வளர்ந்துவிட்டால், பாபம் நிகழ்கிறது.

இந்த மூன்றில் ஓர் ஆசைகூட இல்லாத மனிதர்கள் மிகவும் குறைவு. ஆகவேதான்,பற்றற்ற வாழ்க்கையை இந்து மதம் போதித்தது. பற்றற்று வாழ்வதென்றால், எல்லாவற்றையும் விட்டு விட்டு ஓடிப்போய் சந்நியாசி ஆவதல்ல!

“இருப்பது போதும்; வருவது வரட்டும்: போவது போகட்டும்: மிஞ்சுவது மிஞ்சட்டும்” என்று சலனங்களுக்கு ஆட்படாமலிருப்பதே பற்றற்ற வாழ்க்கையாகும்.

ஆசை, தீமைக்கு அடிப்படையாக இல்லாதவரை, அந்த ஆசை வாழ்வில் இருக்கலாம் என்கிறது இந்து மதம். நான் சிறைச்சாலையில் இருந்தபோது கவனித்தேன். அங்கே இருந்த குற்றவாளிகளில் பெரும்பாலோர் ஆசைக் குற்றாளிகளே. மூன்று ஆசைகளில் ஒன்று அவனைக் குற்றவாளியாக்கியிருக்கிறது. சிறைச்சாலையில் இருந்து கொண்டு, அவன் “முருகா, முருகா!” என்று கதறுகிறான். ஆம், அவன் அனுபவம் அவனுக்கு உண்மையை உணர்த்துகிறது.

அதனால்தான் “பரம்பொருள் மீது பற்று வை: நிலையற்ற பொருள்களின் மீது ஆசை வராது” என்கிறது இந்துமதம்.

“பற்றுக பற்ற்ற்றான் பற்றினை அப்பறைப்

பற்றுக பற்று விடற்கு” - என்பது திருக்குறள்.

ஆசைகளை அறவே ஒழிக்கவேண்டியதில்லை.அப்படி ஒழித்துவிட்டால் வாழ்க்கையில் என்ன சுகம்? அதனால்தான் ‘தாமரை இலைத் தண்ணீர் போல் என்று போதித்தது இந்து மதம். நேரிய வழியில் ஆசைகள் வளரலாம். ஆனால் அதில் லாபமும் குறைவு. பாபமும் குறைவு. ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஐநூறு ரூபாய் மட்டுமே கிடைத்தால், நிம்மதி வந்து விடுகிறது. எதிர்பார்ப்பதைக் குறைத்துக்கொள்: வருவது மனதை நிறைய வைக்கிறது” என்பதே இந்துக்கள் தத்துவம்.

எவ்வளவு அழகான மனைவியைப் பெற்றவனும், இன்னொரு பெண்ணை ஆசையோடு பார்க்கிறானே, ஏன்?

இலட்சக்கணக்கான ரூபாய் சொத்துக்களைப் பெற்றவன் மேலும் ஓர் ஆயிரம் ரூபாய் கிடைக்கிற தென்றால் ஓடுகிறானே, ஏன்?

அது ஆசை போட்ட சாலை.

அவன் பயணம் அவன் கையிலில்லை; ஆசையின் கையிலிருக்கிறது. போகின்ற வேகத்தில் அடி விழுந்தால் நின்று யோசிக்கிறான் அப்போது அவனுக்கு தெய்வ ஞாபகம் வருகிறது. அனுபவங்கள் இல்லாமல், அறிவின் மூலமே, தெய்வத்தைக் கண்டு கொள்ளும்படி போதிப்பதுதான் இந்து மத்த்தத்துவம். ‘பொறாமை, கோபம்’ எல்லாமே ஆசை பெற்றெடுத்த குழந்தைகள்தான். வாழ்க்கைத் துயரங்களுக்கெல்லாம் மூலகாரணம் எதுவென்று தேடிப் பார்த்து, அந்தத் துயரங்களிலிருந்து உன்னை விடுபடச் செய்ய, அந்தக் காரணங்களைச் சுட்டிக் காட்டி, உனது பயணத்தை ஒழுங்குபடுத்தும் வேலையை, இந்து மதம் மேற்கொண்டிருக்கிறது.

இந்து மதம் என்றும் சந்நியாசிகளின் பாத்திரமல்ல.

அது வாழ விரும்புகிறவர்கள், வாழ வேண்டியவர்களுக்கு வழிகாட்டி.

வள்ளுவர் சொல்லும் வாழ்க்கை நீதிகளைப் போல இந்து மதமும் நீதிகளையே போதிக்கிறது. அந்த நீதிகள் உன்னை வாழவைப்பதற்கேயல்லாமல் தன்னை வளர்த்துக் கொள்வதற்காக அல்ல.

உலகத்தில் எங்கும் நிர்பந்தமாக, வெண்மையாக, தூய்மையாக, இருக்கிறது என்பதற்கு அடையாளமாகவே அது ‘திருநீறு’ பூசச் சொல்லுகிறது.

உன் உடம்பு, நோய் நொடியின்றி இரத்தம் சுத்தமாக இருக்கிறது என்பதற்காகவே, ‘குங்குமம்’ வைக்கச் சொல்கிறது.

‘இவள் திருமணமானவள்’ என்று கண்டுகொண்டு அவளை நீ ஆசையோடு பார்க்காமலிருக்கப் பெண்ணுக்கு அது ‘மாங்கல்யம்’ சூட்டுகிறது. தன் கண்களால் ஆடவனுடைய ஆசையை ஒருபெண் கிளறிவிடக்கூடாது என்பதற்காகவே, அவளைத் ‘தலைகுனிந்து’ நடக்கச் சொல்கிறது.



கோவிலிலே தெய்வ தரிசன்ம் செய்யும்போது கூட கண் கோதையர்பால் சாய்கிறது. அதை மீட்க முடியாத பலவீனனுக்கு, அவள் சிரித்துவிட்டால் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியதுபோல் ஆகிறது. “பொம்பளை சிரிச்சா போச்சு; புகையிலை விரிச்சாப் போச்சு” என்பது இந்துக்கள் பழமொழி. கூடுமானவரை மனிதனைக் குற்றங்களிலிருந்து மீட்பதற்கு, தார்மீக வேலி போட்டு வளைக்கிறது இந்துமதம். அந்தக் குற்றங்களிலிருந்து விடுபட்டவனுக்கே நிம்மதி கிடைக்கிறது. அந்த நிம்மதியை உனக்கு அளிக்கவே இந்துமதத் தத்துவங்கள் தோன்றின.

இன்றைய இளைஞனுக்கு ஷேக்பியரைத் தெரியும்; ஷெல்லியைத் தெரியும்; ஜேம்ஸ்பாண்ட் தெரியும். கெட்டுப்போன பின்புதான் அவனுக்குப் பட்டினத்தாரைப் புரியும்.

ஓய்ந்த நேரத்திலாவது அவன் இராமகிருஷ்ண பரமஹம்சரின் உபதேசங்களைப் படிப்பானானால், இந்து மதம் என்பது வெறும் ‘சாமியார் மடம் ‘ என்ற எண்ணம் விலகிவிடும்.

நியாயமான நிம்மதியான வாழ்க்கையை நீ மேற்கொள, உன் தாய் விடிவில் துணை வருவது இந்துமதம். ஆசைகளைப்பற்றி பரமஹம்சர் என்ன கூறுகிறார்? “ஆழமுள்ள கிணற்றின் விளிம்பில் நிற்பவன், அதனுள் விழுந்துவிடாமல் எப்போதும் ஜாக்கிரதையாக இருப்பதைப்போல் உலக வாழ்க்கையை மேற்கொண்டவன் ஆசாபாசங்களில் அமிழ்ந்து விடாமல் இருக்க வேண்டும்” என்கிறார். “அவிழ்த்து விடப்பட்ட யானை, மரங்களையும் செடிகொடிகளையும் வேரோடு பிடுங்கிப் போடுகிறது. ஆனால் அதன் பாகன் அங்குசத்தால் அதன் தலையில் குத்தியதும், அது சாந்தமாகி விடுகிறது. அது போல, அடக்கியாளாத மனம் வீண் எண்ணங்களில் ஓடுகிறது” “விவேகம் என்ற அங்குசத்தால் அது வீழ்த்தப்பட்டதும் சாந்தமாகி விடுகிறது”. என்றார். அடக்கியாள்வதன் பெயரே வைராக்யம். நீ சுத்த வைராக்கியனாக இரு. ஆசை வளராது. உன்னைக் குற்றவாளியாக்காது, உன் நிம்மதியைக் கெடுக்காது.

நன்றி :- கவிஞர் கண்ணதாசன்

Thanks to Vanakkam Subbu, a friend to be proud of

Monday 2 March 2015

Two movies - A Wednesday and Dhrushyam – Unique Comparison

When I meant by “Unique comparison” it means I wanted to mention the similarity portrayed in an unusual and startling way, like two arrows starting from different directions attacking the same point.

When I saw the film Wednesday, Nasiruddin shah’s (NS) classic, I was taken back by his superb acting and the story woven around him. Anupham kher (AK) and NS carried that film so beautifully and one could take his/her eyes off from the film and it was a delight, though the concept was lawfully debatable.

When the Malayalam fim Drishyam released, it was a huge success and almost all media were paying praises in heaps. It also added value when the film was remade in Telugu and Tamil. When I write this, Tamil movie has not been released and actor like Kamal Hassan in the lead role, this, yet to be released, film would be a roaring success. Unforunately, those see and admired “Drishyam” will not reciprocate this in “pApa nAsam”. I found this when Kamal remade “Wednesday”. I did not like the latter because NS originality in his acting was missing in Kamal’s.

Coming back, Iam not a Malayalam movie maddy, though I like Malayalam movies. I stay away from these because of language problem. Words like “anvEshichu; Rakshappattu, nasippichchu, are lovely words to pronounce, without knowing the meaning, there is not much to comment. Moreover, I don’t have time to see films.

When I had been to Guruvayoor recently, my father was searching for a DVD of Dhrushyam and there, I wanted to buy a dvd and send it to my father. I could not get there and not search for more places because of tight schedule.

After coming back to Chennai, I got the “pirated version” at no time as our office is situated right opposite of Burma Bazaar, the famous bazaar for pirated CDs and DVDs.

I purchased one CD with English subtitles and saw that film. I was completely moved with the film. The portrayal of characters coupled with the intelligent script, made me a fan to the Director. Mohan Lal is one actor I always adore. Iam one of the die-hard fans of Mohan lal and some of his films like Kireedam, High Highness Abdullah and dasaratham are still in my memory because of the

sheer acting of LalEttA.

When I was thinking of that beautiful movie, I suddenly remembered “Wednesday”. I thought the main character NS and Mohan lal had a same “mind-set”. NS wanted to protect the country from Terrorists and he planned in such a way without police nabbing him. Mohan lal also wanted to protect his family from a “local-terrorist” without police identifying him. Both are ordinary gentle men and they learnt life from their “surroundings” like for NS, it is the train, for ML it is Cable centre.

As I told you, the route is different, but the ultimate Goal is only one, to protect someone at any cost. There are different directions as I mentioned Like Mumbai, the congested city and for Dhushyam, some village in Kerala- ML loved his family and determined to protect at any cost and NS loved his friend and determined to take revenge. Revenge is another way of protecting the public.

Both are composed and very clear in what they are doing. Actors like Mohan Lal and Nasiruddin shah are assets in our country.

I need to tell a word about the villain in Dhrushyam. SahadEvan, the police constable who dislikes Mohanlal and when a chance comes, he beats ML ruthlessly. End of the movie, we hate that Police Villain. That was the definition of villain, fan needs to hate. Famous actor in Tamil, Nambiar, used to say this and also to be seen from movies especially with MGR.