Tuesday, 5 July 2016

சாத்தூர் சகோதரிகளின் நாத இன்பம்- 30th June 2016



அந்த காலத்தில் MGM என்று ஒரு PRODUCTION கம்பெனி ஒன்று உண்டு. அதைக் காட்டும் போது ஒரு சிங்கம் கர்ஜிப்பது போல் காண்பிப்பார்கள். இரண்டு முறை கர்ஜிக்கும்.  இந்த கம்பனி எடுக்கும் படங்கள் எல்லாம் மிக நன்றாக இருக்கும் என்று உத்தரவாதமாக நம்பலாம்.

அது போன்று சாத்தூர் சகோதரிகள் கச்சேரி MGM.  MINIMUM GUARANTEE மியூசிக். ஆலத்தூர் சகோதர்கள் கச்சேரியைப் போல், கச்சேரி மேடையை எந்த காலத்திலும் ஜனரஞ்சகத்திற்கு விலை பேச மாட்டார்கள்.  கச்சேரி தர்மம் இஸ் PRIME IMPORATANT.  STRICT ADHERENCE டு சாத்தூர் பாணி..

.ஒரு முக்கியமான விஷயம்.  ஸ்ரீ சாத்தூர் அவர்களின் 1௦௦ வயது பூர்த்தியை ஒட்டி இந்த மாதம் 3 நாள் ஒரு பெரிய விழாவாக எடுத்து ராமகிருஷ்ண மூர்த்தி, விஜய் சிவா மற்றும் ஓ எஸ் தியாகராஜன் அவர்களின் கச்சேரி ஏற்பாடு செய்து உள்ளனர்.  சாத்தூர் அவர்களின் பேரன். அந்த நிகழ்ச்சியில் பாடுவதின் மூலம் சாத்தூர் அவர்களின் சங்கீதம் generation gap இல்லாமல் தொடரப்போகிறது.

பாரி முனையிலிருந்து ராக சுதா ஹால் சற்று தொலைவு இருந்தாலும் நான் வந்ததற்கு ஒரு முக்கிய காரணம் முதல் நாள் அபிஷேக் ரகுராம் என்ற ஒரு சங்கீத ராக்க்ஷசனின் ராகம் தானம் பல்லவி கேட்க நேர்ந்ததுதான். 

பல்லவி தர்பார் என்று ஒரு அமைப்பின் மூலம் கர்நாடிகா ரவிகிரன் AND பார்த்த சாரதி சபா சேர்ந்து RTP மட்டும் பாடக்கூடிய ஒரு அமைப்பை ஏற்படுத்தியுள்ளார்.   அதில் அபிஷேக் ரகுராம் மோகன கல்யானியில் ஒரு RTP பாடி என்னை ஒரு மாதிரி கிறங்க அடித்திருந்தார்.  அந்தக் கிறக்கம் தெளிய ஒரு அரு மருந்தாக நான் சாத்தூர் சகோதரிகளின் கச்சேரி கேட்க சென்றேன். ஹரிகேசனல்லுரின் “புவனேஸ்வரியா” வும், “தாமதம் தகாதய்யா” என்ற ஒரு தமிழ் கிருதியை தவிர வேறு பிரபலமான கிருதி இல்லாத ஒரு ராகத்தை வைத்து ஒரு RTP யைப் பாடி கலங்க அடித்தார். 

இதில் இவர்கள் மெயினாக பாடிய “ஸ்ரீ சுப்ரமண்யாய நமஸ்தே” என்ற முத்துசுவாமி தீட்சிதர் அவர்களின் காம்போதி ராக கிருதியை முதலில் பார்ப்போம். ஸ்ரீமதி லலிதாவின் காம்போதி ஆலபனை மிக அருமை என்று சொன்னால், பாட்டை அவர்கள் பாடிய விதம் அருமையோ அருமை. ஸ்ரீ சுப்ரமண்யாய நமஸ்தே யில் ஸ்வரம் எடுத்து தனி ஆவர்த்தனம் கொடுத்தார்கள்.  கல்லிடைக்குரிச்சியாரும், மடிப்பாக்கத்தாரும் மிக அழகாக தனி வாசித்தார்கள்.

காம்போதி ராகத்தில் அமைந்த இந்த பாடலோ, கொநியாடின என்ற கிருதியோ, ஒ ரங்கசாயி போன்ற கிருதிகள் – பல்லவியே களை கட்டும். பல்லவியை மட்டும் 15 நிமிடங்கள் பாடலாம். அதிலேயே நிறைய சங்கதிகள் உண்டு. GNB அவர்கள் இந்த பல்லவியை பாடிக்கேட்டால் அலுக்கவே அலுக்காது. சா.சகோ. இதை மிக அழகாக கையாண்டனர்.
அவர்கள் பாடிய பாடல்களைப் பார்க்கலாம்

இந்த கொபமேல ரா- கனராக மாலிகா (அ) தச ராக மாலிகா – வீணை குப்பைய்யரின் அருமையான வர்ணம்.  தியாகராஜரின் பஞ்ச ரத்ன ராகத்தில் அமைந்த இந்த வர்ணம், இதைத் தவிர, நாரயனகௌள, ரீதிகௌள, பௌளி, மேலும் கேதாரம் ஆகிய ராகங்களின் கூட்டுக் கலவை.  அநால், இவர்கள் பாடும்போது ஒன்பது ராகங்கள் தான் வந்தது.  சந்தேஹத்தை ஸ்ரீமதி புவனா அவர்களிடம் கேட்கும்போது, சாரங்கநாட்டை “என்ற ஒரு ராகம் வர வேண்டும், ஆனால் அது பாடாந்தரத்தில் இல்லை”, என்றார். எனக்கு புரிந்தது அவ்வளவுதான்...

நமாமி விக்ன விநாயகா-ஹம்சத்வனியில் அமைந்த கிருஷ்ணசுவாமி அய்யர் அவர்களின் கிருதி. சிட்டைஸ்வரம் அமைந்த சம்ஸ்க்ருத சாகித்யம். அதில் சரணத்தில் “க்ஷனாக்ஷித பலாப்தி கர” என்ற இடத்தில் அற்புதமான் ஸ்வரம் பாடினார்கள். இதை ஒரு முறை கே ஜே யேசுதாஸ் பாடிக் கேட்டிருக்கிறேன். ஸ்வரம் எடுத்த இந்த இடம் “dancing mood” ல் அமைந்த இடம். கணபதிக்கு பிடித்த இடம்.

இதே போன்று திருப்புகழில் “பக்கரை விசித்ரமணி” என்ற ஒரு பாடல், அழகான சந்தத்துடன் வருகிறது. அதுவும் dancing tunes ல் அமைந்த பாடல். இந்த பாடல் பூராவும் அப்படி அமைந்திருக்கிறது விசேஷம் என்றால் சா.சகோ. பாடிய ஸ்வரத்தில் அந்த அழகு நிறைந்து இருந்தது.

பாஹிமம் ப்ருஹன்னாயிகே என்ற சுவாதித் திருநாளின் ஹுசேனி -கிருதி அமைதியான அழகான கிருதி. இது கே. வீ நாராயணசுவாமி அவர்கள் பாடி பிரபலப்படுத்திய கிருதி. இது சுவாதித் திருநாள் அவர்கள் எழுதிய பாடல் தான என்று ஒரு புறம் discussion நடந்து கொண்டிருதாலும், அற்புதமான பாடலை அழகாக பாடினார்கள். இதுவும் சிட்டைஸ்வரம் அமைந்த கிருதி.

ஸ்ரீமதி புவனா சப்-main ஆக ஷண்முகபிரியா ராகத்தை எடுத்து பாடி “வத்தனே வாருலே” என்ற சத்குரு த்யாகராஜர் கிருதி யைப் பாடினார்கள்.  “தாரி தெலியு தெய்வமு நீவு” என்ற இடத்தில் நிரவலும், ஸ்வரமும் பாடி முடித்தார்.  “உன்னை விட்டால் என்னை யார் தேற்றுவார்” என்ற அர்த்தத்தில் அமைந்த மாஸ்டர் பீஸ். பாடல் இது.  இந்தப்பாடலை கேட்டே 
ரொம்ப நாளாகிவிட்டது

அடுத்ததாக “த்ரிலோக மாதா நானு” என்ற ஸ்யாமா சாஸ்திரி கிருதியை filler ஆகப் பாடி காம்போதி ராகத்தி main item ஆக எடுத்துக் கொண்டார்க்ள்.

காம்போதி ராக ஆலாபனை பற்றி முன்பே எழுதி விட்டேன்.

சஞ்சர தர= அஷ்டபதி –சிந்து பைரவியில் அமைந்த ஜெயதேவரின் அஷ்டபதி.

“ஸ்ரீ ஜகதம்ப கதம்ப” என்ற ராமச்சந்திர கவியின் ராக மாளிகை கிருதியை செஞ்சுட்டியில் ஆரம்பித்து பாடி பிறகு மங்களம் பாடி கச்சேரியை இனிதே முடித்தார்கள்.

உஷா ராஜகோபாலன்  இடைஞ்சல் இல்லாமல் வாசித்து கச்சேரிக்கு மேலும் ஆழகு சேர்த்தார்.

கச்சேரி முடிந்து திரும்பி வீட்டுக்கு வரும்போது ஷன்முகபிரியாவும், சுப்ரமண்யாய நமஸ்தே வும் கூடவே வந்தது.  நல்ல சங்கீதத்தை கேட்டதில் நல்ல தூக்கமும் வந்தது.


No comments: