Saturday, 16 September 2017

காயத்ரி மந்த்ரம்- பகுதி -1

இந்த ‘topic” பற்றி எழுதலாமா என்று ரொம்ப நாளாகவே ஒரு எண்ணம்.

எனக்கு தென்கச்சி சுவாமிநாதன் நினைவு வந்தது. அவர் ஒரு சமயம் ரேடியோவில், விவசாயம் பற்றி பேசும்போது, அவரிடம், ஒருவர் கேட்டாராம். “ஏன் சார், விவசாயம் செய்வதை விட்டு விட்டு, பேச வந்துவிட்டீர்களே” என்று. அதற்கு தெ.சு. சொன்னாராம். “விவசாயம் செய்வதை விட, பேசுவது ஈசி” என்று

அதே போல் தான் “காயத்ரியும், செய்வதை விட, சொல்வது ஈஸி.” என்று தமாஷாக சொன்னாலும், என்னைப் பொறுத்தவரை, நான் காயத்ரி மந்தரம், தினமும் ஜபிப்பதால், எனக்கு, இதன் பெருமையைப் பற்றி, என் அனுபவத்தைப் பகிரலாம் என்று.......

எனக்கு கா.ம பற்றி எழுதுவதற்கு உந்து கோலாக இருந்தது Whatsapp 
தான்.

ஆச்சர்யமாக இருக்கிறதா ?
Whatsapp - நம் மக்களிடையே “நீக்க மற” நிறைந்திருக்கின்ற ஒரு விஷயம்.  சீரியல் டிவி களைக் கூட விட்டுவிட்டு whatsapp ல் தஞ்சம் அடைந்து விட்ட குடும்ப ஸ்திரிகளுக்காக- WHATSAPP க்கு ஒரு “ஒ” நிச்சயம் போடலாம்.

Good morning  என்றுu ஆரம்பிப்பதில் இருந்து, சுட சுட புது ரிலீஸ் படத்தின் வீடியோ வரை, (திருட்டு வீடியோ)  மொபைலில், இருக்கும் வரை  whatsappம், மொபைலும் -   “காய் கவர்ந்  தற்று”

இப்போது “மானாவாரிக்கு” GB என்கிற capacity, capacity increase – will make the mobile to download all the movies and view online.

நீங்கள் எப்போதாவது, பல்லவன் எக்ஸ்பிரசில், சென்னையில் இருந்து திருச்சிக்கு ஒரு சனிக்கிழமை சென்றால், அதற்கு முந்தைய நாளான, வெள்ளிக்கிழமை, ரிலீஸ் ஆன எல்லா படத்தையும், மொபைலில், பார்த்துக் கொண்டு செல்லும் மக்களைப் பார்க்கலாம். பக்கத்தில் யார் உட்கார்ந்து இருக்கிறார்கள் என்பது கூடத் தெரியாத ஒரு நிலை.

இதை மாற்றுவது, வேறு ஏதாவது “மாற்று” கொண்டு வருவது என்பதேல்லாம், இயலாத காரியம்.  புரையோடிப் போன ஒரு விஷயம்.

ஸ்ரீமத் பாகவதத்தில் எங்கேயாவது தேடினால், கலி புருஷன் எப்போது பிறக்கிறான் என்றால், உலகில், முக்கியமாக இந்தியாவில் “whatsapp” மோகம் எப்போது, தலை தூக்குகிறதோ. அப்போது என்று ஒரு வாசகம் நிச்சயம் இருக்கும்.

WHATSAPP ம் காயத்ரியும்
இப்போதெல்லாம்  40-45 வயதுக்கு மேல் உள்ள, பிராமண வகுப்பைச் சார்ந்த ஆண்களிடத்தில்/(பெண்களும் கூட) உள்ள “whatsapp” ல்- பக்தி சார்ந்த - இரண்டு விஷயங்கள் அடிக்கடி மாத்தி மாத்தி சொல்லப்படும்.
1)      காயத்ரி மந்த்ரம்
2)      காஞ்சி மஹா பெரியவரின் அற்புதங்கள்

இதில், ஆன்மீக விஷயங்களைப் பற்றி, பல செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.  அதில், முக்கியமாக மேற் சொன்ன இரண்டு விஷயங்கள் அடிக்கடி.  இதில் என்ன [பிரச்னை என்றால், ஒரு whatsapp Group ல் வரும் ஒரு விஷயம், இன்னொரு group ல் திரும்ப வரும்.  
காயத்ரி மந்த்ரம் பற்றி அனுப்புபவர்களோ, அதை forward 
செய்பவர்களோ,  3 category யாகப் பிரிக்கலாம்.
1)   
காயத்ரி ஜபிப்பவர்கள்,
“யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்” என்று அனுப்புபவர்கள்.
2)   
காயத்ரி ஜபிக்காமல், “இதை யாருக்காவது அனுப்புவோம், அவர்களாவது காயத்ரியின் “மகிமை’ புரிந்து, ஜபிக்க ஆரம்பிக்கட்டும்” என்று நினைத்து அனுப்புபவர்கள். அதன் மூலமாவது கொஞ்சம் புண்ணியம் வராதா என்று ஏங்கி அனுப்புபவர்கள்
3)  
ஒரு கும்பல் உண்டு, எதை வேண்டுமானாலும் forward செய்து விடுவார்கள். Good morning உள்பட.

மகா பெரியவாள் மகிமை என்பது “அளப்பரிய சந்தோஷத்தைத் தரும்” ஒரு அனுபவம். ஒரே அனுபவம் பல முறை திருப்பித் திருப்பி வந்தாலும், அது சில சமயம் சலிப்பாகக் கூட இருக்கலாம். தினமும், ஏதாவது ஒரு அனுபவம் வந்து கொண்டே இருப்பது, - நான் இப்போது இதை படிப்பதை நிறுத்தி விட்டேன். எனக்கு என்னமோ, மஹா பெரியவாளை, ஒரு MAGICIAN போல காட்டுகிறார்களோ என்று எனக்கு ஒரு எண்ணம்.

எவ்வளவு பேர் படித்து, உடனே சாமி ரூமில், இருக்கும் மஹா பெரியவருக்கு, ஒரு நமஸ்காரம் செய்கிறார்கள் என்பது தான் கேள்வி ?!!! . அப்படிச் செய்தால், அவர்களுக்கு நான் நமஸ்காரம் செய்கிறேன்.

திரும்பவும் காயத்ரிக்கு வருவோம். என்னைக் கேட்டால், சிறிய வயதில் அனுஷ்டானங்கள் செய்து, காயத்ரி நன்றாக ஜபித்து,  மஹா பெரியவா சொன்னது போல்,  காமம் நுழைவதற்க்கு, முன் காயத்ரியை மனதில் நுழைத்தவர்க்கள் – பெரும் பாக்யசாலிகள். மற்றவர்களெல்லாம் – “தேறாத கேஸ்

நான் துபாயில் இருக்கும்போது, வேத பாடம் சொல்லிக் கொள்ள வரும் (ஸ்ரீ. குப்புசாமி அவர்களிடம் வேத பாடம் கற்ற பல பேரில் நானும் ஒருவன்)  பல பேர், என்னிடம், சந்த்யா வந்தனம் சொல்லிக் கொடுக்கச் சொல்லி சொல்வார்கள். அவர்களுக்கு 40-45 வயது இருக்கும். நான் சொல்லி விடுவேன். வேத பாடம் கற்றுக் கொள்ளுங்கள்., சந்த்யா வந்தனம் வேண்டாம். அடுத்த ஜன்மத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று......

(இவர்களுக்கு நான் கிளாஸ் எடுத்து கேசவா, நாராயணா, மாதவா என்று அங்கன்யாஸம், செய்வதற்குள் எனக்கு தாவு தீர்ந்துவிடும். }

ஸ்ரீ. கணேச சர்மா அவர்களை சமீபத்தில், ஒரு Arkay convention center என்று மயிலாப்பூரில் இருக்கும் ஒரு சபாவில் சந்திக்க் நேர்ந்தது. அவரிடம் நான் காயத்ரி மந்த்ரத்தைப் பற்றி சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தேன். அப்போது, காயத்ரி மந்த்ரம் சொன்னவரே, பிராமணர் இல்லை என்று “விஸ்வமித்ர மகரிஷியை” மேற்கோள் காட்டிச் சொன்னேன்.

அதற்கு அவர் ஆச்சர்யமானஒரு விஷயம் சொன்னார்= “அப்படி இல்லை, அப்படி நாம் முடிவு செய்தோம் என்றால், விச்வாமித்ரருக்கு முன்பு காயத்ரி யாரும் செய்யவில்லை என்று ஆகிவிடும். காயத்ரி ‘காலம் காலமாக, ஜன்மம் ஜென்மமாக வரும் ஒரு மஹா மந்தரம். அதற்கு தோற்றம்/மூலம் கிடையாது. அது தான் நம் மதத்தின் பெருமை.  விஸ்வாமித்ரர், முன்பே இருந்த, காயத்ரியை, ஒரு அக்ஷரம் குறைத்து.  (விதுர்வறேனியம்)
என்று காயத்ரியை “TUNE” பண்ணினார்” என்றார்.

எனக்கு இதுவரை தெரியாத உண்மை இது. எவ்வளவு பெரிய மகான், ஸ்ரீ கணேஷ சர்மா அவர்கள். அவருடைய இந்த ஒரு சித்தாந்தம் எனக்கு ஒரு பிரமிப்பை ஏற்படுத்தியது.

இந்தக் காலத்து குழந்தைகள் அனுஷ்டானம், சந்த்யா வந்தனம் பண்ணுவதில்லை என்ற ஒரு COMPLAINT உண்டு.  அனால், என்னைக் கேட்டால், கராத்தே கிளாஸ் அனுப்புகிறோம், பாட்மிண்டன் கிளாஸ் அனுப்புகிறோம், FOOT BALL, BASKET BALL, SOMETIMES SLOKA CLASS அனுப்புகிறோம்.  லட்ச ரூபாய் செலவு பண்ணி, பூணல் போடுகிறோம்.

காயத்ரி செய்ய வேண்டும் என்ற ஒரு கருத்தை பெற்றோர்கள் வலியுறுத்த வேண்டும்.  10 GAYATHRI பண்ணு. அர்க்கியம் என்ற பேரில் தண்ணியைக் கொட்டு.  என்று நச்சரித்துக்கொண்டு இருக்க வேண்டும். த்ரி கால சந்த்யாவந்தனம் வேண்டாம்.  MORNING பண்ணு போறும்.  WEEK END, COMPULSORY ஆக “மாத்யானியம்” செய்ய வேண்டும்.  WEEKLY ONCE ஸமிதாதானம் செய்ய வேண்டும் – என்று வற்புறுத்த வேண்டும்.  பாட்மிண்டன் கிளாஸ் நிறுத்தி விடுவேன் என்று பயமுறுத்த வேண்டும்....

In short, அவர்களின் மனதில் காயத்ரி சிந்தனயை “குடத்திலிட்ட விளக்காய்” வைத்திருக்க வேண்டும். முதலில் பிள்ளைகள் பெற்றோர்களைத் திட்டுவார்கள். அதை வாங்கிக் கொண்டு, திரும்ப திரும்ப சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்க்க வேண்டும். 
பிள்ளைகளே, வாழ்கை வெறுத்து செய்யத் தொடங்குவார்கள்.  

பெற்றோர்கள் போட்ட அந்த காயத்ரி விதை, வ்ருக்ஷமாக முளைத்து, அவர்களுக்கு, பின்னாளில், அவர்களுக்கும் அவர்களின் சந்ததியினருக்கும் நிழல் கொடுக்கும்.

முக்கியமாக, அப்பா காயத்ரி செய்ய வேண்டும். அப்பா செய்தால், பிள்ளை தானாகவே செய்வான். அப்பா செய்யாமல், பிள்ளை செய்யச் சொல்வதற்கு, அம்மா கடும் முயற்சி எடுக்க வேண்டும். இதுதான், நம் சந்ததிகளுக்கு கொடுக்கும் பெரும் சொத்து என்று நினைத்து செய்ய வேண்டும்.

வர்ணாஸ்ரம தர்மம் என்று சொல்லும் நம் வாழ்க்கையை. அனுஷ்டானம் மூலமாக தான் செம்மைப் படுத்திக் கொள்ள வேண்டும்
சம்ஸ்கருதத்தில்- அம்மா, அப்பா, குருவைப் பற்றிச் சொல்லும்போது, “மாதாமான், பிதாமான் என்று சொல்வார்கள். குருவைப் பற்றிச் சொல்லும்போது, “ஆசார்யாவான்”.  இந்த “மான்” க்கும், “வான்” க்கும் வித்தியாசம் புரிந்து கொள்ள வேண்டும்.  மான் என்பது ஸ்வபாவமாக வருவது. நாம் இதை மாற்ற முடியாது.  நமக்கு விதிக்கப் பட்ட அம்மாதான், அப்பாதான். ஆனால், “வான்” என்பது நாம் தேடித் போக வேண்டியது. நல்ல “மான்” கிடைத்தால், நல்ல “வான்” கிடைப்பார்கள். வான் என்பது GENETIC, RESERVOIR, பிரகிருதி.  பிரக்ருதி வாசனை இல்லாவிட்டால், தேடல் ஏது ? (உபயம்- நொச்சூர்)

குழந்தைக்கு,  இந்தத் தாயின் பால் வழியாக உபதேசம் நடக்கிறது. ஹ்ருதயத்தில் பகவத் ஆராதனம் என்ற தர்மம் இருந்தால், இது நடக்கும்.

அனுஷ்டானம் பண்ண வில்லை என்றால், ‘ஸ்ரார்தம்” செய்தால் கூட “பலன்” இல்லை. அதனால், பெற்றோர்கள், ஒழுங்காக “மேலே போவதற்க்கு” பிள்ளை செய்யும் ஸ்ரார்தம் முக்கியம். பிள்ளை ஸ்ரார்தம் பலன் அளிப்பதற்கு சந்தியா வந்தனம் முக்கியம்.

நொச்சூர் சொல்வார்’  “நம்முடைய குலம், ரிஷகளின் குலம். ரிஷிகளின் GENE நம்மிடம் இருக்கிறது.  இது “அபிவாதயே” சொல்லும்போது அதில் வரும் ரிஷிகளின் பெயர்களில் இருந்து அறிந்து கொள்ளலாம்.  நாம் அபிவாதயே சொல்ல விட்டு விட்டோம் என்றால், நம்முடைய மூதாதயர்களை/ரிஷிகளை மறந்து விட்டோம் என்று அர்த்தம்” என்பார்.
ஆசார பிரபாவோ தர்மா: (விஷ்ணு சஹஸ்ரநாமம்).

12 வருடம் ஒரு தர்மத்தை நாம் PRACTICE பண்ணுகிறோம், என்றால், அந்த பழக்கம், நம் உடலுடன் இரண்டற கலந்துவிடும். INGRAINED IN OUR SYSTEM. பதஞ்சலி, யோக சூத்ரத்தில் சொல்வதும் இது தான்.  அதனால் நல்ல தர்மமான அனுஷ்டானகளை செய்வதன் மூலம், ஒரு சந்ததியையே கரை ஏற்ற முடியும்.

இவ்வளவு சொன்ன பிறகும், நமக்கு அனுஷ்டானத்தின் முக்யத்துவம் புரிய வில்லை என்றால் எவ்வளவு வருத்தப்பட வேண்டிய விஷயம்.


தொடரும்

Thursday, 7 September 2017

மீண்டும் அபிராமி அந்தாதி

இன்று பௌர்ணமி, (5-9-2017) கொஞ்சம் அபிராமி அன்னை நினைவேந்தல்

என்னதான் ஆயிரம் செய்யுள் இருந்தாலும், அம்பாள் மேல் தமிழில், அட்டகாசமான/மனதை வருடக்கூடிய “ஒரு செய்யுள் தொகுப்பு”, அபிராமி அந்தாதி என அடித்துச் சொல்லலாம்.

தமிழில், தேவாரம், திருவாசகம் என்றும், ப்ரபந்தம் என்றும் இருக்க, பெண் தெய்வத்திற்கு என்று தனியாக ஒரு தமிழ் அந்தாதி என்று ஒன்று இருக்கிறது என்பதால் கூடுதல் பெருமை.

அபிராமி பட்டரைப் பற்றி, வாகீச கலாநிதி ஸ்ரீ கி. வா, ஜகன்னாத அய்யர் அவர்கள் சொல்லும் வார்த்தைகள் இது:

உபாசனையில் சிறந்து விளங்கிய அபிராமி பட்டர், சரியை, சிறியை என்னும் இரண்டு சோபானமும் கடந்து யோக நிலையில் யாமளையின் திருக்கோலத்தை ஆதார பீடங்களில் கண்டு கண்டு இடைப்பட்ட கிரந்திகளைத் தாண்டி சென்று, பிரம்மாந்திரத்தில், சஹஸ்ர கமலத்தில், ஒளி மயமாக, எழுந்தருளி இருக்கும் லலிதாம்பிகையின் திருவருள் இன்பத்தில் திளைத்து, பித்தரைப்போல, ஆனந்த அதிசய வெறிமூண்டு உலவினார்”

இதற்கு மேல், அவர் எழுதிய இரண்டு வரிகள் தான் TOP CLASS

இவர் நிலையைப் பார்த்து ஏசுபவர்கள், ஏசுவதை காதில் வாங்காமல் அபிராமி சமயம் நன்றென்று கடை பிடித்து, “உள்ளதே விளைந்த கள்ளால் உண்டான களியிலே” பெருமிதத்தோடு மிதந்து வந்தார்”
கி. வா. ஜ அவர்களின் தமிழின் ஆளுமையைப் பாருங்கள்

என்னைக் கேட்டால், மேற் சொன்ன இந்த வார்த்தைகளின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டாலே, பாதி அபிராமி பட்டராக ஆகி விடலாம்

திருக்கடையூர் செய்த புண்ணியம், மார்கண்டேயருக்கு மோக்ஷம் கொடுத்த இடம் என்பதும், அபிராமி பட்டருக்கு அருளிய இடம் என்பதும் அம்பாள் பிரத்யக்ஷமாக எழுந்தருளி, அருள் பாலித்த இடம் என்பதும் விசேஷம். அம்ருதகடேஸ்வரர் என்று இருக்கும் சிவ பெருமான், சற்று தள்ளி நின்று, தன “உடனுரையை முன்னிலைப் படுத்தி, அருள் பாலிக்கும் இடம். சுவாமி என்னவோ இரண்டாம் பக்ஷம் தான். அபிராமிக்கு முதல் இடம்.  திருமயிலை கற்பகாம்பா கபாலி மாதிரி..

அபிராமி அந்தாதிக்கும் எனக்கும் பல தொடர்பு உண்டு

பழைய நினைவுகளைத் தோண்டிப் பார்க்கும் போது,  ஆதி பராசக்தி என்று ஒரு படம் வந்தது.  அதில் “சொல்லடி அபிராமி” என்று ஒரு பாட்டு, T.M.சௌந்தர ராஜன் அவர்கள் பாடுவார்.  அப்போது
அபிராமி பட்டராக நடித்தவர், ஒரு உரியின் மேல் ஏறி நிற்க, இந்தப் பாடலை, கேதார கௌள ராகத்தில் பாட, அம்பாள் தன்னுடைய தோடை கழற்றி, வானத்தில் எறிய, அமாவாசை, பௌர்ணமியாக மாறும்.

இந்த காட்சி, என் மனதை விட்டு அகலாமல் போனது. 25 வருடம் கழித்து நினைத்துப் பார்த்தாலும், என் பக்தியை உரம் போட்டு வளர்த்த பல நிகழ்சிகளில் இதுவும் ஒன்று. 

கருமண்டபம் என்ற ஒரு இடத்தில், (திருச்சியில்), தேசியக் கல்லுரி அருகே, நாங்கள் வசித்து வந்த (வரும்) இடத்தில, ஒரு கீத்து கொட்டகை சினிமா தியேட்டர். புதிதாக வந்தது. நான் அப்போது +2 படித்துக் கொண்டிருந்த நேரம். முதல் படம் “ஆதி பராசக்தி” போட்டார்கள்.  முதல் டிக்கெட் வாங்கி அந்தப் படைத்திருக்கு போனேன்.  அந்தப் படம் முன்னமே பார்த்திருந்தாலும் கூட, புது தியேட்டர், முதல் படம், முதல் டிக்கெட் என்ற பெருமையைத் தட்டிச் சென்றது

மற்றொரு சமயம், துபாயில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பொது, பால குமாரனின் “என் கண்மணித்தாமரை” என்ற ஒரு  நாவல் , என்னுடைய அருமை நண்பர், சுப்பு என்னிடம் கொடுத்தார். AGATHA CHRITY, LEN DEIGHTON,  போன்ற பல ஆங்கில நாவல்களைப் படித்து ஓய்ந்து போன நேரத்தில், இந்த புத்தகம் கிடைத்தது.  ஏதோ கொடுத்தாரே என்று படிக்க ஆரம்பித்து முடிக்கும்போது, பால குமாரனின் எழுத்தின் மேல் ஒரு பிரமிப்பும், அபிராமி பட்டரின் கதையில் இருந்த ஒரு ஆழமான உண்மையும்/உணர்வும், என்னை திக்கு முக்காடச் செய்தன.  என்னை புரட்டிப் போட்ட புத்தகம் “என் கண்மணித் தாமரை”.  உண்மையைச் சொல்ல வேண்டுமானால், 3-4 நாட்கள் பைத்தியம் பிடித்தார் போல் இருந்தேன்.  கமல ஹாசன் ஒரு படத்தில் “அபிராமி அபிராமி” என்று அலைவாரே- அது போல.

பிறகு நான் குடும்பத்துடன், துபாயில் வசித்து வரும்போது, என் நண்பரி மூலமாக தெரிந்த வீட்டில், அபிராமி அந்தாதி சொல்லிக் கொடுக்கிறார்கள் என்று தெரிய வர, என் மகளை அழைத்துச் சென்று, அபிராமி அந்தாதியை கற்பிக்க வைத்தேன். இன்று என் மகள், அபிராமி அந்தாதியைப் (புத்தகத்தப் பார்க்காமல்), 5-5 அந்தாதிகளாய் வேறு வேறு ராகத்தில் பாடுவாள்.  என் மகளுக்கு நான் கொடுத்த சொத்து இது என்று சொல்வதில் எனக்கு கர்வம் உண்டு.

ஒரு மாதம் முன்பு, என்னுடைய அருமை நண்பர், பிருந்தா மாணிக்கவாசகம் அவர்களின் புதல்வி அருள் ப்ரியா அவர்கள், மயிலாப்பூரில், அபிராமி அந்தாதி முழுவதும் பாட, (அதற்க்கு ஸ்ரீ கணேச சர்மா அவர்கள் முன்னுரை வழங்கினார்), அதற்கு, என் மகள் PRAYER 
பாடினாள். 

புலவர் கீரன் தன்னுடைய சொற்பொழிவில், அபிராமி அந்தாதியப் பற்றி சொல்லாமல் இருக்க மாட்டார். அதில் சொல்லுவார் “அடியவர்களோடு கூடி ஒரு வாழ்க்கை வாழ்ந்தால்தான், நம் வாழ்கை செம்மையாக இருக்கும் என்பதை, “நல்லோர் இணக்கம்”  என்று கூறி, அபிராமி 
அந்தாதியில் இருந்து ஒரு அந்தாதியைக் குறிப்பிடுவார்>


சென்னியது உன் பொற்றிருவடித் தாமரை- சிந்தையுள்ளே
மன்னியது உன் திருமந்திரம்-சிந்துர வண்ணப்பெண்ணே
முன்னிய நின் அடியாருடன் கூடி, முறை முறையே
பன்னிய தென்று முன்றன் பரம ஆகம பத்ததியே
இதற்கு அர்த்தம் தேவை இல்லை

இன்னொரு அந்தாதி
சொல்லும் பொருளும் என நடமாடும் துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடியே ! நின் புது மலர்த்தாள்
அல்லும் பகலும் தொழும் அவர்க்கே அழியா அரசும்
சொல்லும் தவ நெறியும் சிவலோகமும் சித்திக்குமே

இதற்க்கு அர்த்தம் அவசியமே இல்லை. மிகவும் எளிமையான தமிழில், ஆழமான அர்த்தத்துடன் அமைந்த வரிகள்.  புத்தம் புது மலர் போல் இருக்கும் உன் திருவடிகளை பற்றுவோர்க்கு......மேலே உள்ள அந்தாதியில் இருக்கும் கடைசி வரியைப் பார்க்கவும்.

இந்த அந்தாதி, காளிதாசனின் மிகப் பிரபலமான “வாகர்தாவிவ” என்ற சம்ஸ்கருத ஸ்லோகத்தின் தமிழாக்கமாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
காளிதாசனின், சம்ஸ்க்ருத ஆளுமை, அபிராமி பட்டரின் தமிழ் ஆளுமை – இரண்டுக்கும் எடுத்துக்காட்டாக, இன்னொன்று-

உடையாளை
ஒல்கு செம்பட்டுடையாளை
ஒளிர் மதிசெஞ்சடையாளை
வஞ்சகர் நெஞ்சடையாளை
தயங்கு நுண்ணூல் இடையாளை
எங்கள் பெம்மான் இடையாளை
இங்கு என்னை இனிப் படையாளை
உங்களையும் படையா வண்ணம் பார்த்திருமே
என்ன அட்டகாசமான அந்தாதி. அமுதினைப் பொழியும் தமிழ்.

நேற்று, ஆஸ்திக  சமாஜத்தில் (5-9-2017) (ஆழ்வார்பேட்டை), ஸ்ரீ சுந்தர குமார் அவர்களின், சௌந்தர்ய லஹரி உபன்யாசம் கேட்கும் பாக்கியம் கிடைத்தது. அதில், அவர் காளிதாசனைப் பற்றிச் சொல்லும்போது,

“சியாமளா தண்டகத்தில், முதல் செய்யுளாக இருக்கும்
மாணிக்க வீணாம் என்று தொடங்கும் செய்யுளில், முழுவதும், “மா” வில் இருக்கும்.  அவர் மாதங்கி என்ற ஒரு வார்த்தையை முதலில் தேர்ந்து எடுத்து,.அதற்கு ஈடாக, ம வில் தொடங்கும் மற்ற வார்த்தைகளை தொகுத்துக் கொடுத்தார்”

மாணிக்க வீணாம் உபலாலயந்திம்
மதாலஸாம் மஞ்சுளா வாக் விலாசாம்
மாஹேந்திர நீலத்யுதி கோமளாங்கிம்
மாதங்க கன்யாம்
மனஸா ஸ்மராமி
காளிதாசன், பட்டர் – இருவருமே ASTHIKA’S DELIGHT என்று சொல்லலாம்.

கடைசியாக, எனக்கு மிகவும் பிடித்த அந்தாதி

நாயகி, நான்முகி, நாராயணி, கை நளின பஞ்ச சாயகி
சாம்பவி, சங்கரி, சாமளை, சாதி நச்சு வாய்ஆகி மாலினி, வாராகி, சூலினி, மாதங்கிஎன்று ஆய கியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே

இதன் விளக்கம் “இலக்கிய பீடம்” என்ற இதழில் திருமதி தேவகி முத்தையா (august 2006 edition) அவர்கள் ஒரு விளக்கம் கொடுத்திருந்தார். அதை என் நண்பர், பசுபதி அவர்கள், அவரின் “blog” ல் வெளியிட்டு இருந்தார்

“அகில உலகத்திற்கும் நாயகி ஆனவளே
நான்கு முகங்கள் உடையவளே
நாரத்தில் (தண்ணீர்) இருப்பிடம் கொண்ட நாராயணின் சஹோதரியாக, விஷ்ணு துர்கையாக இருப்பவளே, சம்புவின் சக்தியான சாம்பவியே, எப்பொழுதும் மங்களத்தைச் செய்வதால், சங்கரி என்னும் பெயரை உடையவளே. கருமை நிறம் பொருந்திய சியாமளா தேவியே, நச்சினை வாயில் கொண்ட நல்ல பாம்பை மாலையாகக் கொண்டவளே. பன்றி முகத்தைக் கொண்டு, வாராகி என்னும் சக்தியாக இருப்பவளே, சூலத்தைக் கரத்தில் கொண்ட சூலியே. யாழ்ப்பாணர்கள் எனும் இசை வாணர்கள் குலத்தில், மதங்க மாமுனியின் திருமகளாக உதித்த மாதங்கியே

கொஞ்சம் மூச்சு விட்டுக்கொள்வோம்:....ஸ்ஸ் அப்பாடா....

இவ்வாறு பல் வேறு வடிவங்களில் ஒளி வீசி, ஏக சக்தியாக திகழும் அத்தகைய புகழினை உடைய உனது திருவடிகள் எம்போன்ற அடியார்க்கு அரணாக அமையும், எந்நேரமும் காத்து நிற்கும்.

இதே அந்தாதியை, ஸ்ரீ. கி.வா.ஜா எப்படி கையாள்கிறார் என்று பார்ப்போம்.

அம்பிகையே, ப்ரம்மாவிடத்தும், திருமாலிடத்தும் இருந்து, ஸ்ருஷ்டி, ஸ்திதி ஆகிய தொழிலை நடத்துகிறார். ஆதலால், நான்முகி என்றும், நாராயணி என்றும் கூறினர்.

பிரம்ம சக்தியை “பிரம்மி” என்றும், விஷ்ணு சக்தியை, “வைஷ்ணவி” என்றும் கூறுவார்.

நான்முகி- காகினிஎன்னும் அம்பிகையின் மூர்த்திர எனலுமாம். 
ஸ்வாதிஷ்டானத்தில், 6 இதழ் தாமரையில் காகினி என்றும் திருநாமத்துடன் பொன்னிறம் பூண்டு நான்கு முகங்களோடு அம்பிகை வீற்றிருப்பதாக கூறுவார் யோகா நூலார். 

லலிதா சஹாஸ்ரனமத்தில்- வரும் சதுர் வக்த்ர மனோஹரா.. மேற்சொன்ன விளக்கத்திற்கு ஏற்றார் போல் இருக்கும்.

வாராகி- பராசக்தி வராகனந்தநாதர் என்பவருக்கு, வராஹத் திருமுகத்துடன் தரிசனம் தந்தமையால், வாராகி என்னும் பெயர் பெற்றார்.

இவர் 79 வது பாடலான “விழிக்கே அருளுண்டு” பாடலைப் பாடும்போது, அம்பாள் நேரே வந்து தன்னுடைய “தோடை” கழட்டி வானத்தில் எறிந்ததாகவும்,  அதன் பிறகு வரும் பாடல் எல்லாம், அபிராமியைப் பார்த்துக்கொண்டு பாடினார் என்று சொல்லி,


என் நினைவேந்தலை முடித்துக் கொள்கிறேன்