Saturday, 14 March 2026

தாடகை

 

இராமாயண காலத்தில் இருந்து இன்று வரைக்கும், இந்த தாடகை வதம், வாலி வதம், விபீஷண சரணாகதி போன்ற சில விஷயங்கள் “சரியா தவறா” என்ற வாதம் இன்றும் உண்டு.

தமிழ் அறிஞர் சத்யசீலன், புலவர் கீரன் போன்ற பலர், இன்று, இலங்கை ஜெயராஜ் போன்ற பலரும் சரி, தவறு என்று போட்டி போட்டுக் கொண்டு பேசுவதைக் கேட்டு பார்த்து இருப்போம். நமக்கே, அட போங்கப்பா !!! என்று டீ வீயை அணைக்கும் வரை.

இதில் தாடகையை வதம் செய்யலாமா ? அவள் அரக்கியாக இருந்தாலும் ஒரு பெண் இல்லையா, என்று வக்காலத்து கும்பல் ஒன்று இன்றும் உண்டு.

மாதரையும் தூதரையும் கொல்வது பாவம் என்பது தர்மம். தர்மத்தின் வழி நடந்த ராமன் தர்மம் தவறி நடக்கலாமா ?  என்று ஒரு கும்பல் கலாய்க்கவேண்டியது.

விச்வாமித்ரரே, தாடகையை போட்டுத் தள்ளி இருக்க வேண்டியதுதானே, எதுக்கு ராமனைக் கூட்டிக்கொண்டு போனார் ?  என்று ஒரு கும்பல் அலப்பறை.

தாடகையை, இவள் அரக்கி, பெண்ணில்லை. பெண்ணிற்கு உண்டான ஒரு குணமும் இவளிடம் கிடையாது, எனவே கொன்று விடு ! என்று முனிவர் சொல்லி  ராமன் செய்ததாக நாம் படித்து இருக்கிறோம்

கொஞ்சம் கம்பனிடம் வருமோம்

ஒரு அரக்கி பெண்ணில்லை என்று சொல்ல வரும் கம்பன் அந்த அரக்கியைப் பற்றி விவரிக்கிறார். -  நாம் கொஞ்சம் கற்பனை செய்வோம். -என்ன சொல்லமுடியும் சார். >

அவள் பற்கள் நீளமாக இருந்தன, பருத்த உடம்பு, கண்ணில் தீப்பொறி, கைகள் அகலம். இத்யாதி இதாயதி. நம்முடைய கற்பனைக்கு வருவது அவ்வளவுதான்.

படிப்பவர்களுக்கு, தாடகை ஒரு பெண்ணே அல்ல என்ற எண்ணம் வர வேண்டும். அப்போதுதான் ராமன் மேல் பழி வராது.

கம்பன் கூறுகிறான்

சிலம்புகள் சிலம்பிட செழித்த கழலோடும்: 

தாடகை நடந்து வருகிறாள். அவள் காலில் சிலம்பு அணிந்து இருக்கிறாள். அந்த சிலம்பில் பரல்களுக்கு பதில், மலைகளை பிடுங்கி கோத்து இருக்கிறாள். கொஞ்சம் கற்பனை செய்து கொள்ளுங்கள். கொஞ்சம் மேரு மலை, மேற்கு தொடர்ச்சி, கிழக்குத் தொடர்ச்சி, விந்திய அப்படியே கொஞ்சம் நம்ம பரங்கி மலையையும் சேர்ந்து பாருங்கள். !!!!   நினைத்துப் பார்க்கும் நமக்கே கொஞ்சம் திகில் ஆகா இருக்கும் .....

நிலம் புக மிதித்தனள்:

அந்தத் தரையை அழுத்த மித்திது நடக்கிறாள். அந்த தரையில் பள்ளம் விழுகிறது. எவ்வளவு பெரிய பள்ளம் தெரியுமா  ?

நெளித்த குழி வேலை சலம் புக:

அதில் கடல் தண்ணீர் வந்து நிறையுமாம்.  கடல் ஊருக்கு வருகிறது என்றால் அது எவ்வளவு பெரிய பள்ளமாக இருக்கவேண்டும். அப்போ அவள் கால்.....

அனல் தறுகண் அந்தகனும் அஞ்சிப் பிலம் புக

அவள் வரும்போது அனல் கக்கும் கண் உள்ள எமனும் தெறித்து ஓடி, ஏதோ குகைக்குள் ஒளிந்து கொள்வானாம்.

எமனுக்கு எமள்.....

நிலக்கிரிகள் பின் தொடர வந்தாள்

அவள் கொலுசில் கோத்தது போக மிச்ச மலைகள் எல்லாம் அவள் பின்னே ஓடி வருமாம்.

எதோ காத்து அடிச்சால் பேப்பர் பறந்து வருமே.  தெலுங்கு பட சண்டையில் வீரர்கள், புவி ஈர்ப்பு விசையை பழிப்பது போல் மேலே பரப்பார்களே.. அது போல.

என்று முடிக்கிறார்

இவள் பெண்ணா. நளினம் எதாவது இருக்கிறதா ?  என்று நம்மை தீவிரமாக யோசிக்க வைக்கும் பாடல் இது.

விச்வாமித்த்ரர் யாகம் செய்வதால், விரதம் மேற்கொண்டு, வதம் செய்யாமல் இருந்தார் என்பதாலும், “இதனை இதனால், இவன் முடிக்கும்” என்று ஆராய்ந்ததினால் ராமன் வந்தான் என்பதாலும், அவருடைய தொலை நோக்குப் பார்வை ராமனைக் கூட்டிக்கொண்டு, சீதையை கல்யாணம் செய்து கொடுப்பதில் மூலம், தம் “அரிச்சந்திரனையும், சந்திரமதியையும் பிரித்த பாபத்திற்க்கு பிராயச்சித்தம் தேட, ராமனை அழைத்துக் கொண்டு போனார், என்பது ராமாயணத்தை நன்கு படித்தவர்க்கு புரியும். 

இதில் இன்னொரு சூக்ஷமமான விஷயம், விஸ்வாமித்ரர், தசரதனிடம், ராமரை மட்டும் கேட்டார். தசரதன், பயந்து, கூடவே லக்ஷ்மணனையும் அனுப்பித்தார். போரில், ராமன் இலக்குவனை சேர்க்கவே இல்லை, தாடகை வதம், மாரீசனை, குற்றுயிரும் குலையிருமாய், கடலில் தள்ளியது, (பின்னணி ராவணன் மரணத்துக்கு உதவியாய் இருப்பான் என்ற ஒரு நல்ல எண்ணம்) எல்லாம் ராமன் ஒருவனே செய்தான்

ஆனால் அதே சமயம் இலக்குவன் வீரத்தை குறைத்து மதிப்பிட்டுவிடுமே என்று இந்த்ரஜித்துடன் போருக்கு, இலக்குவனை மட்டும் அனுப்பி வைத்த்தான்.

விராட வதம் போது, இலக்குவனை, சீதையை ரட்சிக்கும் பொறுப்பை விட்டு விட்டான்.

ராமன் ஒரு அற்புதமான Management Consultant/Expert

 

 

Wednesday, 11 March 2026

பட்டினத்தார் பக்தி

 நாம் பக்தி செய்கிறோம்.  கோவிலுக்குப் போகிறோம். வீட்டில் காலையில் எழுந்து விளக்கு வைத்து, சுவாமிக்கு புஷ்பத்தால் அர்ச்சனை செய்கிறோம். அப்போ அப்போ விரதம் இருந்து உடலை வருத்திக் கொள்கிறோம். சபரிமலை, பழனி என்று ஒரு மண்டல விரதம் வேறு. பல மைல் கால் நடையாக நடந்து கோவிலுக்குச் செல்கிறோம். அர்ச்சனை செய்கிறோம்.  க்ஷேத்ராடனம் என்று பல கோவிலுக்கு சென்று பல தெய்வங்களைப் பார்க்கிறோம். அப்போ அப்போ அன்னதானம் செய்கிறோம். தினமும் விஷ்ணு ஆராதனை, சிவா ஆராதனை வேறு..... சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி, கண் முழிப்பு வேறு...

இதெல்லாம் செய்துவிட்டு, “நான் தான் பக்தி செய்தேன்” என்று சொல்லிக் கொள்கிறோம். வெளியில் சொலாவிட்டாலும், நம் மனதுக்குள்ளே, “நான்தான் சிறந்த பக்திமான்” என்று அப்பப்போது சொல்லிக் கொள்கிறோம்.... இல்லையா.........

பட்டினத்தார் சொல்கிறார்.  யார்.... இவர்....”ஒன்றுமே வேண்டாம் என்று ஒரே இரவில் எல்லாவற்றையும் உதறிவிட்டு கோமணத்தைக் கட்டிக்கொண்டு புறப்பட்டவர்.”.. யார் “காதறுந்த ஊசியும் வாராது காண கடைவழிக்கே” என்றவர் - . சொல்கிறார்.  

நான் செய்வது என்ன பக்தி, அந்த மூன்று பேர் முன்னால் ஏன் பக்தி எம்மாத்திரம்.....என்று புலம்புகிறார்.

யார் அந்த மூன்று பேர்  

“வாளால் மகவரிந்து ஊட்ட வல்லேன்”  -  சிறுத்தொண்ட நாயனார் என்று ஒருவர் இருந்தார். 

அவர் வீட்டுக்கு சிவனடியார் உருவத்தில் வந்த  சிவன், "பிள்ளைக் கறி" போட்டால் சாப்பிடுகிறேன் இல்லையென்றால்  சாப்பிடமாட்டேன் என்றார். அவரும் ஒத்துக் கொண்டார்.  சிவனடியார் சில நபந்தனைகளை வைத்தார்.

 பிள்ளை ஒரே பிள்ளையாக இருக்க வேண்டும்

 பிள்ளைக்கு ஒரு உடல் குறையும் இருக்கக் கூடாது

 தாய் பிடித்துக் கொள்ள, தகப்பன் பிள்ளையை அரிந்து சமைக்க   வேண்டும்

முக்கியமாக, இருவரும் ஒரு சொட்டு கண்ணீர் கூட விடக் கூடாது.

சிறுத்தொண்டரும், அவர் மனைவியும் ஒத்துக் கொண்டு பிள்ளைக் கறி செய்து போட்டார்கள். (பிறகு நடந்தது நம் எல்லோருக்கும் தெரியும்)

இது பக்தியா, நான் செய்வது பக்தியா ????- என்று கேட்கிறார் பட்டினத்தார் 

இரண்டாவது:

மாது சொன்ன சூளால் இளமை துறக்க வல்லேன் அல்லன்

சூள் என்றால் சத்தியம்

திருநீலகண்ட நாயனார் என்று ஒருவர் இருந்தார்.  “தில்லை வாழ் அந்தணர்க்கும் அடியார்க்கும் அடியேன், திருநீலகண்ட குயவனார்க்கும் அடியேன் என்று” வாழ்ந்த தகுந்த பெருமை உடையவர்.

அவர் கொஞ்சம் மனச் சஞ்சலமுடன், காமத்தைக் கட்டுப்படுத்தாமல் இருந்தார். இது அவர் மனைவிக்குத் தெரிய, எதோ ஒரு சந்தர்ப்பத்தில், மனைவியை நெருங்கும்போது, “எம்மைத் தொடாதீர்கள், அந்தத் திருநீலகண்டத்தின் மீது ஆணை” என்று சொல்லிவிட்டார்.

எம்மை என்று சொன்னதால், எல்லாப் பெண்களையும் மற்றும் அல்லாது தன மனைவியையும் குறிக்கும் என்பதால், தன் இச்சைகளை துறந்து, கடைசி வரையில், தன் மனைவியிடம் போகாமல் ஒரு தவ வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.

காமத்தை அடக்க முடியுமா என்ன ?  இந்த உலகத்தில் மண்ணுக்கும், பெண்ணுக்கும் அடிமையாகாமல் எத்தனை பேர் இருக்கிறோம்.  ?

ஒரே குடிசையில், இருவரும் தனியே... “சத்தியம் செய்த ஒரு வார்த்தைக்காக” காம் நிலையை அப்படியே நிறுத்தி ஒரு வாழ்க்கை வாழ்ந்து இருக்கிறார்

பட்டினத்தார் சொல்கிறார்.. “இப்படி ஒரு வாழ்க்கை நான் வாழ வில்லையே, இப்படி ஒரு பக்தி நான் பண்ணவில்லையே ? என்று

மூன்றாவது

“நாலாறில் கண்ணிடத்து அப்பவல்லேன்”

யார், நம்ம கண்ணப்ப நாயனார். சிவலிங்கத்தைக் கண்ட ஆறாவது நாளிலேலேயே மனம் உருகி, அந்தக் கண்ணில் இருந்து இரத்தம் வடிவத்தைப் பொறுக்க மாட்டாமல், தன் ஒரு கண், இல்லை, இரண்டு கண்களையும் தோண்டி தர விழைகிறார்.  7 வது நாளில்  "நில் கண்ணப்ப? என்று சிவபெருமான் தரிசனம்.....

இந்த பக்தி எங்கே ?  இவர்கள்  செய்த பக்தியில் நூற்றில் ஒரு பங்கு நான் செய்ய வில்லையே ?

“நானினி சென்று ஆளாவது எப்படியோ திருக்காளத்தி அப்பனுக்கே” என்று முடிக்கிறார்......

நாம் ஏதோ பேருக்கு பக்தி பண்ணிவிட்டு, ஒன்றும் துறக்காமல், சுகர் மாத்திரையும் சாப்பிட்டுக் கொண்டு, ஸ்வீட்டையும் சாப்பிட்டுக் கொண்டு, -வைகுண்டத்தில் நமக்கு ஒரு சீட் , CONFIRMED என்று நம்பிக்கொண்டு இருக்கிறோம்

பட்டினத்தார், அனைத்தையும் விட்டுவிட்டு, போவோமோ, மாட்டோமோ என்று சந்தேஹப்படுகிறார்.

தேறுவதெப்போ நெஞ்சே, தெளிந்து கரை ஏறுவதேப்போ நெஞ்சே என்ற நீலண்ட சிவன் பாடல் தான் நினைவுக்கு வருகிறது....

அப்படி என்றால் நான் எப்படித்தான் பக்தி செய்வது என்று சண்டைக்கு வரக்கூடாது.

பக்திக்கு வைராக்கியம் முக்கியம்.  பக்தி பண்ணி கொண்டே இருக்க வேண்டும். பக்தியில் கர்வம் கூடாது.  நாம் பெற்றோர்கள் செய்த அந்த பக்தியை நாம் செய்தாலே போதும். 

Tuesday, 17 February 2026

புல்லாங்குழல் விடு தூது

 

கண்ணனை என்னன்னெமோ சொல்லி அழகு பார்த்துவிட்டார்கள்.  தோழி தூது, காற்று தூது, வண்டு தூது என்று என்று வேறு பல தூதுகள்.  கண்ணன் ஒன்றும் மஸிகிரமாதிரி தெரியவில்லை

கிருஷ்ணன் எனக்குத்தான் சொந்தம் என்று கோபிகைகள் சண்டை வேறு. உத்தவர் பார்த்து அசந்த அந்த கோபிகைகளின் பக்தி பற்றி அதிகம் சொல்லியாகிவிட்டது.

பிதாமகர் செம்மங்குடி மாமா பாடிய காபி ராக “பருலனமாட” என்ற ஜாவளி யைக் சமீபத்தில் கேட்க நேர்ந்தது.  ஜாவளி இன்று நடனம் ஆடக் கூடிய வகையில் அமைந்த பாட்டு. வீணை தனம்மாள் அவர்கள் இதில் வித்தகி.

இந்தப் பாட்டு பாடி யூ டியூபில் இருக்கிறது. செம்மங்குடிக்கு ஒரு எண்பது வயது இருக்கும். அசந்து போன ராக ஆலாபனை. அந்த பாடலின் முன்னே கிருஷ்ண கர்ணாம்ருதம் த்தில் இருந்து ஒரு ஸ்லோகம் பாடினார்.

அந்த ஜாவளியே மிக அழகான அர்த்தம் கொண்டது. “கிருஷ்ணா யாராவது உனக்கு மயக்க மருந்து கொடுத்து விட்டார்களா... மிகவும் வாடியிருக்கும் உன் முகம் எதனால். ?  யார் பேச்சையும் கேட்காதே. என்னிடம் வந்து விடு... என்பது போல் போகிறது....அந்தப் பாடல்.....

இப்பொது அந்த ஸ்லோகத்தைப் பற்றிதான் இந்தப் பதிவு.

“ஆயி முரளி முகுந்த ஸ்மேர...” என்று தொடங்கும் வரிகள். இதன் அர்த்தம்

“ஏ புல்லாங்குழலே, உனக்கு கிருஷ்ணனின் சுவாசத்தின் இனிமை புரியும். அந்த புன்சிரிப்புடன் கூடிய, தாமரை மலரையொத்த அந்த

 அழகிய வதனத்தைப் பற்றியும் தெரியும், அதனால் நான் மன்றாடிக் கேட்கிறேன்...அப்படியே, அவன் உதட்டில் இருந்து சற்று தள்ளிப் போய் அவன் காதுகளில், இந்த அபலையின் நிலையச் சொல். நான் படும் பாட்டைப் பகர். எப்பவுமே அந்த உதடுடன் உறவாடும் நீ, கொஞ்சம் அந்த நந்த கோபனின் செல்லக் குழந்தையுடன், என்னைப் பற்றியும் கொஞ்சம் சொல்லு......”

மிகவும் அழகான பு.வி.தூ..... (தலைப்பு)

நாராயண தீர்த்தர், தன் பாடலில் (கோவிந்த மிஹ) மின்னும் உதட்டில் இருந்து வரும் அந்த புல்லாங்குழல் இசை நம்மை மயக்குகிறது... என்கிறார்.  இந்தப் பாடலை, பாகேஸ்ரீ ராகத்தில் அமைத்தது பிதாமகர் தான்....

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன் என்கிறார். கண்ணதாசன்....

ஊட்த்துக்காடாரின் பாடல்கள் தான் எத்தனை எத்தனை.

கிருஷ்ணன் நமக்கு சந்தோஷம்.....

 

 

 

 

 

Friday, 30 January 2026

ஒரு ஆச்சர்யமான திருமணம் – மஹா பெரியவா சரணம்..

 

நான் போன 28.1.2026 அன்று சேலத்தில் நடந்த ஒரு திருமணத்திற்குச் சென்று இருந்தேன்.  என் மனைவி உறவினர் என்பதால் சென்று தீர வேண்டும் என்ற கட்டாயம்.

மணமகன். சிரஞ்சீவி ராம்ப்ரகாஷ் சுந்தரம்

மணமகள்: சௌபாக்யவதி  நித்யஸ்ரீ ஐயப்பன்

நான் திருச்சியில் இருந்து பஸ்ஸில் புறப்பட்டு போய் சேருவதற்குள் Reception முடிந்து mic ஐ வைத்துக்கொண்டு மாப்பிள்ளை உட்பட ஆளாளுக்கு பாடிக் கொண்டு இருந்தார்கள். வயதானவர்கள் கூட, “காதலின் தீபம் ஒன்றுஎன்று பாடிக் கொண்டு இருந்தார்கள்

எனக்கு எல்லாரும் பழக்கம் என்பதால் அரட்டைக்கு பஞ்சம் இல்லை....

அழகாக மண்டபம் பக்கத்தில் ரூம் arrange பண்ணி இருந்தார்கள். வழக்கமான அரட்டை session முடிந்து ரூமுக்குச் சென்றுவிட்டேன்.

எனக்கு ராம் பிரகாஷ் ஐ பற்றி அவ்வளவாகத் தெரியாது. நல்ல படிப்பு படித்து பெங்களூர் ல் வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறார். அந்த மணப் பெண்ணும் பெங்களூரில் வேலை பார்க்கிறார்கள் என்பது தெரிய வந்தது. எனக்கு உறவுகள் பெயரை நினைவு வைத்துக் கொள்ளும் அளவுக்கு சக்தி இல்லை, என்பதால் இந்த info போதும் .....

மணமகனின் பெற்றோர்கள், ரொம்ப சாதரணமாக எந்த வித பந்தாவும் இல்லாமல், மிகுந்த பக்தி ஸ்ரத்தையுடன் இந்த கல்யாணத்தை நடத்தினார்கள்.  மஹா பெரியவாளிடம் அதி அந்த்யந்த பிரேமை உள்ளவர்கள். 

அடுத்த நாள் காலை, நான் அனுஷ்டானம் செய்வதற்கு சுமார் 6 மணிக்கு கல்யாண மேடையில் உட்கார்ந்து கொண்டு இருந்த நான் மணமகன் ரூமை எட்டிப் பார்க்க....

அந்த மணமகன் ஸந்த்யாவந்தனம் செய்து கொண்டு இருந்தான். முதல் நாள் தாடி வைத்துக் கொண்டு மைக்கில் பாடிக்கொண்டிருந்த மாப்பிள்ளை, மழுங்க ஷேவ் செய்து கொண்டு பட்டை பட்டையாக வீபூதி இட்டுக் கொண்டு உட்கார்ந்து கொண்டு இருந்தான்.

ஆற்காடு சம்ப்ரதயமாம்,  ஊஞ்சல் முடிந்து, மணப்பெண்ணின் கையை, மாமியாரும், மணமகனின் கையை அந்த மாமியாரும் பிடித்துக் கொண்டு வந்தது, திடீரென்று மேடையில் தேங்காயை உருட்டியது எல்லா சம்பிரதாயங்களும் எனக்குப் புதிது. தாலி கட்டும்போது “மாங்கல்யம் தந்துனா...” சொன்னதாகக் கூட எனக்கு நினைவில்லை

அழகாக கல்யாணம், ஊஞ்சல், சப்தபதி என்று போய் கொண்டு இருந்தது. அந்தப் பெண்ணின் பெற்றோர்கள், சாதாரணமான ஒரு குடும்பம் என்று தெரிந்தது. அந்தப் பெண்ணிற்கு ஒரு சகோதரன் திருமணம் ஆகி, கட்டு குடுமி வைத்துக்கொண்டு இங்கும் அங்கும் அலைந்து கொண்டு இருந்தான். அவனை கூப்பிட்டு விசாரித்ததில்,

அவன் Mechanical Engineer, போரூரில் இருக்கிரார்கள்.  வேத பாடசாலையில் முழு அத்யயனம் செய்து, வேலை பார்த்துக்கொண்டு, பால பெரியவா மேற் பார்வையில், ராஜ

கீழ்பாக்கத்தில் சுற்றி பாட சாலைகளை மேற் பார்வை செய்து கொண்டு இருக்கிறார் என்பதும் தெரிந்தது, அந்தப் பையனின் குருவும் அங்கு வந்திருந்தார். அவருடனும் பேசும் பாக்கியம் கிடைத்தது.  “பால பெரியவா” தான் ஏன் கதி என்று சொன்ன அந்த பையனை நிமிர்ந்து பார்த்தேன்.

தாலி கட்டும் நேரம் வந்தது. அந்தப் பெண் தன் தந்தையின் மடியில் உட்கார, மணமகன் தாலியை எல்லோருக்கும் காண்பித்து, தாலி காட்டினான்.

இங்குதான் எனக்கு, ஆச்சர்யமான அனுபவம் கிடைத்தது.

அந்தப் பெண் தாலி கட்டும்போது, வாயில் எதோ, மந்திரமோ, ஸ்லோகமா முணு முணுத்துக் கொண்டு இருந்தாள். கண் serious ஆக ஏதோ தேடிக் கொண்டு இருந்தது.

நான் அதை மறந்து விட்டேன். பசி.  பிறகு சாப்பிட்டுவிட்டு, whats up ல், தாலி கட்டும் அந்த ஒரு நிமிட வீடியோ வந்த போது, தெளிவாக அந்தப் பெண் ஏதோ சொல்வதை பார்த்தேன். அது என்ன என்று கேட்கவேண்டும் என்று எனக்குத் தோன்றியது.

என்னிடம் என் உறவினர் திண்டுக்கல் கண்ணன் சொன்ன வார்த்தை.

“அந்தப் பெண் சொன்ன வார்த்தை “மஹா பெரியவா மஹா பெரியவா,,, மஹா பெரியவா.........”

இந்த வார்த்தையை தாலி கட்டி முடியும் வரை சொல்லி கொண்டிருந்தாள்,, என்பதும் தெரிய வந்தது. (தன் தநதையின் மடியில் உட்கார்ந்த வுடனே சொல்ல ஆரம்பித்துவிட்டாள்,,,என்றும் கேள்விப்பட்டேன்)

 4 நாள் கல்யாணம், ஸ்ரத்தையாக, சாஸ்திரிகளிடம், என்ன என்ன செய்ய வேண்டும் என்று கேட்டு அதை அந்தப் பெண் ரெகார்ட் செய்து கொண்டு இருந்தாள்... .(இருவரும் சேர்ந்து)

சில கல்யாணங்கள், மணமக்களின் பெற்றோர்கள், “நீங்கள் வந்தது ரொம்ப சந்தோஷம்” என்பார்கள்.  இந்தத திருமணத்தில் நான் செல்ல நினைத்தது, “இந்தக் கல்யாணத்திற்கு என்னை அழைத்தது நான் செய்த புண்ணியம் என்று நினைத்தேன்.

அந்த தம்பதிகளுக்கு அட்சதை போட்டு ஆசீர்வாதம் பண்ணினேன். அந்த மணப் பெண்ணிடம் நான் பேச நினைத்தேன்.  அவள் “பெரியவாளிடம்” நேரே பேசிக் கொண்டிருக்க நான் என்ன பேச !!!

முடிவில், ஸ்ருங்ககிரி சந்நிதானமும், காஞ்சி பீடத்தில் இருந்தும், பிரசாதம் வந்து, அந்த தம்பதிகளை ஆசீர்வதித்தது மிகவும் நேர்த்தியாக இருந்தது.  திருப்பதி பாலாஜியும் வந்திருந்து, ஆசி கூறியது இன்னும் கூடுதல் அழகு....

இதில் மிக மிக ஆச்சர்யமான விஷயம் என்ன என்று கேட்டால்...

அந்தப் பெண்  Chartered Accountant”……………

இப்படியும் திருமணங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன.

மஹா பெரியவா சரணம் – என்று சொல்வதை விட நாம் வேறு என்ன சொல்ல முடியும் !!!!