இன்று ஆடிக் கிருத்திகை. குரு
வாரம். கொஞ்சம் முருகக் கடவுள். கொஞ்சம் குரு, கொஞ்சம் திருப்புகழ்.
ஒரு திருப்புகழில் “மூத்தோன் ஆகி”
என்ற ஒரு வரியை உபயோகப் படுத்துகிறார்....
மூத்தோன் ஆகி என்ற சொல்லுக்கு
பொருள் “மூத்த சகோதரனாய் விளங்கினாய்” என்று பொருள். இவர் எங்கே எப்படி மூத்த சகோதரன் ? என்ன புதுக்
கதை ?
எத்தனை முறை சொன்னாலும், நான் “பால் மாறாத” ஒரே வார்த்தை.
திருப்புகழ் ஒரு அமிர்தம். அதை பருக பருக
நாம் அடையும் ஆனந்த்திற்க்கு அளவே இல்லை.
அந்த சந்தம், அந்த சொல்
வார்த்தைகள். அர்த்தத்துடன் வரும் அந்த வார்த்தைகள். (உ.ம்)
“அ வு. ரு பிரணவா மந்திர கர்த்தவிய மாக வரு குருநாதா” என்று ஒரு வரி
வருகிறது. அது அழகாக சாருகேசி ராகத்திலும் தாளத்திலும் உட்காருகிரது
திருப்புகழ்
அன்பர்கள் குழு சென்னைக்கு தலைவராக இருக்கும் ஒருவரிடம் பேசிக்கொண்டு
இருக்கும்போது, இந்த திருப்புகழுக்கு ராகம், சந்தம் எல்லாம் போட்ட ராகவன் சார்,
ஆபீசில் இருந்து வந்து, முருகப்பெருமான் இருக்கும் பூஜை அறையில் கதவை
சாத்திக்கொண்டு உட்கார்ந்து விடுவாராம். முருகன் ராகம் சொல்ல, சந்தம் சொல்ல இவர்
எழுதுவாராம். அப்படி வந்த பொக்கிஷம் தான் திருப்புகழ்.
அந்த ராகவன் சார் என்ற மகானை,
மந்தவெளி ஸ்ருங்கேரி மடத்தில் நடந்த திருப்புகழ் பஜனையில் நான் நேரே பார்த்து,
நமஸ்காரம் செய்து, வீபூதி பிரசாதம் வாங்கி இருக்கிறேன். இப்போது நினைத்துப்
பார்க்கும்போதும் மெய் சிலிர்க்கிறது. மும்பையில்
இருக்கும் என் சித்தி, எல்லா திருப்புகழையும் பார்க்காமல், ஒரு வரி பிறழாமல்
பாடுவாள்.
ஒரு பாட்டு நான் “நெட்ரூ” பண்ணுவதற்குள்,
குண்டலினி சக்தி மேலே எழும்பி விடும் போல எனக்கு இருக்கிறது. திருப்புகழ் ஒரு
பீஜம் போன்றது... அருணகிரிநாதர் என்ற மகான் நமக்கு அளித்த கொடை.
எத்தனை
பேருக்கு அருணகிரிநாதர் திருப்புகழ் எழுவதற்கு முன்பே, வில்லிப்புத்தூரரிடம் ஒரு
போட்டியில் இவர் ஜெயித்த கதை தெரியும் .? அதாவது வி/பு ஒரு பாடல் பாட இவர் பதில்
சொல்ல வேண்டும், அதே போல் அ.கி பாடி அவர் பதில். இல்லாவிட்டால் தோற்றவர் காதை, ஜெயி
த்தவர் அறுக்க வேண்டும். வி/பு பாடலுக்கு
இவர் அர்த்தம் சொல்லி விட்டார். இப்போது அருணகிரி பாடுகிறார்.
..திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா.....
இது முதல் வரி, இது போல் இன்னும் மூன்று வரி இருக்கிறது. இதை ஒழுங்காகப் படித்தாலே போறும். நமக்கு புஷ்பக விமானம் ரெடி.
இதற்ககு
பதில் தெரியாமல் வி.பு திணற, காதை அறுக்காமல், அர்த்தம் சொல்லி புரிய வைத்து, பாரதம் பாடுக. என்று அணுக்ரஹம
பண்ணுகிறார்..
வில்லிபுத்தூராரின் பாரதம் இப்படி வந்தது தான்.
இதற்க்கு
அர்த்தம் வாரியார் ஸ்வாமிகள் சொல்லி இருக்கிறார்.
அற்புதம். கூகுளில் கிடைக்கும் தேடி படியுங்கள்..
இன்று வியாழன், குரு அணுக்ரஹம் என்பது
அப்படி சாதாரணமானது அல்ல. ப்ரேமி அண்ணா சொல்வது போல், நீ “ஆதி மூலமே” என்று
கூப்பிடாதே, கஜேந்திரா என்று கூப்பிடு.
நமக்கு எதற்கு ஆதி மூலம். ஆயிரம் பேர் பகவானை நினைத்து மோட்ச கதி அடைந்திருக்கிறார்க்கள். அவர்களில் ஒருவனாய், ஒரு பிரஹலாதனை, துருவனை,
ஆஞ்சநேயர்...இப்படி
ராமாயணத்தில் ஸபரி போன்ற ஒரு
பாத்திரம் எங்கு தேடினாலும் கிடைக்காது. அவள் குரு கைங்கர்யம் பண்னினாள், குருவின் யாக சாலையை சுத்தம் பண்ணினாள். தரையை மொழுகினாள், பாத்திரம் தேய்த்தாள். ஒரு நாள் எல்லோ குருமார்களும் கிளம்ப, சபரி
கேட்கிறாள் “என்னை தனியாக விட்டுப் போகிறீர்களே, நான் என்ன செய்வேன்” என்று கேட்க,
முனிவர்கள் “நாங்கள் யாரைத் தேடித் போகிறோமோ அந்த பரமாத்மா, ராமன் என்ற பெயரில்
உன்னை தேடி வருவார்”. என்கிறார்கள்.
அதற்குப் பிறகு அவள் ராமனுக்காக
வழி மேல் விழி வைத்துக் காத்திருக்கிறாள், இந்த கனி, பழ வகைகள்... எல்லாம் ரெடியாக.
ராமன், லக்ஷ்மனனோடு வருகிறார்.
அவர்களைப் பார்த்து சந்தோஷப்படுகிறாள்.
உபசாரங்கள் முடிந்து, ராமர் என்ன வேண்டும் என்று கேட்கிறாள். சபரிக்குத்
தெரியும், வந்தது சாக்ஷாத் பரமாத்மா என்று. முன்னமேயே (முடிவர்கள் சொன்னதன் பேரில்)
சபரி
உடனேயே “ததி பாண்டன்” மாதிரி, பானையோடு வைகுண்டம் போகவேண்டும் என்று
கேட்கவில்லை. “எனக்கு ஒன்றும் வேண்டாம் ராமா.
எதோ உன்னைப் பார்க்க வேண்டும் என்றார்கள். பார்த்து விட்டேன். நான் கிளம்புகிறேன்.
எனக்கு ஏற்கனேவே புஷ்பக விமானம் ரெடியாக இருக்கிறது” என்கிறாள். எந்த ராமனை முனிவர்கள் கட்டி தழுவவேண்டும் என்று
நினைக்கிறார்களோ, எந்த ராமன் ராமாயணத்தில் ஜகஜ்ஜாலம் பண்ணினானோ., எந்த ராமனை ஆஞ்சநேயர் அன
வரதமும் த்யானம் செய்கிராறோ, அந்த ராமனை
சபரி கண்டுக்கவே இல்லை.
குரு கிருபை அது.
இப்போது திருப்புகழுக்கு வருமோம்
!!!
இது சுவாமி மலை திருப்புகழ். ஞானம் தெறிக்கும் பாட்டு.
தர்பாரி கானடாவின் அத்தனை அழகையும் கொட்டித் தீர்த்த ஒரு பாட்டு. இந்தப் பாட்டை
கேட்டு “ஆஹா” என்று ஆனந்தக் கண்ணீர் விடாதவர்கள் மிகக் குறைவு.
ஒன்றாய், இருமையின், நான்முகன் என்று பல ஆரம்ப வரிகளில்
வரும் இந்தப் பாடல் ஒரு சிறிய பகுதியைத்
தருகிறேன்
முன்பொரு நாள்
உமையைம்மையின் இரு மார்பிலும் சுரந்த ஞானப் பாலை அருந்தி
இயல் இசை நாடகம் என்ற மூன்று தமிழிலும் வல்லவனாகி
நால்வகை கவிகளிலும் வல்லவனாகி
ஐம்புலன்களுக்கு அடிமைப்படாத அவர்களை ஜெயித்த உரிமையாளன்
ஆகி
ஆறு முகம் உடைய சண்முகம் இவன்தான் என்று யாவரும் கூற
இப்போது
திருப்புகழ் வரிகள் “எழில் தரும் அழகுடன் கழுமலத்து உதித்தனை” என்கிறார்.
இதில் “கழுமலத்து உத்த்தனை” என்றால் – சீர்காழியில் திருஞானசம்பந்தராக
தோன்றினாய்” என்கிறார். அருணகிரிநாதர்
என்ற குரு, சம்பந்தப் பெருமானை மேற்கோள் காட்டுகிறார்.
இந்தப் பாடலில் முடியுமோது “ஏரகத்து இறைவன் என இருந்தனையே”
என்று முடிக்கிறார். இதை த.கா வில்
பாடும்போது. நம்மை உருக்கும்.
கௌமாரம்.காம் ல் இந்தப் பாடல் ராகவன் சார் பாட நாம் இன்றும்
கேட்கலாம்.
இப்போது முதல் கேள்விக்கு பதில் – வள்ளியை திருமணம் செய்ய கிழவன் ரூபத்தில் முருகன் வந்து சேர, இவள் பயந்து ஊட விநாயகர் யானை ரூபத்தில் வந்து காப்பாற்றினார். . இந்த இடத்தில்
முருகனுக்குப் பின்பு, விநாயகர் வந்ததால்,
முருகன் மூத்தோன் ஆகிறார்.
முருகா சரணம்
No comments:
Post a Comment