ஸுஜாதா விஜயராகவன் அவர்கள் எழுதிய புத்தகத்தில், ஸத்குரு
த்யாகராஜர் ஸ்ரீரங்கம் விஜயத்தை விவரிக்கிறார்.
திருவரங்கத்தின் சித்திரை வீதி, அதில் குதிரை வாகனமேறி
திருவரங்கள் வலம் வருகிறார்.
இந்தக் காட்சியைக் கண்டவுடன் தியாகராஜரின் கவியுள்ளம்
பொங்கி எழுகிறது. நாத யோகி அல்லவா...
தோடியில் “ராஜு வெடல ஜூதா முராரே” ஆரபியில் ஜூதா முராரே, தேவகாந்தாரியில் “வின
ராதனா மனவி” காம்போதியின் “ஒ ரங்கசாயி” என்று பாடித் தள்ளுகிறார்.
பல பேர் பாடினாலும், செம்மங்குடி பாடிய “வின ராதனா” ரொம்ப
அழகு.
திகாராஜர் எப்படி ஏன் திருவரங்கம் வந்தார் என்ற கதை
சுவாரஸ்யமானது.
சென்னையை அடுத்த கோவூர் கிராமத்தில், சுந்தர
முதலியார் என்ற செல்வந்தர் வாழ்ந்து வந்தார். அவர் தியாகராஜர் தன் ஊருக்கு வர
வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதற்க்கு
காஞ்சீபுரம் உபநிஷத் ப்ரஹ்மம் என்ற தியாகராஜரின் தந்தையான இராமப் பிரம்மத்தின் மிக
நெருங்கிய நண்பர். 100 வயதைக்
கடந்தவர். அவரின் வேண்டுகோளுக்கு இணங்கி, தியாகராஜர், திருவரங்கம் லால்குடி,
கோவூர், திருப்பத்தை என்று சென்று பாடி இருக்கிறார்.
ஜூதா முராரே – எல்லோரும் சேவிப்போம் வாருங்கள் ... திவ்யமான
நவரத்னங்கள் அணிந்து கஸ்தூரி ரங்கன் பவனி வருகிறான். அவனை சேவிப்போம் வாருங்கள்.....
ஸுததுலார ரங்கபதிநி ஜூதா முராரே – அழகிய பல் வரிசையுடன்
இளம் பருவ மங்கையரே – ரங்கபதியை சேவிப்போம் வாரீர்.
அப்படி என்ன ரங்கனிடம் தனி பிரேமை.
கோசலை பூஜித்த, தன் குல தெய்வமான ரங்கநாதன் பள்ளி கொண்ட
ரங்க விமானத்தை பட்டாபிஷேக சமயத்தில், விபீஷனணுக்கு
வழங்கினார், ஸ்ரீ ராமர். இலங்கைக்குத்
திரும்பும் வழியில், சற்று இளைப்பாற விபீஷணன், அவ்விமானத்தை இறக்கி வைத்தார்.
மீண்டும் பெயர்த்து எடுக்க முடியவில்லை. அங்கேயே எழுந்தருள திருவுள்ளம் கொண்டான்
ரங்கன்.
வினராதனா மனவி – என்ற பாடலில் என் விண்ணப்பத்தைக் கேட்கப்டாதா
என்று கொஞ்சம் “நிந்தா ஸ்துதி” கலந்து பாடுகிறார்.
பெண்கள் அழைத்தல், அரச குலப் பெண்கள் அழைத்தல் செவி
மடுக்கும் நீ, நான் அழைத்தால் “கண்டுக்காமல்” இருக்கியே ? ஏம்பா !!!
வினராதனா மனவி பாடலை – நா மனவி என்ற பொருளுக்கு அர்த்தம்,
என்னை முறையீடு கேகப்படாதா ? என்று கெஞ்சுவதால், கீழ் ஸ்தாயில் பாட வேண்டும்.
மிரட்டும் தொனியில் மேலே போகக் கூடாது.
முத்துத்தாண்டவர்
இதே போல் முத்துத்தாண்டவர், தெருவில் வரும் நடராஜரை
துதித்து அருமையான பாடல் -பதம்- பாணியில் பாடி இருக்கிறார். நடனம் ஆடுபவர்களுக்கு
ஏற்ற பாட்டு.
நடராஜார் வீதி உலா வருகிறார். வீட்டை கடந்து போய் விட்டார்.
ஒரு தோழி மிகவும் வருத்தமுற்று.
“தெருவில் வாரானோ, எனை சற்றே திரும்பிப் பாரானோ” என்று
பாடுகிறார்.
உருவிலியோடு, திரிபுரத்தையும் உடன் எரி செய்த நடராஜன்
(தெரு)
கடைசி சரணத்தில் “மெய் என்று இருந்தேனே, அவனிட சைகை
அறிந்தேனே – என்று பாடல் வரிகள். என்ன சைகை....
“என் இடது கை எங்கே இருக்கிறது பார் ? தூக்கிய திருவடியைக்
குறிக்கிறது. பக்தர்கள் என்னை பணியும்போது அவர்களை காப்பது என் கடமை. அதை
விட்டுவிட்டு, உன்னைக் கொஞ்ச முடிமா ?
என்று சொல்கிறார்.
No comments:
Post a Comment