Sunday 14 July 2024

செம்மங்குடி ஸ்ரீ வெங்கட்டு சித்தப்பா......கனகாபிஷேகம்

 

என் செம்மங்குடிக்கு என்று பல பெருமைகள் உண்டு

 

இதை இரண்டாகப் பிரிக்கலாம்

 

ஒன்று பேரின்பம்

ங்கீத பிதாமகர் செம்மங்குடி ஸ்ரீனிவாச அய்யர்

எங்கள் பெருமாள், சிவன் கோவில்

நான் படித்த பள்ளி

என்னை ஆளாக்கிய ஸ்ரீ. ராமுர்த்தி சாஸ்த்ரிகள் அண்ட் அலமேலு அம்மாள் -என் குடும்பம்

 

சில சிற்றின்பங்கள்

-சிவன் கோவில் அருகில் இருக்கும் குளம்

-ராம நவமி பானகம், நீர்மோர்

-மேல குளத்தில் இருந்த நெல்லிக்காய் மரம்

-ஆவணி அவிட்டம், அன்னாபிஷேக  சாப்பாடு

-எங்கள் வீட்டின் பின்னாடி இருந்த வாய்க்காலில் நானும்  சசியும் தட்டைத் தூக்கிப்போட்டு, அது அருகே வருவதை ரசித்த நாட்கள்.

-சப்பரம்

- மழை கொட்டி, சாக்கைப் போத்திக் கொண்டு வாசல் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு இருக்கும் காலை வேளையில், “ஸ்கூல் லீவு” யாரோ ஒருவர் சைக்கிளில் சொல்லிக் கொண்டே செல்லும்போது கிடைத்த சுகம்

- மார்கழி மாதம் பஜனை

- தீபாவளி, பொங்கல் விழா

 

பேரின்பத்தில், எங்கள் ஸ்ரீ. வெ.சி வின் கனகாபிஷேகத்தை தாராளமாக சேர்க்கலாம்.

அவருக்கு திருஷ்டி வந்து விடுமோ என்று, இந்த கட்டுரையை எழுத தயங்கினேன். இருந்தாலும்.....அவர் வழிபடும் செம்மங்குடி அய்யனாரைப் பணிந்து எழுதுகிறேன்.

ஸ்ரீ. வெங்குட்டு சித்தப்பா -உண்மையாக, அவர் உறவு எப்படி என்றால், என் தாத்தாவின் தாத்தா, அவர் தாத்தா, அண்ணன், தம்பி. அதனால் இவரும் என் தாத்தா தான். ஆனால், எங்கள் குடும்பத்தில் இஷ்டத்திற்கு உறவை சொல்லி கூப்பிடுவோம். அதனால் இந்த பெயர். அதனால் தான் சித்தப்பா, அதனால் அவர் மனைவி சித்தி...

எங்கள் செம்மங்குடியில்,  என் தாத்தா ஸ்ரீ. ராமமூர்த்தி சாஸ்த்ரிகள்,  கனகாபிஷேக ஸ்ரீ. வெங்குட்டு தீக்ஷிதர், ஸ்ரீ. சிவகுரு தீட்சிதர், ஸ்ரீ குமாரு தீட்சிதர் என்று  4 ரத்தினங்கள் உண்டு. 2 துண்டு கல்கண்டு, ஒரு தேங்காய் மூடி, சுமாரான வாழை பழம்,  நாலு அணா, எட்டணா வுக்காக நடையாய் நடந்து வைதீகம் பார்த்த மகானுபாவர்கள்.  இன்றும் அவர்களை நான் நினைவு கொள்ளும்போது கண் பனிக்கிறது. 

எங்கள் பக்கத்து வீடு. அவர்கள் வீட்டில், 6 க்கு மேல் குழந்தைகள். எங்கள் வீட்டிலும் பல. உறவுக்கு அப்பாற்பட்டு, எங்கள் குடும்பத்திலும் அவர் குடும்பத்திலும் ஒரு அன்யோன்ய நெருக்கம் உண்டு. ஏன் மாமா, அவரின் மூத்த மகன் ஸ்ரீ. யக்ஞ ராமன் கிளாஸ் மேட்ஸ். அவருடைய இன்னொரு பையன், நாகராஜன் எனக்கு நெருங்கிய என் வயது.  என்னுடைய பெரியம்மா, சித்தி, அவர் குடும்பத்தில் உள்ள லேடீஸ், விஷாலி அக்கா, சந்திர அக்கா. மற்றும் ஸ்ரீநிவாசன் என்று.

சாஸ்த்ரிகள் என்பது ஒரு மதிப்பிற்குரிய பெயர் என்பதால், எல்லா வீட்டிலும் நான் “ சாஸ்த்ரிகள் பேரன்” வந்திருக்கான் என்று சுவாதீனமாக உள்ளே நுழைந்து பேசும் “பாக்கியம்” எனக்கு உண்டு.

துவும் பக்கத்து வீடு என்பதால் அடிக்கடி. “ஏ ராம்கி வாடா” என்று அன்புடன் ஏதாவது தின்பதற்கு கொடுத்து விடுவாள், நாகராஜன் அம்மா. சீடை, முறுக்கு, பொரி உருண்டை. எப்போது சென்றால் என்ன கிடைக்கும் என்று எனக்கு சரியாகத் தெரியும். நவராத்திரி கொலுவின் போது, என் சித்திகளுடன் கொலு பார்க்கப் போவேன். அவாத்தில் எல்லா பெண்களுடன் சேர்ந்து இன்னொரு முறை செல்வேன். எல்லாம் சுண்டல் மோகம் தான்.

இந்தப் பக்கம் இன்னொரு friend வெங்குட்டு ஆம். அது கொஞ்சம் பெரிய இடம்.  தட்டாத்தி மூலை கிராமத்தில் இருந்து, எப்போதாவது வெங்குட்டு வந்தால் நான் அவன் வீட்டில் போய் உட்கார முடியும்.  அவாத்தில் தோசை எனக்குக் கிடைக்கும். இல்லாவிட்டால், “போர்” தண்ணீர் பிடிக்க அடிக்கடி போய் வருவேன். அவ்வளவு தான்.

அதனால் நாகராஜன் வீட்டுக்கு செல்வதில் எனக்கு உரிமை ஜாஸ்தி.

அவருக்கு கனகாபிஷேகம் செய்தது மூலமாக, எங்களுக்கு ஒரு பெரிய பாக்கியம். நான் என் குடும்பத்துடன் சென்று ஆசி வாங்கியது, என்னை அடையாளம் கண்டு சித்தப்பா பேசியது. செம்மங்குடியில் பல நண்பர்களை மீண்டும் சந்தித்தது. அருமையான சாப்பாடு.

இன்றும் ஏன் மீது அளவு கடந்த அன்பு வைத்திருக்கும், சித்தப்பா குடும்பத்தில் அனைவருக்கும் ஏன் நன்றி கலந்த நமஸ்காரங்கள்.

 

 

 

 

 

 

 

 


No comments: