Thursday 22 June 2017

வரகூர் மஹாமஹோபாத்யாயர்கள் - பகுதி 3

ஸ்ரீ ராமகிருஷ்ண சாஸ்த்ரிகள்

இவர் 19 வது நூற்றாண்டில் வரகூரில் பிறந்தவர்.  தகப்பனார், அனந்த கிருஷ்ண சாஸ்த்ரிகள். தாயார் மீனாக்ஷி அம்மாள்.  சிதம்பரத்தில் இருந்த மஹா மஹோபாத்யாய  ஹரி ஹர சாஸ்த்ரிகளிடம் “நியாய வேதாந்த சாஸ்த்ரங்களைக்” கற்றுணர்ந்தார்.

சாஸ்த்ரிகளின் அதீதமான பாண்டித்தியம் பற்றிக் கேள்விப்பட்ட, திருவிதாங்கூர் மகாராஜா, இவரை, திருவனந்தபுரம் சம்ஸ்க்ருத கலா சாலையில் நியாய வேதாந்த அத்யாபகராக (teacher)  நியமித்தார்.

சாஸ்த்ரிகள் ஒரு சமயம், சன்யாசிகள் தலைமையில் நடக்கும், வித்வத் சதஸுக்கு (சபைக்குச்) சென்றார்.  அங்குள்ள வித்வான்கள் சாஸ்திரிகளிடம் “இந்த சபைக்கு எந்த பரீக்ஷை கொடுக்க வந்திருக்கிறீர்கள்”  என்று கேட்டனர்,  அதற்கு சாஸ்த்ரிகள், “இந்த சபையில் எவ்வளவு பரீட்சைகள் நடத்த முடியுமோ அவ்வளவு பரீக்ஷைகளிலும் பங்கு கொள்கிறேன்” என்றார்.  இதைக் கேட்டவுடன், சபையோர்கள் அச்சத்திலும், ஆச்சர்யத்திலும் ஆழ்ந்தார்கள்.  எட்டு பரீட்சைகள் கொடுத்து சாஸ்திரியார் வெற்றி பெற்றார். மேலும் எட்டு கேள்விகள் கொடுத்து சபையோர்களை பதில் அளிக்கச் சொன்னார். ஒருவருக்கும் பதில் கூற இயலவில்லை.  பின்னர் சன்யாசிகளின் வேண்டுகோளின்படி, சாஸ்த்ரிகளே பதில் சொன்னார்.  சன்யாசிகளின் பெரு மகிழ்ச்சியுடன் சாஸ்திரிகளுக்கு முதன்மையான பூரணமான சம்பாவனை கொடுத்தார்கள்.

தனக்கு மூலரோகம் சிகிச்சை செய்து கொள்ள, ஒரு சமயம், சாஸ்த்ரிகள் கொச்சிக்கு சென்றார். அச்சமயம் தர்க்க சாஸ்த்ரத்தில் பிரபல வித்வான்களான, பரீக்ஷித் மகாராஜவுடனும், மான்திட்டை நம்பூத்ரியுடனும், 45 தினங்கள் வாதம் புரிந்து முடிவில் சாஸ்த்ரிகள் வெற்றி பெற்றார்.

மஹாராஜா, வைரத்தினாலான இரண்டு தோடாக்களை (வளையல் போன்று) இரண்டு கைகளிலும் அணிவித்து “இணையற்ற தர்க்க பண்டிதர் தாங்கள் ஒருவரே” என புகழ்ந்து பேசினார்.
சாஸ்த்ரிகள் ஒரு சமயம், திருவனந்தபுரத்தில், சம்ஸ்க்ருத கல்லூரியில், வேதாந்த பேராசிரியராக இருக்கும்போது, கொச்சிக்கு வித்வத் சதஸ்ஸிற்கு அழைப்பின் பேரில் சென்றிருந்தார். அப்போது, மகாராஜாவிடம், என் ஊர் “வரகூர்சொல்ல, சாஸ்த்ரிகளுடைய பெருமையை புகழ்ந்து மிக ரஸமாக எடுத்துக் கூறினார்.

மீமாம்சையிலும், வேதாந்ததிலும், ஆழ்ந்த அறிவுள்ள நமது சாஸ்த்ரிகள், பாமதீ என்ற நூலின் பெயரை, ஒரு பெண்ணிற்கும், ப்ருஹதீ என்ற நூலின் பெய்ரை, மற்றொரு பெண்ணிற்கும் சூட்டி இருக்கிறார்.

திருவிதாங்கூர் வித்வத் சபைக்கும், வித்யாலயத்திற்க்கும் நம் சாஸ்த்ரிகள், திலகமாக விளங்கி வந்தார.

என் எண்ணம்
இந்தக் கட்டுரையைப் படிக்கும்போது, “வைரத்தில் தோடா பண்ணி ஒரு ராஜா கொடுத்திருப்பார் என்றால், என்ன ஒரு “பாண்டித்தியம்” இருந்திருக்க வேண்டும்” என்று தோன்றியது.  வரகூர் வாசியான இவருக்கு நம் பெருமாள் இப்படி ஒரு அணுக்ரகம் பண்ணி இருக்கிறார் என்று நினைக்கும் பொது நெஞ்சம் விம்முகிறது

இப்போது அவரது பெண்கள் (கடைசி பாரா) எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.  அல்லது, அவர்களது வம்சம் (descendants) ?


உண்மையில், நான் உணர்ச்சி வசப்பட்ட கட்டுரை இது.

No comments: