இராமாயண காலத்தில் இருந்து இன்று வரைக்கும், இந்த தாடகை வதம், வாலி வதம், விபீஷண சரணாகதி போன்ற சில விஷயங்கள் “சரியா தவறா” என்ற வாதம்
இன்றும் உண்டு.
தமிழ் அறிஞர் சத்யசீலன், புலவர் கீரன் போன்ற பலர், இன்று,
இலங்கை ஜெயராஜ் போன்ற பலரும் சரி, தவறு என்று
போட்டி போட்டுக் கொண்டு பேசுவதைக் கேட்டு பார்த்து இருப்போம். நமக்கே, அட
போங்கப்பா !!! என்று டீ வீயை அணைக்கும் வரை.
இதில் தாடகையை வதம் செய்யலாமா ? அவள் அரக்கியாக
இருந்தாலும் ஒரு பெண் இல்லையா, என்று வக்காலத்து கும்பல் ஒன்று இன்றும் உண்டு.
மாதரையும் தூதரையும் கொல்வது பாவம் என்பது தர்மம்.
தர்மத்தின் வழி நடந்த ராமன் தர்மம் தவறி நடக்கலாமா ? என்று ஒரு கும்பல் கலாய்க்கவேண்டியது.
விச்வாமித்ரரே, தாடகையை போட்டுத் தள்ளி இருக்க
வேண்டியதுதானே, எதுக்கு ராமனைக் கூட்டிக்கொண்டு போனார் ? என்று ஒரு கும்பல் அலப்பறை.
தாடகையை, இவள் அரக்கி, பெண்ணில்லை. பெண்ணிற்கு
உண்டான ஒரு குணமும் இவளிடம் கிடையாது, எனவே கொன்று
விடு ! என்று முனிவர் சொல்லி ராமன்
செய்ததாக நாம் படித்து இருக்கிறோம்
கொஞ்சம் கம்பனிடம் வருமோம்
ஒரு அரக்கி பெண்ணில்லை என்று சொல்ல வரும் கம்பன்
அந்த அரக்கியைப் பற்றி விவரிக்கிறார். - நாம்
கொஞ்சம் கற்பனை செய்வோம். -என்ன சொல்லமுடியும் சார். >
அவள் பற்கள் நீளமாக இருந்தன, பருத்த உடம்பு, கண்ணில் தீப்பொறி, கைகள் அகலம். இத்யாதி இதாயதி. நம்முடைய
கற்பனைக்கு வருவது அவ்வளவுதான்.
படிப்பவர்களுக்கு, தாடகை ஒரு பெண்ணே அல்ல என்ற எண்ணம் வர வேண்டும். அப்போதுதான் ராமன் மேல் பழி
வராது.
கம்பன் கூறுகிறான்
சிலம்புகள் சிலம்பிட செழித்த கழலோடும்:
தாடகை நடந்து வருகிறாள். அவள் காலில் சிலம்பு அணிந்து இருக்கிறாள். அந்த சிலம்பில் பரல்களுக்கு பதில், மலைகளை பிடுங்கி கோத்து இருக்கிறாள். கொஞ்சம் கற்பனை செய்து கொள்ளுங்கள். கொஞ்சம் மேரு மலை, மேற்கு தொடர்ச்சி, கிழக்குத் தொடர்ச்சி, விந்திய அப்படியே கொஞ்சம் நம்ம பரங்கி மலையையும் சேர்ந்து பாருங்கள். !!!! நினைத்துப் பார்க்கும் நமக்கே கொஞ்சம் திகில் ஆகா இருக்கும் .....
நிலம் புக மிதித்தனள்:
அந்தத் தரையை அழுத்த மித்திது நடக்கிறாள். அந்த
தரையில் பள்ளம் விழுகிறது. எவ்வளவு பெரிய பள்ளம் தெரியுமா ?
நெளித்த குழி வேலை சலம்
புக:
அதில் கடல் தண்ணீர் வந்து நிறையுமாம். கடல் ஊருக்கு வருகிறது என்றால் அது எவ்வளவு
பெரிய பள்ளமாக இருக்கவேண்டும். அப்போ அவள் கால்.....
அனல் தறுகண் அந்தகனும்
அஞ்சிப் பிலம் புக
அவள் வரும்போது அனல் கக்கும் கண் உள்ள எமனும்
தெறித்து ஓடி, ஏதோ குகைக்குள் ஒளிந்து கொள்வானாம்.
எமனுக்கு எமள்.....
நிலக்கிரிகள் பின் தொடர வந்தாள்
அவள் கொலுசில் கோத்தது போக மிச்ச மலைகள் எல்லாம்
அவள் பின்னே ஓடி வருமாம்.
எதோ காத்து அடிச்சால் பேப்பர் பறந்து
வருமே. தெலுங்கு பட சண்டையில் வீரர்கள், புவி ஈர்ப்பு விசையை பழிப்பது போல் மேலே பரப்பார்களே.. அது போல.
என்று முடிக்கிறார்
இவள் பெண்ணா. நளினம் எதாவது இருக்கிறதா ? என்று நம்மை தீவிரமாக யோசிக்க வைக்கும் பாடல்
இது.
விச்வாமித்த்ரர் யாகம் செய்வதால், விரதம் மேற்கொண்டு, வதம் செய்யாமல் இருந்தார் என்பதாலும், “இதனை இதனால், இவன் முடிக்கும்” என்று ஆராய்ந்ததினால் ராமன் வந்தான் என்பதாலும், அவருடைய தொலை நோக்குப் பார்வை ராமனைக் கூட்டிக்கொண்டு, சீதையை கல்யாணம் செய்து கொடுப்பதில் மூலம், தம் “அரிச்சந்திரனையும், சந்திரமதியையும் பிரித்த பாபத்திற்க்கு பிராயச்சித்தம் தேட, ராமனை அழைத்துக் கொண்டு போனார், என்பது ராமாயணத்தை நன்கு படித்தவர்க்கு புரியும்.
இதில் இன்னொரு சூக்ஷமமான விஷயம், விஸ்வாமித்ரர், தசரதனிடம், ராமரை மட்டும் கேட்டார். தசரதன், பயந்து, கூடவே லக்ஷ்மணனையும் அனுப்பித்தார். போரில், ராமன் இலக்குவனை சேர்க்கவே இல்லை, தாடகை வதம், மாரீசனை, குற்றுயிரும் குலையிருமாய், கடலில் தள்ளியது, (பின்னணி ராவணன் மரணத்துக்கு உதவியாய் இருப்பான் என்ற ஒரு நல்ல எண்ணம்) எல்லாம் ராமன் ஒருவனே செய்தான்
ஆனால் அதே சமயம் இலக்குவன் வீரத்தை குறைத்து
மதிப்பிட்டுவிடுமே என்று இந்த்ரஜித்துடன் போருக்கு, இலக்குவனை மட்டும்
அனுப்பி வைத்த்தான்.
விராட வதம் போது, இலக்குவனை, சீதையை ரட்சிக்கும்
பொறுப்பை விட்டு விட்டான்.
ராமன் ஒரு அற்புதமான Management
Consultant/Expert
No comments:
Post a Comment