கொரோனா
வந்து “விளையாட்டு போல” மூன்று மாதங்கள் முடியப் போகிறது. என்ன நடக்கிறது, என்ன
நடக்கப் போகிறது என்று புரியவில்லை. ஜாலியாக “எல்லாம் இன்ப மயம்” என்று இருந்த
நாம் “சட்டி சுட்டதடா” என்று பாடிக் கொண்டு இருக்கிறோம். பக்கத்து ஊருக்குப் போக பயப்படும் காலமாக
ஆகிவிட்டது. தும்மினா “தீர்க்காயுஸு”
என்றதெல்லாம் போய், இன்று தும்மினா, ராஜீவ் காந்தி ஜெனரல் ஆஸ்பத்திரியா,
ஸ்டான்லியா என்று கேட்கும் காலம் வந்து இருக்கிறது.
இதன்
நடுவின் செல் போன் எடுத்து, யாருக்ககாவது போன பண்ணினால், நமக்கு கொரோனா நிஜமாகவே
வந்து விட்டது போல், ஒரு பெண், இருமலுடன் “உங்களுக்கு கொரோனாவா” என்று மிரட்டலாகப்
பேசுவது இன்னும் கொடுமை. ஏனோ, “இன்று இப்படம் கடைசி” என்று கிராமத்தில் நோட்டீஸ்
ஒட்டுவான் - அந்த ஞாபகம் தான்
வந்தது.
வீட்டிற்குள்
முடங்கிக் கிடக்கும் மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துக் கொண்டு
இருக்கின்றார்கள். டிவி, கம்ப்யூட்டர், யூ
டியூப், என்று பல சாதனங்கள் இருந்தும், எதோ ஒரு வெறுமை. வாட்ஸ் ஆப் என்று ஒன்று
வந்து மாரடித்துக் கொண்டு இருக்கிறது. ஒரே
விஷயம் பல குரூப்ல் வந்தது கூட தெரியாமல், திருப்பி திருப்பிப் படித்துக்
கொண்டிருக்கிறோம். (கொடுமை டா சாமி)
நான்
கொரோனா ஆரம்பித்த போது சிங்கார சென்னையில் இருந்து தப்பித்து கும்பகோணம்
சென்றுவிட்டேன். என் மனைவியின் ஊர்
என்பதால் ரொம்ப நாளைக்கு அப்புறம் கும்பகோணம் போகும் சுகம் (எனக்கும் தான்).
அடுத்த நாள் என் பெற்றோர்கள் இருந்த வரகூர் (திருவையாறு அருகில்) போவதாக பிளான்.
ஆனால் கொரோணா போட்ட போடில் நான் 15 நாட்கள் தங்கினேன்.
எனக்கு
வாய்த்த “புக்காம்” (புக்ககம்) மாதிரி எல்லோருக்கும் கிடைக்காது. கும்பகோணத்தில்
சோலையப்பன் தெருவில் இருக்கும் எங்கள் வீட்டில் வாசலில் இருந்து கொல்லை வரை
நீங்கள் இரண்டு மூன்று முறை நடந்து சென்றால் உங்களுக்கு “சுகர்” வராது. நான் பிறந்த
செம்மங்குடி வீட்டை அடிக்கடி ஞாபகப்படுத்தும். 15
நாள் நல்ல அனுஷ்டானம், பூஜை, சாயந்தரம் விஷ்ணு சஹஸ்ரநாமம் மற்றும் இதர
பாராயணங்கள் -. அழகான ஆன்மீக வாழ்க்கை.
கும்பகோணத்தில்,
எல்லா கோவிலும் மூடி இருந்ததைப் பார்க்கும்போது
நிஜமாகவே மனது கனத்தது. சாதாரணமாக நான் வந்தால் 1 நாள் தங்குவேன். கும்பேஸ்வரரையும்
மங்களாம்பாளையும் பார்த்து விட்டு கிளம்பி விடுவேன். இப்போதுதான் இந்த ஊரை சற்று விஸ்தாரமாக
பார்க்க முடிந்தது. ATM Center ஐ விட கோவில்கள் அதிகமாக இருக்கிறது. ஒரு தெருவில் இரண்டு கோவில், சிறியதும், பெரியதுமாக.
கற்பாகாம்பாள்
கோவில் அருகில் இருக்கும் எனக்கே “அஹோ பாக்கியம்” என்று நினைக்கும்போது, இவ்வளவு
கோவிலுக்கு அருகில் இருக்கும் கும்பகோண மக்கள் எவ்வளவு புண்ணியம் செயதிருக்க்
வேண்டும் ? கும்பகோணம் ஒரு கிலோ மீட்டர்
சுற்று வட்டாரத்தில் இருக்கும் கோவில்களில் உள்ள தெய்வங்களை ஒழுங்காகச்
சொல்பவர்களுக்கு, பத்ம ஸ்ரீ அவார்டுக்கு பரிந்துரை செயவேன். – அவ்வளவு கோவில்கள்
இந்தப் 15
நாட்களில் நான் தினமும் பூ, பழம் வாங்க, பக்கத்துக்கு வீட்டு, (உ..பி.ச)
கணேசன் ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு கும்பேஸ்வரன் கோவிலை ஒரு சுற்று வருவேன். கும்பேஸ்வரன் கோவிலில் வாசலில் இருந்த பூ-ஆயா
“நான் சாதாரணமாக தினமும் Rs. 1000 வரை பூ விற்பேன். பிரதோஷம், சங்கட ஹர சதுர்த்தி
என்றால் Rs.3000 வரை கூட
விற்பேன்” என்று சொன்னாள். 5 ட்ரில்லியன்
எகானமி எங்கு ஆரம்பிக்கிறது என்று உணர முடிந்தது.
திடீரென்று ஒரு நாள், பூக்கள் எல்லாம் ரோடில். மாஸ்க் போடாமல் பூ விற்றதால்
- போலீஸ் அலப்பறை.
சில ஆச்சர்யமான நல்ல விஷயங்கள் நடந்தன:
ஆத்திசூடி முதல் அச்சித்ரம் (வேதம்) வரை “ஆன்லைன்” கிளாஸ் வந்து விட்டது.
யாரைக் கேட்டாலும் “சார் என்னை 2 PM
– 4 PM disturb பண்ணாதீர்கள்.
சஹஸ்ரநாமம் கிளாஸ் இருக்கிறது. திருப்புகழ் கிளாஸ் என்று ஒரு குரூப். பஞ்ச பாத்திர உத்தரிணி என்பது பாக்யராஜ்
படத்தில் சொல்வது போல், ஐந்து பாத்திரம் என்று சொன்னவர்கள் எல்லாம், உண்மையாகவே, ஸந்தியாவந்தனம்
பண்ண ஆரம்பித்து விட்டார்கள். பூணல் போட்டதில் இருந்து, த்ரி கால சந்த்யாவந்தனம்
பண்ணாமல் “பிசி” ஆக இருந்தவர்கள் எல்லாம், கொரோனா “புண்ணியத்தால்” அனுஷ்டானம் பண்ண
ஆரம்பித்து விட்டார்கள். பல பேர் எனக்கு போன் செய்து, “சார்
சஹஸ்ர
காயத்ரி பண்ணுங்கோ, பண்ணினால் உங்களுக்கு ஓஜஸ், தேஜஸ் எல்லாம் வரும்.” என்று “ஸ்ரீ
சேங்காலிபுரம் அனந்த ராம தீக்ஷிதர்” பாணியில் எனக்கு உபன்யாசம் பண்ணினார்கள்.
ஏதன்
மத்தியில், “சஹஸ்ர காயத்ரி வாட்ஸ்ஆப் க்ரூப் ஒன்று ஆரம்பித்து, அதில் தினமும் ஸ.கா
பண்ணுகிறவர்கள் “Progress
Report” கொடுக்கவேண்டும். ஆக மொத்தம் பிராமணர்கள் பலர் பிராமணர்களாக வாழ வழி
செய்த கொரோனாவுக்கும் நன்றி சொல்லியே ஆக வேண்டும். மகா பெரியவா, “சந்த்யாவந்தனம் பண்ணுங்கோ” என்று
அன்பாக சொல்லி செய்யாததை, அதிரடியாக செய்ய வைத்திருக்கிறது நம் கொரோனா !!!
ஒரு
பக்கம் டீ வீயில் ராமாயணம், மகாபாரதம் ஓடிக் கொண்டிருந்தாலும், சங்கரா டீ வீயில்,
ஒரு லக்ஷம் விஷ்ணு சஹஸ்ரநாமம், லலிதா சஹஸ்ரநாமம் என்று போய் கொண்டிருக்கிறது.
வரஹூர் என்ற எங்கள் கிராமத்தில் இருந்த போது, பெண்கள் ஒன்றாக சாயந்திரம் லலிதா
சஹஸ். ஜபிப்பது என்று முடிவு செய்து, ஒன்றாக கலந்தது ஆச்சர்யம்.
சத்தியமாக,
பல ஆண்கள் சௌந்தர்ய லஹரி, நாரயணீயம் “on line” படித்து
சொன்னதை நான் கிராமத்திலும் பார்த்தேன்.
ஆன்
லைனில், ஸ்ரீ ஜெய கிருஷ்ண தீக்ஷிதர், ஸ்ரீ சுந்தர குமார் என்ற பல பெரியவர்கள்,
உபன்யாசம் செய்து வருவதை பார்க்க (கேட்க) முடிகிறது.
இந்த
சமயத்தில். நான் என் செம்மங்குடி தாத்தா, பாட்டிக்கும் என் பெற்றோர்களுக்கும்
என்றென்றும் கடமைப் பட்டுள்ளேன். ஏனெனில், சந்தியாவந்தனம் சிறிய வயதில் செய்ய
வைத்து, விஷ்ணு சஹஸ்ரநாமம் “நெட்ரு” பண்ண வைத்து (நாலு வரி சொனாதான் சோறு !!!), பின்பு,
துபாயில் நான் வேலை செய்து கொண்டிருந்த போது லலிதா சஹஸ்ரநாமம் சொல்லி, கத்து
கொண்டதற்கும், மனைவியின் அத்தை குடும்பத்தில் உள்ள நல்ல உள்ளங்கள் மூலம், சாளக்ராம பூஜை பஞ்சாக்ஷரி போன்ற பல நல்ல விஷயங்களில் ஒரு ஆர்வம் வருவதற்கும், - அவர்கள்
போட்ட விதையே காரணம்.
எனக்கு
கொரோனா “லாக் டௌன் ல்” வித்யாசமே தெரியவில்லை. இந்த பூஜை “ஆபீஸ் போவதால்” பண்ண
முடியவில்லையே என்று நினைத்ததை நன்றாக “உண்டு” என்று பண்ணினேன்.
கொரோனா
நம் கடந்த கால வாழ்க்கையை நினைவு படுத்தி இருக்கிறது. சினிமா இல்லாமல், ஹோட்டல்
இல்லாமல், “மால்” இல்லாமல், என் கோவில் கூட இல்லாமல் (பிராமணன் கோவில் போக வேண்டிய
அவசியமில்லை. வீட்டில் பண்ணும் காயத்ரியும், பூஜையும் போறும் என்று அன்று சொன்னதை இன்று உணருகிறோம்). வேறு
வழியே இல்லாமல் பெற்றோர்களுடன், மனைவியுடன் குழநதைகளுடன், நீண்ட நேரம் செலவு செய்ய
ஆரம்பித்து. “அட, இதிலும் ஒரு சுகம் இருக்கிறது” என்று உணர ஆரம்பித்து விட்டோம்.