Monday 17 December 2018

எழுதும் பணியே பணியாய் அருள்வாய்- 1) எனக்குப் பிறவி வேண்டும்


என்னடா இது, பிறவி வேண்டாம்- பட்ட பாடு போதும் என்று ஒவ்வொருவரும், நொந்து, நூலாக இருக்கும் நிலையில், இப்படி ஒரு தலைப்பா ? 

shAstraM shArira mImAMsa devastu parameshvaraH |
AchAryaH shankarAchAryaH santu me janmajanmani ||

என்று ஒரு ஸ்லோகம் உண்டு

சாஸ்த்ரம் சாரீர மீமாம்ஸா
தேவஸ்து பரமேச்வர:|
ஆசார்ய: சங்கராசார்ய:
ஸந்து மே ஜன்ம ஜன்மனி ||

“சாரீர மீமாம்ஸா” என்றால் சரீரத்துக்குள் இருக்கும் உயிரைப் பற்றி சொல்கின்ற வேதாந்த சாஸ்திரம் என்று பொருள்.

நமக்கு எத்தனை பிறவி கிடைத்தாலும் ஒவ்வொரு பிறவியிலும், சாஸ்திரமான வேதாந்த சாஸ்த்ரத்தை படிக்க வேண்டும். பரமேஸ்வரனிடம் பக்தி வரவேண்டும்.  சங்கராசார்யரிடம், குரு பக்தி இருந்து, அந்த பக்தி வளர வேண்டும் என்று பிரார்த்திக்கிறார்கள்.

இதில் ஆச்சர்யமான சில விஷயங்கள் இருக்கிறது:

ஒரு தடவை ஆதி சங்கரரிடம் பக்தி செய்து,  அத்வைத சாஸ்திரம் வாசித்து, பக்தி பண்ணினால், பிறவியே வராது. 

இது ஒரு வகை

ஒரு வேளை, நம்முடைய கர்ம வினையின் மூலமாக, ப்ராரப்தத்தின் மூலமாக, பிறவி இருக்குமேயானால், சஞ்சிதம் அவ்வளவு பலமாக இருக்குமே ! அதனால், அப்போது ஒரு ஜன்மா வருமே, ! அது இது போல் வரட்டும்.

எது போல் ?

பக்தி, வேதாந்தம் சாஸ்த்ரத்தில் ஒரு ஈடுபாடும், குரு சங்கராச்சர்யாரும் அருளும் எனக்கு வரட்டும் என்ற ஒரு எண்ணம் வளரும்படி- ஒரு ஜன்மம்

ஆகவே, அப்படிப்பட்ட மகத்தான மனிதப்பிறவி நமக்குக் கிடைத்து இருக்கிறது.

நாம் வேதாந்த சாஸ்திரம் ஸ்ரவணம் பண்ண வேண்டும். ஆச்சர்யாளிடம் பக்தி செய்ய’ வேண்டும். இதுதான் மனிதப் பிறவியின் லக்ஷ்யம். சாப்பிடுவது, உத்தியோகம் பார்ப்பது, குடும்பம், என்று பல “சரா புரா” பண்ணுகிறோமே, இது எல்லாமே, ஆத்மாவின் உண்மையான் ஸ்வரூபத்தை தெரிந்து கொள்ள சாதனமாக இருப்பதற்கு, தர்ம கார்யங்களை செய்வதற்கு, அனுஷ்டானம் செய்வதற்குத் தான் என்பதை உணர வேண்டும்

சரீரமாத்யம், கலு, தர்ம சாதனம்- என்ற பதத்திற்க்கு ஏற்றவாறு, சரீர போஷணம், இதற்கு இருக்கிறதே தவிர, உண்டு, உறங்கி, கூடி, இருப்பதற்கு அன்று.

ஆகவே முக்கியமான லக்ஷ்யம் “ஆத்மானுபவம்” தான்.

ஜந்துனாம் நர ஜன்ம துர்லபம்” – அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது, “வையத்து வாழ்வீர்காள்”- போன்ற பல குறிப்புகள், நம்மை செம்மையான ஒருவாழ்க்கை வாழ சொல்லப்பட்ட பொன் மொழிகள் தான்.

“நாலு பேர் போற வழியில் போங்கள்” என்று கிராமத்தில் ஒரு பழ மொழி உண்டு. அந்த நாலு பேர்= சமயச் ஆச்சர்யர்களான, சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள், மாணிக்க வாசகர்.- ஆவர்கள்.

நான் இதை எழுதும்போது


"பஜ கோவிந்தம்" நினைவுக்கு வந்தது. அதில், முதல் பாடலில், மூடனே,” இலக்கணம், சாஸ்திரம், இதெல்லாம் வேண்டாம். “கோவிந்தனை பஜித்தால் போதும்- என்கிறார்

என்னடா இது ? மேலே, சாஸ்த்ரங்களை ஸ்ரவணம் பண்ண வேண்டும் என்று சொன்னவர் பஜ கோவிந்தத்தில், இதெல்லாம் வேண்டாம் என்று சொல்கிறாரே- என்று நினைக்கத் தோன்றும்.

கோவிந்தனை பஜிப்பது என்பது ஆரம்பம். மெதுவாக அந்த ஒரு “கோவிந்த பக்தி” வளர்ந்து, “வெளி உலகப் பற்று” என்பது கொஞ்சம் கொஞ்சம் ஆக விலகி, கடைசியில், ஒரு குரு உங்களைத் தேடி வருவார். அவர் சரணங்களில், பூரண பக்தி கொண்டால, இதயத்தில், கடவுளைக் காணலாம்.

இதை தான், பஜ கோவிந்தத்தில் கடைசி பாட்டில் சொல்கிறார். (“ஹ்ருதயஸ்தம் தேவம்”)

மானிட ஜென்மத்தை செம்மையாக கழித்தால், இறை இன்பம் என்பது கிடைக்கும். – இது தான் “என்” திருக்குறள்...

“மானிட ஜன்மம் மீண்டும் வந்திடுமோ’ என்று M.K.தியாகராஜ பாகவதர் குந்தலவராளியில், பாடிய பாட்டு, ஏனோ எனக்கு நினைவு வருகிறது.

மாணிக்க வாசகரை,  கைலாய நாதன், “கைலாசத்திற்கு வருகுறீரா” என்று கேட்க, மாணிக்க வாசகர் “வர மாட்டேன்” என்கிறார்.

அதை ஒரு காட்சியாகப் பார்ப்போம்

சிவ பெருமான் – மாணிக்க வாசகரே- கைலாயத்திற்கு வருகிறீரா ?

மா.வா- வரவில்லை
சி.பெ- “வரவில்லையா”- அவன் அவன் கைலாசத்திற்கு வருகிறேன் என்று அலைகிறான். நீ ஏன் வரமாட்டேன் என்கிறீர்
மா.வா- “கைலாசத்தில் என்ன இருக்கிறது ? யார் இருக்கிறார்கள் ?
சி.பெ-  நான் இருக்கிறேன்
மா.வா. பிறகு
சி.பெ- உமையம்மை இருக்கிறாள்
மா.வா- பிறகு
சி.பெ - வேறு யார் வேண்டும். ?
மா.வா- அடியவர் உண்டா ?
சி.பெ- இல்லை
மா.வா- அப்படி என்றால் என்னை பூ லோகத்திலேயே விட்டு விடு !!
சி.பெ- ஏன் ?

மா.வா- சுவாமி, நீர் இருக்கிறீர், உன் உடம்பில் உமையம்மை இருக்கிறாள்.  நீவிர் இருவரும் அடியவர் மனதில் இருக்கிறீர்.  அந்த அடியவர், பூ லோகத்தில் இருக்கிறார். நான், அடியவரைத் தொழுதால், உன்னையும், உமையம்மையும் வணங்கிய புண்ணியம் எனக்குக் கிடைக்கும். அதனால் என்னை, இங்கேயே விட்டு விடு.
என்று சொல்லி, கீழே வருமாறு அதை செய்யுளில் சொல்கிறார்

“உடையாள் உந்தன் நடுவிருக்கும்.
உடையாள் நடுவில் நீ இருத்தி,
இருவீரும் அடியார் நடுவில் இருப்பீர், அதனால்
அடியேன் அடியார் நடுவில் இருக்கும் அருளைத் தருவீர்
முடியே முதல”

மேற்கூறிய இந்த டயலாக்- கீரன் அவருடைய சொற்பொழிவில் சொன்னது. அந்த “குரல் வளம்” அந்த “தமிழ்”, இன்னும், என் மனதில் இருக்கிறது.  மேற் சொன்ன மாணிக்க வாசகரின் வரிகள், மயிலாப்பூர் கற்பகாம்பாள் கோவிலுக்குப் போகும் வழியில் கல்லில் செதுக்கி இருக்கிறது.  இன்றும் படிக்கலாம்

கொஞ்சம் மேலே போய் சிந்திப்போம்;

முண்டக உபநிஷத் என்று ஒரு நூல் உண்டு.  அறிவு, ஞானம்- இவை இரண்டிற்கும் வித்தியாசம் என்ன ?  என்பதை விளக்கும்போது, இரு வகை ஒன்று- “அபர”  ஞானம், இரண்டாவது, “பர” ஞானம். அதாவது, ஆரம்ப அறிவு, விஷய அறிவு. In English, it is called lower and higher knowledge. Also it is called terrestrial and transcendental. – (தலை சுற்றுகிறதா ?)_       

என்ன சொல்ல வருகிறது என்றால்- lower knowledge is constituted of 

four Vedas-  Rig, Yajur, Sama, Atharva Vedhas

Six Vedhaangas, - Part of Vedhas

Sikshaa, - Phonetics

Kalpa,- Code of Rituals

Vyakaranam- Grammar

Nirukta –Etymology

chandas,- Metre and

Jyotisha- astrology.

அதாவது முதல் பாராவில் நாம், சாஸ்த்ரங்களை எவ்வளவு உயர்வாகச் சொல்கிறோமோ, அது சாதாரண அறிவு (lower knowledge) என்று மு. உ. சொல்கிறது

அப்படி என்றால் உயர்ந்த அறிவு என்பது என்ன ? என்று கேட்டால், - which leads to immortality or that which goes beyond the word-meaning in languages.- அதாவது விஷய அறிவு, பொது அறிவு, புத்தக ஆறிவு எல்லாவற்றையும் தாண்டி, - “வெட்ட வெளி தன்னில், மெய் என்று இருப்பவர்க்கு பட்டயம் எதற்கடி, குதம்பாய் ?!” – என்று “குதம்பை சித்தர் பாடலின் அர்த்தம் போல் இருக்கும் ?- (மோ...என்னவோ ?!!)

இந்த மு.உ- வியாக்யானம், சுவாமி சின்மயானந்தா அவர்களால் கொடுக்கப்பட்டது

மு.உ – எல்லாம் படித்து  தூக்கத்தைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம். அடுத்த ஜன்மத்தில் பார்த்துக் கொள்ளலாம்.

இப்போதைக்கு- “கோவிந்தா” போதும்

எதேச்சையாக, நான் பதிவிடும் இந்த நாள்- வைகுண்ட ஏகாதசியாக அமைந்தது என் பாக்கியம்.




No comments: