Saturday 16 September 2017

காயத்ரி மந்த்ரம்- பகுதி -1

இந்த ‘topic” பற்றி எழுதலாமா என்று ரொம்ப நாளாகவே ஒரு எண்ணம்.

எனக்கு தென்கச்சி சுவாமிநாதன் நினைவு வந்தது. அவர் ஒரு சமயம் ரேடியோவில், விவசாயம் பற்றி பேசும்போது, அவரிடம், ஒருவர் கேட்டாராம். “ஏன் சார், விவசாயம் செய்வதை விட்டு விட்டு, பேச வந்துவிட்டீர்களே” என்று. அதற்கு தெ.சு. சொன்னாராம். “விவசாயம் செய்வதை விட, பேசுவது ஈசி” என்று

அதே போல் தான் “காயத்ரியும், செய்வதை விட, சொல்வது ஈஸி.” என்று தமாஷாக சொன்னாலும், என்னைப் பொறுத்தவரை, நான் காயத்ரி மந்தரம், தினமும் ஜபிப்பதால், எனக்கு, இதன் பெருமையைப் பற்றி, என் அனுபவத்தைப் பகிரலாம் என்று.......

எனக்கு கா.ம பற்றி எழுதுவதற்கு உந்து கோலாக இருந்தது Whatsapp 
தான்.

ஆச்சர்யமாக இருக்கிறதா ?
Whatsapp - நம் மக்களிடையே “நீக்க மற” நிறைந்திருக்கின்ற ஒரு விஷயம்.  சீரியல் டிவி களைக் கூட விட்டுவிட்டு whatsapp ல் தஞ்சம் அடைந்து விட்ட குடும்ப ஸ்திரிகளுக்காக- WHATSAPP க்கு ஒரு “ஒ” நிச்சயம் போடலாம்.

Good morning  என்றுu ஆரம்பிப்பதில் இருந்து, சுட சுட புது ரிலீஸ் படத்தின் வீடியோ வரை, (திருட்டு வீடியோ)  மொபைலில், இருக்கும் வரை  whatsappம், மொபைலும் -   “காய் கவர்ந்  தற்று”

இப்போது “மானாவாரிக்கு” GB என்கிற capacity, capacity increase – will make the mobile to download all the movies and view online.

நீங்கள் எப்போதாவது, பல்லவன் எக்ஸ்பிரசில், சென்னையில் இருந்து திருச்சிக்கு ஒரு சனிக்கிழமை சென்றால், அதற்கு முந்தைய நாளான, வெள்ளிக்கிழமை, ரிலீஸ் ஆன எல்லா படத்தையும், மொபைலில், பார்த்துக் கொண்டு செல்லும் மக்களைப் பார்க்கலாம். பக்கத்தில் யார் உட்கார்ந்து இருக்கிறார்கள் என்பது கூடத் தெரியாத ஒரு நிலை.

இதை மாற்றுவது, வேறு ஏதாவது “மாற்று” கொண்டு வருவது என்பதேல்லாம், இயலாத காரியம்.  புரையோடிப் போன ஒரு விஷயம்.

ஸ்ரீமத் பாகவதத்தில் எங்கேயாவது தேடினால், கலி புருஷன் எப்போது பிறக்கிறான் என்றால், உலகில், முக்கியமாக இந்தியாவில் “whatsapp” மோகம் எப்போது, தலை தூக்குகிறதோ. அப்போது என்று ஒரு வாசகம் நிச்சயம் இருக்கும்.

WHATSAPP ம் காயத்ரியும்
இப்போதெல்லாம்  40-45 வயதுக்கு மேல் உள்ள, பிராமண வகுப்பைச் சார்ந்த ஆண்களிடத்தில்/(பெண்களும் கூட) உள்ள “whatsapp” ல்- பக்தி சார்ந்த - இரண்டு விஷயங்கள் அடிக்கடி மாத்தி மாத்தி சொல்லப்படும்.
1)      காயத்ரி மந்த்ரம்
2)      காஞ்சி மஹா பெரியவரின் அற்புதங்கள்

இதில், ஆன்மீக விஷயங்களைப் பற்றி, பல செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.  அதில், முக்கியமாக மேற் சொன்ன இரண்டு விஷயங்கள் அடிக்கடி.  இதில் என்ன [பிரச்னை என்றால், ஒரு whatsapp Group ல் வரும் ஒரு விஷயம், இன்னொரு group ல் திரும்ப வரும்.  
காயத்ரி மந்த்ரம் பற்றி அனுப்புபவர்களோ, அதை forward 
செய்பவர்களோ,  3 category யாகப் பிரிக்கலாம்.
1)   
காயத்ரி ஜபிப்பவர்கள்,
“யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்” என்று அனுப்புபவர்கள்.
2)   
காயத்ரி ஜபிக்காமல், “இதை யாருக்காவது அனுப்புவோம், அவர்களாவது காயத்ரியின் “மகிமை’ புரிந்து, ஜபிக்க ஆரம்பிக்கட்டும்” என்று நினைத்து அனுப்புபவர்கள். அதன் மூலமாவது கொஞ்சம் புண்ணியம் வராதா என்று ஏங்கி அனுப்புபவர்கள்
3)  
ஒரு கும்பல் உண்டு, எதை வேண்டுமானாலும் forward செய்து விடுவார்கள். Good morning உள்பட.

மகா பெரியவாள் மகிமை என்பது “அளப்பரிய சந்தோஷத்தைத் தரும்” ஒரு அனுபவம். ஒரே அனுபவம் பல முறை திருப்பித் திருப்பி வந்தாலும், அது சில சமயம் சலிப்பாகக் கூட இருக்கலாம். தினமும், ஏதாவது ஒரு அனுபவம் வந்து கொண்டே இருப்பது, - நான் இப்போது இதை படிப்பதை நிறுத்தி விட்டேன். எனக்கு என்னமோ, மஹா பெரியவாளை, ஒரு MAGICIAN போல காட்டுகிறார்களோ என்று எனக்கு ஒரு எண்ணம்.

எவ்வளவு பேர் படித்து, உடனே சாமி ரூமில், இருக்கும் மஹா பெரியவருக்கு, ஒரு நமஸ்காரம் செய்கிறார்கள் என்பது தான் கேள்வி ?!!! . அப்படிச் செய்தால், அவர்களுக்கு நான் நமஸ்காரம் செய்கிறேன்.

திரும்பவும் காயத்ரிக்கு வருவோம். என்னைக் கேட்டால், சிறிய வயதில் அனுஷ்டானங்கள் செய்து, காயத்ரி நன்றாக ஜபித்து,  மஹா பெரியவா சொன்னது போல்,  காமம் நுழைவதற்க்கு, முன் காயத்ரியை மனதில் நுழைத்தவர்க்கள் – பெரும் பாக்யசாலிகள். மற்றவர்களெல்லாம் – “தேறாத கேஸ்

நான் துபாயில் இருக்கும்போது, வேத பாடம் சொல்லிக் கொள்ள வரும் (ஸ்ரீ. குப்புசாமி அவர்களிடம் வேத பாடம் கற்ற பல பேரில் நானும் ஒருவன்)  பல பேர், என்னிடம், சந்த்யா வந்தனம் சொல்லிக் கொடுக்கச் சொல்லி சொல்வார்கள். அவர்களுக்கு 40-45 வயது இருக்கும். நான் சொல்லி விடுவேன். வேத பாடம் கற்றுக் கொள்ளுங்கள்., சந்த்யா வந்தனம் வேண்டாம். அடுத்த ஜன்மத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று......

(இவர்களுக்கு நான் கிளாஸ் எடுத்து கேசவா, நாராயணா, மாதவா என்று அங்கன்யாஸம், செய்வதற்குள் எனக்கு தாவு தீர்ந்துவிடும். }

ஸ்ரீ. கணேச சர்மா அவர்களை சமீபத்தில், ஒரு Arkay convention center என்று மயிலாப்பூரில் இருக்கும் ஒரு சபாவில் சந்திக்க் நேர்ந்தது. அவரிடம் நான் காயத்ரி மந்த்ரத்தைப் பற்றி சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தேன். அப்போது, காயத்ரி மந்த்ரம் சொன்னவரே, பிராமணர் இல்லை என்று “விஸ்வமித்ர மகரிஷியை” மேற்கோள் காட்டிச் சொன்னேன்.

அதற்கு அவர் ஆச்சர்யமானஒரு விஷயம் சொன்னார்= “அப்படி இல்லை, அப்படி நாம் முடிவு செய்தோம் என்றால், விச்வாமித்ரருக்கு முன்பு காயத்ரி யாரும் செய்யவில்லை என்று ஆகிவிடும். காயத்ரி ‘காலம் காலமாக, ஜன்மம் ஜென்மமாக வரும் ஒரு மஹா மந்தரம். அதற்கு தோற்றம்/மூலம் கிடையாது. அது தான் நம் மதத்தின் பெருமை.  விஸ்வாமித்ரர், முன்பே இருந்த, காயத்ரியை, ஒரு அக்ஷரம் குறைத்து.  (விதுர்வறேனியம்)
என்று காயத்ரியை “TUNE” பண்ணினார்” என்றார்.

எனக்கு இதுவரை தெரியாத உண்மை இது. எவ்வளவு பெரிய மகான், ஸ்ரீ கணேஷ சர்மா அவர்கள். அவருடைய இந்த ஒரு சித்தாந்தம் எனக்கு ஒரு பிரமிப்பை ஏற்படுத்தியது.

இந்தக் காலத்து குழந்தைகள் அனுஷ்டானம், சந்த்யா வந்தனம் பண்ணுவதில்லை என்ற ஒரு COMPLAINT உண்டு.  அனால், என்னைக் கேட்டால், கராத்தே கிளாஸ் அனுப்புகிறோம், பாட்மிண்டன் கிளாஸ் அனுப்புகிறோம், FOOT BALL, BASKET BALL, SOMETIMES SLOKA CLASS அனுப்புகிறோம்.  லட்ச ரூபாய் செலவு பண்ணி, பூணல் போடுகிறோம்.

காயத்ரி செய்ய வேண்டும் என்ற ஒரு கருத்தை பெற்றோர்கள் வலியுறுத்த வேண்டும்.  10 GAYATHRI பண்ணு. அர்க்கியம் என்ற பேரில் தண்ணியைக் கொட்டு.  என்று நச்சரித்துக்கொண்டு இருக்க வேண்டும். த்ரி கால சந்த்யாவந்தனம் வேண்டாம்.  MORNING பண்ணு போறும்.  WEEK END, COMPULSORY ஆக “மாத்யானியம்” செய்ய வேண்டும்.  WEEKLY ONCE ஸமிதாதானம் செய்ய வேண்டும் – என்று வற்புறுத்த வேண்டும்.  பாட்மிண்டன் கிளாஸ் நிறுத்தி விடுவேன் என்று பயமுறுத்த வேண்டும்....

In short, அவர்களின் மனதில் காயத்ரி சிந்தனயை “குடத்திலிட்ட விளக்காய்” வைத்திருக்க வேண்டும். முதலில் பிள்ளைகள் பெற்றோர்களைத் திட்டுவார்கள். அதை வாங்கிக் கொண்டு, திரும்ப திரும்ப சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்க்க வேண்டும். 
பிள்ளைகளே, வாழ்கை வெறுத்து செய்யத் தொடங்குவார்கள்.  

பெற்றோர்கள் போட்ட அந்த காயத்ரி விதை, வ்ருக்ஷமாக முளைத்து, அவர்களுக்கு, பின்னாளில், அவர்களுக்கும் அவர்களின் சந்ததியினருக்கும் நிழல் கொடுக்கும்.

முக்கியமாக, அப்பா காயத்ரி செய்ய வேண்டும். அப்பா செய்தால், பிள்ளை தானாகவே செய்வான். அப்பா செய்யாமல், பிள்ளை செய்யச் சொல்வதற்கு, அம்மா கடும் முயற்சி எடுக்க வேண்டும். இதுதான், நம் சந்ததிகளுக்கு கொடுக்கும் பெரும் சொத்து என்று நினைத்து செய்ய வேண்டும்.

வர்ணாஸ்ரம தர்மம் என்று சொல்லும் நம் வாழ்க்கையை. அனுஷ்டானம் மூலமாக தான் செம்மைப் படுத்திக் கொள்ள வேண்டும்
சம்ஸ்கருதத்தில்- அம்மா, அப்பா, குருவைப் பற்றிச் சொல்லும்போது, “மாதாமான், பிதாமான் என்று சொல்வார்கள். குருவைப் பற்றிச் சொல்லும்போது, “ஆசார்யாவான்”.  இந்த “மான்” க்கும், “வான்” க்கும் வித்தியாசம் புரிந்து கொள்ள வேண்டும்.  மான் என்பது ஸ்வபாவமாக வருவது. நாம் இதை மாற்ற முடியாது.  நமக்கு விதிக்கப் பட்ட அம்மாதான், அப்பாதான். ஆனால், “வான்” என்பது நாம் தேடித் போக வேண்டியது. நல்ல “மான்” கிடைத்தால், நல்ல “வான்” கிடைப்பார்கள். வான் என்பது GENETIC, RESERVOIR, பிரகிருதி.  பிரக்ருதி வாசனை இல்லாவிட்டால், தேடல் ஏது ? (உபயம்- நொச்சூர்)

குழந்தைக்கு,  இந்தத் தாயின் பால் வழியாக உபதேசம் நடக்கிறது. ஹ்ருதயத்தில் பகவத் ஆராதனம் என்ற தர்மம் இருந்தால், இது நடக்கும்.

அனுஷ்டானம் பண்ண வில்லை என்றால், ‘ஸ்ரார்தம்” செய்தால் கூட “பலன்” இல்லை. அதனால், பெற்றோர்கள், ஒழுங்காக “மேலே போவதற்க்கு” பிள்ளை செய்யும் ஸ்ரார்தம் முக்கியம். பிள்ளை ஸ்ரார்தம் பலன் அளிப்பதற்கு சந்தியா வந்தனம் முக்கியம்.

நொச்சூர் சொல்வார்’  “நம்முடைய குலம், ரிஷகளின் குலம். ரிஷிகளின் GENE நம்மிடம் இருக்கிறது.  இது “அபிவாதயே” சொல்லும்போது அதில் வரும் ரிஷிகளின் பெயர்களில் இருந்து அறிந்து கொள்ளலாம்.  நாம் அபிவாதயே சொல்ல விட்டு விட்டோம் என்றால், நம்முடைய மூதாதயர்களை/ரிஷிகளை மறந்து விட்டோம் என்று அர்த்தம்” என்பார்.
ஆசார பிரபாவோ தர்மா: (விஷ்ணு சஹஸ்ரநாமம்).

12 வருடம் ஒரு தர்மத்தை நாம் PRACTICE பண்ணுகிறோம், என்றால், அந்த பழக்கம், நம் உடலுடன் இரண்டற கலந்துவிடும். INGRAINED IN OUR SYSTEM. பதஞ்சலி, யோக சூத்ரத்தில் சொல்வதும் இது தான்.  அதனால் நல்ல தர்மமான அனுஷ்டானகளை செய்வதன் மூலம், ஒரு சந்ததியையே கரை ஏற்ற முடியும்.

இவ்வளவு சொன்ன பிறகும், நமக்கு அனுஷ்டானத்தின் முக்யத்துவம் புரிய வில்லை என்றால் எவ்வளவு வருத்தப்பட வேண்டிய விஷயம்.


தொடரும்

No comments: