Monday 23 June 2014

''இரண்டு சூரியன்கள்​"

''இரண்டு சூரியன்கள்''



ரா கணபதி அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய ஓர் அபூர்வமான கட்டுரையின் சுருக்கம் இது



"இன்று அக்டோபர், 25 , 1992 காஞ்சி மகா சுவாமிகளின் நூற்றாண்டைக் கொண்டாடத் தயாராகிக் கொண்டிருக்கிறோம். மே மாதம் 1994ல் தான் அவர் நூற்றாண்டு முடிப்பார் என்ற போதும், நமக்கு இந்த தருணத்தில் இரட்டிப்பு பாக்கியம் கிடைத்திருக்கிறது. மூன்று நாட்களுக்கு முன், நூறு ஆண்டுகளைக் கடந்த இன்னொரு பெரிய ஞானியை இன்று நினைக்கும் வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்கிறது. இதில் அபூர்வமான விஷயம் என்னவென்றால் இரண்டு ஞானிகளின் பெயர்களுமே 'சந்திரசேகர' என்பதுதான்.



அவர் வேறு யாருமல்ல, சிருங்கேரி சங்கர மடத்தின் சந்திரசேகர பாரதி சுவாமிகள்தான். காஞ்சி சங்கர மடத்தை சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் நிர்வகித்துக்கொண்டிருந்த தருணத்தில் பாரதி சுவாமிகள் 42 ஆண்டுகள் சிருங்கேரி மடத்தின் பீடாதிபதியாக இருந்தார். இருவருமே தெய்வீகமான அருளாளர்கள். ஒரே தருணத்தில் இரண்டு சந்திரசேகரர்கள் இரு வேறு மடங்களில் தலைமையை ஏற்று நடத்துவது பராசக்தியின் விளையாட்டு அல்லவா? இருவரும் ஒரே விஷயத்தில் பார்வையை செலுத்தும் இரண்டு கண்கள், என்றே எடுத்துக்கொள்ளவேண்டும். சந்திரன் போன்ற குளிர்ச்சியான இரண்டு முனிவர்களும் அத்வைத ஞானத்தை சூரியன் போல் வெளிச்சமிட்டு உலகுக்குக் காட்டி கொண்டிருக்கின்றனர். இருவருமே ஒப்பிட முடியாதவர்கள். அதே நேரத்தில் ஒப்பிடகூடியவர்களும் கூட!



மனித குலத்தை வாழ்த்தும் தகுதி உடையவர்கள் அவர்கள். நிபுணர்களைத் திகைக்க அறிவொளி படைத்தவர்கள். வேதாந்தக் கருத்துகளை எளியவருக்கும் புரியும் வகையில் எடுத்துச் சொல்லக்கூடியவர்கள். பெரிய ஞானிகள் மட்டுமே நடந்துகொள்வது போன்று, அடக்கமாக நடந்துகொள்பவர்கள். மாற்றங்களும் சீர்திருத்தங்களும் நிகழும் இந்தக் காலத்தில், பாரம்பரிய கட்டுபாடுகளை மீறாமல் எதிர் நீச்சல் போட்டுபவர்கள். 'ஜகத்குரு' என்ற பட்டதை அவர்களாக தேடிப் போகவில்லை. குருவாக அவர்கள் யாருக்கும் பாடம் கற்பிக்க முனையவில்லை.



இன்னோர் ஒற்றுமையும் இருக்கிறது. தமிழ் நாட்டிலுள்ள காஞ்சி மடத்தின் தலைவரின் தாய்மொழி கன்னடம். கர்நாடகத்தில் உள்ள சிருங்கேரி மடத்தின் தலைவரின் தாய்மொழி தெலுங்கு. இருவருக்குமே சந்நியாசத்தை ஏற்கும் தருணத்தில் குரு என்று யாருமே இருக்கவில்லை. ஆனால் இருவருமே குரு என்று ஒருவர் தேவை என்பதை உலகுக்கு வலியுறுத்தியவர்கள். உள்ளத்தளவில் இருவருமே ஒரே மாதிரிதான். ஆனால் அவர்கள் வெளியே நடந்துகொள்ளும் முறையையும் செயல்களையும் கண்ட உலகத்தினர், வேறு மாதிரி நினைக்கத் தொடங்கினர்.



முக்கியமான வேறுபாட்டை இங்கே விளக்கியாக வேண்டும் காஞ்சி முனிவர் பிரம்மஞானியாக இருந்தாலும் வெளியுலக நடவடிக்கைகளில் கவனம் செலுத்தினார். அவை எல்லாமே சாஸ்திர அடிப்படைக்கு உட்பட்டதாக இருக்கவேண்டும் என்று செயல்பட்டார், அதை அடைய அவர் திட்டங்களை தீட்டினார்.



சாஸ்திர முறைகளுக்கு மக்களைத் திருப்பும் ஆர்வம் கொண்டிருந்த சிருங்கேரி ஆச்சாரியார். பொதுவாகத் தன்னை தனிமைப்படுத்திகொண்டு, தியானத்தில் ஈடுபட்டார். அவர் நினைத்திருந்தால் அறிவுக்கடலில் நீந்தித் திளைத்திருக்க முடியும். ஆனால் தெய்வீகம் ஆன்மிகம் தவிர வேறு விஷயங்களில் அவர் கவனம் செலுத்த விரும்பவில்லை. சீடர்களையும் அகடமிக் (Academic) எனப்படும் அறிவு சார்ந்த விஷயங்களில் அக்கறை காண்பிக்கத் தூண்டவில்லை.



மதம் சரித்திரம் அல்லது இலக்கிய ரீதியான அடிப்படையில் மதத் தலைவர்கள் அல்லது மதம் சம்பந்தப்பட்ட விவாதங்களிலும் ஆர்வம் காட்ட மாட்டார். ஆதிசங்கரர் காலம், அல்லது அவரது சில நூல்கள் சார்ந்த பிரச்சனைகளையும் அல்லது வித்யாரண்யருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட குருமார்கள் இருந்தார்களா என்பது போன்ற தர்க்கங்களிலும்... இதில் உண்மையை கண்டுபிடித்து அறிந்துகொள்வதற்கும், உனது சொந்த ஆன்மீக வளர்ச்சிக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதோ? என்பதுதான் பாரதி சுவாமிகளின் பதிலாக இருக்கும்.



மாறாக, காஞ்சி முனிவரோ எல்லாத் துறைகளிலும் ஆய்வு மேற்கொள்வதை வரவேற்பார். அத்துடன் தாமே நவீன அறிவியலில் கடலில் தேடித் தேடி முத்து, பவளம், சங்கு, என்று கண்டெடுத்து, அறிவு குறித்த பிரச்சனைகளை தீர்த்து வைப்பார். இந்த இருவரையுமே சனாதன தர்மத்தின் இரு கண்கள் என்று போற்றினார்கள் பல நிபுணர்கள்.



ஆசார்யர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்காவிட்டாலும், ஒரே இதயம் படைத்தவர்களாகவே இருந்தனர். 'தங்கள் திட்டங்கள் குறித்து பரஸ்பரம் கருத்துப் பரிமாற்றங்கள் செய்துகொண்டனர்' என்று கே. பாலசுப்ரமணிய அய்யர், எல் எஸ் பார்த்தசாரதி ஐய்யர், மற்றும் அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தச்சர்யார் போன்றவர்கள் என்னிடம் இந்த விஷயங்கள் குறித்து சொன்னது உண்டு.



காஞ்சி மடத்திலிருந்து எவர் வந்தாலும் அவர்களை மிக மரியாதையுடன் நடத்துவதுடன், மற்ற மடங்களுக்கும் அழைத்துச்செல்ல தம் தொண்டர்களை அனுப்பிவைப்பார் சிருங்கேரி ஆச்சார்யர். ''இப்படிப்பட்ட தேஜஸ்வியை வேறு எங்காவது நீங்கள் பார்த்ததுண்டா? அது அவரின் தபஸின் மகிமை!" என்று மகா பெரியவ அவரைப் பற்றி சொல்வதுண்டு. அவருடைய தந்தை மற்றும் பாட்டனார் குறித்தும் பெரியவாள் உயர்வாகச் சொல்வதுண்டு.



சிருங்கேரி ஆச்சார்யரோ காஞ்சி பெரியவர் பற்றி ''அந்த ஞானியின் ஆன்மிக ஒளி அல்லவா உலகின் நன்மைக்கு காரணமாக இருக்கிறது!" என்று மகிழ்ச்சியுடன் கூறுவார்.



நீதித்துறையில் புகழ் பெற்றவர் டி.எம்.கிருஷ்ணஸ்வாமி அய்யர். இவர் பெரியவ பாலக்காட்டில் உள்ள பல்லாவூரில் 1927 -ல் தங்கி இருந்தபோது அங்கே சென்று திருபுகழ் பஜனைகள் செய்தார், பெரியவா இவருக்கு திருபுகழ் மணி என்று பட்டம் கொடுத்தார்.



அதன் பிறகு திருபுகழ் மணி கோவைக்குச் சென்று சிருங்கேரி ஆச்சாரியார் முன்பும் திருபுகழ் பஜனைகள் செய்தார். அவருக்கு காஞ்சி பெரியவா விருது தந்து கௌரவித்தது பற்றி கேள்விப்பட்டதும், ''அவர் அப்படி கௌரவம் செய்திருந்தால் அதை நாங்கள் இருவருமே அளித்ததாக வைத்துக்கொள்ளுங்கள்'!'' என்றாராம் சிருங்கேரி ஆச்சாரியார்.



இன்னொரு விஷேசம் என்னவென்றால் 1935 -ல் பெரியவா கோயமுத்துருக்கு விஜயம் செய்த போது, அவர் முகமிட்டிருந்ததே சிருங்கேரி மடத்தில்தான்!.



1935 -ஆம் ஆண்டு கல்கத்தாவுக்கு நவராத்திரி பூஜை செய்யப் போனார் காஞ்சி பெரியவா. அங்கே மகேந்திர சர்மா என்ற சிருங்கேரி மட அபிமானியும் இருந்தார். பூஜையின் 4 -ஆம் நாள் வரை அவரால் பொறுக்கமுடியவில்லை. நேராக சிருங்கேரி போய் சுவாமிகள் முன் நின்றார்.



சுவாமிகளுக்கு வந்ததே கோபம். உன்மனதில் வேறுபாடு என்கிற கல்மிஷம் புகுந்துவிட்டது. ஏன் பாதி பூஜையில் இங்கே வந்தாய்? மகா பாபம் செய்திருக்கிறாய் என் கண் முன்னாள் நிற்காதே திரும்பிப் போய்விடு என்று அவரைக் கடிந்துகொண்டாராம்.



ஆம். இரண்டு 'சந்திரசேகரர்களும்' ''சங்கர நாராயணன்'' எனும் ஒருவராகவேதான் இருந்தார்கள்

கண்ணதாசன் கவித் துளிகள்

அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடைமையடா



அடுத்தவர் வாழ்வைக் கெடுத்தவன் ஒரு நாள் படுத்த பின் எழ மாட்டான்

அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே

அதுதேடி இதுதேடி அலைகின்றார் எதுவந்து சேர்ந்தாலும் தவிக்கின்றார்

அநியாயம் செய்பவருக்கும் இங்கு மரியாதை

அன்பு நன்றி கருனை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்

அன்னை மனமே கோவில் அவளே என்றும் என் தெய்வம்



ஆசை குறையத் துன்பமும் குறைகிறது

ஆசை கொள்வதில் அர்த்தமென்னடா காசில்லாதவன் குடும்பத்திலே

ஆடை அணிகலன் ஆடம்பரங்களை ஆண்டவன் விரும்புவதில்லை

ஆத்திரமான கேள்விகளையும் அமைதியாகச் சமாளி

ஆபத்தை சந்திக்கத் துணிந்து விடு அழுவதை மட்டும் நிறுத்தி விடு

ஆரவார நடையைப்பார்த்து மயக்கம் கொள்ளாதே

ஆற்றாதழுதால் அழுத கண்ணீர் துடைக்கும் கையாவான்

ஆற்றும் கடமையை மறக்காதே காற்றுக்கும் மழைக்கும் கலங்காதே

இயற்கையழுதால் உலகம் செழிக்கும் மனிதனழுதால் இயற்கை சிரிக்கும்

இரக்கம் கருணைக்கு விளக்கம் ஈகை நல்லவர் வழக்கம்

இரந்துண்ணும் வாழ்வே எதனாலே இதயமில்லா மாந்தர் சதியாலே

இன்று நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் பேதம் புரியலே

உடைப்பதை உடைத்து வளைப்பதை வளைத்தால் உலகம் உருப்படியாகும்

உண்மையென்பது அன்பாகும் பெரும் பணிவு என்பது பண்பாகும்

உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்

உத்தமரென்றால் சுவர்க்கமிருக்கு உன்னையறிந்தால் அது பக்கமிருக்கு

உயர்வைத்தருவது ஒழுக்கம் ஊரும் உலகும் மதிக்கும்

உள்ளத் துணியும் முயற்சியும் கொண்ட உத்தமர் வாழ்வு மலரும்

உள்ளத்தில் பொய்யே நிறைந்திருக்கும் உடன் பிறந்தோரையும் கருவறுக்கும்

உள்ளார்க்குச் செல்வங்கள் சொந்தம் இல்லார்க்கு உள்ளங்கள் சொந்தம்

உறவுக்கு என்று விரிந்த உள்ளம் மலர்கள் ஆகலாம்

உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி தேடு

ஊசிக்குள்ளே ஒட்டகம் போனாலும் காசாசை போகாது கட்டையிலும் வேகாது

ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகளாகலாம்

எதையும் தாங்கும் இதயமிருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்

எல்லாமும் எல்லாரும் பெற வேண்டும் இல்லாமை இல்லாத நிலைவேண்டும்

ஒவ்வொரு நாளும் வரலாறு உன்னை நினைத்து முன்னேறு

ஒழிந்து மறைந்து ஆட்டம் போட்டு உத்தமர் போல் பேசு

ஒன்றே சொல்வார் நன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி

கடந்தது உன் விளையாட்டு காலங்கள் யாவிலும் நல் வழிகாட்டு

கடமையைச் செய்வோம் கவலையை மறப்போம்

கண்ணீர் வடிப்பவன் மூடனடா காலத்தை வென்றவன் வீரனடா

கர்மமே யோகமானால் பிற துன்பத்தின் வலி தெரியாது

கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம்

கலகம் இன்றி வாழுங்கள் உலகம் உங்கள் கைகளிலே

கலையங்கள் ஏங்குது சோறின்றி இதயங்கள் ஏங்குது வாழ்வின்றி

கல்லினும் கொடிய மனமுண்டு அதில் கருணைக்கு எங்கே இடமுண்டு



காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்து விடும்

காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் வெறும் கற்பனை சந்தோசத்தில் அவரது கவனம்

காமத்தில் கண்கள் கெட்டால் ஞானியின் பெயரும் முட்டாள்

காலங்களாலே கன்யம் பிறக்கும் கார்யம் பிறந்தால் காரணம் விளங்கும்

காலம் உனக்காகக் காத்திருக்காது காலடிச் சுவடுகள் கூடவராது

காலம் பொன்னானது கடமை கண்ணானது

காலம் போனால் திரும்புவதில்லை காசுகள் உயிரைக் காப்பதுமில்லை

குற்றம் குறை பேசினால் சுற்றமென ஏதுமில்லை சொந்தமென நாதியில்லை

கெட்ட பின் ஞானியானவர்தன் பெண்மையை கேவலாமாகத்திட்டுவார்கள்

கையளவே இதயம் வைத்தான் அதில் கடல் போல் ஆசை வைத்தான்





கையிலே பணம் இருந்தால் கழுதை கூட அரசன்

கொடுத்தால் கிடைப்பது மரியாதை கொடுப்பவன் கையில் மலர்வாடை

கொடும்பாம்புகள் இங்கே கொத்தவிட்டு புத்தனைப் போல சத்யனாய் வாழுதடா

கொடுமை செய்த பகைவருக்கும் கருணை செய்வது அன்பு

கொடுமை வில்லிலும் இருக்கும் சிலர் வஞ்சகச் சொல்லிலும் இருக்கும்

கொத்தும் போது கொத்திக்கொண்டு போக வேண்டும் நல்லதை

சட்டத்தின் பின்னால் சதிகார கூட்டம் தலைமாறி ஆடும் அதிகார ஆட்டம்

சட்டம் என்பது வெளிக்காவல் தர்மம் என்பது மனக்காவல்

சட்டம் தரும் சலுகை கூட சமுதாயம் தருவதில்லை

சட்டமென்பது இருட்டறை அதில் தர்மம் என்பதே விளக்கு

சத்யம் தோற்றதில்லை சரித்திரம் படித்த பின் சஞ்சலம் வருவதில்லை

சந்தேகம் பிறந்து விட்டால் சத்தியமும் பலிப்பதில்லை

சுருக்கத்து வேண்டும் உயர்வு பெருக்கத்து வேண்டும் பணிவு

சுவர்க்கமும் நரகமும் நம் வசமே

சொந்தம் ஒரு கைவிலங்கு அதில் பந்தம் ஒரு கால்விலங்கு

சொல்லில் வருவது பாதி நெஞ்சில் தூங்கிக்கிடப்பது மீதி

சோதனைகளாலே மனம் பக்குவபட்டால் பின் லாபம் தொடர்கிறது

தவறுதல் மனிதனின் பழக்கம் உணர்ந்தால் மன்னிப்பு கிடைக்கும்

தன் பசி கருதாமல் பிறர்க்கு கொடுப்பவர் தெய்வத்தின் தெய்வம்

தன்னாலே வெளிவரும் தயங்காதே ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே

தன்னையறிந்தால் ஒரின்பம் தன்னலம் மறந்தால் பெரும் பேரின்பம்





திருடிச் சேர்த்த பணம் நிக்காது உன்னை உயிரோடு வைக்காது

துணிந்து விட்டால் தலையில் எந்தச் சுமையும் தாங்கலாம்





துறவும் நிர்வாணமே பெண்நிர்வாணம் கூட தெய்வீகமே





துன்பத்திலே பங்கு கொண்டால் கண்ணீர் சொல்வது நன்றி

துன்பம் வரவு சுகம் செலவு இருப்பது கனவு

தூய தங்கம் தீயில் விழுந்தாலும் குணம் மாறாது

தெய்வ புருஷன் ராமனுக்கே பொய்மான் எதுவென்று தெரியவில்லையே

தெரிந்தே கெடுப்பது பகையாகும் தெரியாமல் கெடுப்பது உறவாகும்

நடந்ததெல்லாம் நினைப்பதுதான் துயரம் என்று ஞானிகள் சொன்னார் அன்று

நடப்பது சுகமென நடத்து நாளை நமதென நினைத்து

நம் பாவத்தில் வந்த இன்பம் நிலைக்காது

நமக்கும் மேலே ஒருவனடா நாலும் தெரிந்த கலைஞனடா

நல்லவர்க்கும் பகையுண்டு இங்கு நன்றியில்லாதவர் சிலருண்டு

நண்பனும் பகை போல் தெரியும் அது நாட்பட நாட்படப் புரியும்



நன்றே நன்று நல்லதை செய்து ஒன்றாய் வாழ்வது நன்று

நாடக வேசம் கூட வராது நாளைய உலகம் இவரை விடாது

நாலு பக்கம் வாசலுண்டு நமக்கும் ஒரு வழியுண்டு

நாளை என்ன நாளை இன்று கூட நமது தானே



நாளைப்பொழுதை இறைவனுக்களித்து நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு

நாளைய உலகம் நம் வசமே நல்லதும் தீயதும் நம்மிடமே



நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்

நெஞ்சிலே நினைவெதற்கு வஞ்சகரை மறப்பதற்கு

நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சந்நிதி

நெஞ்சுக்கு நீதியை ஒளித்தே வாழ்பவன் நிச்சயம் மிருகமடா

நேர்மையிலும் தன் வேர்வையிலும் தினம் வாழ்பவன் தெய்வமடா‍‍

பசியென்று வந்தவர்க்கு புசியென்று தந்தவரை பரமனும் பணிவானடா



பட்டம் போல அவர் பளபளப்பார் ஙால் போல் இவர் இளைத்திருப்பார்

பணத்தின் மீதுதான் பக்தி என்றபின் பந்த பாசமே ஏனடா

பண்பு தெரியாத மிருகம் பிறந்தாலும் பால் தரும் கருணையது

பயந்தவன் தனக்கே பகையாவன் துணிந்தவன் உலகுக்கு ஒளியாவான்

பரிபக்குவ நிலை பரிமானத்தின் மூலமே வருகிறது





பலன் எதிர்பாராது கர்மம் செய்

பாதை வகுத்த பின்பு பயந்து என்ன லாபம்

பாதையில் நடந்தால் ஊர் சேரும் போதையில் நடந்தால் வாழ்வு தடுமாறும்

பாதையை விட்டு விலகிய கால்கள் ஊர் போய் சேராது

பாயில் படுத்து நோயில் வீழ்ந்தால் காதல் கானல் நீரே





பாலும் சில நேரம் நீராகத் தெரியும் அது கண் செய்த தவறு

பாவத்தை கண்டால் விலகி விடு பாதையைப் பார்த்து நடந்துவிடு

பாவம் என்பது செய்யும் தீமை புண்ணியம் என்பது நாம் செய்யும் நன்மை

பாறையில் நெல் விதைக்கமுடியாது பாவத்தில் வந்தசெல்வம் நிலையாது





பானையிலே சோறிருந்தால் பூனைகளும் சொந்தமடா

பிடிபட்ட பின்தானே கள்வன் அதுவரை அவன் பேரும் தலைவன்





பிறக்கின்ற ஆசை தவறாக இருந்தால் அது நடக்கவும் கூடாதம்மா

பிறர் தேவையறிந்து வாரிக்கொடுப்பவர் தெய்வத்தின் பிள்ளைகள்

பிறவியின் பயன் பிறருக்கு சேவை செய்வதே

பூப்போல மனதுக்கு சஞ்சலமில்லை பொல்லாத மனதுக்கு நிம்மதியில்லை





பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே

பூமியில் நேராக வாழ்பவர் எல்லாம் சாமிக்கு நிகரில்லையா

பேசமாட்டாரா என உலகம் ஏங்க வேண்டும் பேசினால் உலகம் நின்று கேட்க வேண்டும்

பேசாமலிருப்பது பெருந்திறமை மௌனமே மகா ஞானம்





பொய்யுடம்பு போன பின்னும் புகழடம்பு வாழாது

பொருளாதாரம் செய்த விந்தை இவள் பொருள் தாரமாகிவிட்ட சந்தை

போகங்களில் சிக்காதவனே புனிதன் ஆவான்

போற்றுப‌வர் போற்றட்டும் பொறுமையில்லாதவர் தூற்றட்டும்





மகனைப் படிக்க வை அவன் சம்பளத்தை எதிர்பாராதே

மலை போன்ற துன்பம் பனி போல மாறுவதுண்டு

மானத்தில் மங்கையர்கள் மானல்லவா கவரி மானல்லவா

மானத்தோடு வாழ்வதுதான் சுயமரியாதை





மூடக்கொள்கைகள் ஓழியனும் நல்ல மூதறிவாளர் பெருகனும்

மூல நோக்கம் சிருஷ்டி என்றால் விரஸமாகாது

யாரிடம் குறையில்லை யாரிடம் தவறில்லை வாழ்வது ஒரு முறை வாழ்த்தட்டும் தலைமுறை

வந்தவரெல்லாம் தங்கி விட்டால் இந்த மண்ணில் நமக்கு இடமேது

வருவது வரட்டும் மனமே தினம் வாழ்வது தான் நம் கடமை

வாசல் என்றால் ஆயிரமிருக்கும் வாசல் தோறும் வேதனையிருக்கும்

வார்த்தையை விட மௌனத்துக்கு பல அர்த்தங்கள் உண்டு





வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்

வாழ்க்கை எல்லாம் வசந்தமே வாசமலர்கள் நம் உள்ளமே

வாழ்க்கை என்பது நாடகமே வந்து போனவர் ஆயிரமே

வாழ்க்கை ஒரு கேள்விக்குறி அவதாரங்கள் அதை ஆச்சர்யக்குறியாக நிமிர்ந்தன



வாழ்த்தும் கையில் வாளுண்டு போற்றும் மொழியில் விடமுண்டு

வாழ்தலில் பற்று வை வாழ்க்கையைக் கற்று வை

வாழ்வென்றும் தாழ்வென்றும் சக்கரம் சுழல்கின்றது அதில் சரித்திரம் நிகழ்கின்றது

விஞ்ஞானத்தை ஏசி அஞ்ஞான இருள்மூழ்கும் அப்பாவி மனம் மாறனும்

விதியென்று ஏதுமில்லை வேதங்கள் வாழ்க்கையில்லை

விதைப்பவன் தான் நீ அறுப்பவன் அவனே

விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்க்கை நிரந்தரமாகாது

வெறும் பேச்சு சோம்பலில் மனிதன் வாழ்ந்தால் சுதந்திரம் என்னசெய்யும்

வேடம் போடும் கூட்டம் இங்கு மலிந்து விட்டது