Sunday, 7 September 2025

वारं वारम् - இந்த வாரம் – (1.9.25 to 7.9.25)

 

செம்மங்குடி

இந்த வார ஆரம்பத்தில் நான் செம்மங்குடி போய் “லக்ஷம் த்ரிஷதி” அர்ச்சனை பண்ணியதை பற்றி விலா வாரியாக எழுதிவிட்டேன்.

மறுபடியும் க்ரஹணம் அன்று திரும்பிப் போவதாக ஐடியா இருந்தது. முடியவில்லை

ஆசிரியர் விருது

நான் போன வாரம் சொன்ன நல்லாசிரியர் விருது பெற்ற Dr ரேவதி பரமேஸ்வரன் அவர்கள், ஜனாபதி கையால் விருது வாங்கும் நிகழ்ச்சியை டி.வீயில் நேராக பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.

சந்தோஷமான விஷயம்

சந்திர க்ரஹணம்

போன ஞாயிற்றுக் கிழமை சந்திர க்ரஹணம். அழகாக கணித்த (இன்றுதான் க்ரஹணம் வருகிறது என்று) அந்த பஞ்சாங்க ஸ்ரௌதிகளை வணங்கி, வழக்கம்போல், பிடித்த ஸ்நானம், விட்ட ஸ்நானம் என்று, நடுவில் கொஞ்சம் ஜபம். ஸ்லோகம் என்று

அதற்குள், ஒருவர் வீட்டு சுவாமி அறையை மூட வேண்டும். விளக்கு ஏற்றக் கூடாது. சுவாமிக்கு அர்சச்சனை பண்ணக் கூடாது. என்று ஏகப்பட்ட கட்டளை.  சில நக்ஷத்ரங்களுக்கு பரிஹாரம் என்று.

கொஞ்சம் கொஞ்சமாக, இந்த அனாவசிய குழப்பத்தில் இருந்து மீண்டு, நீ வேரேரனாதிருக்க, நான் வேரெனாதிருக்க, நேராக வாழ்வதற்கு வழி” கூற  என்று அருணகிரிநாதரின் திருப்புகழ் வாசகப்படி வாழ் வேண்டும் – என்று நினைத்துக் கொண்டேன் 

மெரீனா பீச் பல பக்தர்கள் போய் ஸ்நானம் பண்ணினார்கள். மிகவும் விசேஷம். புண்ணியம்.  என் மாமா கோ-தானம் பண்ணினார்.

நான் சௌந்தர்ய லஹரியில் கூறியது போல், கங்கை, யமுனை ,சரஸ்வதி  மூன்றையும் தன் கண்களில் வைத்துக்கொண்டு, பரமேஸ்வரின் பத்தினியாக இருப்பவளே. உன் கண்களினால் என்னைக் குளிப்பாட்டு.  நீ அப்படிச் செய்தால், நான் ஏன் கடல், குளம், ஏரி என்று அலையவேண்டும் ? – என்று சும்மா வீட்டிலேயே இருந்து விட்டேன்.

தம்பிக்கும், கல்யாண மாபிள்ளையாக ஆகப் போகிற என் தம்பி பையன் சந்திர மௌலிக்கும், க்ரஹண சமயத்தில் மஹா சங்கல்பம் சொல்லி ஜபம் பண்ணச் சொன்னது மனதுக்கு சந்தோஷமாக இருந்தது

கடைசி 15 நிமிடத்தில்,  சின்னர்-அல்காராஸ் – டென்னிஸ் மேட்ச் ஹாட்ஸ்டார் ல் பார்த்தேன்.  ம்ஹூம். என்ன சொல்ல ....?

விசர்ஜன்

நான் மும்பையில் இருந்தபோது, நேரே கண்டு பிரமித்த ஒரு நிகழ்வு, பிள்ளையாரைக் கொண்டு கடலில் கரைப்பது. ஜே ஜே என்று இருக்கும். நான் வாஷியில் இருந்தபோது, எங்கள் வீட்டின் அருகே, பிள்ளையார் சிலை ஒன்று வைக்க, அதற்கு, சுண்டல், சக்கர பொங்கல் என்று மனைவி செய்து கொடுக்க, அப்படியெல்லாம் ஒரு பண்டம் இருக்கிறது என்றே அறியாத மகாராஷ்டிரா மக்கள், இந்தப் பிரசாதத்தை சாப்பிட்டு அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை, என் மனைவி. மா ஜீ ஆகிவிட்டாள்.  எத்தனை வகை வகையான பிள்ளையார்..

இப்போது சென்னை வந்து விட்டாலும், இந்த விசர்ஜன் நாளில், மும்பை நினைவு வந்து அலை மோதும்

GST

நிர்மலா சீதாராமன் அவர்கள், ஹெல்த் இன்சூரன்ஸ் GST விலக்கு அளித்தது மிகவும் சந்தோஷமாக இருந்தது.

 

 

 

 

No comments: