Friday 29 March 2013

ஆத்மா வேறே. மனஸ் வேறே.

வாழ்க்கை என்று எதைச் சொல்கிறோம்? சாப்பிடுவது, கல்யாணம் பண்ணிக் கொள்வது, குழந்தை குட்டி பெற்றுவது, படிப்பது, ஸம்பாதிப்பது, ஊர் ஊராய் ஓடுவது, பாட்டு கேட்பது, சினிமா பார்ப்பது, நாவல் படிப்பது என்று இப்படி அநேக கார்யங்களைப் பண்ணுவதைத்தான் வாழ்க்கை என்றும் ஜீவனம் என்றும் சொல்கிறோம்

. இந்தக் காரியங்களில் நம்மை செலுத்துவதாக அநேக எண்ணங்கள் இருக்கின்றன. இந்த எண்ணங்களையெல்லாம் பிறப்பிப்பது மனஸ். கார்யங்களில் நம் இந்த்ரியங்களை ஏவுவதும் அதுதான். ஆகையால் தனி ஜீவன் என்கிறவனின் ஸாரமாகத் தோன்றுகிற ஜீவனம் என்பதே மனஸை ஸென்டராக வைத்து நடத்தப்படுவதுதான். எண்ணத்தினாலும் கார்யத்தினாலும் உருவாகிற ஜீவனம் என்பது எண்ணமும் காரியமுமில்லாத ஆத்மாவைக் குறித்ததாக இருக்க முடியாதுதானே?

ஆக, என்ன முடிவுக்கு வருகிறோமென்றால், ஃபிலாஸஃபி முடிவில் நாம் எந்த முடிவுக்கு வந்தாலும் சரி, லோகத்திலே ஜீவனம், ஜீவத்வம் என்றால் அவை மனசை வைத்துத்தான்! ஆகையால் “நான் ஜீவ ஜகத்தில் இல்லை’ என்று பகவான் அடித்துச் சொல்கிறபடி ஆத்மா ஜீவ பாவத்தில் இல்லை என்றால், அது மனசிலே இல்லை என்றே அர்த்தம்.
ஆத்மா மனசிலே இல்லை என்றால் ஆத்மா வேறே. மனஸ் வேறே. ஆத்மாவுக்கு வேறாக மனஸ் இருக்க வேண்டும். ஆத்மாவுக்கு அந்நியமாக, இரண்டாவதாக த்விதீயமாக இருப்பதே மனஸ் என்றாகிறது.

- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்



No comments: