இப்போதெல்லாம் கோவிலுக்குப் போனால், நாம் உதட்டை தொட்டு ஏதோ செய்கிறோம். அல்லாது, நெஞ்சில் கையை வைத்து ஏதோ பேசுகிறோம். அல்லது குனிந்து தரையை தொட்டு விட்டு போகிறோம்.
இப்போது புது பேஷன், செருப்பைக்
கூட அவுக்காம, கோபுர வாசலில் இருந்து ஒரு “பறக்கும் முத்தம்” கொடுத்து விட்டுப்
போகிறோம். !!!!!
நம் முன்னோர்களை நினைத்துப்
பார்க்க வேண்டும். நம்மை விட அவர்களுக்கு, பணம் கம்மி, வசதிகள் கம்மி, அடுத்த வேளை
சாப்பாடு கேள்விக் குறி, பொழுது விடிஞ்சா, அஸ்தமிச்ச்ச்சா கவலை. ஆனால் அவர்கள்
கோவிலுக்குப் போவார்கள். ஏதோ முடிந்த அன்ன தானம் செய்வார்கள். கோவிலுக்குப் போனாலோ, வீட்டில் பெரியவர்களுக்கோ, நமஸ்காரம்
பண்ணும்போது, “நெடுஞ்சாண்கிடையாக” விழுந்து நமஸ்காரம் செய்வார்கள். தம் உடல் முழுதும் தரையில் படும்படியாக.
மஹா பெரியவா சொல்லும் போது, “தண்டம்”
சமர்பிப்பது என்று சொல்லுவார். தண்டம் என்றால் “கோல்” கையில் வைத்திருக்கும் கம்பு
போன்றது. அதை விட்டால்
எப்படி கீழே விழுமோ அப்படி விழ வேண்டும்
ஏன் எப்படி ?
முதலில் ஏன் கோவிலுக்குப்
போகவேண்டும் ? இது நிறைய பேருக்குத்
தெரிவதில்லை. ஏதோ நெய் விளக்கு போடவேண்டும். வெள்ளிக்கிழமை அம்பாள், சனிக்கிழமை
பெருமாள். நவஹ்ரகத்தைச் சுற்ற வேண்டும். ....இத்யாதி.
அது அல்ல காரணம். நம் எல்லா அவயவங்களும் சந்தோஷமாக இருப்பது கோவிலில் தான். உதாரணம்.
கோவிலுக்குப் போய் அம்பாள்
அலங்காரத்தைப் பார்க்கிறோம். ஆஹா. தக தக என்று புடவை என்ன ? நகைகள் என்ன ?
ஜொலிக்கிறாள். பாதங்கள் எவ்வளவு அழகாக இருக்கின்றன ? கண்ணுக்கு அழகு. அபிஷேகம் நடக்கிறது சிவனுக்கு. ஆஹா என்ன அழகு என்று
மெய் மறந்து போகிறோம்
பக்கத்தில் ஒருவர்.
தேவாரமோ, ஒரு பாட்டோ பாடுகிறார். காதுக்கு இனிமை
நாம் “நமச்சிவாய வாழ்க, சுவாமி சரணம்” என்று ஸ்லோகம் சொல்கிறோம், நாக்குக்கு இனிமை.
கையெடுத்துக் கும்பிடுகிறோம்.
கைக்கு இனிமையாக இருக்கிறது.
பிரகாரத்தில் நடக்கிறோம். காலுக்கு
இனிமையாக இருக்கிறது.
கடைசியில் கொடி மரத்தில் நமஸ்காரம்
செய்கிறோம். முழு உடலுக்கு இனிமையாக இருக்கிறது.
இந்த நமஸ்காரம் செய்யும்போது, முழு
அவயமும் தரையில். ஏன் கொடி மரத்தில் ?
அந்த கொடி மரம், ;பல அதிர்வலைகளை
ஏற்படுத்தும், “ஆன்மீக ஆண்டென்னா....”.
நாம் நமஸ்காரம் செய்யும்போது, அந்த அலைகள் நம் உடல் முழுதும்
பாய்கிறது.
அது மட்டுமல்ல ? எத்தனை
பெரியவர்கள், மூதாதையர்கள், யோகிகள் இந்தக் கோவிலில் சுற்றி இருக்கிறார்கள்.
தரிசனம் கொடுத்து இருக்கிறார்கள். அவர்கள் நடந்த, நமஸ்காரம் செய்த இடந்தில் நாம்
இருக்கிறோம் என்ற ஒரு நினைப்பே, நமக்கு உணர்ச்சி பூர்வமான தருணம்.
இதை நம் குழந்தைகளுக்கும் சொல்லிக்
கொடுத்தால், அடுத்த தலைமுறை பக்தியால் காப்பாற்றப்படுகிறது.
இப்படி நம் உடல் முழுவதும் சந்தோஷமாக
இருக்கும் வேறு ஒரு இடம் சொல்லுங்கள் பார்ப்போம் ?
No comments:
Post a Comment