கோகுலாஷ்டமி
இன்னும் 10 நாட்கள்
வரும் நிலையில் இந்தக் கோவிலை பற்றி எழுதலாம் என்று.......
பொன்னியின் செல்வன் “டீசர்” வெளி வந்த பிறகு, ஹரியும் ஹரனும் ஒண்ணு, அதை அறியாதவன் வாயிலே மண்ணு, என்ற வார்த்தை மிகவும் பிரபலமாகி விட்டது.
தஞ்சாவூர் பற்றிய ஒரு கணிப்பு மிகவும் உச்சத்தில் சென்று விட்டது. அதே தஞ்சை
மாவட்டத்தில் வாயளவில் பேசாமல், நிஜமாகவே ஒரு கோவில் ஹரி ஹர பேதமில்லாமல்
இருக்கிறது என்பது தான் ஆச்சர்யம்.
இந்த சிறிய கோவிலில் பல
ஆச்சர்யங்கள் அதிசயங்கள்”
1) எந்தப் பெருமாள் கோவிலிலும் , ஸ்ரீ ருத்ரம், சமகம் சொல்லி, பெருமாளுக்கு அபிஷேகம் செய்வதை யாரும்
பார்த்திருக்க முடியாது. வீபூதி இட்டுக்கொண்டு பெருமாள் கோவிலுக்குப் போனாலே, நம்மை “ஒரு மாதிரி” பார்க்கும் பட்டாச்சார்யார்களை மைலாபூரிலேயே நான்
பார்த்து இருக்கிறேன்.
அது மட்டுமில்லை நான்
சொல்லப்போகும் இந்தக் கோவிலில் பட்டாச்சார்யார்களே, ஸ்ரீ. ருத்ரம் சொல்ல ஆரம்பித்த பிறகுதான், மற்றவர்கள் சொல்ல வேண்டும்.
அது மட்டுமல்ல.
2) பஞ்ச கச்சம் கட்டிக் கொண்டு
இருந்தால் தான் “சடாறி” வைப்பார்கள்.
3) கிராமமே காலியாகி
மடிப்பாக்கத்திலும், நங்கநல்லூரிலும், வெளி நாடுகளிலும் குடியேறிய பிறகும் கூட, பல பிராமண குடும்பங்கள் இன்றும் இந்த் கிராமத்தில்
இருந்து அந்தக் காலத்தில் சொன்ன ஸம்ப்ரதாயங்கள், பூஜை, ஸ்வாமி புறப்பாடு எல்லாம் இன்றும், ஒன்று விடாமல் நடந்து கொண்டு இருப்பது
ஆச்சர்யத்திலும், ஆச்சர்யம்.
4) வரும் காலத்தில் கோவிலில் “ஸ்வாமிக்கு விளக்கு” ஏற்றுவதற்க்குக் கூட பணம் இருக்காது என்று அன்றே
கணித்த முன்னோர்கள் “கட்டளை” என்று ஒன்றை ஏற்படுத்தி, ஒவ்வொரு உற்சவத்திற்க்கும், ஒரு குடும்பம் பொறுப்பு எடுத்துச் செய்வது என்று
முடிவு செய்து, இன்றும் அந்த குடும்பத்தில்
உள்ளவர்கள், “அவர்கள்
அமெரிக்காவில் இருந்தாலும்”, அந்த
நாளில் வந்து அபிஷேக ஆராதனைகள் செய்வது, இன்னும் ஆச்சர்யம்.
இந்தக் கோவிலில் உறியடி
உத்சவம் மிகவும பிரசித்தம். அந்த உறியை, சிறுவர்களும், இளைஞர்களும் ஒரு நீளமான குச்சியால் முதலில் வேகமாக
தட்டுவார்கள். பிறகு “பிரமிடு” போன்று நின்று உயரே தூக்கப்படும் உறியை பிடிக்க
முயல்வார்கள். இதை முதலில் ஒரு நீளமான குச்சியால் ஒரு அடி அடி அடித்து ஒரு
வயதானவர் துவக்கி வைப்பார், அவரும் ஒரு கட்டளைக்காரர்.
அவர் குடும்பம் தான் முதலில் அடிக்க வேண்டும்.
இப்படி உறியை அடித்து
விளையாடும் நபர்களின் மீது தண்ணியை மூஞ்சியில் அடிப்பார்கள். அப்போது அவர்கள் நிலை
தவறி கீழே விழுவார்கள். அந்த தண்ணீர் முதலில் அடிக்கும் நபர் ஒரு கட்டளைக்காரர்கள்
தான்.
5) இன்றும் இந்த ஊரில்
பிறந்தவர்கள், இந்த ஊர் பெருமாளைக் குல
தெய்வமாகக் கொண்டவர்கள், தன் முதல் சம்பளத்தை
அப்படியே பெருமாளுக்குக் கொடுத்து விடுவார்கள்.
6) திருப்பதிப் பெருமாளுக்கு
வேண்டிக்கொண்டு இங்கே பிரார்த்தனையை முடிக்கலாம். ஆனால் இங்கே
வேண்டிக்கொண்டு, திருப்பதியில் செய்ய முடியாது.
இப்படிப் பல பெருமைகளைக்
கொண்ட ஊர் பூபதிராஜபுரம் என்று அன்று அழைக்கப்பட்டு, வராஹபுரி என்று பிறகு அழைக்கப்பட்டு, வரகூர் என்று அழைக்கப்படும் கிராமம் தான் இது.
சங்கீத மும்மூர்திகள் என்று
அழைக்கப்படும் ஸ்ரீ. தியாகராஜர், ஸ்ரீ. முத்துசாமி தீக்ஷிதர், ஸ்ரீ. ஸ்யாமா சாஸ்த்ரிகள் போன்ற மகான்கள் அவதரித்த
சோழநாட்டில், ஆந்திராவில் பிறந்த ஸத்குரு
நாராயண தீர்த்தர் என்ற மகான், இங்கு வந்து, கிருஷ்ணனின் பிறப்பு, பால லீலைகள் மற்றும் ருக்மிணி கல்யாணம் வரை கூறும் “கிருஷ்ண லீலா தரங்கிணி” என்ற அற்புதமான பாடல்களை, எழுதி, அவரே பாடி, அதற்க்கு, பரமாத்மா நடனம் ஆடி, அவருடனேயே ஐக்கியமான புண்ய க்ஷேத்ரம் இது. இதற்க்கு
ஆஞ்சநேயர் தாளம் போட, இப்போதும் அந்த
"ஆஞ்சநேயர் தாளம் கொட்டி" ஆஞ்சநேயர் என்று அருள் பாலிக்கிறார்.
வரகூர், திருவையாறு – திருக்காட்டுப்பளி மார்க்கத்தில் செந்தலை அருகே
உள்ள ஒரு சிறிய கிராமம். வரகூர் பாதை என்று ஒரு பஸ் ஸ்டாப் உண்டு. அங்கிருந்து 2 கிலோமீட்டர் நடந்தால் கிராமத்தை அடையலாம். நடந்து
சென்றால் பசுமையான புல் வெளிகளும், வயல் நெல் குருத்துகளும் அதன் பச்சை வாசனையும், வாழை தோப்பும் நம்மை சொக்க வைக்கும்.
மிகச் சிறந்த
பாகவதோத்தமர்கள் பிறந்து, வளர்ந்து, மிகப் பெரிய பதவியை அடைந்து, காஞ்சி மஹா பெரியவர்களின் கையால் சன்மானம், ஏன், ஜனாதிபதி கையால் பரிசு பெற்று
கௌரவிக்கப்பட்டிருக்கிறார்கள். சில பெயர்களைக் கீழே கொடுத்து இருக்கிறேன்
ஸ்ரீ கோபால பாகவதர், இன்று நாம் பாடும் ஸம்ப்ரதாய பஜனைக்கு
வித்திட்டவர். ஸ்ரீ. எஸ். வீ குருஸ்வாமி சாஸ்த்ரிகள் ஸத்குரு ஸ்ரீ நாராயண
தீர்த்தரின் கிருஷ்ண லீலா தரங்கிணியை எளிமைப் படுத்தி, எல்லோரும் இன்றும் பாடும்படியாக செய்த பெரிய மகான்.
வரகூர் aஸ்வாமிகள் என்று
சொல்லப்படும், ஸ்ரீ. அச்யுத கிருஷ்ண
சரஸ்வதி இங்கு பிறந்து, திருவாரூர் அருகே
அரசவனங்காடு கிராமத்தில் சமாதி ஆனவர். இன்றும், அங்கு, அவரது அதிஷ்டானம், அரசவங்கட்டில் தினமும் அபிஷேக ஆராதனைகளுடன்
சிறப்பாக இருக்கிறது. ஸாம வேதத்தில் கரை கண்டவர்கள் இந்த ஊரில் இருந்தார்கள்
என்பது இன்னொரு சிறப்பு.
கிராமத்திற்க்கு உள்ளே
நுழையும்போது இரட்டைப் பிள்ளையார் நம்மை அன்புடன் வரவேற்பார்கள். இவர்கள்
மாமனார்-மாப்பிள்ளை பிள்ளையார் என்று தொன்று தொட்டு அழைப்பார்கள். அதன் எதிரில்
அருமையான குளம். அதைக் கடந்து வந்தால், ஸ்ரீ ஆனந்தவல்லி உடனுறை, மகா கைலாச நாதர் கோவில் இருக்கிறது. ஸத்குரு ஸ்ரீ.
நாராயண தீர்த்தர் அவர்களின் அதிஷ்டானம் இங்கு உள்ளது என்பது இன்னொரு பெருமை. இதை
ஏணிப்படிகளில் மாந்தர்கள்” என்ற நூலில் “சிவன் ஸ்வாமிகள்” மிக அழகாக எழுதி இருக்கிறார்
அதை தாண்டி அழகான கிராமம், கிராமத்தின் நடுவே மிக அழகான சிறிய கோவில்.
இங்குதான் ஸ்ரீதேவி உடனுறை ஸ்ரீ. வெங்கடேச பெருமாள். சத்குரு நாராயண தீர்த்தருக்கு, கிருஷ்ணனாக காட்சி கொடுத்து, ஸ்ரீ. கிருஷ்ண லீலா தரங்கிணி பாடிய இடம். முடிவில்
காவல் தெய்வமாக “பெரமனார்” இருந்து கிராமத்தை இன்றும் காத்துக் கொண்டு
இருக்கிறார்.
ஸ்ரீ விட்டல் தாஸ் மகாராஜ்
அடிக்கடி சொல்லுவார் - ஜெயதேவர் பாடிய அஷ்டபதியை அவர் எங்கு பாடினார். பூரி
ஜேகன்னாதர் கோவிலிலா இல்லை கொஞ்சம் தூரத்தில் அவர் பிறந்த கிராமம் இருக்கிறது
அங்கேயா ? என்று. ஸ்ரீ நாராயணீயம்
பாடிய பட்டத்ரீ கோவிலில் ஸ்வாமி எதிரில் பாடினாரா ? என்றும் தெரியாது. இன்றும் குருவாயூர் கோவிலுக்குச்
சென்றார், ஸ்வாமி சன்னதியில் எதிரில்
பாராயணம் செய்ய அனுமதி இல்லை.
ஆனால் வரகூரில் ஸ்வாமி சன்னதி
எதிரில் மிக அருகில் தரங்கம் பாடலாம். இன்றும், பாகவதர்கள், ஸத்குரு பாடிய இடத்தில், தரங்கம் பாடுவது கண் கொள்ளாக் காட்சி.
ஸ்ரீமத் பாகவதத்தில்
ராதையைப் பற்றிக் கூறவில்லையே என்ற ஆதங்கத்தில், பூரி ஜெகந் நாதரே ஜெயதேவராக அவதரித்து கீத
கோவிந்தம் என்னும் பக்தி ரசம் சொட்டும் கிரந்தம் செய்தாராம். அந்த ஜெயதேவர்
கண்ணனின் லீலைகளைப் பாடவில்லையே என்று வருந்தி, அவரே நாராயண தீர்த்தராக அவதரித்து கண்ணனின்
லீலைகளைப் பாடினார் என்றும் இங்கு கூறப்படுவதுண்டு
தரங்கம் பாடல்கள் மட்டும்
இல்லை. அது உபநிஷத் அடங்கிய ஒரு வேதம். "க்ஷேமம் குரு கோபால, மற்றும் வீக்ஷேகம் கதா" போன்ற பல அருமையான
பாடல்கள் அடங்கிய தரங்கம், கலியைப் போக்க வந்த
பொக்கிஷம்.
கிருஷ்ண லீலா தரங்கிணி பற்றி
ஒரு அற்புதமான விளக்கம் சொல்வதுண்டு:
"ஸ்ரீகோபாலன் என்னும்
கார்மேகத்திலிருந்து பெருகிய- அவரது பெருங்கருணை என்னும் மழைத் தாரைகள், ஸ்ரீநாராயண தீர்த்தர் என்ற மலைமீது விழுந்து பரவி, அவை முழுதும் ஒன்று சேர்ந்து, இந்த கிருஷ்ணலீலா தரங்கிணி என்னும் ஆறாகத் தோன்றி, கிருஷ்ண பக்தர்கள் என்னும் வயலில் பாய்ந்தோடி, உலகை இன்பமுறவும் ஆனந்தமுறவும் செய்யும்!'
இந்தக் கிராமத்தில், உறியடி உத்சவம் மிகவும் பிரபலம். ஆவணி அவிட்டம்
முடிந்து எட்டாம் நாள், கிருஷ்ண ஜனனம் என்ற
ஜன்மாஷ்டமி யை ஒட்டி நடக்கும் அற்புதமான வைபவம். இந்த எட்டு நாளும், வரகூர் கிராமம் “கோகுலம்” போல கோலாகலாமாக இருக்கும் பூலோக வைகுண்டம் என்று
கூட சொல்லலாம். நிதம் வேறு வேறு அலங்காரம், பாகவதர்கள் பஜனை, சதுர் வேத பாராயணம், ஸ்ரீ மத் பாகவத பாராயணம், தரங்கிணி பாடல்கள் என்று ஊரே அமர்க்களம் தான்.
ஸ்வாமி வெண்ணைத் தாழியில்
வீதி உலா வந்து, வெளி மண்டபத்தில் வைத்து, இரவு, அபிஷேக அலங்காரங்களுடன் “புறப்பாடு” மிகவும் விமரிசையாக இருக்கும், ஸ்வாமி பாதையில் அங்கப் பிரதக்ஷிணம் செய்யும்
பக்தர்கள் எல்லாம் பக்தியின் உச்சம். “உறியடியோ கோவிந்தோ” என்று பக்தர்கள் கூக்குரல் எங்கு காண முடியாத
அதிசயம். வழுக்கு மரம் ஏறுவது என்பது, மனிதர்களுக்கு ஏற்றத் தாழ்வு என்று இருந்தாலும், இறைவனின் அருள் இருந்தால், எந்த்த் தடைகளையும் சர்வ சாதாரனமாகத் தாண்டலாம்
என்பதற்க்கு ஒரு உதாரணம்..
எத்தனை எழுதினாலும் போறாது.
உறியடி உத்சவத்தை ஒரு முறை நேரில் பார்க்க வேண்டும்.
வாருங்கள், வந்து ஒரு முறை வரகூர் பெருமாளைப் பாருங்கள். அவர்
பயத்தை மட்டுமல்ல, பயத்தின் காரணத்தையும், வேரோடு அழிக்கக் கூடிய அற்புத தெய்வம்.
இதில் இன்னும் சில
சிறப்புகளை பார்ட் – 2 ஆக எழுத
ஆசை.
Friday, 12 August 2022
பெருமாள் கோவிலில் “ஸ்ரீ ருத்ரம் சொல்லி அபிஷேகம்”
Sunday, 10 July 2022
சிவ சிவ
இந்த
வார்த்தை சிவன் கோவில் உள்ளே போகும்போது நியான் விளக்கில் பின்னே
எழுதப்பட்டிருக்கும் “சிவ சிவ வோ” அல்லது
சிவனைப் பற்றி உபன்யாசத்தின் தொடக்கமோ இல்லை.
இது
ஒரு ஆச்சர்யமான “சிவ சிவ”. நாம் பல நேரங்களில் ஒரு அதிர்ச்சியான/ஆச்சர்யமான ஒரு
செய்தியைக் கேட்டவுடன் நாம் உடனே காதைப் பொத்திக்கொண்டு “சிவ சிவ போறும், சொல்லாதே” என்று சொல்வோமே, அது,
இதில்
என்ன ஆச்சர்யம் இருக்கிறது ? என்று
கேட்டால் மூன்று முக்கியமான நூல்களில்/புராணங்களில் இந்த வரிகளைக்
கையாண்டிருக்கும் அழகு. அதை தான் இப்போது பார்க்கப் போகிறோம்.
ஒன்று
மூக பஞ்ச சதியில்
இரண்டாவது
அப்பய்ய தீக்ஷிதரின் ஆத்மார்பண ஸ்துதியில்
மூன்றாவது, ஆச்சர்யமாக- நாராயணீயத்தில்.
அ)
நாராயணீயத்தை முதலில் எடுத்துக் கொள்வோம்.
நாராயணீயத்தைப்
பற்றி எல்லோருக்கும் தெரியும். ஸ்ரீ மத் பாகவதத்தின் ஸாரத்தைப் பிழிந்து கொடுத்து
இருக்கும் இந்த அற்புதமான் கிரந்தத்தில், ஸ்ரீ.
சுந்தர் குமார் அவர்கள் சொன்ன ஒரு விஷயம் சொல்கிறேன்.
வால்மீகி
ராமாயணத்தில் “சுந்தர காண்டத்தில் எத்தனை பகுதிகளோ (chapters) அத்தனை பகுதிகளை வார்த்தைகளாக (ஒவ்வொரு பகுதியும் ஒரு வார்தையாக) ஒரு 4
வரியில் (35 வது சதகம், 3 வது செய்யுள்) முடித்து
இருக்கிறார்.
இதெல்லாம்
குருவாயூரப்பன் அருள் இல்லாமல் எப்படிச் செய்ய முடியும் ?
இதில், ராமாயணத்தைப் பற்றி நாராயண பட்டத்ரி சொல்லும்போது,
ஒரு இடத்தில் சிவ சிவ வருகிறது.
நா.ப.
சொல்கிறார்: (35 வது சதகம், 9 வது ஸ்லோகம்)
உத்தர
காண்டத்தில், ராமர் பட்டாபிஷேகம் முடிந்து, பதினாறாயிரத்திற்க்கு அதிகமான வருடங்கள் சுகமாக ஆட்சி செய்தீர்கள். பிறகு
சீதாதேவி விஷயமான அபவாதச் சொல்லைக் கேட்டு, கர்ப்பிணியான
அவளை பரித்யாகம் செய்தீர்கள் அல்லவா ? “
சிவ
சிவ -என்ன கொடுமை இது”
“மைதில்யாம்
பாபவாசா....ஷிவ ஷிவ் கில தாம்” என்று சம்ஸ்க்ருத பதம் வருகிறது.
ஆ)
இரண்டாவது அப்பய்ய தீக்ஷிதரின்- ஆத்மார்பண ஸ்துதி
தீக்ஷிதர்
பற்றி முன்னுரை தேவையில்லை. அவரைப் பற்றி,
காஞ்சி பெரியவர், ஒரு ஆடியோ ஒன்று வெளியீட்டு யூ ட்யூப் ல்
இன்றும் இருக்கிறது. செம்மங்குடி மாமா “மௌளம் கங்கா,
ஷஷாங்கௌ.......” என்று மாயமாளவ கௌளையில் ஒரு விருத்தம் பாடுவார், அது இவரது தான்.
அவர்
தேவி மகாத்மியத்தை சுருக்கி, ஸாரமாக, ‘துர்கா சந்திர கலா ஸ்துதி” என்று ஒன்று எழுதி
இருக்கிறார். உத்தமாமான ஒரு கிரந்தம் இது.
அவர்
“பைத்தியம் ஆக இருந்தபோது” ஒரு 50 ஸ்லோகங்களை இயற்றி
உள்ளார். ஏன்/எதற்க்கு பைத்தியம் ஆனார் என்பதை
https://www.youtube.com/watch?v=u0aJAkpMxic
இந்த
ஆடியோவைக் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
இது
“உன்மத்த பஞ்சாஷத்” என்றும் அழைக்கப் படுகிறது. இப்படி ஒரு அற்புதமான கிரந்தத்தை
எழுதிவிட்டு, கடைசி ஸ்லோகத்தை இப்படி
முடிக்கிறார்.
“இறைவா, ஒருமுகப்பட்ட மனதுடன், இந்த ஆத்மார்ப்பண ஸ்துதியை
நான் இயற்ற வில்லை. கருணைக் கடலே ! இந்த
அற்பமானவன் வார்த்தை அளவிலாவது சரணம் அடைந்துள்ளான்’ என்று
நினைத்து என்னை ரக்ஷிப்பாயாக !!!!
இந்த
வரிகளை “உன்மத்த” நிலையில் எழுதி இருக்கிறார்.....!!!!!
இதையெல்லாம்
படிக்கும்போது, நமக்கு தூக்கி வாரிப்
போடுகிறது.
இதில், 8 வது ஸ்லோகத்தில் இப்படிச் சொல்கிறார்
“காமனை
எரித்தவனே, எருக்கு,
தும்பை முதலான மலர்களால், உன்னை அர்ச்சனை செய்து, அத்ன் பலனாக மோக்ஷ சாம்ராஜ்யத்தை எளிதில் அடையலாம் என்பதை அறிந்தும் கூட
“சிவ சிவ”
எனது
காலத்தை வீணாக்கி, ! ஓ ஆத்மரூபியே !
ஆத்மத்ரோஹியாகி, இந்த்ரியங்களுக்கு அடிமையாகி, உன்னை மறந்து, நான் மேல் மேலும் அதோ கதியை
அடைகிறேன்”
“எதத்
ஜாநன் அபி “சிவ சிவ” வியர்தயன் காலம் ஆத்மன்”
இ)
இது மூக பஞ்ச ஸதி- இதுவும் காஞ்சி பெரியவா சொன்ன ஆடியோ தான்.
ஆர்யா
சதகத்தில் 48 வது ஸ்லோகம் – இதன் அர்த்தம் இப்படிப் போகிறது.
“ஸ்ரீ
காமக்ஷி தேவியின் கடாக்ஷத்தினால் அனுக்ரஹிக்கப்பட்ட மகா புருஷன், காட்டையும், அரண்மனையும்,
சத்ருவையும், ஸ்நேகிதனையும்,
ஒட்டாஞ்சல்லியையும், யுவதிகளின் கோவைக்கனி போன்ற உதடுகளையும்
சமமாக பார்க்கிறார்கள்.
சிவ
சிவ
என்ன
ஆச்சார்யம், என்ன ஆச்சர்யம்..... “ என்று முடிக்கிறார்.
“ஷிவ
ஷிவ பஷ்யந்தி சமம்.......” என்று ஆரம்பிக்கிறது இந்த ஸ்லோகம்.
மகான்கள்
கஷ்டப்பட்டு, நமக்காக சொன்ன விஷயங்கள்
நான்
கொஞ்சம் யோசித்தேன். இதை தவிற, புராணங்களிலும், இதிகாசங்களிலும், பல இடங்களில் “சிவ சிவ”பிரயோகப் பட்டு இருக்கலாம். உங்களுக்கும் பல இடங்கள் தோன்றலாம்.
எனக்கு தோன்றிய சில
1) திரௌபதி
மான பங்கப் படுத்தப்பட்ட போது
2) கர்ணன்
அடிபட்டு குற்றுயிரும், குலையுயிரும் ஆக இருக்கும்போது, “உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா ! கர்ணா ..... என்று
பாடிக்கொண்டே “உன் தர்மத்தை தானம் பண்ணு” என்று கிருஷ்ணர் கேட்பாரே – அப்போது
3) இறப்பே கிடையாது, நான் எப்போது இறப்பேன் என்று நான் தான் முடிவு செய்வேன் என்று ஒரு வரம் பெற்ற பீஷ்மர் அம்புப் படுக்கையில் கிடக்கும் போது, அந்த வலியிலும், நமக்குக் கொடுத்த விஷ்ணு ஸஹஸ்ரநாமம்,
4) ராமாயணத்தில்
பல இடங்களில்
5) எல்லாவற்றிற்க்கும்
மேலாக, அரிச்சந்திரன் கதைதான். வஷிஸ்டருக்கும், விஷ்வாமித்தருக்கும் நடந்த போட்டியில், பெரிய ராஜாவாக
இருந்த ஹரிச்சந்த்ரனை, பொய் சொல்ல வைக்க வேண்டும் என்று கங்கணம்
காட்டிக்கொண்டு, இந்த விஸ்வாமித்ரர் அவனை படுத்திய பாடு, ராஜாவை, கடைசியில், சுடுகாட்டில்
வெட்டியானாக வேலை செய்ய வைத்து, இறந்து போன மகனையே, தன் மகன் என்று தெரியாமல், மனைவியை பிரிந்து பட்ட கஷ்டம்
கொஞ்சமா நஞ்சமா.
இப்பவும் காசிக்குப் போய், அந்த “ஹரீஷ்சந்திர காட்” என்ற இடத்திற்க்கு போய் நின்று ஒரு நிமிடம் அரிச்சந்திரனை, நினைத்துப் பார்த்தால், கண்ணீர் விடாமல் இருக்க முடியாது.
முடிவில், மும்மூர்த்த்திகளும்
அரிச்சந்திரனிடம் என்ன வரம் வேண்டும் என்று கேட்க- “வஷிஸ்டர் தான் ஜெயித்து விட்டோம்
என்று, விஷ்வாமித்ரரை “அவமதிக்கக் கூடாது” என்று ஒரு வரம் கேட்டார்
பாருங்கள்- அதுதான் எனக்கு சிவ சிவ.
நானாக
இருந்தால், மினிமம்,
விஷ்வாமித்ரரை “ணங்” என்று ஒரு குட்டாவது குட்டி இருப்பேன்.
நிகழ்
காலத்தில், நம்பி நாராயணன் உண்மைக் கதை கூட
எனக்கு சிவ சிவ தான்.
Monday, 4 July 2022
ஆனந்த நடன பிரகாஸம்.......
ஆனித் திருமஞ்சனம் - 2
இன்று ஆனித் திருமஞ்சனம், சிதம்பரம் தேர். கொஞ்சம் நடராஜர் பாடல்களை அலசுவோம்:
சிதம்பரம்
நடராஜர் கோவிலைப் பற்றி நிறைய பேர் பாட்டு எழுதி இருக்கிறார்கள். எனக்கு என்னவோ மத்த கோவிலை விட, சிதம்பரத்தில் தான் நிறைய பேர் நிறைய பாட்டுகள் எழுதி இருக்கிறார்கள்
என்று தோன்றுகிறது. இதைத் தவிர,
தேவாரம், நடராஜர் பத்து போன்ற பல.
கோபால
கிருஷ்ண பாரதி, மாரி முத்தாப் பிள்ளை, முத்துத் தாண்டவர், பாபநாசம் சிவன், நீலகண்ட சிவன், பாப விநாச முதலியார் போன்ற பலர்- (நான்
தமிழ் பாடல்களை மட்டும் சொல்கிறேன்.)
இவர்கள்
மூன்று விதமான ‘ரசனையுடன்” பாடல்களைக் கொடுத்து
இருக்கிறார்கள்:
முதல்
வகை - ஸ்வாமியின் வர்ணனை மற்றும் அடியார்களின் பெருமை
இரண்டாம்
வகை- கேலியும், நையாண்டியுமாக – உரிமையுடன்
பாடிய பாடல்கள்.
கொஞ்சம்
கடுமையாக- மானிடர்களை, மிரட்டும் தொனியில..
முதலாவது:
மாரிமுத்தாப் பிள்ளையின் இந்தப் பாடல், எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. எல்லா வரிகளின் முடிவில்
“தூக்கி என்பதால் கூட இருக்கலாம்”
முதல் சரணத்தில், நடராஜரின் ரூப வர்ணனை. அடுத்த சரணத்தில் அவருடைய பக்தர்களின் வர்ணனை. இந்தப்
பாடலை முழுவதும் கேட்டால், ஸ்வாமி தரிசனம் பண்ணிய
புண்ணியமும், அடியார்களின் தரிசனமும் கிடைத்துவிடும்
ஆரம்பத்தில் பல்லவியில், “வேலைத்தூக்கும் பிள்ளை, தனைப் பெற்ற தெய்வமே”
என்று முருகனையும் கூப்பிடுகிறார்.
காலைத் தூக்கி, பாட்டில் உள்ள வரிகளை கொஞ்சம் பார்ப்போம்
செங்கையில்
மான் தூக்கி
சிவந்த
மழுவும் தூக்கி
அங்கத்தில்
ஒரு பெண்ணை அனு தினமும் தூக்கி
திங்களை,
கங்கையை, கதித்த சடையில் தூக்கி
அடுத்த சரணம்”
நந்தி
மத்தளம் தூக்க
நாரதர்
யாழ் தூக்க
தோம்
தோம் என்று அய்யன் ஸ்ருதியும் தாளமும் தூக்க
சிந்தை மகிழ்ந்து வானோர் சென்னி மேல் கரம்
தூக்க
இந்த சரணம், பக்தர்களின் உணர்ச்சி பெருக்கான நிலை.
இந்தப் பாடல், எம். எஸ். அம்மா பாடி, அந்தக் காலத்தில், வெகு பிரசித்தம், என் பாட்டி,
கொள்ளு பாட்டி முதற்கொண்டு, அனுபவித்துப் பாடுவார்கள்.
இதே மாதிரி, பாபநாசம் சிவன் பாட்டு ஒன்று இருக்கிறது
முதல் சரணம்
“மானும்
மழுவும் பிஞ்சு, மதியும் நதியும் தவழ்
செவ்வானம்
நிகர் சடையாட, இள நாகை தழுவும்
மதி முகமும் திரு விழி அழகுமாய் – (ஞான சபை)
இரண்டாவது சரணம்:\
நேமியுடன்
முழங்காழி அணி, சாரங்கபாணி மிருதங்கமும்,
நி ச த நி ப ம ரி க ம ரி ஸ்வர நாரதர் வீணையும்.
முத்து தாண்டவர் என்பவரும் நடராஜரைப் பற்றி பல
பாடல்கள் இயற்றி இருக்கிறார். அதில் ஒரு பாட்டு – “காணாமல் வீணிலே காலம் கழிதோமே” –
இந்தப் பாட்டைப் படித்துப் பார்த்தால், சிதம்பரத்தை
முழுவதும் பார்த்து விடலாம், கோவில் மதகு
முதற்கொண்டு.....விவரித்து இருப்பார்.
சேரன், சோழன், ஹிரண்யவர்மன் கோபுரமும்
சூர
வீரப்பன் செய்த திரு மதில்களும்
பாருலகும்
போற்றுகின்ற பஞ்சாக்ஷர படிகளும்,
ஹாரங்கள் சூழ்ந்த திரு ஆயிரங்கால் மண்டபமும்
இன்னும் இரண்டு அற்புத சரணங்கள் உண்டு இந்தப்
பாட்டில்
“சேவிக்க வேண்டுமையா” என்ற இன்னொரு “ஆந்தோளிகா” ராக கீர்த்தனையில், கடைசி சரணம் இப்படி
முடிகிறது.
“நல்ல
திருவிழா ஆனித் தேரும், நாடெங்குமே புகழ்
நற்கோபுரம் நான்கும்,
தில்லை
மூவாயிரவர் வளர் வீதியும், திருமஞ்சனமும், மார்கழி தரிசனமும்”
இன்னொரு இடத்தில், இதே பாடலில் - சிற்றம்பலம் என்னும் பேரம்பலத்தானை” என்கிறார்
இதே மாதிரி, கோபால கிருஷ்ண பாரதியின், “எந்நேரமும் உன்
சன்னதியில்” என்ற பாட்டும், கோவிலின் வர்ணனை, உள் பிராகாரத்தில் உள்ள, பஞ்சாக்ஷர படி, குளம், கொடிக்கம்பம், சிவகாமி
தரிசனம்- என்று. கண்ணை மூடிக் கொண்டு கேட்டால், முழு கோவிலை வலம் வரலாம்.
சிதம்பரத்தில் உற்சவ நாள், கிழமையெல்லாம் சரியாகச் சொல்கிறார் கோ.கி.பாரதி.
‘நாடும் தைப்பூரண பூசத்திலே, தில்லை நாயகனார் குரு வாரத்திலே-மன்றுள் – ஆடிய பாதத்தைக் காணாரே, ஆனந்தம் பூணாரே” என்கிறார் கோ.கி.பாரதி.
இவர்களெல்லாம், தில்லை அம்பலத்தானை அணு அணுவாக ரசித்து இருக்கிறார்கள். அந்த இன்பத்தை அவர்கள் மட்டும் அனுபவிக்காமல், நமக்கும் பாடல்கள் மூலம் வாரி வழங்கி இருக்கிறார்கள். !!
நமக்கு மிகவும் தெரிந்த = “கிருபாநிதி, இவரை போல கிடைக்குமோ” பாடல்
இரண்டாவது
மாரி முத்தாப் பிள்ளை யின் பல பாடல்களில்
நகைச்சுவை ததும்பும் பக்தி இருக்கும்:
ஒரு பாடலில் சரணம் இப்படிப் போகிறது”
“என்
மேல் உனக்கு என்ன கோபம்-
“ஆட்டுக்
காலேடுத்து, அம்பலத்தில் நின்றீர்
அதனை
சொன்னேனா.
ஒற்றை
மாட்டுக் காரனென்று யாருடனாகிலும், வாய் மதனஞ்ச்
சொன்னேனா..
தலை
ஓட்டை வைத்து பிச்சை எடுத்தீர் என்று யாரிடமாவது சொன்னேனா
பல்லை
காட்டி முப்புரத்தார் முன்னே நின்ற கதையைச் சொன்னேனா
எச்சிலுண்டதைச்
சொன்னேனா (கண்ணப்ப நாயனார் கதை)
சாதி, தாய், தந்தையார் இல்லாதவர் என்று சொன்னேனா
இப்படிப் போகிறது, .....
பாப விநாச முதலியாரின், மிகவும் பிரசித்தமான – நடமாடித் திரிந்த+ பாடலில் இப்படி வரியின்
அர்த்தம் இப்படிப் போகிறது.
“திருநீறைப்
பூசியதால் வாதம் வந்துடுத்தா ?
மார்கண்டேயனுக்காக, யமனை உதைத்ததில், கால் சுளுக்கிண்டுடுத்தா..!
சுந்தரருக்காக, பரவை நாச்சியாருக்காக, தூது நடந்தாயே – அதனாலோ, . என்று சொல்லிவிட்டு
“நான்
பண்ணின பாபம், இப்படியெல்லாம் எனக்கு மனக்
கஷ்டம் தர வேண்டும் என்று காலை முடமாக்கிக் கொண்டாயோ” – என்கிறார்.
மூன்றாவது:
அழியும் இந்த உடலை, மெய் என்று நினைக்காதே. உடம்பை வளர்த்தேனே, உயிர்
வளர்த்தேனே” என்று இருக்காமல், உடனே இறைவனை நினைத்துக்
கொண்டே இரு.
பாபநாசம் சிவன் பற்றி கேட்கவே வேண்டாம்.
“வையத்திலே
கருப்பையுள் கிடந்துள்ளம், நையப் பிறவாமல்
அய்யன் திரு நடம் காண வேண்டாமோ.
ஓடைச் சடலம் ஒடுங்க் வெற்றுடம்பு, கூட்டினில் இருந்து உயிர் ஓட்டம் பிடிக்குமுன் காண வேண்டாமோ”
என்று, கிறு
கிறுக்க வைக்கிறார்.
கோபால கிருஷ்ண பாரதி – இப்படிச் சொல்கிறார்:
“கொட்டமடிக்கும்
புலந்தொழில் நீக்கி
கோடி
காலம் செய்த பாவங்கள் போக்கி
வெட்ட
வெளியிலே, நெட்டென தூக்கி,
வேதம் பணிந்திட தென் முகம் நோக்கி (ஆடிய
பாதத்தை)
இல்லோரு பாடலில் – இருவினைப் பிணிகளை
கருவறுத்திடுகிறேன்-பயப்படாதே !!! (வருவாரோ)
என்கிறார்
இந்த மூன்றாவது விஷயத்தில்.... சிதம்பரம்
இல்லாது, அருணகிரிநாதரும் பல பாடகளின், நம் பேதமையை வெளிப்படுத்துகிறார்:
அவர் செவிட்டில்
அறைந்து போல பல பாடல்களில் சொல்லி இருக்கிறார். ஒரே ஒரு உதாரணம்:
சஞ்சய் சுப்ரமண்யன் அவர்கள் - “சுருதி முடி”
என்று “ஹரி காம்போதியில்” ஒரு திருப்புகழ் பாடி இருக்கிறார். அது யூ ட்யூப் ல்
இன்று கூட பார்க்கலாம். அதில் அவர் முதல் சரணத்தையும், கடைசி சரணத்தையும் பாடி முடித்திருப்பார். நடுவில் ஒரு சரணம் இப்படிப்
போகிறது
“கலகமிடவே
பொங்கு குப்பை மல வாழ்வு நிஜம் – என
உழலு
மாயஞ் செனித்த குகையே உறுதி – கருது அசுழம் ஆம்
இத்த மட்டை தனை ஆள உனதருள் தாராய்”
“அசுழம் – நாய்” – மட்டை – மூடன்
உற்றுப் படித்தால், அர்த்தம் புரியும். “பகீர்” என்று இருக்கும்
இதற்கெல்லாம் நாம் அசறுவோமா என்ன. அதுவும் கலி காலத்தில்.
ஆனால் இந்த ஸ்மரணை இருந்தாலே போதும்