Friday, 29 March 2013

ஆத்மா வேறே. மனஸ் வேறே.

வாழ்க்கை என்று எதைச் சொல்கிறோம்? சாப்பிடுவது, கல்யாணம் பண்ணிக் கொள்வது, குழந்தை குட்டி பெற்றுவது, படிப்பது, ஸம்பாதிப்பது, ஊர் ஊராய் ஓடுவது, பாட்டு கேட்பது, சினிமா பார்ப்பது, நாவல் படிப்பது என்று இப்படி அநேக கார்யங்களைப் பண்ணுவதைத்தான் வாழ்க்கை என்றும் ஜீவனம் என்றும் சொல்கிறோம்

. இந்தக் காரியங்களில் நம்மை செலுத்துவதாக அநேக எண்ணங்கள் இருக்கின்றன. இந்த எண்ணங்களையெல்லாம் பிறப்பிப்பது மனஸ். கார்யங்களில் நம் இந்த்ரியங்களை ஏவுவதும் அதுதான். ஆகையால் தனி ஜீவன் என்கிறவனின் ஸாரமாகத் தோன்றுகிற ஜீவனம் என்பதே மனஸை ஸென்டராக வைத்து நடத்தப்படுவதுதான். எண்ணத்தினாலும் கார்யத்தினாலும் உருவாகிற ஜீவனம் என்பது எண்ணமும் காரியமுமில்லாத ஆத்மாவைக் குறித்ததாக இருக்க முடியாதுதானே?

ஆக, என்ன முடிவுக்கு வருகிறோமென்றால், ஃபிலாஸஃபி முடிவில் நாம் எந்த முடிவுக்கு வந்தாலும் சரி, லோகத்திலே ஜீவனம், ஜீவத்வம் என்றால் அவை மனசை வைத்துத்தான்! ஆகையால் “நான் ஜீவ ஜகத்தில் இல்லை’ என்று பகவான் அடித்துச் சொல்கிறபடி ஆத்மா ஜீவ பாவத்தில் இல்லை என்றால், அது மனசிலே இல்லை என்றே அர்த்தம்.
ஆத்மா மனசிலே இல்லை என்றால் ஆத்மா வேறே. மனஸ் வேறே. ஆத்மாவுக்கு வேறாக மனஸ் இருக்க வேண்டும். ஆத்மாவுக்கு அந்நியமாக, இரண்டாவதாக த்விதீயமாக இருப்பதே மனஸ் என்றாகிறது.

- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்



Sunday, 24 March 2013

On those we depend

Devdutt Patanaik-"Iam always impressed by his article as it connects Management theory with our Religion

n Puri Temple, Orissa, every year when the chariot is made from the wood of a sacred tree, worship is offered to the tree, the instruments that will be used to carve the tree and the carpenter who will turn the tree into the chariot. Even in household rituals, before the deity is worshipped, prayers and offerings are made to the implements of worship like the bell, the pot, the conch-shell, and the lamp. Thus every link in the chain is worthy of worship. Does this make Hindus monotheists or polytheists?

This question confronted 19th century Orientalists when they first translated Vedic hymns. They noticed that each hymn of the Veda evoked different gods, like the Greeks, but each time the deity being invoked was being treated as the one supreme god, like the Christians. This confused them.

Some suggested Hindus were henotheistic; they worshipped only one god but acknowledged the existence of others. Max Mueller came up with the term kathenotheistic, which means every god was treated as the supreme god turn-by-turn at the time of invocation. In other words, context determined the status of the god. In drought, Indra who brought rains was valued. In winter, Surya, the sun, was admired. In summer, Vayu, the wind, was worshipped. So it is in business. Everybody we deal with in business is important. But importance soars as our dependence on them increases. Importance is a function of context, which makes all businessmen followers of kathenotheism.

Sivakumar owns a small company that makes spare parts for cars. The business has been growing well. Sivakumar allocates one day a week with every department. Monday is for sales & marketing, Tuesday is for logistics, Wednesday is for production, Thursday is with finance, Friday is with human resources, Saturday is with admin and all contract workers. When asked by his secretary why he scheduled his day so, he said, “Each one of them contributes to my success. So I give each of them value by devoting an hour each day for each department. Every department matters, and every department is special. If I focus only on one department, the others will feel neglected and even negative, which I do not want. By valuing all of them, I ensure no hierarchy is created. Each one is important in their own way. The business depends on all of them.”

Rakesh who is Sivakumar’s main rival in the market, has a different strategy. For him customers are god and everything and everyone in the company is geared to satisfy the customers. He values the customer-facing department more than the rest. This ensures great revenue and clarifies the value of customers.
Both Sivakumar and Rakesh do well in the market. Both make profits. But their approach to managing their teams is very different. Sivakumar follows the model of katheotheism: there are many gods, each valued depending on context. Rakesh follows the model of monotheism: there is only one God, the customer.

பண்டைய தமிழனின் அரும்பெருஞ்சாதனை காலநீட்டிப்புக் கணிதம்..!

செயற்கைக்கோள் உதவியில்லை தொலைக்காட்சிகளின் துணையுமில்லை ஆனாலும் பன்னிரு மாதங்களின் காலநீட்டிப்பினை அறுதியிட்டு கூறியுள்ளனர் நம் பண்டைய தமிழர் .

பண்டைய வானவியலில் ஒரு நாளினை 60 நாழிகையாகப் பிரித்துள்ளனர் . ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்களை குறிப்பதாகும் ஆக 60 நாழிகை என்பது 1440 நிமிடங்களை குறிப்பதாகும் . நாம் ஒரு நாளினை 24 மணி நேரமாக பிரித்து இருக்கிறோம் அப்படியெனில் ஒரு நாளுக்குக் கிடைக்கும் நிமிடங்கள்
24*60=1440 ஆகும் .

வருடத்தின் சில நாட்களில் பகல் நீண்டு இருக்கும் சில நாட்களில் இரவு
நீண்டு இருக்கும் என நாம் பள்ளியில் அறிவியல் பாடத்தில் படித்து
இருப்போம் ஆனால் நம்முடைய முன்னோர்கள் செயற்கைக்கோள் உதவியில்லாமலும் தொலைக்காட்சிகளின் துணையுமில்லாமலும் 12 மாதங்களையும் பிரித்து எவற்றில் பகல் நீடிக்கும் எவற்றில் இரவு நீடிக்கும் என அறிதியிட்டுக் கூறியுள்ளனர்

ஆகவே தமிழன்தான் பகல் – இரவு நீட்டிப்பு அறிவியலை முதன் முதலில்
உலகிற்குக் கூறினான்.

சரி நமது முன்னோர்கள் பன்னிரு மாதங்களின் பகல் – இரவு நாழிகையை எவ்வாறு பிரித்துள்ளனர் என்பதை அறிவோம்

“ சித்திரையும் ஐப்பசியும் சீரொக்கும் சித்திரைவிட்டு
ஐப்பசிமுன் னைந்தும் அருக்கேறும் – ஐப்பசிக்குப்
பின்னைந்து மாதம் பிசகாமல் இரவேறும்
மின்னே விடுபூ முடி “


சித்திரை மாதமும் ஐப்பசி மாதமும் சீரொக்கும் அதாவது பகல் – இரவு
நாழிகைகள் சமமாக( பகல்=30, இரவு =30 ) இருக்கும்

ஐப்பசிக்கு முன் ஐந்தும் அருகேறும் அதாவது ஐப்பசிக்கு முன் உள்ள
வைகாசி,ஆனி,ஆடி,ஆவணி,புரட்டாசி ஆகிய ஐந்து மாதங்களில் பகல் நீடிக்கும்

ஐப்பசிக்குப் பின் ஐந்து மாதம் பிசகாமல் இரா ஏறும் அதாவது ஐப்பசிக்குப்
பின் உள்ள கார்த்திகை , மார்கழி, தை, மாசி , பங்குனி ஆகிய மாதங்களில்
இரவு நீடிக்கும்

பாடலின் கடைசி வரி " விடுபூ முடி " மிக மிக முக்கியமான வரியாகும் இந்த
வரியினை அடிப்படையாக கொண்டு வாக்கிய கணித முறை என்னும் புதிய முறை தோன்றியது இந்த வாக்கிய கணித முறை தான் சோதிடவியலுக்கு
அடிப்படையானதாகும்.

வாக்கியக் கணித முறை என்பது வாக்கியத்தின் முதல் வார்த்தையிலிருந்து
கடைசி வார்த்தை வரை கணக்கிட வேண்டும் ஒவ்வொரு எழுத்துக்கும் 1/4 கால அளவு கொடுக்க வேண்டும்

பகல் நீட்டிப்பைக் காண
வி - டு - பூ – மு – டி எனும் ஐந்து வார்தைகளை எடுத்துக்கொள்வோம்

வி என்பது வைகாசி
டு என்பது ஆனி
பூ என்பது ஆடி
மு என்பது ஆவணி
டி என்பது புரட்டாசி

இது போலவே வி - டு - பூ – மு – டி எனும் அதே ஐந்து வார்தைகளைக் கொண்டு
இரவு நீட்டிப்பு மாதங்களுக்குக் கொடுத்து இரவு நீட்டிப்பும் அறியலாம்

மாதிரிக்காக வைகாசி மாதத்தின் பகல் நீட்டிப்பை காணும் முறை
வி என்ற எழுத்தின் தொடக்கம் வ ஆகும் எனவே

வ = 1/4 நாழிகை
வா= 1/4 நாழிகை
வி=1/4 நாழிகை ஆக மொத்தம் கிடைப்பது ¾ நாழிகை பகல் நீடிக்கும் 3/4 நாழிகை என்பது 18 நிமிடத்திற்கு சமம்

இது போல வி - டு - பூ – மு – டி ஆகிய வாக்கியங்களின் முதல் எழுத்து முதல்
கடைசி எழுத்து வரை கணக்கிட்டால் கிடைப்பது

பகல் நீட்டிப்பு

வைகாசி 3/4 நாழிகை = 18 நிமிடம்
ஆனி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்
ஆடி 1 1/2 நாழிகை = 36 நிமிடம்
ஆவணி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்
புரட்டாசி 3/4 நாழிகை = 18 நிமிடம்

இரவு நீடிப்பு

கார்த்திகை 3/4 நாழிகை = 18 நிமிடம்
மார்கழி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்
தை 1 1/2 நாழிகை = 36 நிமிடம்
மாசி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்
பங்குனி 3/4 நாழிகை = 18 நிமிடம்

வாழ்க்கையில் மகிழ்ச்சியுடன் இருப்பது எப்படி?

ஒருவர் ஒரு நாளில் சிறிது நெரம் செய்யும் தியானப் பயிற்சி அவருக்கு அளவிட முடியாத சந்தோசத்தை மகிழ்ச்சியைத் தருகிறது என்றால் அது மிகையாகாது. மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் கோபம், எதிர்பார்ப்பு, கவலை, ஆதங்கம் இவையெல்லாம் மிகவும் சகஜம். ஆனால் இவையெல்லாம் ஒரு அளவிற்கு மேல் சென்றால் அதுவே அவனுக்கு மிகப் பெரிய வியாதி. இவைகள் எல்லாம் மனிதனின் உணர்ச்சிகளின் வடிகால்கள். இந்த உணர்ச்சிகளை ஒரு கட்டுப்பாட்டுக்குள் ஒரு எல்லைக்குள் வைத்திருக்கும் ஒரு அற்புதமான கருவிதான் தியானம்.

மருத்துவ உலகமே ஒத்துக் கொள்ளும் ஒரு உண்மை என்னவென்றால்  ஒரு நாளையில் சிறிது நேரம் செய்யப்படும் தியானப் பயிற்சியினால், மனிதர்களின் உணர்சிகளின் வெளிப்பாடுகளான கோபம், கவலையினால் உண்டாகும் வியாதிகளில் இருந்து பாதுகாப்பது மட்டும் அல்லாது உணமையான சந்தோசத்தையும் மகிழ்ச்சியையும் கொடுக்கின்றது அல்லது இருக்கும் சந்தோசத்தை அதிகரிக்கின்றது என்பதுதான். 


அடிக்கடி கோபப்படுதலும், கவலைப்படுதலும் நாளடைவில் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் ரத்தக் கொதிப்பு சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கும் ஆளாக நேரிடும். இன்னும் சிலருக்குப்  புற்று நோயும் உண்டாகுவதற்க்கும் வாய்ப்பு உண்டு. சில நேரங்களில் மருந்து மாத்திரைகளுக்குக் கட்டுபடாத வியாதிகள் கூடத் தியானப் பயிற்ச்சிக்குக் கட்டுப்பட்டு நிவாரணம் பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஒரு மனிதனுக்குச் சொத்து சுகம் இல்லையென்றாலும் வியாதிகள் இல்லாமல் இருந்தால் அதுவே அவனுக்கு கிடைக்கும் மிகப் பெரிய சந்தோசம் மகிழ்ச்சி. .   

கடந்த கால நினைவுகளையோ அல்லது எதிர் கால நிகழ்வுகளை நினைத்துக் கவலைப்படாமல் இன்று என்ன நடக்க வேண்டும் என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டும் நினைக்கச் செய்து மனத்தினைத் தேவையில்லாமல் கவலைப்படச் செய்யாமல் இருந்தாலே அதுவே அவனுக்கு மிகப் பெரிய சந்தோசத்தையும் மகிழ்ச்சியையும்  தரும். அந்த சந்தோசத்தைத் தியானம் மட்டுமே கொடுக்கவல்லது என அனுபவித்தவர்கள் கூறுகின்றனர்.  அது மட்டும் அல்லாது அவர்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் சந்தோசமாகவும் மகிழ்ச்சியுடனும்  வாழலாம்.  

பெரும்பாலான வியாதிகளுக்கு மூல காரணமே ஒருவருடைய நினைப்புத்தான். அங்கு இங்கு என்று சுற்றித் திரியும் மனதைத் தியானம் தொடர்ந்து செய்வதின் மூலம் கட்டுக்குள் வைத்திருக்கலாம். அப்படிக் கட்டுக்குள் வைத்திருக்கும் போது சந்தோசமும் மகிழ்ச்சியும் உண்டாகும். மனதினால் தேவையில்லாத நினைவுகளினால் உண்டாக்கப்படும் வியாதிகளையும் தடுத்து நிறுத்தலாம் வாழ்க்கையில் மகிழ்ச்சியாகவும் இருக்கலாம். 

தியானம் ஒரு மனிதனைச் சரியாக சிந்தனை செய்ய வைக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை. மனித சிந்தனை சரியாக இருக்கும் போது அங்கு தேவையில்லாத சிந்தனைகளுக்கு இடம் இல்லை. தேவையில்லாத சிந்தனைகள் இல்லாத பட்சத்தில் அங்கு மகிழ்ச்சி நிலவும். உடம்பில் தேவையில்லாத
வியாதிகள் குடியேறுவதற்க்கும்  வாய்ப்பு இல்லை அதனால் உடல் ஆரோக்கியத்திற்க்கும் மகிழ்ச்சிக்கும் பஞ்சம் இல்லை.

ஒருவர் எதற்கு எடுத்தாலும் கோபப்படும் மனப்பான்மையை விட்டார் என்றாலே அவருக்கு சந்தோசத்திற்ககும் மகிழ்ச்சிக்கும் பஞ்சம் இல்லை. ஒருவருடைய கோபத்திற்க்கு மூல காரணமே உணர்ச்சிகளுக்கு இடம் கொடுப்பதுதான். பந்தம், பாசம், உற்றார், உறவினர்கள் போன்றோரின் உணர்ச்சிகளுக்கு, பேச்சுக்கு, செயல்களுக்கு  இடம் கொடுக்கும் போது அங்கு அறிவுக் கண் மூடப்பட்டு விடும். அறிவுக் கண் மூடப்பட்டிருக்கும் போது அங்கு சந்தோசம், மகிழ்ச்சி என்பது இருக்காது. அறிவுக் கண் திறக்கப்பட்டு உணர்ச்சிகளின் உண்மையான காரணம் என்னவென்று தெரியும் போது அங்கு கோபம் என்பது இருக்காது. கோபம் என்பது இல்லை என்றால் அங்கு சந்தோசமும் மகிழ்ச்சியும்  நிரந்தரமாகக் குடியேறும்.


ஒருவருடைய அறிவுக் கண்களை திறக்கும் சக்தி தியானத்திற்கு மட்டும் தான் உண்டு. ஒருவர் தியானப் பயிற்ச்சியை தொடர்ந்து பழக்கப்படுத்தும் போது அவருக்கு சந்தோசத்திற்க்கும் மகிழ்ச்சிக்கும்  பஞ்சமே இல்லை.

Saturday, 23 March 2013

மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும்-11

1. மூலிகையின் பெயர் :- சுண்டை.

2. தாவரப்பெயர் :- SOLANUM TARVUM.

3. தாவரக்குடம்பம் :- SOLANACEAE.

4. வேறு பெயர்கள் :- கடுகிபலம், பீதித்தஞ்சம், பித்தம், அருச்சி, கராபகம், சுவாசகாசினி. முதலியன.

5. பயன் தரும் பாகங்கள் :- இலை, காய், வத்தல், மற்றும் வேர் முதலியன.

6. வளரியல்பு :- சுண்டை ஒரு பெருஞ்செடி இனத்தைச் சேர்ந்தது. இது சுமார் 5 அடி முதல் 10 அடி உயரம் கூட வளரக்கூடியது. எல்லா வித மண் வளத்திலும் வளரக்கூடியது. இதற்கு ஆங்கிலத்தில் TURKEY BERRY என்று சொல்வார்கள்.
சுண்டையில் இரு வகையுண்டு. மலை காடுகளில் தானே வளர்வதை மலைச்சுண்டை என்றும், தோட்டங்களிலும் சம வெளியிலும் வளர்வதை ஆனைச்சுண்டை அல்லது பால் சுண்டை என்றும் சொல்வர். அகன்ற இறகாக உடைந்த நேர் அடுக்கில் அமைந்த இலைகளையும் வெண்நிரப் பூங் கொத்துக்களையும், உருண்டையான காய்களையும் உடைய முள்ளுள்ள செடியாகும். பச்சைக் காய்கள் பழுத்தால் மஞ்சள் நிறமாக மாறிவிடும்.
பழம் காய்ந்தால்  வத்தலாக மாறிவிடும். ஒரு பழத்தில் சுமார் 200 விதைகள் இருக்கும். காய் சற்று கசப்புடையது. வற்றலாகக் கடைகளில் கிடைக்கும். இது உலகெங்கும் உள்ளது. இதன் தாயகம் புளோரிடா என்றும் மேற்கிந்தியாவிலும் பின் ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா, அவாய், பசிபிக்தீவுகளிலும், நடு அமரிக்காவிலும், தென் அமரிக்காவிலும், பிரேசிலிலும் பரவியதாகக் கூறுவர். இதை இன விருத்தி செய்ய விதைமூலமாகவும், கிளைகளை வெட்டி வைத்து முறைப்படி வளர்த்தியும் பயிரிடுவார்கள்.

7. மருத்துவப் பயன்கள் :- சுண்டை கோழையகற்றியாகவும், வயிற்றுப்பூச்சிக் கொல்லியாகவும், சுண்டைக் கசாயம் பாம்புக்கடி வீரியம் குறைக்கவும், நீரிழிவு நோய், இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு முதலியன குணமாக்கக் கூடியது. மலேசியாவில் இதன் விதையை பல் வலி குறையப் பயன்படுத்துகிறார்கள். வியட்னாமில் இதன் இலையை மாதவிடாய் தொல்லைக்கும், தோல் வியாதியைப் போக்கவும் பயன்படுத்துகிறார்கள். இதன் பழம் சாப்பிட்டால் வயிற்றுவலி போகும்.

பால் சுண்டைக் காயைச்சமைத்து உண்ணக் கபக்கட்டு, ஈளை, காசம், இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, திமிர்ப்பூச்சி முதலியன தீரும்.

உப்பு கலந்த புளித்த மோரில் 2 முறை ஊறவைத்து, பின் காயவைத்து எண்ணெயில் வறுத்து இரவு உணவில் பயன் படுத்தி வர மார்ச்சளி, ஆஸ்துமா, காச நோய் தீரும். வயிற்றுப் போக்கு நின்று விடும்.

சுண்டை வற்றல், நெல்லி வற்றல், சுக்கு, வெந்தயம், ஓமம், மாதுளை ஓடு, மாம்பருப்பு, கறிவேம்பு, சீரகம் ஆகியவை தனித்தனியே எடுத்து இளவறுப்பாக வறுத்துப் பொடி செய்து இடித்த சூரணம் காலை, மாலை 2 சிட்டிகை ஒரு டம்ளர் மோரில் சாப்பிட்டு வர பேதி, மூலம், பசியின்மை, மார்ச்சளி, நீரிழுவு தீரும்.

சுண்டை வற்றல், கறிவேம்பு, மிளகு, சீரகம், வெந்தயம் இளவறுப்பாய் வறுத்து உப்பு சேர்த்து சூரணித்து உணவில் கலந்து சாப்பிடப் பசி மந்தம், சுவையின்மை, மலக்குடல் கிருமிகள், மூலம் ஆகியவை தீரும்.

இதன் வேர்ப்பட்டையை பொடிசெயுது தேய்காய் தொட்டியில் வைத்து ஒரு சிட்டிகை மூக்கிலிட்டு உள் இழுக்க தலைநோய், நீரேற்றம், மண்டைக் குடச்சல், ஒற்றைத் தலைவலி, மூக்கில் நீர் பாய்தல் நிற்கும்.

சுண்டை வேர், தும்பை வேர், இலுப்பைப் பிண்ணாக்கு சம அளவு எடுத்து இடித்துப் பொடி செய்து முகர இழப்பு நோய் தணியும்.

சுண்டை வேர் ஒரு கைப்பிடி அளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி குடிக்க வலிகாச்சல் குணமாகும்.

இதன் வத்தலை காயவைத்து அதனுடன் புளித்த மோர் மற்றும் உப்பு தேவையான அளவு சேர்த்து உணவுடன் உண்ண நீரிழிவு நோய் குறையும்.


 

விஜய வருடமும் 14-04-2013.பஞ்சாங்கம் பார்க்கும் பலனும்

தனது பெயரிலேயே வெற்றியைத்தாங்கும் விஜய வருஷம் தர்ம
மார்க்கத்தில் செல்லும். அனைவருக்கும் பெரும் வெற்றியைத் தரும்,
ஸர்வம் காலக்ருதம் மன்யே' என்னும் [பாகவதத்தில்] பீஷ்மாசாரியாரின்
வாக்குப்படி அரூபமாகவும் அர்ச்சாவதார மூர்த்தியாகவும் காக்ஷி தரும்
பகவானே கால ஸ்வரூபியாகவும் இருக்கிறார். காலதேவனுக்குக்
கட்டுப்பட்டே அனைத்தும் நடைபெறுகிறது.


யுகம்,,வருஷம்,அயனம்,மாதம், பக்ஷம், வாரம்,நாள் என பலபிரிவுகளக
நமக்குக் காக்ஷி தரும் கால ஸ்வரூபியான பகவானின் வர்ணனையே
பஞ்சாங்கம். பகவானைப்பற்றிய சரித்ரங்கள் மஹிமைகள் அடங்கிய
புராணங்களுக்கு ஒப்பானவை பஞ்சாங்கங்கள்.பஞ்சாங்கத்திலுள்ள
விபரங்களையும் படித்து அறிந்து கொள்வதாலேயே பற்பல நன்மைகள்
கிடைக்கின்றன.


"திதேஸ்ச ஸ்ரியமாப்நோதி வாராத் ஆயுஷ்ய வர்தனம்
 நக்ஷத்ராத் ஹரதே பாபம் யோகாத் ரோக நிவாரணம்
கரணாத் கார்ய ஸித்திஸ்ச பஞ்சாங்க பலமுத்தமம்"


ஒவ்வொரு நாளும் அதிகாலையில் எழுந்தவுடன், இன்று என்ன திதி?
என்று அறிவதால் செல்வம் பெருகும்.கிழமையை அறிவதால் ஆயுஸ்
வளரும். இன்று என்ன நக்ஷத்ரம்? என்பதை அறிவதால் பாபங்களில்
சிறிது குறையும்.இன்று என்ன யோகம்? என்பதை அறிவதால் ரோகம்
விலகும். கரணம் என்ன? என்று அறிவதால் காரியம் சித்தியாகும்.

Friday, 22 March 2013

பக்தனின் பாடலுக்கு ஆடிய வரகூர் வேங்கடேசர்!


Thanks to Sri.Ramakrishnan, Mumbai for this Article. 

                     றைவனின் விளையாட்டுகள் மிக வினோதமானவை. அடியார்கள் மீது கருணை புரிந்து தன்வசமாக்கி, அவனைப் பாடகனாக- கவிஞனாக- துறவியாக- முக்தனாக ஆக்குவது அவனது திருவிளையாடல்!

இசைக்கும் இறைக்கும் நெருங்கிய தொடர்புண்டு என்பதை பல மகான்களின் வரலாறுகள் நமக்கு உணர்த்தும். ஊத்துக்காடு வேங்கட சுப்ரமணியனுக்கு சிறுவயதிலேயே காளிங்க நர்த்தன கிருஷ்ணன் குருவாக அமைந்து கானம் போதித்தார். அவரது கிருஷ்ண நடன கானம் அலாதியான சுவையுடையது.

ராணி மீராபாய் கண்ணன்மீது பாடிய பாடல்கள் வடநாட்டில் மிகப் பிரசித்தமானவை. முகலாய அரசரான அக்பர் இசைக் கலைஞர் தான்சேனுடன் தன் உயிரையும் பொருட் படுத்தாமல் மாறுவேடத்தில் வந்து, மீராபாயின் பாடலைக் கேட்டு முத்துமாலையைப் பரிசளித் தார் என்றால், மீராபாயின் பாடல்கள் எவ்வளவு உருக்கமானவை என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். இவ்வகையில் இறையருள் பெற்ற பல மகான்களில், ஸ்ரீநாராயண தீர்த்தர் என்ற மகானைப் பற்றி இங்கு காண்போம்.

ஆந்திர மாநிலம், விஜயவாடா அருகில் உள்ளது காஜா என்ற கிராமம். இதை வெல்லத் தூர் கிராமம் என்றும் சொல்வர். இங்கே தாள பஜ்ஜலா என்ற வீட்டில் 1675-ஆம் ஆண்டு பரத்வாஜ கோத்திரத்தில் பிறந்தார் கோவிந்த சாஸ்திரி. வேத, உபநிடத, புராண, இதிகாசங் களிலெல்லாம் தேர்ச்சி பெற்றார். பொதுவாக வேதம் ஓதுபவர்கள் சங்கீதம் பயில மாட்டார் கள். (சாம வேதமே சங்கீதம்தானே.) ஆனால் கோவிந்த சாஸ்திரி சங்கீதத்திலும் நாட்டியத்தி லும் பாண்டித்யம் பெற்றிருந்தார். திடகாத் திரமான உடலையும் கொண்டவர்.

உரிய பருவத்தில் அச்சம்மா என்ற பெண்ணை கோவிந்த சாஸ்திரிக்கு மணம் முடித்து வைத்த னர். அச்சம்மா கிருஷ்ணா நதியின் தென்கரை யிலுள்ள கிஞ்சுபள்ளி என்ற ஊரைச் சேர்ந்தவள். கோவிந்த சாஸ்திரி கிருஷ்ணா நதியை நீந்திக் கடந்தே அப்பக்கம் செல்வாராம். ஒருசமயம் அச்சம்மா தாய்வீடு சென்றிருந்தாள். அவளைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் கோவிந்தருக்கு ஏற்பட்டது. வழக்கம்போல ஆற்றிலிறங்கி நீந்தத் தொடங்கினார். அவரைத் துறவியாக்க எண்ணிய கிருஷ்ணனின் லீலைபோலும்- திடீரென ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது. எவ்வளவோ முயன்றும் நீந்த முடியாத நிலை. வேறு வழியில்லை... தர்ம நுட்பங்களை அறிந்த கோவிந்த சாஸ்திரி ஆபத்சகாயம் எடுத்துக் கொண்டார். தன் பூணூலைக் கழற்றி வீசி விட்டார். பெருக்கெடுத்த வெள்ளம் தணிந்தது. நீந்திக் கரை சேர்ந்தார் கோவிந்தர்.

வழக்கம்போல மனைவியின் இல்லத்திற்குச் சென்றார். ஆனால் அவர் மனைவியோ அவரை கணவனாகக் கருதாமல், ஒரு துறவிக்குரிய பாவனையில் வரவேற்று உபசரித்தார். கோவிந்த ருக்கு ஏதோ புரிந்தது போலிருந்தது. அங்கிருந்து புறப்பட்டு நேராக காசிக்குச் சென்றார். ஸ்ரீசிவ ராமானந்த தீர்த்தரிடம் முறையாக சந்நியாச தீட்சை பெற்றார். ஸ்ரீநாராயண தீர்த்தர் என்னும் சந்நியாசப் பெயரும் பெற்றார்.

பின்னர் பிரயாகை, மதுரா, பிருந்தாவனம், பூரி ஜெகந்நாதம் போன்ற தலங்களைத் தரிசித்துப் புனித நீராடி, வராக க்ஷேத்திரமான திருப்பதி வந்து சேர்ந்தார். அங்கே அவருக்கு வயிற்றுவலி உண்டாயிற்று. "வயிற்று வலியா, வேங்கடேசரைத் துதி' என்று சொல்வர். ஆனால் திருப்பதி வாசனோ நாராயண தீர்த்தரின் கனவில் தோன்றி, "காவேரிக் கரைக்குப் போ' என்றாராம்!

அங்கிருந்து திருச்சி வந்த நாராயணர் குணசீலம் வந்து சேர்ந்தார். (இங்குள்ள பெரு மாள், குணசீல மகரிஷியின் தவத்திற்கு மகிழ்ந்து கோவில் கொண்ட பரவாசுதேவர். பில்லி, சூன்யத்தால் பாதிக்கப் பட்டவர்கள், பேய், பிசாசு பிடித்தவர்கள் இங்கு வந்து ஒரு மண்டல காலம் தங்கி, நண்பகல் பூஜையின்போது அளிக்கும் தீர்த்தப் பிரசாதத்தை அருந்தியே குணமடைந்திருக்கிறார்கள். இன்றும் இது நடந்து வருகிறது. இத்தலப் பெருமாளை திருமலையானின் அண்ணன் என்பர். பெரிய திருப்பதி எனப்படுகிறது குணசீலம். திருமலை யானுக்குச் செய்யும் பிரார்த்தனையை இங்கு செய்கிறார்கள்.) "இந்தப் பெருமாள்தான் தன் நோயைத் தீர்ப்பாரோ' என்று அவரை வணங் கியபடி அங்கேயே இருந்தார். ஆனால் அவர் கனவில் தோன்றிய குணசீலப் பெருமாள், "பொழுது விடிந்ததும் ஒரு மிருகம் தென்படும். அதைப் பின்தொடர்ந்து செல்' என்றார். (விநாயகர் வழிகாட்டியதாகவும் சொல்வர்.)

காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் இரண்டு வெள்ளை வராகத்தைக் கண்டார். இறைவன் ஆணைப்படி அந்தப் பன்றி களைப் பின்தொடர்ந்து சென்றார். அவை பூபதிராஜ புரம் என்ற கிராமத்தை அடைந்து ஒரு பாழடைந்த கோவிலுக்குள் சென்று மறைந் தன. அக்கோவிலுக்குள் சென்று பார்த்த போது, லட்சுமி தேவியை மடியில் அமர்த்திய வண்ணம்- சங்கு, சக்கர தாரியாக- லட்சுமி நாராயணராக பெருமாள் காட்சி தந்தார். நாராயண தீர்த்தர் அந்தக் கோவிலைச் செப்பனிட்டு பெருமாளை வணங்கி வந்தார். அவர் வயிற்றுவலி முற்றிலும் குண மாயிற்று! (வராகம் காட்டியதால் இத்தலம் வரகூர் என்றும்; பெருமாள் வரகூர் வேங்கடேசர் என்றும் அழைக்கப்படுகிறார்.)

வரகூர் பெருமாள் நாராயண தீர்த்தரிடம் ஸ்ரீமத் பாகவத தசம ஸ்கந்தத்தை- கிருஷ்ண லீலைகளை கத்ய, பத்ய கானமாக நடனத்திற்கு ஏற்ப செய்திடப் பணித்தார். அவ்வண்ணமே அவர் வடமொழியில் "ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணி' என்னும் கிரந்தத்தை இயற்றினார்.

இதில் முதல் பாடலாக கணபதி துதியைப் பாடியுள் ளார்.

"ஹிமகிரி தனயா பத்யம்

ஹேமாசல சாப சமுதிதம் தேஜ:

கிமபிமஹத்தம் மாத்யம்

ஸ்மர்த்தவ்யம் விக்னதிமி ஹரனாய.'

கதாகாலட்சேபம் செய் பவர்கள் மேற்கண்ட சுலோகத்தைப் பாடியே தொடங்குவார்கள்.

அடுத்து கருடபகவானைப் பாடி, பின்னர் பூரி ஜெகந்நாதரைப் பாடி பிறகு வரகூர் பெருமாளை,

"ஸர்வஞான க்ரியா சக்திம்

ஸர்வ யோகீஸ்வர ப்ரபும்

ஸர்வ வேதமயம் விஷ்ணும்

ப்ரப விஷ்ணும் உபாஸ்மஹே'

என்று போற்றுகிறார்.

அடுத்து தசாவதார கீர்த்தனைகள், கண்ணன் பிறப்பு, கண்ணனின் லீலைகள் என்று பாடி, இறுதியாக ருக்மிணி திருமணத்தை மிக விரி வாகப் பாடியுள்ளார். இப்பாடல்களைப் பாடி நர்த்தனமும் புரிந்தார் நாராயண தீர்த்தர். அந்தப் பாடலின் இசையில் மயங்கிய பெரு மாளும் நடனம் புரிவாராம். அங்கே நட்டுவனாராக இருந்தவர் ஆஞ்சனேயர் என்கிறார்கள். அதற்கேற்ப இங்குள்ள ஆஞ்சனேயரின் பெயர் தாளங்கொட்டி ஆஞ்சனேயர் என்பதாகும்.

கோவிலில் ஒரு துறவி நடனமாடுவதை கிராமத்திலிருந்த ஆன்மிகவாதிகள் கண் டித்தனர். "இது வேங்கடவன் ஆணை. அவருமல்லவா என்னுடன் நடனமாடுகிறார்!' என்றார் நாராயண தீர்த்தர். "அப்படியெனில் அதை நாங்களும் காண வேண்டும்' என்று அவர்கள் சொல்ல, இறைவனை வேண்டினார் தீர்த்தர். பெருமாளி டமிருந்து உத்தரவு கிடைத்தது.

அதன்படி பெருமாள் சந்நிதியின் முன் திரை இடப்பட்டது. மக்களெல்லாம் கோவிலின்முன் திரண்டனர். இறைவனை வணங்கி நாராயண தீர்த்தர் பாட, சந்நிதிக்குள் பெருமாள் நடனம் ஆடினார். அவரது சலங்கை ஒலி ஜல்ஜல் என்று அனைவரது செவிக்குள்ளும் புகுந்து மெய்சிலிர்க்க வைத்தது. மக்கள் நாராயண தீர்த்தரின் பாதங் களில் வீழ்ந்து பணிந்தனர். அவரது பாடல்களை மக்கள் அனைவரும் பாடி மகிழ்ந்தனர்.

ஆந்திரத்தில் பிரபலமானவர் சித்தேந்திர யோகி. இவர் நாராயண தீர்த்தரின் சீடர். இவரால் அமைக்கப்பட்ட குச்சுப்பிடி நடனமும், பஜனை பாகவதர் கள் மேளாவின் மெலட்டூர் சம்பிரதாயத்தில் பாடி ஆடும் கீதங்களும், குண்டூரி லுள்ள அத்தங்கியிலும் நாராயண தீர்த்தரின் கிருஷ்ணலீலா தரங்கிணிப் பாடல்களே பயன்படுத்தப் படுகின்றன. இவை மிகுந்த ஆனந்தத்தைத் தருபவை. சரணாகதி தத்துவத்தை வெளிப்படுத்தும் வண்ணம் இப்பாடல்கள் இருக்கும்.

கோபியரின் ஆடை களைக் கவரும் லீலைகளில் வேத- உபநிடதத் தத்துவங் கள் உள்ளன. ராஸலீலையில் ஜீவாத்மா- பரமாத்மா பாவம் வெளிப்படும். ஸ்ரீமத் பாகவதத்தில் ராதையைக் குறிப்பிட வில்லையே என்னும் குறையை நிவர்த்தி செய்வது போல் உள்ளன இவரது ராதையைப் பற்றிய பாடல்கள்.

வியாசர் பாகவதத்தில் ராதையைப் பற்றிக் கூறவில்லையே என்ற ஆதங்கத்தில், பூரி ஜெகந் நாதரே ஜெயதேவராக அவதரித்து கீத கோவிந்தம் என்னும் பக்தி ரசம் சொட்டும் கிரந்தம் செய்தாராம். அந்த ஜெயதேவர் கண்ணனின் லீலைகளைப் பாடவில்லையே என்று வருந்தி, அவரே நாராயண தீர்த்தராக அவதரித்து கண்ணனின் லீலைகளைப் பாடினார் என்பர்.

நடனத்திற்கு ஏற்ப பாடப்படும் 153 பாடல் களைக் கொண்ட ஸ்ரீகிருஷ்ணலீலா தரங்கிணி 39 ராகங்களில் அமைந்துள்ளது. இவற்றில் 43 பாடல்கள் நாதநாமக்கிரியா, மத்யமாவதி, சௌராஷ்ட்ரா ஆகிய மூன்று ராகங்களைக் கொண்டே அமைந்துள்ளன.

இன்றும் வரகூர் ஆலயத்தில் கிருஷ்ணலீலா தரங்கிணி பாடப்படுகிறது. ஜென்மாஷ்டமியிலும் நவமியிலும் சிறப்பாக உற்சவங்கள் நடக் கின்றன.

நாராயண தீர்த்தர் கிருஷ்ணலீலா தரங்கிணியை பலச்ருதியுடன் இவ்வாறு முடிக்கிறார்:

"ஸ்ரீகோபாலன் என்னும் கார்மேகத்திலிருந்து பெருகிய- அவரது பெருங்கருணை என்னும் மழைத் தாரைகள், ஸ்ரீநாராயண தீர்த்தர் என்ற மலைமீது விழுந்து பரவி, அவை முழுதும் ஒன்று சேர்ந்து, இந்த கிருஷ்ணலீலா தரங்கிணி என்னும் ஆறாகத் தோன்றி, கிருஷ்ண பக்தர்கள் என்னும் வயலில் பாய்ந்தோடி, உலகை இன்பமுறவும் ஆனந்தமுறவும் செய்யும்!'