Friday 7 September 2018

புனரபி ஜனனம், புனரபி மரணம்


இப்படி ஒரு தலைப்பை வைத்து எதாவது எழுத வேண்டும் என்று ரொம்ப நாளாக ஆசை.  50 வயதுக்கு மேல் இருக்கும் யாரும் இந்த வார்த்தைகளை சற்று நினைவு கொள்வது நல்லது.  சுஜாதா (எழுத்தாளர்) சொல்லுவார், வயதாக வயதாக நான் ஹிந்து பேப்பரில்,  OBITUARY  COLUMN  முதலில் பார்க்க ஆரம்பித்து விட்டேன்”  என்று.

“எத்தனை தந்தையோ, எத்தனை தாயோ எத்தனை பிறவி வருமோ” என்று வைதீஸ்வரன் கோவில் பதிகத்தில் படித்ததாக ஞாபகம்.  இதை ஹம்சானந்தி ராகத்தில் பாடிப் பார்த்தால், வாழ்க்கையை நினைத்து சற்று பயமாகக் கூட இருக்கும். பாலாம்பிகை உடனுறை வைத்தியநாத சுவாமி மேல் சற்று கூடுதல் பக்தி வரும்.


இந்த ஜீவனுக்கு பிறப்பு, இறப்பு என்ற இரு விஷயங்களில் இருந்து ஒய்வு கிடையாது. மனிதன் ஒவ்வொரு பிறவியிலும், நமக்கு உள்ளே இருக்கும் ஆசைகளால் உந்தப்பட்டு, அதை நிறைவேற்ற நினைத்து, போராடுகிறான். பல தவறுகள் செய்கிறான்.  சரி, அப்படியாவது அந்த ஆசைகளை முழுமையாக அடைந்தானா என்றால் அதுவும் இல்லை.   ஆசைகள் நிறைவேறாமலேயே மரணிக்கிறான். அடுத்த ஜன்மம் எடுக்கிறான். அடுத்த ஜன்மத்தில் விட்ட குறை தொட்ட குறையாக, பழைய ஆசைகளை பூர்த்தி செய்து கொள்கிறானா என்று பார்த்தால், அதையும் பண்ணாமல், இந்த ஜன்மத்தில், புது ஆசைகளையும் வளர்த்துக் கொள்கிறான். இதுதான் பு.ஜ, பு.ம- அர்த்தம்

“வாஸனா” என்று சம்ஸ்கிருதத்தில் ஒரு பதம் உண்டு. ஒவ்வொரு ஜன்மத்திலும் புது புது வாசனைகளை வளர்த்துக்கொண்டு, இந்த BALANCE SHEET ல், ACCUMULATED LOSS என்று சொல்லுவோமே, அது போல், ACCUMULATED VASANAS
Swami Chinmayantha beautifully explains this “We come here for purgation, but due to our ignorance of the way and the goal, the extrovertedness in us compels us to get ourselves attached to the objects, which have a beauty and a charm created by the imagination of our minds. 
Maayaa at work.”

கண்ணதாசன், பஜ கோவிந்தத்தை தமிழில் நாம் எல்லோருக்கும் புரியும்படி சொல்லும்போது,

“தாய்வயிற்றிலே பிறந்து
      தானிறந்து மீண்டும் மீண்டும்
        தாய்வயிற்றிலே பிறக்கிறேன்”
என்கிறார்...

இதைத்தான், மைசூர் வாசுதேவாசார் என்ற ஒரு மகான் எழுதிய “பஜரே ரே மானச” என்ற கர்நாடக தேவகாந்தரி ராகப்  பாடலில், “புக்தி, முக்தி, ப்ரதம்” என்கிறார்.  He gives both prosperity and salvation.

நாம் நம்முடைய ஆசா பாசங்களைக் குறைத்துக் கொண்டு, ஒரு முகமாக, நம் எண்ணங்களை “முராரியை” நோக்கிக் குவிக்கும்போது, மன இரைச்சல் குறையும்.  நம் மனது ஒரு “அமானுஷ்யமான நிசப்தம்/மரணம்” நோக்கி நகரும். இந்த  ஒரு நிலை ஆச்சர்யமானது.
இந்த ஆசா பாசங்கள் அற்ற நிலையில், ஆசைகள் அறவே ஒழிய, மறு பிறப்பு என்பது கிடையாது. – இதைப் படிக்கும்போது, ஏதோ பாலகுமாரன் நாவல் படிப்பது போல் இருந்தால், உங்களுக்கு வாழ்க்கையைப் பற்றிய புரிதல் வந்து விட்டது என்று அர்த்தம்.

எழுதுவது ஈசி. அதை கடைபிடிப்பது மிகவும் கஷ்டம்.

புலவர் கீரன் சொல்லுவார்.
கோவிலுக்குப் போய் கடவுளிடம் நீ என்ன வேண்டுவாய். ?

1)    எனக்கு நல்ல கதி வேண்டும். நல்ல மரணம் வேண்டும்.
2)    மறு பிறப்பு கூடாது
3)    இறக்கும் தருணத்திலும் கடவுளையே நினைத்துக் கொண்டு இறக்க வேண்டும்... பல பல

இப்படி சொல்லி விட்டு, வீட்டுக்கு வந்து “இதே குறிக்கோளாகக்” கொண்டு வாழ வேண்டும். அதை விட்டுவிட்டு, பக்கத்து வீட்டுச் சண்டை, சன் டீ வீ, அனாவசிய அரட்டை, மறுபடியும், குடும்பம், பேரன், பேத்தி, கொள்ளுப் பேரன் என்று “உறவுச் சக்கரத்தில்” சுற்றிக் கொண்டு இருக்கக் கூடாது. 

இதையே திருவள்ளுவர்

“வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை, மற்றது
வேண்டாமை வேண்ட வரும்.’   என்கிறார்

ஆசையற்று இருப்பதை விரும்பும் பொது தான், பிறவாமை நிலை வரும் என்கிறார், - சாலமன் பாப்பையா அவர்கள்.

கீரன், ஆசையைப் பற்றி ஒரு ஜோக் சொல்லுவார். நான் செம்மங்குடியில் பள்ளிக் கூடத்தில் கேட்ட ஜோக் இது. இன்னும் ஞாபகம் இருக்கிறது

கடவுளையே நம்பாத ஒருவன் கடைசி காலத்தில், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தான்.  அவன் மகன், எப்படியாவது, அப்பாவிடம் கடவுளின் பேரை சொல்லச் சொன்னால், சொர்க்கம் போகலாம் என்று கருதி, அப்பாவிடம்  “அப்பா, எதாவது கடவுள் பேர் சொல்”  அன்று மன்றாடினான்.

அப்பா மிகுந்த பிரயாசையோடு, “முரு”, முரு” என்று சொல்வார்.  மகனும் மன
மகிழ்ந்து, ஒரு கப், தண்ணீர் கொண்டு வந்து, வாயில் உற்றி, சாய்ந்து படுக்க வைத்து, கண்ணீர் மல்க –“சொல்லுப்பா முருகா முருகா என்று சொல்லு” என்றான்.

அப்பா மிகுந்த ச்ரமத்துடன், எனக்கு :முறுகலா, ஒரு ரவா தோசை வேண்டும்” என்று கேட்டாராம்.

“ஆசைக்கோர் அளவில்லை, அகிலமெல்லாம் கட்டி ஆளவே” என்றார் பட்டினத்தார்.

காதறுந்த ஊசியும் வாராது காண், கடை வழிக்கே என்றார் அவர்.

மதுரை சோமு ஒரு பாட்டு ஒன்று பாடுவார்:

நாளை என்றொரு நாள் வருமா,
கந்த வேளை கை தொழ எழ வேண்டாமா ?

அதில் சரணத்தில்

“கண்ணிருக்கும் போதே கண்டு கொண்டாடு
காலிருக்கும் போதே கோவிலை நாடு
குரலிக்கும் போதே இறைவனைப் பாடு
கையிருக்கும் போது கும்பிடு போடு”

என்று முடியும்

பஜ கோவிந்தத்தில் வரும், இந்த அற்புதமான வரிகளான,  “புனரபி...” முடிவில்
கோவிந்தா, என்னிடம் கருணை காட்டு, நீதான் கருணை கடல், நீதான் முரா என்ற அசுரனை அழித்தவன்.  என்னுள் இருக்கும் “ஆசா பாசங்கள்” என்னும் “முராவை” அழித்துவிடு. – என்கிறார் ஆதி சங்கரர்
                           
சிவானத லஹரியிலும், பசுபதியின் பாதார விந்தத்தை, ஒரு கொடி, ஒரு கம்பை எப்படி சுற்றி வளருமோ, ஒரு பதி வ்ரதை, தன கணவரை எப்படி நினத்துக் கொண்டே இருப்பாளோ, - அப்படி நினைக்கவேண்டும்.

விதுரனிடம்- ஆச்சர்யமான விஷயம் எது என்று கேட்க – அவர் “கண்ணுக்கு முன்னாடி ஒருவன் இறக்கிறான். அவனை தூக்கிக் கொண்டு போவதைப் பார்த்த பிறகும் ஞானம் வராமல், பாபச் சுழலில் உழன்று கொண்டு மனிதன் வாழ்கிறானே, ஆசா பாசங்களை குறைத்துக் கொள்ளாமல்- வாழ்கிறானே !!!- இதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது”- என்றான்

Swami Chinmayanantha concludes like this

“Thus, to surrender unto Him and to sincerely invoke His grace is to create in us divine and godly “vaasanaas”, which are the only antidote to the ego and the egocentric vaasanaas, that constantly clamour in our bosom  for gratification.  Once these are hushed, the Song of the Flute-bearer shall be heard, the blue light of His aura can be seen,  the  Fragrance of His garland of wild flowers can be smelt, the butter in His hand can be tasted, the Embrace of the Infinite can be experienced”

பள்ளிக்கூடம்  சென்ற நாளிலிருந்து, மார்கழி மாத காலையில் கோவிலில் பாடும் பாட்டில், M.S.Subbulakshmi.  தன் தேன் குரலால், பஜ கோவிந்தம் பாடி கேட்டு, அதற்கு அர்த்தம் புரிந்து எழுதும் பொது, மனதுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது

நாம் எல்லோரும் உறுதி மொழி எடுக்க வேண்டும் என்றால், இதற்கு எடுக்கலாம்-
NO புனரபி ஜனனம், அதனால், NO புனரபி மரணம்