30th October and 31st October 2026- இந்த இரண்டு
நாள், வரஹூர் பாகவதர்கள் திருவனந்தபுரத்திற்குச் சென்று முழு தரங்க கீதங்கள்
பாடினோம்.
தரங்கம் என்பது ஸத்குரு நாராயண தீர்த்தர், கிருஷ்ண ஜனனம்
முதல், ருக்மிணி கல்யாணம் வரை, பாடலாக, சம்ஸ்கிருதத்தில் எழுதிய ஒரு காவியம். இவர்
திருவையாறு அருகில் இருக்கும் வரஹூர் க்ஷேத்ரத்தில் பாடினார்.
பகுதி ஒன்று
குரு மூலமாகத்தான் இறைவனைக் காண முடியும். உணரவாவது
முடியும் இது காலம் காலமாக பேசப்படும் ஒரு வசனம். எங்கள் குழுவுக்கு இதுதான் நடந்தது.
குழு வை விளக்கி விடுகிறேன்.... எங்கள் வரஹூர் ஸ்தல பாகவதர்
ஸ்ரீ. பிரசன்னா, ஹாலாஸ்ய பாகவதர்கள் ஸ்ரீ. ரவி ஸ்ரீ. ஸ்ரீதர், நான் என் தம்பி
வரஹூர் விஜயகுமார் பாகவதர்.
ஒரு மூன்று மாதங்களுக்கு முன்பு, பிரம்மஸ்ரீ சேங்காலிபுரம் சுப்பிரமணிய
தீட்சிதர் மறைவுக்கு ஸ்ரத்தாஞ்சலி யாக, ஒரு மூன்று மணி நேரத்திற்கு தரங்கம்
பாடுவதற்கு, அவர் புத்திரன் ஸ்ரீ. ராம் பிரசாத் கேட்டுக்கொள்ள, குரோம்பேட் டில்
உள்ள அவர் வீட்டில் சென்று நாங்கள் பாடினோம்.
ஸ்ரீ.ஸுப்ரமணிய தீட்சிதர் எங்கள் பரம குரு. என்னுடைய
ஆன்மீக வாழ்க்கையை மேம்படுத்திய பலரில் அவர் ஒருவர்
பாடி முடிந்தவுடன், அங்கு வந்திருந்த ஸ்ரீ.
ரமேஷ் என்ற ஒருவர், “நான் திருவனந்தபுரத்தில் இருந்து வருகிறேன். எங்கள் ஊரில்
வந்து பாட முடியுமா ?” என்று கேட்டார்.
அவர் தோற்றத்தில், மிகவும் சாதாரணமாக, எளிமையானவராக, இருந்தார். நாங்கள் வழக்கம் போல் “அதற்கென்ன, பாடறோம்”
என்று சொல்லி விட்டோம். சத்தியமாக அவர் எங்களை நினைவு படுத்தி கூப்பிடுவார் என்று
நினைக்கவில்லை.
கூப்பிட்டார்...... இது முதல் ஆச்சர்யம். !!
நாங்கள் எல்லாம் டிக்கெட் வாங்கி, ரயிலில் கிளம்பி சென்றோம். திருவந்தபுரத்திற்க்கு நான்
போனதே கிடையாது. குருவாயூருக்கும்,
சபரிமலைக்கும் போன எனக்குத திரு...ரம் போகவேண்டும் என்று தோன்றவில்லை.
அங்கு எங்கு பாடப்போகிறோம். என்ன சாப்பாடு, புது
ஊர். புது பாஷை. ஏதோ யாரோ ஒருவர் சொன்னோம் என்று கிளம்பிவிட்டோமே, என்னடா இது ?
என்று மனதுக்குள் இருந்தாலும், எங்களையும்
மதித்து தரங்கம் பாடச் சொல்கிறாரே என்ற ஒரு மரியாத்தைக்குச் சென்றோம்.சாதாரணமாக,
இதே போல் விழாவில், அவரே டிக்கெட் புக் பண்ணிவிடுவார், வண்டி அனுப்புவார்,
ரூம் புக் பண்ணி, சூடா குளிக்க வெந்நீர், வேளா வேளைக்கு, காபி, டிபன் – எல்லாம்
ஒழுங்காக இருக்குமா என்று பார்த்துக் கிளம்பும் இந்த “பாகவத சம்பிரதாயத்தில்” –
எனக்குமே ஒன்றுமே தெரியாது. டிக்கெட் நானே புக் பண்ணிக்கொண்டேன்.....(டோம்)
ஆனால் எனக்கு ஒரு ஆசை இருந்தது பத்மநாப சுவாமியை
பார்க்க வேண்டும். என் மாமி வேறு, இந்த ஆசையைத் தூண்டி விட்டாள். மேலும்.என் அப்பா
அடிக்கடி பத்மநாப சுவாமி கோவிலும், அதை நிர்வகித்து வரும் மகாராஜா குடும்பமும், கட்டுப்பாடுகளும் மற்ற பல விஷயங்களை பற்றி
சொல்லுவார். மேலும், சுவாதி திருநாள் க்ருதிகளைப்
பற்றி சொல்லும்போது “ஒரு ராஜா (சுவாதி திருநாள் மகராஜா) சந்கீதத்துக்காக, ஒரு
தேசத்தையே அர்ப்பணித்தான், ராஜா இத்தனை கிருதிகளை எழுதி, அந்த சுவாமிக்கு
அர்பணிக்க, பின் வந்த செம்மங்குடி ஸ்ரீனிவாச அய்யர் போன்ற பல சங்கீத வித்தகர்கள்
அதற்க்கு “நொடேஷன்” எழுத......இன்றும் அந்தப் பாடல்களை பாடும்போது எனக்கு இந்தக்
காட்சிகள் கண் முன்னே விரியும்,
பாவயாமி ரகுராமம் என்ற ராக மாலிகை – முழு ராமாயணத்தை, அழகாக
பாடல் வரிகளில் = இது ஒன்று போதும் சுவாதி திருநாள் பெருமையைச் சொல்ல....
இதில் என்ன காமெடி என்றால், என் வீட்டில்
இருந்து 10 நிமிடம் இருக்கும் அடையார்
அனந்த பத்மநாபஸ்வாமி கொவிலுக்கு எப்போதாவது போவேன். சமீபத்தில் போனதே கிடையாது.
இரண்டு கோவில்களும் ஒரே மாதிரி சயன கோலத்தில் மூலவர். நான் எங்கோ இருக்கும் அனந்த
பத்மனாபஸ்வாமி யை பார்க்க நினைத்தேன். (நான்தான் உண்மையான க்ஷேத்ர பாபி.)
பகுதி இரண்டு
நான் இரயில் நிலையம் இறங்கினேன். அங்கிருந்து ஒரு 10 நிமிடம் நாங்கள் தங்கும் இடம். தங்கும் இடத்திற்கு அடுத்த
வீடு, நாங்கள் பாடும் இடம். 10 வீடு தள்ளி சாப்பிடும், ரமேஷ் வசிக்கும் இடம்.
அந்த வீதியே எங்கள் வரஹூர் கிராமம்
போல் நிறைய ஓடு வீடுகள். வாசலில் பல வீடுகளில் கோலம். மலையாள தமிழ்..
ஸ்ரீ. ரமேஷ் (முன்னமே சொன்ன)
என்பவர் எங்களுக்கு எல்லா வசதிகளையும் அழகாக செய்து கொடுத்தார். நாங்கள் பாடிய இடம் ரமேஷ் அவர்கள் தங்கை இருந்த
இடம். தங்கையின் கணவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் பெரிய பொறுப்பில்
இருக்கிறார். இரண்டு குழந்தைகள்.
நாங்கள் தங்கிய இடம் பற்றிச்
சொல்கிறேன்
ப்ரம்ஹஸ்ரீ குருஸவாமி சாஸ்த்ரிகள்
என்பவர் தரங்கம் முழுவதும் அர்த்தம் போட்டு, தரங்க சம்ஸ்க்ருத பதங்களை சரி
பார்த்து, இன்று நாங்கள் வைத்துக் கொண்டிருக்கும் “கிருஷ்ண லீலா தரங்கிணி” என்ற
புஸ்தகம் அவர் போட்டது. நாங்கள் பாடும் பாடல் அவர் போட்ட பிச்சை என்று கூட சொல்லலாம்.
சாஸ்த்ரிகள் அவர்கள்
திருவனந்தபுரத்தில், சம்ஸ்கருத காலேஜ் ல் முனைவராக 4-5 வருடம் இருந்திருக்கிறார். அப்போது
அங்கே தங்கி இருக்கிறார்.
பின்பு தான் தெரிந்தது.
நாங்கள் தங்கி இருந்த வீடு, பிரஹ்மஸ்ரீ குருசுவாமி சாஸ்த்ரிகள் தங்கிய வீடு
என்பது
இது இரண்டாவது ஆச்சர்யம்
நாங்கள் காலையில் ரமேஷ் வீட்டிற்கு சென்றபோது, அவர் மனைவி
முன் ஹாலில் படுத்துக் கொண்டிருந்தார். அவருக்கு இரண்டு நாள் முன்பு “சோடியம்
குறைவு காரணமாக, மூளை தாக்கம் ஏற்பட்டு ஒரு சிறிய ஆபரேஷன் செய்திருக்கிறது.”
என்றார். எங்களுக்கு மனசுக்கு ஸ்ரமமாக இருந்தது.
முன்னே பின்னே தரங்கம் என்ன என்று தெரியாமல், ஒரு தடவை
கேட்டவுடன், தன ஊரில் வைத்துக் கொள்ள நினைத்து, எல்லா வசதிகளும் ஏற்படுத்திய
அவர்கள் வீட்டில் இப்படி ஒரு சோகமா என்று மிகவும் வருந்தி பெருமாளிடம் பிரார்த்தனை
செய்து எங்கள் பஜனையை ஆரம்பித்து விட்டோம்.
அருமையான டிபன், சாப்பாடு, காபி, டீ வேளா வேளைக்கு-
அருமையான உபசரிப்பு – சொல்லியே ஆக வேண்டும்
அடுத்த நாள் காலை ரமேஷ் வீட்டிற்கு, ப்ரேக் பாஸ்ட்
சாப்பிடச்செல்லும் போது அந்த மாமியைக் காணோம். “எங்களுக்கு பயம் வந்து விட்டது”
திருப்பி ஆஸ்பத்திரியில் சேர்த்து இருக்கிறார்களோ” என்று
பார்த்தால் ஜம் என்று புடவை கட்டிக்கொண்டு “வாங்கோ” என்று
அந்த மாமி வர வேற்றாள். மதியம் சாப்பாடு, எல்லாம் எடுத்துக் கொடுத்து
பரிமாறுவதற்கு உதவி செய்தாள்
இது ஆச்சர்யம் மூன்று
பத்மநாப சுவாமி போவதற்கு அவரிடம் அனுமதி கேட்டோம். ஒன்று
அரை நாளில் எல்லா தரங்கங்களும் பாட வேண்டும். கோவிலுக்கும் போக வேண்டும். அங்கு
என்ன கூட்டமோ. என்ன விதி முறைகளோ என்று முழித்துக் கொண்டிருந்தோம்.
ரமேஷ் சொன்னார். கவலையே பாடாதீர்கள். நான் அழைத்துச்
செல்கிறேன் என்றார். பின்புதான் தெரிந்தது. அவர் திருவனத்தபுரம் சமஸ்தான ராணியில் Personal Assistant என்று தெரிந்தது. ராணி
கோவிலுக்கு வரும்போது, எல்லா கூட்டத்தையும் நிறுத்திவிட்டு, ராணியுடன் நாலே பேர் அனுமதிக்கப் படுவார்கள்.
சுவாமியுடன் ஒரு 15 நிமிடம் நின்றுவிட்டு, பிறகு அவரை கார் வரை
கொண்டு விட வேண்டும்.
நாங்கள் கோவிலுக்கு சென்றோம்.
திருப்பதி போல எங்கோ வரிசை நிற்க, ஏதோ ராஜ பாட்டை போல,நேரே சுவாமியிடம் கொண்டு
நிறுத்தி, நிதானமான ஸ்வாமி தரிசனம். என்ன
சொல்ல
எனக்குக் கண்ணில் கண்ணீர். இப்படி
ஒரு அனுபவமா. ???
எது ஆச்சர்யம் நான்கு.
அது மட்டும் இல்லை. ஒரு தடவை
பார்ப்பேனா என்று நினைத்த என்னை இரண்டு நாளும் அருகே இருந்து பார்க்க வைத்தார் –
எங்கள் பெருமாள். இதை என்னவென்று சொல்வது ??
இரவில் 12 மணிக்கு இரயில் வந்து நிற்க, காரில் வந்து எங்களை
அழைத்துக் கொண்டு போனார். உடனே இரவு சூடாக
காபி பால். உபசரிப்பு. வீடு
பக்கத்திலேயே, இருந்தாலும் வந்தார்.
ஒரு மஹாராணியின் உதவியாளர் ஆக ஒரு 30 வருடம் இருக்கிறார் என்றால், நானாக இருந்தால் ஒரு 2 BHK வீடு கட்டி குடியிருப்பேன். ஆனால் ரமேஷ் சாதாரணமான ஓடு வேய்ந்த வீட்டில்
இன்னும் குடி இருக்கிறார். எந்த வித பற்றும் இல்லாமல் எல்லாம் அந்த பத்மனாபஸ்வாமி
தான் என்று சாதாரணமாக...... என்ன சொல்ல ??
இது ஆச்சர்யம் ஐந்து
அவர் தரிசனம் முடிந்து, ஒரு
குருநாதர் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். ஸ்ரீ. ராமகிருஷ்ண ஷர்மா என்று
நினைக்கிறேன். அவர் வீட்டிற்கு சஞ்சீவி பாகவதர் முதல்,
ப்ரேமி அண்ணா, ஸ்ரீ ஜெய கிருஷ்ண தீட்சிதர் வரை பலர் விஜயம்
செய்திருக்கிறார்கள். அவர் வீட்டில்
அருமையான் சுவாமி அலமாரி. தினம் பகவத்
கீதை, ஸ்ரீமத் பாகவத பாராயணம், விஷ்ணு சஹஸ்ரநாமம், அஷ்டபதி பஜனை. தினமும்.
அவர்கள் எங்களைப் பார்த்து, வேஷ்டி
வைத்துக் கொடுத்து நமஸ்காரம் செய்தார்கள் நாங்க அரண்டு போனோம்.. என்ன உபசரிப்பு. ?
இது ஆச்சர்யம் ஆறு
எங்கள் பிரசன்னா பாகவதர்க்கு ரயில்
டிக்கெட் confirm ஆகாமல், பஸ் ல் புக் பண்ண
பிறகு டிக்கெட் confirm ஆனது ஆச்சர்யமே
இல்லை.
எங்கள் ரயில் பிரயாணம் ஒரு தடை இல்லாமல், வண்டி லேட், மழை,
சாப்பாடு போன்ற ஒரு பிரச்னை இல்லாமல் ஒரு கனவு போல நடந்த விழா இது
இரண்டு நாளில் வெய்யில் கொளுத்த இரண்டாவது நாள் ருக்மிணி
கல்யாணம் முடிந்து நாங்கள் இரவு ஒரு 6 மணிக்குக்
கிளம்பும்போது நல்ல மழை. பத்மநாப ஸ்வாமி எங்களை அங்கீக்ரித்ததற்கு அடையாளமாய்.
நாங்கள் பஜனை செய்த வீட்டில் உள்ளவர்கள் உருக்கமாக ஒரு
மெசேஜ் போட்டு இருந்தார்கள். நங்கள்
நெகிழ்ந்து போனோம். இன்று கூட எனக்கு தீபாவளி வாழ்த்துக்கள் அனுப்பி இருக்கிறார்.
இப்படி ஒரு அனுபவம் என் வாழ்க்கையில் ஏற்பட்டது இல்லை.
நாங்கள் ஒரு தேர்ந்த பாடகர்களோ/பாகவதர்களோ இல்லை.
எங்கள் பெருமாள் மீது எங்களுக்கு மிகுந்த பிரேம பக்தி. அவ்வளவுதான்.
2 comments:
Nobody else can write like Ramki.He is an expert not only in Tharangams but also in other kritis of noted saints.His descriptions are so interesting that visualize the scene.I have to learn a lot from him.Aseervadams
All from Blessings of my Parents and GurunAtaals like you.
Post a Comment