Friday 4 January 2019

சஞ்சய் சுப்ரமணியன்- ஒரு கச்சேரி –ஒரு விமர்சனம்


இந்த வருட டிசம்பர் சீசனில் (2018)  நான் சென்ற கச்சேரிகள் 5.  அதில் சஞ்சய் 2.  கீழே, குறிப்பிட்டு இருக்கும், தியாக பிரம்ம கான சபா, மற்றொன்று, தமிழ் இசை சங்கம் நடத்திய ஒரு கச்சேரி.

நேற்று,  (22.12.2018) தியாக பிரம்ம சபாவில்,  சஞ்சய், ஒரு 3 மணி   10 நிமிடங்களுக்கு ஒரு கச்சேரி செய்தார்.   

அவருடன், வரதராஜன்- வயலின் வாசிக்க, பல்லடம் ரவி மிருதங்கம் வாசிக்க, ஆலத்தூர் ராஜகணேஷ் கஞ்சிரா வாசித்தார்

இதை பிரமாதம் என்றோ, அற்புதம் என்றோ, ஆங்கிலத்தில் நாம் கொடுக்கும் –adjective/superlative  வார்த்தைகளுக்குள் உட்படுத்த முடியாது.  சம கால ரசிகர்களுக்கு, சஞ்சய், ஒரு பெரிய வரப்ரசாதம். எல்லா கச்சேரிகளையும் ஒரு 3 மணி நேரம் வைத்துக்கொண்டு, கவனமாக, ராகங்களையும், பாடல்களையும் உள்ளே புகுத்தி, புத்தகம் இல்லாமல், ஒரு ஸ்தித பிரக்ஞ்சன்” போன்று --ஒரு அற்புதம் சஞ்சய்.

நான் போன வருஷம்,  சஞ்சய் சுப்ரமண்யம் என்ற சந்கீத ராக்ஷசன் (ர்) என்று ஒரு கட்டுரை எழுதி இருந்தேன். அதனால், இந்த வருடம் ஒரு கட்டுரை தேவையா ? எனறு நினைத்தேன். இருந்தாலும், இந்த மகத்தான கலைஞனைப் பற்றி கொஞ்சம் எழுதுவது, எனக்கு ஒரு திருப்தியைத் தருகிறது- என்பதால்.

இந்த வருட டிசம்பர் சீசனில், நான் கேட்கும், சஞ்சயின், முதல் கச்சேரி. மற்ற சஞ்சய் கச்சேரிகளுக்கு, செல்ல முடியாவிட்டாலும், பல web site லும், season review விலும், என்ன பாட்டு பாடினார் என்று அறிந்து கொள்வேன்.

விமர்சனத்திற்கு, முன்பாக சில முக்கியமான விஷயங்களை அலசுவோம்.

-இவர் கச்சேரி எல்லா இடத்திலும் அரங்கு நிறைந்து இருக்கிறது

-சாதாரண கச்சேரி கட்டணத்தை விட, double the amount. உதாரணமாக, மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ்ல் மேடையில்  உட்காருவதற்கு  Rs. 300

-இவரின் சங்கீதத்தின் ஈர்ப்பு சக்தி கொஞ்சம் கூட குறைவில்லை.  தன்னுடைய  சங்கீதத்தில் அபாரமான ஒரு நம்பிக்கை வைத்திருக்கிறார். தனக்கும் ரசிகர்களுக்கும், ஒரு “அமானுஷ்ய தொடர்பை”, கடைசி பாட்டு வரை வைத்திருக்கிறார். 

இதை, மகாராஜபுரம் சந்தானத்திடம் நான் பார்த்திருக்கிறேன்.  ஸ்ரீ. சக்ர ராஜ சிம்ஹானேச்வரி- என்ற ராக மாலிகை பாடலை, ம.ச- பாடாத மேடை இல்லை.  அப்படி அவர் மறந்து போனால் கூட, எழுதி கேட்டு பாடச் சொன்ன ரசிகர்களை நான் பார்த்திருக்கிறேன். இதற்கு முன்பு, என் தந்தை மூலம், மதுரை சோமுவிடமும், பல பெரியவர்களின் மூலம் மதுரை மணி அய்யரிடம் இருந்ததை கேட்டு இருக்கிறேன்.

என்னுடை நண்பர்கள் பலர், சஞ்சய், தன்னுடைய ரசிகர்களுக்கு, வருடத்திற்கு ஒரு 6 கச்சேரி இலவசமாக பண்ண வேண்டும் என்றும்,  பாரதீய வித்யா பவன்- வருடா வருடம் நடத்தும் “Free”  கச்சேரிக்கு- சஞ்சய் “இலவசம்” என்பதால் ஒத்துக் கொள்வதில்லை என்றும், சமீபத்தில் நடந்து முடிந்த, “தமிழும், நானும்” (ஸங்கீத வித்வத் சபை) கச்சேரியில், பால்கனி கடைசி டிக்கெட் – Rs. 300 என்றும் VIP ticket Rs. 2400 என்றும் வைத்து, அவருடைய சராசரி ரசிகர்கள் இடம் இருந்து விலகிச் செல்கிறார்”- என்று பல குற்றச்சாட்டுக்களைக் கூறினார்கள்.
எனக்கும் அப்படித் தான் தோன்றியது.

ஆனால், இன்னொரு புறம்- இப்போது SangeethapriyaWebsite and other sites- சஞ்சய் அவர்களின் கச்சேரி- “மானாவாரிக்கு” – Free to download and listen-- நாம் கேட்பதற்கு வசதியாக, இருக்கிறது. போராததிற்க்கு,  you tube ல், 24 மணி நேரமும், Video as well as Audio recording கேட்கலாம். அப்படி இருக்கும்போது, “இலவச கச்சேரி” எதற்க்கு ? என்ற ஒரு கேள்வி இருந்தாலும் கூட, சென்னையில் ஒரு 3 கச்சேரியாவது, Narada Gana Sabha-  போன்று ஒரு ஹாலில் சஞ்சய் – டிக்கெட் இல்லாமல்- செய்ய வேண்டும் என்று எனக்கும் ஆசைதான். என்ன இருந்தாலும் லைவ் ஆக இருந்து பார்ப்பது, ஒரு சுகம். என்ன தான் திருட்டு DVD இருந்தாலும் ரஜினி படம் த்யேட்டரில், முதல் ஷோ பார்ப்பது போல்
முதலில் இவர் பாடிய பாடல்களைப் பார்ப்போம்:

1.     முதலில், கூரநாடு நடேச பிள்ளை – வர்ணம் எடுத்து ஆரம்பித்தார். இது, அமிர்த வாஹினி ராகத்தில் அமைந்தது என்று அவரே சொன்னார். நான் சாரமதியோ, நடபைரவியோ என்று குழம்பி உட்கார்ந்து கொண்டு இருதேன்.  தியாகராஜர் இந்த ராகத்தில் “ஸ்ரீ. ராம பாதமா நீ க்ருபா ஜாலு னே”- ராமபிரானின் பாதத்தின் பெருமையைச் சொல்லும் பாடல்
2.   
   அடுத்து தியாகராஜர் க்ருதி என்று சொல்லி, “சோபில்லு சப்த ஸ்வர” ஆரம்பித்தார்.  எழு ஸ்வரங்களை புகழ்ந்து பாடும் பாடல்.  இந்த ஸ்வரங்கள் இல்லாவிடில், ஏது டிசம்பர் சீசன். ?- இதில் ஸ்வரம் செய்து முடித்தார்.

3.  முத்தையா பாகவதரின், “ஹிம கிரி தனயே-ஹேம லதே” என்ற சுத்த தன்யாசி கிருதியை எடுத்து – கொஞ்சம் ராகம் பாடினார். முடித்து ஸ்வரமும் கொஞ்சம் பாடினார்.

என்ன தான் சுத்த தன்யாசி-யாரு வேண்டுமானாலும் பாடட்டும்.  எனக்கு மிகவும் பிடித்த சிவாஜி கணேசன் படமான- பலே பாண்டியா- வரும் பாட்டு “நீயே எனக்கு என்றும் நிகரானவன்”. இரண்டாவதாக, சங்கீதக் கண்ணை திறந்து வைத்த, மகாராஜபுரம் சந்தானம் பாடிய “நாராயணா நின்ன நாமவ” என்ற தாசர் கருதியும், இந்த ராகத்தில் அமைந்து என் மனதில் பதிந்துவிட்ட அற்புதமான, மறக்க முடியாத பாடல்.
4.    
     அடுத்து, நவரச கன்னடா- வை எடுத்து, ஒரு 6 நிமிடம் ராகம் பாடினார். மிகவும் அழகான ராகம் இது.  “நான் ஒரு விளையாட்டு பொம்மையா” என்ற பாபநாசம் சிவன் கிருதியை, நவராத்திரியின் போது, இந்த பட்டுப் பாவாடை கட்டிக்கொண்டு, இளசுகள், கொலு வைத்து இருக்கும் வீட்டில், பாடும் பாடல் இது. இந்தப் பாடலைக் கேட்டுக் கேட்டு “புளித்துப் போன” எனக்கு, பூச்சி ஸ்ரீனிவாச ஐயங்கார் அவர்களின்- ‘நீ பாதமுலே கதியனி”. நிரதமு” என்ற பாடலை எடுத்துப் பாடி, கோடை மழை போல், குளிர்ச்சியைக் கொடுத்தார் இந்தப் பாடலில், “பூச்சி ஸ்ரீ. ஐ -"யார் யார் உன்னை, தன் வழியில் பிரார்த்தனை செய்கிறார்களோ, அவர்களையும் ரக்ஷிக்க வேண்டும்”- என்று “பொதுஉடைமை” பக்தியை வற்புறுத்துகிறார்

5.  அடுத்ததாக, “என்ன புண்ணியம் செய்தாயோ”- என்று சிவநாமயோகியார் அவர்கள் எழுதிய பாடலை பாடினார்.  இவர் யார் என்று வலைப்பகுதியில் தேடி கிடைக்கவில்லை. இந்தப் பாடலை இப்போதுதான் முதல் தடவை கேட்கிறேன்.

6.   கல்யாணி ராகம் மிகவும் அழகாக மாலை தொடுத்தது போல் பாடி, “நிஜ தாச வரதா” என்ற பட்ணம் சுப்பிரமணிய அயயர் பாடலைப் பாடினார்.  இந்தப் பாடலை ஒரு முறை மகாராஜபுரம் சந்தானம் அவர்களிடம் கேட்டிருக்கிறேன். சஞ்சய் அவர்களின் “Blog” ல், ஒரு interesting ஆன, பதிவு உண்டு. விரும்பியவர்கள் படித்துக் கொள்ளலாம்.

ஒரு இடத்தில் பாடும் போது, நிஜ தாஸ என்று பாடி, 4-5 நொடிகள் கழித்து, “வரதா’ என்று பாடினார். அப்போது அவர் கை, வரதராஜன் பக்கம் இருந்தது. On the spot-humuor என்பது சஞ்சயிடம் நிறைய உண்டு.
7.      தனி
8. சௌந்தரராஜம் ஆஸ்ரயே- என்ற ப்ருந்தாவன சாரங்கா கிருதியை எடுத்து மெதுவாக தவழ விட்டார்.

9.  ராகம் தானம் பல்லவி= பத்தீப் என்ற ஒரு ராகத்தை எடுத்து, தானம் பாடி, “வெண்ணைத் தின்ன சின்னத் தனமா-வேணுகோபாலா”- என்ற பல்லவி வரியை எடுத்து பாடி முடித்தார்.
   
  இந்த ராகத்தில் "என் தாய் வாழ் எனும் மந்திர" என்று பாரதிதாசன் பாடலை இவரே பாடி இருக்கிறார்.  அற்புதமான பத்தீப் ராகத்தில் அமைந்த பாடல். 


  .  ஸ்ரீ ராம ஜெய ராம- யதுகுல காம்போதி யில் உற்சவ சம்பிரதாய கருதி ஒன்று பாடினார்.

ஒரு சில பாடல்களைப் பாடி நிறைவு செய்தார்.

வரதராஜன் மற்றும் அவரது மற்ற பக்க வாத்யங்கள், மிகவும் அழகாக தன்னுடைய பணியை இனிதே செய்தனர்.

இதுதான என்னுடைய முக்கியமான பகுதி:

ஒவ்வொரு முறையும் நான் சஞ்சய் அவர்களின் கச்சேரி முடிந்து வரும்போது T.M.KRISHNA அவர்களை நினைத்துக்கொள்வேன்.  எனக்குத் தெரிந்து, சம கால கலைஞர்களில், சஞ்சய்க்கு நிகராக, சங்கீத ஞானத்திலும் சரி, ரசிகர்களைக் கவரும் விததிலும் சரி, சஞ்சய்க்கு, நிகரானவர் TMK. 

TMK திசை மாறிப் போகாமலிருந்தால், டிசம்பர் சீசனில், இருவரின் கச்சேரியும் ஒரே நாளில், வேறு வேறு சபாவில் அமைந்தால், “யாருடைய கச்சேரிக்குப் போவது” என்று நான் முடிவு செய்ய ச்ரமப்பட்டு இருப்பேன்.  THANKS TO TMK ?

No comments: