Monday 18 July 2016

மாதொருபாகனுக்கு ஒரு (அ)நீதி –பாகம் 1




ராம்குமார், சுவாதி பிரச்சினையில் சில பல விஷயங்ககள் தமிழ் கூறும் நல்லுலகுக்கு மறந்து விட்டதில் ஆச்சர்யம் இல்லை. மக்கள் எப்போதும் மயிர் கூச்செறியும் விஷயங்களை கேட்டு படித்து அதை அசை போடுவதையே தொழிலாக கொண்டு உள்ளனர்.  மறதி அதிகமாக இருப்பதால் அதை மறந்து புதிய விஷயத்திற்கு தாவுகின்றனர்.

இப்போது மக்களின் நினைவில் இருக்கும் ஒரே விஷயம் கபாலி ரிலீஸ் தான்   

பெருமாள் முருகன் எழுதிய மாதொரு பாகத்திற்கு தடை விதிக்கக் கூறி எழுந்த பிரச்னையில் நீதி மன்றம், இந்த புத்தகத்திற்கு தடை விதிக்கத் தேவையில்லை என்று தீர்ப்பு வழங்கி இருக்கிறது. அதவது இந்த புத்தகம் படிக்க தகுந்தது தான் என்று ஒரு தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

எனக்கு ஞாபாகம் இருக்கிறது. ஒரு முறை எழுத்தாளர் சுஜாதா அவர்கள், குமுதத்தில் “இரத்தம் ஒரே நிறம்” (என்று நினைக்கிறேன்) என்று ஒரு கதை எழுதினார். இது ஏதோ ஒரு சரித்திர சம்பந்தமான ஒரு கதையோ அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரைப் பற்றி, அந்தக் காலத்தில் அவர்களுடைய வாழ்க்கை முறையைப் பற்றி எழுதப்பட்ட ஒரு கதை.
இரண்டு அல்லது மூன்று வாரங்கள் கழித்து குமுததில் அந்தக் கதை நிறுத்தப்பட்டது.  சுஜாதாவின் “வெறி” ரசிகனான எனக்கு இது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. பின்பு கேள்விப்பட்டதில், அந்தக் கதை அந்த சமூகத்தினரை மிகவும் பாதித்ததாகவும், அவர்கள் சுஜாதாவுக்கும், குமுதம் காரியாலயத்தில் உள்ளவர்களுக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும், ஆதலால் கதை நிறுத்தப்பட்டது என்று.  சுஜாதாவோ, குமுதமோ கோர்ட்டுக்கு போனதாக தெரியவில்லை.

எழுத்து சுதந்திரம் என்பது என்னவென்று என்னைக் கேட்டால், சம்மந்தப்பட்ட சமூகத்தினர் வன்முறையில் ஈடுபட்டால், அரசு தன்னைக் காத்துக் கொள்ள, அந்தக் கதையையோ, கட்டுரையையோ பதிப்பிப்பதை நிறுத்தி வைத்து, “எழுத்து சுதந்திரத்தை” காப்பற்றி விடும். இல்லையேல், எப்படி புத்தகம் எழுதப்பட்டிருந்தாலும், வன்முறை இல்லை என்றால், அந்தப் புத்தகம் படிக்கத் தகுந்தது என்று தீர்ப்பு வந்து விடும்.

மாதொருபாகன் என்ற இந்த நாவல், ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சார்ந்த பிரிவினர் காலம் காலமாக கடவுளின் பெயாரால் சில பழக்க வழக்கங்களை கடைபிடிக்கின்றனர்.  பெருமாள் முருகனும் இந்த சமூகத்தை சேர்ந்தவர் தான்.

இதில் குழந்தை இல்லாத தம்பதிகள் குழந்தை பெற்றுக்கொள்ளக்கூடிய சில வழக்கங்களைப் பற்றிய (ஒரு செயல் முறை பற்றிய) ஒரு கதை. இது உடற்கூறு சம்பந்தப்பட்டிருப்பதால் இதை மேற்கொண்டு சொல்ல முடியாத விஷயம் இது. பொத்தி பொத்தி பாதுகாக்க வேண்டிய ஒரு விஷயத்தை அதே பிரிவை சார்ந்தவர் வெட்ட வெளிச்சமக்கியதன் மூலம் அந்த சமூக்கதில் இருக்கும் சகோதரிகள் வெட்கி தலைகுனிய வைத்துள்ளார். 
இதை நான் மேற்கொண்டு விவரிக்க முடியததிற்குக் காரணம், என் மகள் படித்து விடுவாளே என்ற பயம்தான்.  எந்த வித பயமும் இல்லாமல் தன் சமூகத்தினரைப் பற்றியும், தன் சகோதரிகள், தன் சமூகத்து தாய்மார்கள் தெய்வமாக மதித்து வரும் ஒரு பழக்கத்தை, பொத்தி பொத்தி பாதுகாக்க வேண்டிய ஒரு விஷயத்தை புத்தகம் போட்டு விளம்பரம் செய்து விட்டு, அது உண்மைக் கதை தான் என்று வேறு புத்தகத்தின் முன்னுரையில் கூறி, அந்த ஊரின் பேரையும் சொல்லி, பிறகு இது கற்பனை என்று சொன்னால். – இதை கொடுமை என்று சொல்வதா ?, விதி என்று சொல்வதா ? கண்ணைக்கட்டிக் கொண்டிருக்கும் நீதி தேவதை, சந்தர்ப்ப சாட்சியங்களை வைத்து, தவறாக சொன்னதன் மூலம் இன்னொரு “அலங்கோலதிற்கு” வழி வகுக்கும் செயலா ?

தீர்ப்பு வந்த உடனே எல்லா பத்திரிக்கைகளும் வரிந்து கட்டிக்கொண்டு பெருமாள் முருகனுக்கு நீதி கிடைத்து விட்டது போலவும், இனி எழுத்துலாக சுதந்திரம் காப்ப்பாற்றப்பட்டது போலவும் எழுத ஆரம்பித்து விட்டனர். பெருமாள் முருகனும் “நான் மீண்டும் எழுதுவேன்” என்று சொன்னதன் மூலம் நம் வயிற்றில் “பாலை” வார்த்தார்.  லெட்டர்ஸ் டு தி எடிட்டர் எல்லாம் நீதிமன்றத்தின் தீர்ப்பு எதோ கடவுளின் வார்த்தை போன்றும், பெருமாள் முருகன் காப்பாற்றப்பட்டார் என்பது போலவும் எழுதினார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் தொடர்ந்து எழுதி வரும் குருமூர்த்தி இந்த தீர்ப்பு தவறு என்று அடுத்த் தினமே ஒரு கட்டுரை எழுதினார். அதில் அவர் மிக அருமையாக் சில கருத்துக்களை எடுத்துச் சொன்னார். இதைப் பற்றி எழுதுவதற்கு முன்பு, ஹிந்து பத்திரிக்கை 11th July 2016 அன்று குருமூர்த்தியின் இண்டர்வியூ ஒன்றை போட்டிருந்தார்கள்.  இதில் கொடுமை என்னவென்றால், பாதியில் நிறுத்திவிட்டு, ஒரு website லிங்க் கொடுத்து, மேற்கொண்டு படிக்கச் சொல்லிவிட்டார்கள்.  இந்தப் பேட்டியை முழுவதும் போடுவதற்குக் கூட மனதில்லை.
(தொடரும்)

No comments: