Wednesday, 20 July 2016

ஓ. எஸ். தியாகராஜன்-இசைக் கச்சேரி - Sathur Centenary Celebtration



சாத்தூர் A G சுப்ரமண்யம் அவர்களின் நூற்றாண்டு விழா வைபவம்- கடைசி   நாள்-
நாத இன்பம், ராகசுதா ஹால்-மயிலாப்பூர், சென்னை

17th July 2016

ஸ்ரீ. ஓ. எஸ். தியாகராஜன்-வாய் பாட்டு
புதுக்கோட்டை அம்பிகா பிரசாத் –வயலின்
சென்னை எஸ். தியாகராஜன்- மிருதங்கம்
நெற்குன்றம் சங்கர்- கஞ்சிரா

சங்கீத பூஷணம் சாத்தூர் அவர்களின் நூற்றாண்டு விழாவை மூன்று நாட்களாக அவர்களின் குடும்பத்தார்கள் மிகவும் விமரிசையாக கொண்டாடினார்கள்.  ஸ்ரீமதி புவனா ராஜகோபாலன் மற்றும் ஸ்ரீமதி லலிதா சந்தானம் அவர்களும், இந்த programme இனிதாக நடை பெற பல மாதங்களாக உழைத்து, அந்த காலத்து இசை மேதைகளை தேடி இண்டர்வியூ செய்து, வீடியோ எடுத்து மூன்று நாட்களும் அதை போட்டுக் காட்டினார்கள்.  மிகவும் அருமையாக இருந்தது.

மூன்று நாட்களும் ராமகிருஷ்ண மூர்த்தி, விஜய் சிவா, ஒ எஸ் தியாகராஜன் அவர்களின் இசை இந்த நிகழ்ச்சிக்கு பெருமை சேர்த்தது என்பது உண்மை. மூன்றும் பேர்களும், சாஸ்திரிய சங்கீதத்தின் பாரம்பர்யத்திலிருந்து வழுவதவர்கள். சரியான selection.

ஓ.எஸ்.தியாகராஜன் அவர்கள் மிகவும் பண்பட்ட பாடகர். மிகச்சிறந்த பாடாந்தரம். அவருக்கு இன்னும் சங்கீத வித்வத்சபையின் உயரிய விருதான சங்கீத கலாநிதி கிடைக்காதது, எனக்கு மிகப் பெரிய குறைதான்.  அலட்டல் இல்லாத சங்கீதம் அவருடையது.  அவருடைய கச்சேரி இரண்டு வகையில் அன்று பெருமை சேர்த்தது. ஒன்று சாத்தூர் அவர்களுக்கே உரித்தான “தியாகராஜ கிருதிகள்” அதில் முழுவதும் நிரம்பி இருந்தன.  கச்சேரி முடிவில் அவரிடம் கேட்டபோது “என்னமோ, சாத்தூர் அவர்களே பாடு என்று சொன்னால் போல் இருந்து” என்றார்.  இரண்டாவது, நிறைவாக, ஆஞ்சநேயர் கிருதி ஒன்று பாடி, நிறைவு செய்தார்.  சாத்தூர் அவர்களின் தாயார் கோடி ராம நாமம் எழுதியவர் என்று பிரபல மிருதங்க வித்வான் – டி, கே முர்த்தி அவர்கள் வீடியோ வில் சொல்லியிருந்தார்.
அந்தக் குடும்பத்தைச் சார்ந்த ஒரு நிகழ்ச்சியை ஆஞ்சநேய தியானம் கொண்டு முடித்தது, சாத்தூர் அவர்களின் ராம பக்தியை பறை சாற்றியது.

அவர் பாடிய பாடலைப் பார்ப்போம்
பவனுத- மோகனம் – தியாகராஜர்
எவரனி –தேவாம்ருத வர்ஷினி
ஸ்ரீ காந்தனி- பவப்ரியா
ரீதிகௌளை-ராகம்- தொடர்ந்து- ராக ரத்னா மாலிகசே, ரஞ்சில்லு.. நிரவல் & ஸ்வரம்“bhAgavatOttamulu gUDi pADE kIrtanamula
நாடாடித மாடலே-ஜனரஞ்சனி – நிரவல் & ஸ்வரம்  தனகு வசின பாத
லாவண்யா ராமா- பூர்ண ஷட்ஜம்
காப்பி-மெயின்- இந்த சொவ்க்யமதினே- அருமையான நிரவல் & ஸ்வரம்–“swara rAga laya sudhA rasa mandu
தனி
சாகர சயன விபோ- பாகேஸ்ரீ- சுவாதி திருநாள் கிருதி
பாஹி ராம தூத சஹித- வசந்தவராளி
மங்களம்

அருமையான தனி ஆவர்த்தனம். வயலின்காரர், சில இடங்களில் சொதப்பினார்.

நான் மெயின் ஒரு வெயிட்டான ராகம் எடுத்து பாடுவார் என்று நினைத்தேன்.

காபி எடுத்தவுடன் சற்று “பேஜாராகிப் போனேன்”. Untime ல் காபி சாப்பிட்டு அஜீர்ணம் வந்து விட்டது.  காபி அருமையாக இருந்தாலும், ஒரு கிருதியைக் குறைத்துக்கொண்டு காம்போதியோ, சங்கராபரணமோ பாடியிருக்கலாம்

அருமையான கச்சேரி கேட்ட அனுபவம்.  சாத்தூர் குடும்பத்திற்கு நன்றி

No comments: