இந்த டிசம்பர் சீசனில் மட்டும், சுமார் 4000 கச்சேரி
(கள்), சென்னையில் நடந்து முடிந்து விட்டது,
TM
KRISHNA வுக்கு ஒரு கச்சேரி கூட
கிடையாது.
கர்நாடக சங்கீத வரலாற்றில், T.M.கிருஷ்ணா
என்ற ஒரு கலைஞருக்கு ஒரு சிறு இடம் உண்டோ இல்லையோ, என் மனதில் அவருக்கு நிச்சயமாக
ஒரு இடம் உண்டு.
என் மனதில், சங்கீத வித்வத் சபை, கொடுக்கும், சங்கீத கலாநிதி (ச.க)
விருது போல், சில கலைஞர்களுக்கு, “ச.க” விருது கொடுத்து அமர வைத்துள்ளேன். அது
சங்கீத வித்வத் சபை, கலாநிதி கொடுத்த கலைஞர்களுக்கும் அடக்கம், கொடுக்காத
கலைஞர்களும் அடக்கம். (சங்கீத கலாநிதி
பெற்ற சில கலைஞர்கள், என் மனதில் இடம் பெற வில்லை என்பதும் உண்மை).
மதுரை
சோமு, T.S.கல்யாணராமன் போன்ற அந்த காலக் கலைஞர்கள்,
விஜய் சிவா போன்ற இந்த கால
கலைஞர்களுக்கும்= நான் எப்பவோ சங்கீத கலாநிதி விருது கொடுத்து விட்டேன்.
அதேபோல் TMK
க்கும் நான் ஸ.க. விருது கொடுத்து இருப்பேன். ஆனால்...
இந்த வருட டிசம்பர் season ல், எங்கோ Harrington
Road ல் உள்ள ஒரு ஹாலில் T.M.கிருஷ்ணா பாடப் போகிறார் என்ற ஒரு செய்தியை
அவருடைய முகஸ்துதி பத்திரிக்கையான “THE HINDU” வில்
பார்த்தேன். மேலும், அவரை பெருமைப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு, ‘THE HINDU”, - இது தான் T.M.Krishna வின் டிசம்பர் சீசனில் ஒரே கச்சேரி என்று எழுதி இருந்தது. இது டிக்கெட் கச்சேரி (ticketed concert). இந்த செய்தி வந்த சில தினங்களில், அதே பேப்பரில் ஒரு செய்தி
வந்தது. “ T.M. KRISHNA அவர்களின் கச்சேரி நடைபெற
உள்ளது, இந்த “ad கட்டிங்” கொண்டு வருபவர்க்கு, டிக்கெட் இலவசம்” என்று...
“எனக்கு மனது வலித்தது”
T.M.கிருஷ்ணா என்ற அந்த மகத்தான இசைக் கலைஞனை, அவ்வளவு சுலபமாக புறம்
தள்ளி விட முடியாது. தியாகராஜரையும், தீக்ஷிதரையும், மற்ற
வாக்கியக்காரர்களின் பாடல்களையும், தன் தேன் குரலால் குழைத்துக் கொடுத்தவர் இவர்.
எப்போதுமே, சம கால கலைஞ்சர்களுடம் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அவர்
அவர்களின் பெருமை புரியம். ஒரு எம்.ஜி.ஆர், சிவாஜி போல்.. அதே போல், நான் அடிக்கடி
சஞ்சய்-T.M.KRISHNA இருவரையும் ஒப்பிட்டுப்
பார்ப்பேன்..
இன்னும் சொல்லப்போனால், ஒரு காலத்தில், TMK, சஞ்சயை விட, ஒரு படி மேலே கூட போய் விட்டார் சம்பிரதாயமான கச்சேரி
பாணியிலிருந்து, சற்றே விலகி, முகாரி ராகத்தை அடுத்து அடுத்து 3 முறை பாடினாலும்,
பாதியில், கச்சேரியில் இருந்து எழுந்து போனாலும், கடைசியில், வர்ணம் பாடினாலும், பித்துக்குளித்தனமாக,
கணபதி பாடலை கடைசியில் பாடினாலும், அவருக்கு இருந்த ரசிகர் பட்டாளம் கொஞ்சம் கூட
குறையவில்லை. அவருடைய கச்சேரியை, குறை கூறியவர்கள் கூட, அவருடைய அடுத்த
கச்சேரியில் முதல் ஆளாக உட்கார்ந்தார்கள். அப்படி ஒரு ஆளுமை TMK விடம் இருந்தது.
ஓரு சீசனில், காலை கச்சேரி FREE ஆக அவர் பாடியபோது, நாரத கான சபாவில், வாசலில், ஒரு கிலோ மீட்டர்
தூரதிக்கு QUEUE நின்றது. ஒரு “சின்ன நாடே” என்று கலாவதி ராகத்தில் பாடினாலும்
சரி. க்ருஷ்ணா நீ பேகனே” என்று பாடினாலும் சரி. “இரக்கம் வராமல் போனதென்ன காரணம்”
என்று பாடினாலும் சரி, அதில் ஒரு உண்மை இருந்தது, ஈர்ப்பு இருந்தது.
எங்கு வழி தவறினார். ஏன் தவறினார் ?
விதி அவர் வாழ்வில் ஏன் விளையாடியது ? விதி அவர் வாழ்வில் விளையாடியதோ இல்லையோ,
எண்ணற்ற ரசிகர்கள் வாழ்விலும், அவருடைய நல்ல இசையை கேட்க முடியாமல்,
விளையாடிவிட்டது ?
என்னுடைய எண்ணம் இதுதான்:
எந்த ஒரு நிகழ்வையும், சம்பிரதாயத்தில் இருந்து விலகாமல், அப்படியே அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல
வேண்டும். . அதுவும் ஆன்மிகம் சம்பந்தப்பட்ட, நிகழ்வுகள், சிதைக்காமல், மாற்றாமல்
அப்படியே கொண்டு போக வேண்டும். ஏனெனில்,
அது ஆன்மீகத்தில் கரை கண்டவர்கள், போட்ட ராஜ பாட்டை. அதில் நாம் பயணிக்கலாமே தவிர, புதிதாக ஒரு ரோடு
போடுவது என்பது மிகப் பெரும் தவறு. உதாரணமாக, கோவிலுக்குச் சென்றால், பிள்ளையாரை
முதலில் வணங்க வேண்டும். இதை ஏன் என்று கேட்பதோ, செய்ய மாட்டேன் என்று சொல்வதோ=
விதண்டாவாதம்.
ஏன் என்ற கேள்வி ஆன்மீகத்தில் அவசியமில்லை. அது போல், கர்நாடக் சங்கீதமும்,
இறை உணர்வு சம்பந்தப்பட்டது. அதனால் தான், புடை சூழ ராம பிரானை, தியாகராஜ சுவாமி,
நேரில் பார்க்க முடிந்தது. வாயில்
கல்கண்டை போட்டு, திருத்தணி முருகன், முத்துஸ்வாமி தீட்சிதரை, பாட/எழுத
வைத்தது. வல்லாளர் கோபுரத்தில் இருந்து,
தலை குப்புற விழுந்த, அருணகிரி நாதரை, முருகன் காப்பாற்றி, “திருப்புகழை பாட
வைத்தது, “யார் இந்தப் பித்தன்” என்று சொன்ன “சுந்தரரை” அவர் வாயாலே “பித்தா பிறை
சூடி” என்று பாட வைத்தது. உனர்ச்சி பெருக்கால், கண்ணனை நினைத்து உருகி, மேற்கொண்டு
எழுத முடியாமல், போன, ஜெயதேவரின் அஷ்டபதியை, அந்த பரமாத்மாவே வந்து எழுத வைத்தது.
“சுப்ரமண்யாய நமஸ்தே” என்ற “காம்போதி” ராகப் பாடலை, காஞ்சி மஹா
பெரியவர், அக்கு வேறு ஆணி வேறாக, பிரித்து அந்தப் பாட்டின் தெய்வீகத் தன்மையை
கிலாகிக்கும் அளவுக்கு, ஒரு பாடலை நாம், கச்சேரிகளில், பாடுகிறோம் என்றால், இந்தப்
பாடல்களில் “தெய்வீகத்தன்மை” –மகத்துவம்- நமக்குப் புரியும்.
இதை புரிந்து கொள்ளாமல், தான் தோன்றித் தானமாக ஒரு “பாட்டையை” அமைக்க
நினைத்தது டி,எம், கிருஷ்ணாவின் மிகப்
பெரிய தவறு.
அவருடைய “downfall”
·
கர்நாடக்
இசையை சேரிகளுக்கு கொண்டுச் சென்றது- (சத்தியமாக பைசா பிரயோஜனம் இல்லாத ஒரு
காரியம்)
·
பஸ்ஸில்,
கச்சேரி செய்வது (பச்சையப்பா காலேஜ் படிக்கும் மாணவர்களுக்கு கொஞ்சம் ரெஸ்ட்)
· வேறு
மதத்தவரின் பாட்டை, கர்நாடக கச்சேரியில் பாடியது, (இதுதான் திரிசங்கு சொர்க்கம்-
என்பது- பிற மதத்தினரும், சந்தோஷப்படவில்லை, நம் மதத்தினரும், சந்தோஷப் படவில்லை
·
இஷ்டத்திற்கு,
ஒரு ஆடை உடுத்தி கச்சேரிக்கு வருவது. ஒரு (கச்சேரிக்கு லுங்கி கட்டிக் கொண்டு
வந்தாரென்று கேள்வி-கொடுமைடா சாமி)
·
சர்ச்சில்
பாடியது- (கர்த்தரே, இந்தப் பாவியை ரட்சியும்”
எல்லாவற்றிற்கும், தலையாய “தவறு”, அந்தக் காலத்து இசைக் கலைஞர்களை
கேவலமாக விமர்சனம் செய்தது. “கர்நாடக இசை”
இந்த உலகத்தில் உள்ள அளவும், உன் இசை வாழும்” என்று காஞ்சிப் பெரியவரால்,
ஆசீர்வதிக்சுகப்பட்ட எம். எஸ். சுப்புலட்சுமியை, தரக் குறைவாக பேசியது-இதெல்லாம்
சேர்ந்து அவருடைய கர்நாடக இசைப் பயணத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தது.
T.M.Krishna வுக்கு
குரு அனுக்ரஹம் என்பது சுத்தமாக கிடையாது. அதற்க்கு ஆணித்தரமான உ.ம்- நிகழ்
கால, உச்சத்தில் இருக்கும், சங்கீத
வித்வான்களை எடுத்துக் கொள்வோம்:
சஞ்சய் சுப்ரமண்யன்
விஜய் சிவா
ராமகிருஷ்ணன் முர்த்தி
அபிஷேக் ரகுராம்
மல்லாடி சகோதரர்கள்
சாகேத ராமன்
இவர்கள் எல்லோருமே மிகச் சிறந்த “குருமார்களைப்” பெற்றவர்கள். நல்ல
குரு கிடைத்தால், சிஷ்யர்கள் கவலைப் பட வேண்டாம். ஏனெனில், எந்த “ADVERSE CIRCUMSTANCES” வந்தாலும் குரு, ஏதோ ஒரு வழியில், நல் வழி காட்டுவார். கிருஷ்ண
பரமாத்மா, பாண்டவர்களை பார்த்துக் கொண்டாற்போல். மேற் சொன்ன பாடகர்கள், கர்நாடக
சங்கீதத்தை, தவமாக செய்து வருகிறவர்கள்.
நல்ல குருவின் ஆசீர்வாதம், இப்படி எல்லாம் புத்தியைத் தூண்டாது. “விநாசகாலே விபரீத புத்தி” என்ற வசனத்தின் படி,
“யாராலோ தூண்டப்பட்டு, எங்கோ பணம் பெற்று, ஒரு பத்திரிக்கை உதவியுடன், கர்நாடக
சங்கீதத்தை, சகட்டு மேனிக்கு சிதைக்கலாம்- என்று நினைத்து, நடத்திக் காட்ட
முற்பட்ட, T M Krishna. இப்போது ஒரு கச்சேரி கூட இல்லாமல்- சும்மா இருக்கிறார்- என்பதுதான்
உண்மையான வேதனை.
கர்நாடக சங்கீதம் பாடுபவர்
பக்திமானாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. தன்னுடைய சங்கீதத்தை “முழு
அர்பணிப்புடன், கற்றுக் கொண்டு, முழு அர்பணிப்புடன், ரசிகர்களுக்காக
வழங்கினால் போதும். “மெய் வருத்தக் கூலி
கிடைக்கும்” அனால், ஒரு நாள் கடவுளின் அருகாமையை இந்தக் “கூட்டம்” உணரும்.
தான் அறியாமல், கடவுளை நிந்தித்து, பின்பு மனம் மாறி “அர்த்தமுள்ள
இந்து மதம்” எழுதியவரும், நம் நாட்டில் உண்டு.
வீம்புக்காக, தவறான வழி காட்டலால், உந்தப்பட்டு, கர்நாடக் சங்கீதம்
என்ற ஒரு மலையைத் தகர்க்கலாம் என்று நினைத்த T.M.கிருஷ்ணா போன்ற இசைக்
கலைஞர்களுக்கு, நான் சொல்லும் ஒரே வார்த்தை=
“கடவுள் இருக்கான் குமாரு”
இப்படி என் கட்டுரையை முடித்தாலும், என் பிரார்த்தனை, உண்மையை
உணர்ந்து, திருந்தி, மறுபடியும் “ஒழுங்கான” ஒரு கர்நாடக கச்சேரியை TM கிருஷ்ணா செய்யா வேண்டும் என்பதே, அப்படி செய்வாரே ஆனால், முதல் ஆளாக
நான் சென்று அவருக்கு சிகப்புக் கம்பளம் போட்டு வரவேற்பேன்.
அவருடைய மிகச் சிறந்த ரசிகன் என்ற கர்வம் எனக்கு இன்றும் உண்டு
8 comments:
Do you have any concerts of TMK that you can share? Like the ones on 26th and 27th Jan 2009?
I will have to search my archives. I have some recordings. Will get back to you very soon
Ok. Thanks a lot!
Can you upload them on mediafire or anything like that?
Ramki, well written. Nalla சாட்டை அடி. இனிமேல் sangeetha mummurthigalai thiruthinal daan உண்டு. 😔
Ramki.super...kalamdhan badhil solla
Vendum
Well written. Agree every bit and I too await change in his conscience. Namaskaram
Well written. Agree every bit and I too await change in his conscience. Namaskaram
Post a Comment