நான் போன 28.1.2026 அன்று சேலத்தில் நடந்த ஒரு
திருமணத்திற்குச் சென்று இருந்தேன். என்
மனைவி உறவினர் என்பதால் சென்று தீர வேண்டும் என்ற கட்டாயம்.
மணமகன்.
சிரஞ்சீவி ராம்ப்ரகாஷ் சுந்தரம்
மணமகள்:
சௌபாக்யவதி நித்யஸ்ரீ ஐயப்பன்
நான் திருச்சியில் இருந்து பஸ்ஸில் புறப்பட்டு போய் சேருவதற்குள்
Reception முடிந்து mic ஐ வைத்துக்கொண்டு மாப்பிள்ளை உட்பட
ஆளாளுக்கு பாடிக் கொண்டு இருந்தார்கள். வயதானவர்கள் கூட, “காதலின் தீபம் ஒன்று” என்று பாடிக் கொண்டு இருந்தார்கள்
எனக்கு எல்லாரும் பழக்கம் என்பதால் அரட்டைக்கு பஞ்சம் இல்லை....
அழகாக மண்டபம் பக்கத்தில் ரூம் arrange பண்ணி இருந்தார்கள். வழக்கமான
அரட்டை session முடிந்து ரூமுக்குச்
சென்றுவிட்டேன்.
எனக்கு ராம் பிரகாஷ் ஐ பற்றி அவ்வளவாகத் தெரியாது.
நல்ல படிப்பு படித்து பெங்களூர் ல் வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறார். அந்த மணப்
பெண்ணும் பெங்களூரில் வேலை பார்க்கிறார்கள் என்பது தெரிய வந்தது. எனக்கு உறவுகள்
பெயரை நினைவு வைத்துக் கொள்ளும் அளவுக்கு சக்தி இல்லை, என்பதால் இந்த info போதும் .....
மணமகனின் பெற்றோர்கள், ரொம்ப சாதரணமாக எந்த வித பந்தாவும் இல்லாமல், மிகுந்த பக்தி ஸ்ரத்தையுடன் இந்த கல்யாணத்தை நடத்தினார்கள். மஹா பெரியவாளிடம் அதி அந்த்யந்த பிரேமை உள்ளவர்கள்.
அடுத்த
நாள் காலை, நான் அனுஷ்டானம் செய்வதற்கு சுமார் 6 மணிக்கு கல்யாண
மேடையில் உட்கார்ந்து கொண்டு இருந்த நான் மணமகன் ரூமை எட்டிப் பார்க்க....
அந்த மணமகன் ஸந்த்யாவந்தனம் செய்து கொண்டு இருந்தான்.
முதல் நாள் தாடி வைத்துக் கொண்டு மைக்கில் பாடிக்கொண்டிருந்த மாப்பிள்ளை, மழுங்க
ஷேவ் செய்து கொண்டு பட்டை பட்டையாக வீபூதி இட்டுக் கொண்டு உட்கார்ந்து கொண்டு
இருந்தான்.
ஆற்காடு சம்ப்ரதயமாம், ஊஞ்சல் முடிந்து, மணப்பெண்ணின் கையை,
மாமியாரும், மணமகனின் கையை அந்த மாமியாரும் பிடித்துக் கொண்டு வந்தது, திடீரென்று
மேடையில் தேங்காயை உருட்டியது எல்லா சம்பிரதாயங்களும் எனக்குப் புதிது. தாலி
கட்டும்போது “மாங்கல்யம் தந்துனா...” சொன்னதாகக் கூட எனக்கு நினைவில்லை
அழகாக கல்யாணம், ஊஞ்சல், சப்தபதி என்று போய் கொண்டு
இருந்தது. அந்தப் பெண்ணின் பெற்றோர்கள், சாதாரணமான ஒரு குடும்பம் என்று தெரிந்தது.
அந்தப் பெண்ணிற்கு ஒரு சகோதரன் திருமணம் ஆகி, கட்டு குடுமி வைத்துக்கொண்டு இங்கும்
அங்கும் அலைந்து கொண்டு இருந்தான். அவனை கூப்பிட்டு விசாரித்ததில்,
அவன் Mechanical Engineer, போரூரில் இருக்கிரார்கள். வேத பாடசாலையில் முழு அத்யயனம் செய்து, வேலை பார்த்துக்கொண்டு, பால பெரியவா மேற் பார்வையில், ராஜ
கீழ்பாக்கத்தில் சுற்றி பாட சாலைகளை மேற் பார்வை
செய்து கொண்டு இருக்கிறார் என்பதும் தெரிந்தது, அந்தப் பையனின் குருவும் அங்கு
வந்திருந்தார். அவருடனும் பேசும் பாக்கியம் கிடைத்தது. “பால பெரியவா” தான் ஏன் கதி என்று சொன்ன அந்த
பையனை நிமிர்ந்து பார்த்தேன்.
தாலி கட்டும் நேரம் வந்தது. அந்தப் பெண் தன்
தந்தையின் மடியில் உட்கார, மணமகன் தாலியை எல்லோருக்கும் காண்பித்து, தாலி
காட்டினான்.
இங்குதான் எனக்கு, ஆச்சர்யமான அனுபவம் கிடைத்தது.
அந்தப் பெண் தாலி கட்டும்போது, வாயில் எதோ, மந்திரமோ,
ஸ்லோகமா முணு முணுத்துக் கொண்டு இருந்தாள். கண் serious ஆக
ஏதோ தேடிக் கொண்டு இருந்தது.
நான் அதை மறந்து விட்டேன். பசி. பிறகு சாப்பிட்டுவிட்டு, whats up ல், தாலி கட்டும் அந்த ஒரு
நிமிட வீடியோ வந்த போது, தெளிவாக அந்தப் பெண் ஏதோ சொல்வதை பார்த்தேன். அது என்ன
என்று கேட்கவேண்டும் என்று எனக்குத் தோன்றியது.
என்னிடம் என் உறவினர் திண்டுக்கல் கண்ணன் சொன்ன
வார்த்தை.
“அந்தப் பெண் சொன்ன வார்த்தை “மஹா பெரியவா மஹா
பெரியவா,,, மஹா பெரியவா.........”
இந்த வார்த்தையை தாலி கட்டி முடியும் வரை சொல்லி
கொண்டிருந்தாள்,, என்பதும் தெரிய வந்தது. (தன் தநதையின் மடியில் உட்கார்ந்த வுடனே சொல்ல
ஆரம்பித்துவிட்டாள்,,,என்றும் கேள்விப்பட்டேன்)
சில கல்யாணங்கள், மணமக்களின் பெற்றோர்கள், “நீங்கள்
வந்தது ரொம்ப சந்தோஷம்” என்பார்கள். இந்தத
திருமணத்தில் நான் செல்ல நினைத்தது, “இந்தக் கல்யாணத்திற்கு என்னை அழைத்தது நான் செய்த
புண்ணியம் என்று நினைத்தேன்.
அந்த தம்பதிகளுக்கு அட்சதை போட்டு ஆசீர்வாதம் பண்ணினேன்.
அந்த மணப் பெண்ணிடம் நான் பேச நினைத்தேன்.
அவள் “பெரியவாளிடம்” நேரே பேசிக் கொண்டிருக்க நான் என்ன பேச !!!
இதில் மிக மிக ஆச்சர்யமான விஷயம் என்ன என்று
கேட்டால்...
அந்தப் பெண் “Chartered Accountant”……………
இப்படியும் திருமணங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன.
மஹா பெரியவா சரணம் – என்று சொல்வதை விட நாம் வேறு
என்ன சொல்ல முடியும் !!!!
No comments:
Post a Comment