Friday 4 December 2015

A reality from திருமந்திரம்

kaRRadhum suttadhum - Part II 



Turumuler , a Shaiva Saint,  whose  “Tirumandhiram”, a verse on life style is a great one which every human being should read.   He has touched various topics on human psychology ultimately leading to spiritual enlightenment.

Some of his preaching are haunting and very disturbing.  This requires lot of maturity to accept. 
I read an interesting verse recently wherein he compares our life with pot, made of clay.  He says, with great difficulty, a Potter, who makes pot, brings the clay from various places and tests it carefully before making it a good pot.  Clay Pot is kept in kiln to make it a real pot that can be used for various activities.
When the pot breaks, we can use the bottom portion for keeping some water or some food at least.  We can even use this to fry some vegetables. Top portion can be used as a stand in the kitchen.
The above activities, sort of a long process, is done by a potter, human being. But when that human being dies (breaks),  others cannot use the body.   It is absolutely useless.  Even the spouse who loved till be breathed last, wants the body to be moved out of the house for burial.   Others start pestering to remove the body before it (body) pollutes the air.

Without knowing the reality, we live our life with all the luxury and fun without even an iota of thinking of the “Pot life”

TirumUler concludes that one should understand the life and live spiritually keeping in mind the above reality.

வளத்திடை முற்றத்தோர் மாநிலம் முற்றும்
குளத்தின் மண்கொண்டு குயவன் வனைந்தான்
குடம் உடைந்தால் அதை ஓடு என்று வைப்பார்
உடல் உடைந்தால் இறைப்போதும் வையாரே!
(
திருமந்திரம்-157)

அனைத்தையும் தூக்கிப்போட விரும்பாமல் உபயோகப்படுத்திக் கொள்ளும் நம் கருமித்தனத்தைச் சொல்லும் பாடல் இது. பாடலின் பொருள் எளிமையாகப் புரிந்தாலும் அபூர்வமான பாடல். மண்பாண்டம் செய்பவார்கள், பல இடங்களிலும் சுற்றித் திரிந்து, நல்ல வளம்உள்ள மண்ணாகத் தேடிப் பார்த்துக்கொண்டு வருவார்கள்; பிறகு அதைக் கொண்டுவந்து தங்கள் இல்லத் தில் வைத்து மண்பாண்டங்களாகத் தயாரிப்பார்கள். அம் மண்பாண்டங்களை வாங்கி நாம் பயன்படுத்துவோம். அப்பாண்டங்கள் நன்கு கையாளப்பட்டு, உடைந்துபோய் விட்டால், அப்பாண்டங்களின் அடிப்பகுதியை,ஏதாவது வறுப்பதற்காக வைத்துக்கொள்வோம். மேல் பகுதியாக, வட்டவடிவ மாக உள்ளதை, வேறு ஏதாவது வைக்க,அடிப்பீடமாக உபயோகப்படுத்திக் கொள்வோம்.

ஆனால்இவ்வளவும் செய்யும் நம்உடம்பில் மூச்சு நின்றுபோய் விட்டால், கணவரோ-மனைவியோ, வீட்டில் உள்ள வேறு யாருமோ மூச்சு நின்றுபோன மனித உடலை வைத்துக்கொள்ள மாட்டார்கள். பல்லையோ அல்லது உட லின் ஏதாவது ஒரு பாகத்தையோ, எடுத்துப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள மாட்டார்கள். “என்னப்பா! இன்னுமா எடுக்கல!”என்று பேச்சு எழும். கூடுதலாகக் கொஞ்ச நேரம் வைத்திருக்கவும் விரும்பமாட்டார்கள். இப்படிப் பட்ட உடம்பை வைத்துக் கொண்டுதான், நாம் அனைவரும் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிக்கொண்டிருக்கிறோம். இதை இடித்துரைத்து, நம்மை உணர வைக்கிறார் திருமூலர்

No comments: