Thursday 22 November 2012

kaRRadhum suTTadhum-sAlaGramam

This word has become extinct.  The most precious way of offering our Poojas is this.  It is one of the inseparable pooja in any staunch Hindu devotee.  To know more about in Tamil


பண்டைய இந்தியாவில் தலைசிறந்து விளங்கிய அவந்தி தேசமே இன்றைய நேபாளம். இங்கு இமயத்தின் அடிவாரத்தை ஒட்டினாற்போல் ஹரிபர்வதம் என்னுமோர் மலை உள்ளது. பகுதியில் கண்டகி நதி உற்பத்தியாகின்றது. 
இங்கு சக்ரதீர்த்தம் என்னும் இந்தப் பகுதி தான் சாளக்கிராமம்  என்றழைக்கப்படுகிறது.
இந்த ஹரி சேத்திரத்தில் உள்ள சகல கற்களிலும், (குளிர், காற்று இவைகளில்லாமல் அமைந்துள்ள ஸைலகர்ப்பத்தில்) விஷ்ணுவின் சகல  அம்சங்களோடு பொருந்திய சாளக்கிராம மூர்த்திகள் புண்ணியகாலங்களில் தோன்றுவதாக கூறப்படுகிறது.
சாளக்கிராமம் என்பது கண்டகி நதியில் உருவாகும் ஒருவகையான அழகிய தெய்வீகம் நிறைந்த கல் ஆகும். இவை நத்தைக்கூடு, சங்கு முதலாய பல வடிவங்களில் பல வண்ணங்களில் கிடைக்கிறது. திருமால் தாமாகவே தங்கமயமான ஒளியுடன் திகழும் வஜ்ரகிரீடம் என்னும் பூச்சியின் வடிவெடுத்து, சாளக்கிராமத்தை குடைந்து, அதன் கர்ப்பத்தை அடைவார். அங்கு ரீங்கான வடிவில் இருந்து கொண்டே தன் முகத்தினால் பல விதமான சுருள் ரேகையுடன் கூடிய பல சக்கரங்களை வரைந்து பல்வேறு அவதாரங்களை விளையாட்டாக வரைந்து பின் மறைந்து விடுவதாக கூறுவர். இப்படிப்பட்ட வடிவங்கள்தான் வணங்கிட உகந்தவையாகும்.
சாளக்கிராமத்தின் சிறப்பு : சாளக்கிராமத்தில் தெய்வீக அருள் இருப்பது மட்டுமில்லாமல் இவற்றில் 14 உலோக சக்திகள் இருப்பதாக கூறப்படுகிறது. வழிபடப்பெற்ற சாளக்கிராமங்களை சரித்திர ஞானம் பெற்றவர்களிடமிருந்து பெற வேண்டும் என்பது நியதி. சாளக்கிராமத்தின் தனித்தன்மையை அறிந்தவர்களிடம் அதன் வண்ணம், அதில் அமைந்துள்ள ரேகைகள் ஆகியவற்றை ஆராய்ந்து அவர்களுடைய அறிவுரையின் பேரில் வாங்குவது சிறப்பு. சேவை தரும் எம்பெருமான் ஸ்ரீமூர்த்தி, கேசவன், நாராயணன், மாதவன், விஷ்ணு, மதுசூதனன், திரிவிக்கிரமன், வாமனன், ஸ்ரீதரன், ரிஷிகேசன், பத்மநாபன், தாமோதரன் ஆகிய பன்னிரண்டு கூறுகளாகக் கற்கள் வடிவத்தில் விளங்கி, செல்வத்தை வழங்கும் அதிபதியாகக் குபேரன் திசை நோக்கி எழுந்தருளியுள்ளார். சாளக்கிராமத் தலம் தானாக சுயம்புவாகத் தோன்றிய காரணத்தால் ஸ்வயம் வியக்தம் என்னும் சிறப்பினைக் கொண்டு விளங்குகிறது. இங்கு எப்பொழுதும் எம்பெருமான் நிரந்தரமான நிலையில் நித்ய சாந்நித்யமாக எழுந்தருளியிருக்கிறார் என்பர் வைணவப் பெரியோர்கள். சாளக்கிராமம் புனிதம் வாய்ந்த கண்டகி நதியில் விளைவதால் தோஷம் இல்லாதது. யாரும் தொட்டு வழிபடலாம்.
சாளக்கிராம வடிவங்கள் பல வகைப்படும்.
1. ஒரு துளையில் நான்கு சக்கரங்களைக் கொண்டு வனமாலையை அணிந்த வடிவமுடையது லட்சுமி நாராயண சாளக்கிராமம்.
2. நான்கு சக்கரங்களுடன் வனமாலை இல்லாமல் இருப்பது லட்சுமி ஜனார்த்தன சாளக்கிறாமம்,
3. இரண்டு துளைகளுக்குள் நான்கு சக்கரங்களையும் கொண்டு ரதாகாரமாக இருப்பது ரகுநாத சாளக்கிராமம்.
4. இரண்டு சக்கரங்கள் மாத்திரம் கொண்டிருப்பது வாமன சாளக்கிராமம்.
5. வனமாலையுடன் இரண்டு சக்கரங்களை மட்டும் கொண்டிருப்பது ஸ்ரீதர சாளக்கிராமம்.
6. விருத்தாகாரமாக இரண்டு சக்கரங்களை மட்டும் கொண்டது தாமோதர சாளக்கிராமம்.
7. மிகப்பெரிதும் இல்லாமல், மிகச் சிறியதும் இல்லாமல் ஏழு சக்கரங்களையும் சரத்பூஷணமும் கொண்டிருப்பது ராஜ ராஜேஸ்வர சாளக்கிராமம்.
8. விருத்தாகரமாக இரண்டு சக்கரங்களும் அம்பறாத் தூணியும் பாணத்தின் அடியும் கொண்டது ரணராக சாளக்கிராமம்.
9. பதினான்கு சக்கரங்களும் கொண்டது ஆதிசேட சாளக்கிராமம்.
10. சக்கர காரமாக இரண்டு சக்கரங்களைக் கொண்டது மதுசூதன சாளக்கிராமம்.
11. ஒரே சக்கரத்தைக் கொண்டிருப்பது சுதர்சன சாளக்கிராமம்.
12. மறைபட்ட சக்கர காரமாகத் தோன்றுவது கதாதர சாளக்கிராமம்.
13. இரண்டு சக்கரங்களுடன் ஹயக்ரீவ குதிரை உருவமாகக் காணப்படுவது ஹயக்ரீவ சாளக்கிராமம்.

14. இரண்டு சக்கரங்களையும், பெரிய வாயையும் வனமாலையையும் கொண்டது லட்சுமி நரசிம்ம சாளக்கிராமம்.
15. துவரக முகத்தில் இரண்டு சக்கரங்களையும் கொண்டு சமாகாரமாக உள்ளது வாசுதேவ சாளக்கிராமம்.
16. சூட்சுமமான சக்கரமும் ஒரு ரந்திரத்திற்குள் பல ரந்திரங்களைக் கொண்டிருப்பது பிர்த்யும்ன சாளக்கிராமம்.
17. விருத்தாகாரமாகவும், செம்பட்டு நிறம் கொண்டதாகவும் இருப்பது அநிருத்த சாளக்கிராமம்.
இவ்வாறு சாளக்கிராமக் கற்கள் உள்ள இடத்தில் எம்பெருமானும் சகல இறை சக்திகளும் நித்திய வாசம் செய்வார்கள். சகல செல்வங்களும் பரிபூரண விருத்தியாகும். இதனை பால் அல்லது அரிசியின் மீது வைத்திருந்து எடுத்துப் பார்த்தால் அதன் எடை கூடியது போல இருக்கும். சாளக்கிராமம் உடைந்துபோனாலும் அதில் சக்கரரேகைகள் இருந்ததால் சிறப்பாகும்.   சாளக்கிராம கற்கள் இருக்குமிடத்தில் எம்பெருமானும் சகல இறைசக்திகளும் நித்திய வாசம் செய்வார்கள் . சகல செல் வங்களும் பரிபூரண விருத்தியாகும்.
12 அதற்கு மேல் சாளக்கிராமங்கள் வைத்து வழிபட்டு வரக்கூடிய வீடுகளை 108 திவ்விய தேசத்தகுதியில் வைத்து பாவிக்க வேண்டுமென்பர்.   12 சாளக்கிராமங்களும் ஒரு குடும்பத்தின் குலதனச் சொத்தாக கருதுவர். சாளக்கிராமத்தை இருமுறை வழிபடுதல் வேண்டும். சாளக்கிராமங்கள் எந்த விதமான வண்ணத்தில் அமைந்துள்ளதோ அந்த வடிவங்கொண்ட திருமால் வாழும் இடமாக கருதப்படுகின்றன.   வண்ணங்களுக்கேற்ப அவற்றின் பூஜை பலன்களும் மாறுபடும்.
நீலநிறம்     - செல்வத்தையும், சுகத்தையும் தரும்
பச்சை          - பலம், வலிமையைத் தரும்
கருப்பு          - புகழ், பெருமை சேரும்
புகைநிறம் - துக்கம், தரித்திரம்.
சாளக்கிராமம் என்பது என்ன?



அற்புதங்கள் நிறைந்த சாளக்கிராமம்!

ஒவ்வொரு கோவில்களிலும் மூலஸ்தானத்தில் உள்ள சுவாமிகளுக்கு தான் வழிபாடு , திருவிழாக்கள் நடத்தப்படுவதை அறிந்திருப்போம். மூலஸ்தானத்தில் சாளக்கிராமம் என்ற ஒரு தெய்வீக கல்லுக்கு பூஜை நடப்பதை யாரும் அறிந்து இருக்க மாட்டார்கள்.   இந்த சாளக் கிராமம் நேபாளம் முக்திநாத் கோவில் அருகில் கண்டேகி நதியில் மட்டுமே உருவாகுகிறது. இதில் தான் சுவாமி குடியிருப்பதாக ஐதீகம். பெருமாள் கோவில்களில் இதை சாளக் கிராமம் என்றும், சிவன் கோவில்களில் பானலிங்கம் என்றும், விநாயகர் கோவிலில் சோனபத்ரம் என்றும் அழைக்கிறார்கள்.   இந்த சாளக் கிராமத்தில் பெருமாளின் அத்தனை அவதாரங்களும் அடங்கி உள்ளதாம். பக்தர்கள் இறைவனை வேண்டி துளசி செடியை கண்டேகி ஆற்றில் போட்டு கைகளை விரித்து தண்ணீரில் மூழ்கியபடி நின்றால் தங்களுக்கு இறைவனின் அருள்படி சாளக் கிராமம் கிடைக்கும் என்கிறார்கள்.   நம் வீட்டிலும் இந்த சாள கிராமத்தை வைத்து வழிபடலாம். 12 சாளக் கிராமங்கள் இருந்தால் அந்த வீட்டில் பெருமாளே குடியேறி இருப்பதாக ஐதீகம்.





No comments: