Monday 23 June 2014

கண்ணதாசன் கவித் துளிகள்

அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடைமையடா



அடுத்தவர் வாழ்வைக் கெடுத்தவன் ஒரு நாள் படுத்த பின் எழ மாட்டான்

அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே

அதுதேடி இதுதேடி அலைகின்றார் எதுவந்து சேர்ந்தாலும் தவிக்கின்றார்

அநியாயம் செய்பவருக்கும் இங்கு மரியாதை

அன்பு நன்றி கருனை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்

அன்னை மனமே கோவில் அவளே என்றும் என் தெய்வம்



ஆசை குறையத் துன்பமும் குறைகிறது

ஆசை கொள்வதில் அர்த்தமென்னடா காசில்லாதவன் குடும்பத்திலே

ஆடை அணிகலன் ஆடம்பரங்களை ஆண்டவன் விரும்புவதில்லை

ஆத்திரமான கேள்விகளையும் அமைதியாகச் சமாளி

ஆபத்தை சந்திக்கத் துணிந்து விடு அழுவதை மட்டும் நிறுத்தி விடு

ஆரவார நடையைப்பார்த்து மயக்கம் கொள்ளாதே

ஆற்றாதழுதால் அழுத கண்ணீர் துடைக்கும் கையாவான்

ஆற்றும் கடமையை மறக்காதே காற்றுக்கும் மழைக்கும் கலங்காதே

இயற்கையழுதால் உலகம் செழிக்கும் மனிதனழுதால் இயற்கை சிரிக்கும்

இரக்கம் கருணைக்கு விளக்கம் ஈகை நல்லவர் வழக்கம்

இரந்துண்ணும் வாழ்வே எதனாலே இதயமில்லா மாந்தர் சதியாலே

இன்று நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் பேதம் புரியலே

உடைப்பதை உடைத்து வளைப்பதை வளைத்தால் உலகம் உருப்படியாகும்

உண்மையென்பது அன்பாகும் பெரும் பணிவு என்பது பண்பாகும்

உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்

உத்தமரென்றால் சுவர்க்கமிருக்கு உன்னையறிந்தால் அது பக்கமிருக்கு

உயர்வைத்தருவது ஒழுக்கம் ஊரும் உலகும் மதிக்கும்

உள்ளத் துணியும் முயற்சியும் கொண்ட உத்தமர் வாழ்வு மலரும்

உள்ளத்தில் பொய்யே நிறைந்திருக்கும் உடன் பிறந்தோரையும் கருவறுக்கும்

உள்ளார்க்குச் செல்வங்கள் சொந்தம் இல்லார்க்கு உள்ளங்கள் சொந்தம்

உறவுக்கு என்று விரிந்த உள்ளம் மலர்கள் ஆகலாம்

உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி தேடு

ஊசிக்குள்ளே ஒட்டகம் போனாலும் காசாசை போகாது கட்டையிலும் வேகாது

ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகளாகலாம்

எதையும் தாங்கும் இதயமிருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்

எல்லாமும் எல்லாரும் பெற வேண்டும் இல்லாமை இல்லாத நிலைவேண்டும்

ஒவ்வொரு நாளும் வரலாறு உன்னை நினைத்து முன்னேறு

ஒழிந்து மறைந்து ஆட்டம் போட்டு உத்தமர் போல் பேசு

ஒன்றே சொல்வார் நன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி

கடந்தது உன் விளையாட்டு காலங்கள் யாவிலும் நல் வழிகாட்டு

கடமையைச் செய்வோம் கவலையை மறப்போம்

கண்ணீர் வடிப்பவன் மூடனடா காலத்தை வென்றவன் வீரனடா

கர்மமே யோகமானால் பிற துன்பத்தின் வலி தெரியாது

கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம்

கலகம் இன்றி வாழுங்கள் உலகம் உங்கள் கைகளிலே

கலையங்கள் ஏங்குது சோறின்றி இதயங்கள் ஏங்குது வாழ்வின்றி

கல்லினும் கொடிய மனமுண்டு அதில் கருணைக்கு எங்கே இடமுண்டு



காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்து விடும்

காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் வெறும் கற்பனை சந்தோசத்தில் அவரது கவனம்

காமத்தில் கண்கள் கெட்டால் ஞானியின் பெயரும் முட்டாள்

காலங்களாலே கன்யம் பிறக்கும் கார்யம் பிறந்தால் காரணம் விளங்கும்

காலம் உனக்காகக் காத்திருக்காது காலடிச் சுவடுகள் கூடவராது

காலம் பொன்னானது கடமை கண்ணானது

காலம் போனால் திரும்புவதில்லை காசுகள் உயிரைக் காப்பதுமில்லை

குற்றம் குறை பேசினால் சுற்றமென ஏதுமில்லை சொந்தமென நாதியில்லை

கெட்ட பின் ஞானியானவர்தன் பெண்மையை கேவலாமாகத்திட்டுவார்கள்

கையளவே இதயம் வைத்தான் அதில் கடல் போல் ஆசை வைத்தான்





கையிலே பணம் இருந்தால் கழுதை கூட அரசன்

கொடுத்தால் கிடைப்பது மரியாதை கொடுப்பவன் கையில் மலர்வாடை

கொடும்பாம்புகள் இங்கே கொத்தவிட்டு புத்தனைப் போல சத்யனாய் வாழுதடா

கொடுமை செய்த பகைவருக்கும் கருணை செய்வது அன்பு

கொடுமை வில்லிலும் இருக்கும் சிலர் வஞ்சகச் சொல்லிலும் இருக்கும்

கொத்தும் போது கொத்திக்கொண்டு போக வேண்டும் நல்லதை

சட்டத்தின் பின்னால் சதிகார கூட்டம் தலைமாறி ஆடும் அதிகார ஆட்டம்

சட்டம் என்பது வெளிக்காவல் தர்மம் என்பது மனக்காவல்

சட்டம் தரும் சலுகை கூட சமுதாயம் தருவதில்லை

சட்டமென்பது இருட்டறை அதில் தர்மம் என்பதே விளக்கு

சத்யம் தோற்றதில்லை சரித்திரம் படித்த பின் சஞ்சலம் வருவதில்லை

சந்தேகம் பிறந்து விட்டால் சத்தியமும் பலிப்பதில்லை

சுருக்கத்து வேண்டும் உயர்வு பெருக்கத்து வேண்டும் பணிவு

சுவர்க்கமும் நரகமும் நம் வசமே

சொந்தம் ஒரு கைவிலங்கு அதில் பந்தம் ஒரு கால்விலங்கு

சொல்லில் வருவது பாதி நெஞ்சில் தூங்கிக்கிடப்பது மீதி

சோதனைகளாலே மனம் பக்குவபட்டால் பின் லாபம் தொடர்கிறது

தவறுதல் மனிதனின் பழக்கம் உணர்ந்தால் மன்னிப்பு கிடைக்கும்

தன் பசி கருதாமல் பிறர்க்கு கொடுப்பவர் தெய்வத்தின் தெய்வம்

தன்னாலே வெளிவரும் தயங்காதே ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே

தன்னையறிந்தால் ஒரின்பம் தன்னலம் மறந்தால் பெரும் பேரின்பம்





திருடிச் சேர்த்த பணம் நிக்காது உன்னை உயிரோடு வைக்காது

துணிந்து விட்டால் தலையில் எந்தச் சுமையும் தாங்கலாம்





துறவும் நிர்வாணமே பெண்நிர்வாணம் கூட தெய்வீகமே





துன்பத்திலே பங்கு கொண்டால் கண்ணீர் சொல்வது நன்றி

துன்பம் வரவு சுகம் செலவு இருப்பது கனவு

தூய தங்கம் தீயில் விழுந்தாலும் குணம் மாறாது

தெய்வ புருஷன் ராமனுக்கே பொய்மான் எதுவென்று தெரியவில்லையே

தெரிந்தே கெடுப்பது பகையாகும் தெரியாமல் கெடுப்பது உறவாகும்

நடந்ததெல்லாம் நினைப்பதுதான் துயரம் என்று ஞானிகள் சொன்னார் அன்று

நடப்பது சுகமென நடத்து நாளை நமதென நினைத்து

நம் பாவத்தில் வந்த இன்பம் நிலைக்காது

நமக்கும் மேலே ஒருவனடா நாலும் தெரிந்த கலைஞனடா

நல்லவர்க்கும் பகையுண்டு இங்கு நன்றியில்லாதவர் சிலருண்டு

நண்பனும் பகை போல் தெரியும் அது நாட்பட நாட்படப் புரியும்



நன்றே நன்று நல்லதை செய்து ஒன்றாய் வாழ்வது நன்று

நாடக வேசம் கூட வராது நாளைய உலகம் இவரை விடாது

நாலு பக்கம் வாசலுண்டு நமக்கும் ஒரு வழியுண்டு

நாளை என்ன நாளை இன்று கூட நமது தானே



நாளைப்பொழுதை இறைவனுக்களித்து நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு

நாளைய உலகம் நம் வசமே நல்லதும் தீயதும் நம்மிடமே



நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்

நெஞ்சிலே நினைவெதற்கு வஞ்சகரை மறப்பதற்கு

நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சந்நிதி

நெஞ்சுக்கு நீதியை ஒளித்தே வாழ்பவன் நிச்சயம் மிருகமடா

நேர்மையிலும் தன் வேர்வையிலும் தினம் வாழ்பவன் தெய்வமடா‍‍

பசியென்று வந்தவர்க்கு புசியென்று தந்தவரை பரமனும் பணிவானடா



பட்டம் போல அவர் பளபளப்பார் ஙால் போல் இவர் இளைத்திருப்பார்

பணத்தின் மீதுதான் பக்தி என்றபின் பந்த பாசமே ஏனடா

பண்பு தெரியாத மிருகம் பிறந்தாலும் பால் தரும் கருணையது

பயந்தவன் தனக்கே பகையாவன் துணிந்தவன் உலகுக்கு ஒளியாவான்

பரிபக்குவ நிலை பரிமானத்தின் மூலமே வருகிறது





பலன் எதிர்பாராது கர்மம் செய்

பாதை வகுத்த பின்பு பயந்து என்ன லாபம்

பாதையில் நடந்தால் ஊர் சேரும் போதையில் நடந்தால் வாழ்வு தடுமாறும்

பாதையை விட்டு விலகிய கால்கள் ஊர் போய் சேராது

பாயில் படுத்து நோயில் வீழ்ந்தால் காதல் கானல் நீரே





பாலும் சில நேரம் நீராகத் தெரியும் அது கண் செய்த தவறு

பாவத்தை கண்டால் விலகி விடு பாதையைப் பார்த்து நடந்துவிடு

பாவம் என்பது செய்யும் தீமை புண்ணியம் என்பது நாம் செய்யும் நன்மை

பாறையில் நெல் விதைக்கமுடியாது பாவத்தில் வந்தசெல்வம் நிலையாது





பானையிலே சோறிருந்தால் பூனைகளும் சொந்தமடா

பிடிபட்ட பின்தானே கள்வன் அதுவரை அவன் பேரும் தலைவன்





பிறக்கின்ற ஆசை தவறாக இருந்தால் அது நடக்கவும் கூடாதம்மா

பிறர் தேவையறிந்து வாரிக்கொடுப்பவர் தெய்வத்தின் பிள்ளைகள்

பிறவியின் பயன் பிறருக்கு சேவை செய்வதே

பூப்போல மனதுக்கு சஞ்சலமில்லை பொல்லாத மனதுக்கு நிம்மதியில்லை





பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே

பூமியில் நேராக வாழ்பவர் எல்லாம் சாமிக்கு நிகரில்லையா

பேசமாட்டாரா என உலகம் ஏங்க வேண்டும் பேசினால் உலகம் நின்று கேட்க வேண்டும்

பேசாமலிருப்பது பெருந்திறமை மௌனமே மகா ஞானம்





பொய்யுடம்பு போன பின்னும் புகழடம்பு வாழாது

பொருளாதாரம் செய்த விந்தை இவள் பொருள் தாரமாகிவிட்ட சந்தை

போகங்களில் சிக்காதவனே புனிதன் ஆவான்

போற்றுப‌வர் போற்றட்டும் பொறுமையில்லாதவர் தூற்றட்டும்





மகனைப் படிக்க வை அவன் சம்பளத்தை எதிர்பாராதே

மலை போன்ற துன்பம் பனி போல மாறுவதுண்டு

மானத்தில் மங்கையர்கள் மானல்லவா கவரி மானல்லவா

மானத்தோடு வாழ்வதுதான் சுயமரியாதை





மூடக்கொள்கைகள் ஓழியனும் நல்ல மூதறிவாளர் பெருகனும்

மூல நோக்கம் சிருஷ்டி என்றால் விரஸமாகாது

யாரிடம் குறையில்லை யாரிடம் தவறில்லை வாழ்வது ஒரு முறை வாழ்த்தட்டும் தலைமுறை

வந்தவரெல்லாம் தங்கி விட்டால் இந்த மண்ணில் நமக்கு இடமேது

வருவது வரட்டும் மனமே தினம் வாழ்வது தான் நம் கடமை

வாசல் என்றால் ஆயிரமிருக்கும் வாசல் தோறும் வேதனையிருக்கும்

வார்த்தையை விட மௌனத்துக்கு பல அர்த்தங்கள் உண்டு





வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்

வாழ்க்கை எல்லாம் வசந்தமே வாசமலர்கள் நம் உள்ளமே

வாழ்க்கை என்பது நாடகமே வந்து போனவர் ஆயிரமே

வாழ்க்கை ஒரு கேள்விக்குறி அவதாரங்கள் அதை ஆச்சர்யக்குறியாக நிமிர்ந்தன



வாழ்த்தும் கையில் வாளுண்டு போற்றும் மொழியில் விடமுண்டு

வாழ்தலில் பற்று வை வாழ்க்கையைக் கற்று வை

வாழ்வென்றும் தாழ்வென்றும் சக்கரம் சுழல்கின்றது அதில் சரித்திரம் நிகழ்கின்றது

விஞ்ஞானத்தை ஏசி அஞ்ஞான இருள்மூழ்கும் அப்பாவி மனம் மாறனும்

விதியென்று ஏதுமில்லை வேதங்கள் வாழ்க்கையில்லை

விதைப்பவன் தான் நீ அறுப்பவன் அவனே

விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்க்கை நிரந்தரமாகாது

வெறும் பேச்சு சோம்பலில் மனிதன் வாழ்ந்தால் சுதந்திரம் என்னசெய்யும்

வேடம் போடும் கூட்டம் இங்கு மலிந்து விட்டது

No comments: