Saturday 23 March 2013

விஜய வருடமும் 14-04-2013.பஞ்சாங்கம் பார்க்கும் பலனும்

தனது பெயரிலேயே வெற்றியைத்தாங்கும் விஜய வருஷம் தர்ம
மார்க்கத்தில் செல்லும். அனைவருக்கும் பெரும் வெற்றியைத் தரும்,
ஸர்வம் காலக்ருதம் மன்யே' என்னும் [பாகவதத்தில்] பீஷ்மாசாரியாரின்
வாக்குப்படி அரூபமாகவும் அர்ச்சாவதார மூர்த்தியாகவும் காக்ஷி தரும்
பகவானே கால ஸ்வரூபியாகவும் இருக்கிறார். காலதேவனுக்குக்
கட்டுப்பட்டே அனைத்தும் நடைபெறுகிறது.


யுகம்,,வருஷம்,அயனம்,மாதம், பக்ஷம், வாரம்,நாள் என பலபிரிவுகளக
நமக்குக் காக்ஷி தரும் கால ஸ்வரூபியான பகவானின் வர்ணனையே
பஞ்சாங்கம். பகவானைப்பற்றிய சரித்ரங்கள் மஹிமைகள் அடங்கிய
புராணங்களுக்கு ஒப்பானவை பஞ்சாங்கங்கள்.பஞ்சாங்கத்திலுள்ள
விபரங்களையும் படித்து அறிந்து கொள்வதாலேயே பற்பல நன்மைகள்
கிடைக்கின்றன.


"திதேஸ்ச ஸ்ரியமாப்நோதி வாராத் ஆயுஷ்ய வர்தனம்
 நக்ஷத்ராத் ஹரதே பாபம் யோகாத் ரோக நிவாரணம்
கரணாத் கார்ய ஸித்திஸ்ச பஞ்சாங்க பலமுத்தமம்"


ஒவ்வொரு நாளும் அதிகாலையில் எழுந்தவுடன், இன்று என்ன திதி?
என்று அறிவதால் செல்வம் பெருகும்.கிழமையை அறிவதால் ஆயுஸ்
வளரும். இன்று என்ன நக்ஷத்ரம்? என்பதை அறிவதால் பாபங்களில்
சிறிது குறையும்.இன்று என்ன யோகம்? என்பதை அறிவதால் ரோகம்
விலகும். கரணம் என்ன? என்று அறிவதால் காரியம் சித்தியாகும்.

No comments: