Saturday, 16 May 2026

பிரஹ்மஸ்ரீ சுப்பிரமணிய தீட்சிதர் உபன்யாசம் - தேன் துளிகள் 3

 

கிருஷ்ணாய வாஸுதேவாய...

நமக்கு பரிச்சயமான இது குந்தி ஸ்துதி. குந்தி கிருஷ்ணரைப் பார்த்து சொன்ன ஸ்துதி.

குருக்ஷேத்ர யுத்தம் முடிந்து, தர்மபுத்திர பட்டாபிஷேகம் ஆகிறது. கிருஷ்ணர் முன்னர் இருந்து, அழகாக முடித்து வைக்கிறார். இத்தனை வருட கஷ்டங்களுக்கு விடிவு காலம்.

வைபவம் முடிந்தவுடன், ஒரு 18 படி கீழே இறங்கி உட்கார்ந்து கொள்கிறார். தர்மபுத்ரர், அர்ஜுனன், மற்றும் சகோதர்கள் மேலே அரியாசனத்தில் அமர்ந்திருக்க, கீழே பரமாத்மா.

அப்போது இவர்கள் தாயாரிடம் ஆசீர்வாதம் வாங்க வேண்டும் என்று நினைத்ததால், குந்தியை அழைத்து வருவதற்கு உத்தர விடுகிறார்.

குந்தியைப் போல் ஒரு “மிகவும் வருந்தத்தக்க” பாத்திரம், இதிகாச புராணத்தில் எங்குத் தேடினாலும் கிடைக்காது.  மணி மணியாக 5 குழந்தைகளைப் பெற்றும், அவள் குழந்தைகளோடு சேர்ந்து இருக்கவில்லை. இருந்தாலும், ஒரே சோகம்தான்.  பஞ்ச பாண்டவர்கள் ஓட ஓட விரட்டப்படுகிறார்கள். அரண்மனையில் உட்கார்ந்து, தன் பிள்ளைகள் உயிரோடு இருக்கிறார்களா ? இல்லையா ? என்று தெரியமால் பரிதவிக்கும் தாய்  !!!!

குந்தி வருகிறாள். அந்தச் சபையைப் பார்த்து ஆச்சர்யப்படுகிறாள். மேலே தன் குழந்தைகள் உட்கார்ந்து இருக்க, கீழே பரமாத்மா.

ஓடி வந்து கிருஷ்ணர் காலை பிடித்து கதறுகிறாள்.

கிருஷ்ணர். “என்ன அத்தை இது. எழுந்திருங்கள்.. சந்தோஷமாக இருக்கும் நேரத்தில் அழுகிறீர்களே” என்று கேட்கிறார்.

குந்தி “கிருஷ்ணா, உன்னை அண்டி வாழும் குடும்பம் நாங்கள். நீ இல்லாவிட்டால், நாங்கள் எங்கே ? அப்படி இருக்கும் நீ, அண்டி இருக்கும் எங்களை மேலே உட்கார வைத்து, நீ கீழே உட்கார்ந்து இருக்கிறாயே ?”.  இது சரியா ?   

நம் நிஜ வாழ்க்கையில் நினைத்துப் பாருங்கள்.  நம்மை அண்டி ஒருவர் இருக்கிறார். அவர் நமக்கு மேலே கூட இல்லை. நமக்கு சமமாக உட்கார அனுமதிப்போமா ?  அனால் இங்கே கிருஷ்ணனைப் பாருங்கள் ...

4 காசு இருக்கிறது என்று நம்மிடம் வேலை செய்பவர்களை எப்படி அலட்சியம் செய்கிறோம். ஓடித்த் வெண்டைக்காயை அப்படியே திருப்பிப் போடுவது, “என்னப்பா கறிகாய் நல்லாவே இல்லை” என்று சொல்லி வாங்கி பேரம் பேசுவது.

கிருஷ்ணன் நான் என்னம்மா பெரிசா பண்ணினேன் என்று கேட்க, குந்தி “எங்களை எப்படி எப்பெல்லாம், காப்பாற்றினாய் .. என்று லிஸ்ட் குடுக்கிறாள்.  பீமனுக்கு விஷம் கொடுத்தது, அரக்கு மாளிகை, திரௌபதி சபை அவமானம். துர்வாசர், சாப்பிடாமலே ஏப்பம் விட்ட கதை. குருக்ஷேத்ர வெற்றி.......

பாண்டவர்களை காப்பாற்றுவேன் என்ற ஒரு சத்யத்திறக்காக கிருஷ்ணன் பண்ணிய வேலைகள்.....

கிருஷ்ணனின் காருண்யம்.  அப்படிப் பேசும்போது சொன்ன ஸ்லோகம் தான்

கிருஷ்ணாய வாசுதேவாய, தேவகி நந்தனாய ச

நந்தகோப குமாராய கோவிந்தாய நமோ நம:

அப்போதுதான் குந்தி சொல்கிறாள். “எனக்கு கஷ்டத்தையே கொடு” அப்போதுதான் நான் உன்னை நினைப்பேன். நீ என்னையும் ஏன் குடும்பத்தையும் காப்பாற்றுவாய்.

எப்படிப்பட்ட பிரார்த்தனை பாருங்கள் !!


No comments: