Wednesday 21 June 2017

வரகூர் மஹாமஹோபாத்யாயர்கள் - பகுதி 2

பேராசிரியர் ஸ்ரீ. எஸ் மார்க்க சகாயம்  M.A  அவர்கள்

இவர் முதல் பகுதியில் சொன்ன பிரம்மஸ்ரீ கல்யாண சுந்தர சாஸ்த்ரிகள் மற்றும், ப்ரும்மஸ்ரீ குருஸ்வாமி சாஸ்திரிகளுடனும் சேர்ந்தே படித்து அனேக பரீட்சைகள் பாஸ் செய்தார்.
இவர் வரகூரில் 1910 ம் ஆண்டு பிறந்தார். நல்ல வைதீகமான குடும்பத்தை சார்ந்தவர்.  வரகூர் வேம்பு அய்யர் குடும்பத்தைச் சேர்ந்தவர்.  வரகூர் வேம்பு அய்யர் குடும்பத்தில் தோன்றிய சாசியப்பா என்று பிரசித்தமான ஸ்ரீ சுப்பிரமணிய சாஸ்திரிகளின் தௌஹித்திரன் ஆவார்.


சென்னை சர்வ கலாசாலையில் சாஹித்ய சிரோமணி, வியாகரண சிரோமணி, வேதாந்த சிரோமணி போன்ற அனேக பட்டங்கள் பெற்றார். அண்ணாமலை சர்வ கலாசாலையிலும் வேதாந்த சிரோமணி பட்டமும் பல பாஷைகளின் ஒற்றுமை, வேற்றுமை விஞ்ஞானம் பற்றிய படிப்பு (Certificate of proficiency in comparative philology) சர்டிபிகேட்டும் அதே போல் பிலாசபி (philosophy) சர்டிபிகேட்டும் பெற்று இருக்கிறார்.


சென்னை சர்வகலாசாலையில் ஹிந்தி வித்வான் பட்டமும், ஜெர்மன் பாஷையில் டிப்ளோமா பட்டமும் பெற்று இருக்கிறார்.

அண்ணாமலை சர்வகலாசாலை செனட்டிலும், மதுரை சர்வகலாசாலை அகாடெமிக் கவுன்சிலிலும் (Academic Council) அங்கத்தினராக பணி ஆற்றினார்.     Madras University Board of Studies  யிலும் அங்கத்தினராக இருந்த ஒய்வு பெற்றிருக்கிறார்
படிப்பு முடிந்து முதல் எழு வருஷங்கள் சென்னை, வேப்பேரி சம்ஸ்க்ருத கல்லூரியில் வியாகரணம், சாகித்யம் போன்றவற்றை மாணவர்களுக்குப் பாடமாக சொன்னார்.  பிறகு காரைக்குடி அழகப்பா காலேஜில் 16 வருடங்கள் சம்ஸ்க்ருத பேராசிரியராகவும் இரண்டு வருடம் ஆங்கில பயிற்சியாளராகவும் (TUTOR) இருந்தார்பிறகு ராமேஸ்வரம் கல்லூரியில் ப்ரின்ஸிபாலாகவும்,  சம்ஸ்க்ருத பேராசிரியர் ஆகவும் எழு வருஷங்கள் உத்தியோகம் வகித்து பிறகு பெங்களூரில் வாசம் செய்து வந்தார்.

இவ்வளவு படிப்பும், பதவியும் வகித்திருந்தாலும் அவரிடத்தில் உள்ள வினயமும், ஆடம்பரமின்மையும், எல்லோரிடத்திலும் சுலபமாக பேசிப் பழகும் தன்மையும் மிகவும் கொண்டாடத்தக்கதாகும்.
என்னுடைய எண்ணம்

மிகவுமே பெருமையாக இருக்கிறது. சம்ஸ்கருத மொழியை எப்படி கொண்டாடி இருக்கிறார்கள் என்பதை படிக்கும்போது.  COMPARATIVE PHILOLOGY, இப்போது இன்டர்நெட் யுகத்தில், சர்வ சாத்தியம்.  அந்தக் காலத்தில் என்ன புத்தகம் ? ,  ஏது reference ?.   How  German language was possible ?

Simply amazing…

சாதாரணமாக நாம் பெருமையாகச் சொல்லும்போது,  ‘காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம்” என்று சொல்லுவோம்.
வரகூர் ஆஸ்திகர்களான, நாம் “பூனூலைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம்.”



No comments: