சாஸ்திர ரத்னாகர தேதியூர் சுப்பிரமணிய சாஸ்த்ரிகள் அவர்களின் நூற்றாண்டு
விழா நினைவாக வெளியிடப்பட்ட “ப்ரஹ்ம வித்யா உபாக்யான சதகம்” என்ற நூலில்
இருந்து சில பகுதிகள்:
பாஷ்ய பாவக்ஞ வரகூர் கல்யாண சுந்தர சாஸ்த்ரிகள்: (கட்டுரை எழுதியவர்- நான் வழி மொழிகிறேன்-அவ்வளவுதான்)
விதேஹ
நாட்டின் மாமன்னருள் ஜனகர் ஒரு சமயத்தில் “பஹு தட்சிணம்” என்ற பெயருள்ள வேள்வியைச
செய்தார். அப்போது அந்த வேள்வியில்,
அழைக்கப்பட்டும், அழைக்கப்படாமலும், குரு தேசத்தில் இருந்தும், பாஞ்சால தேசத்தில்
இருந்தும், மற்றும் பல தேசங்களில் இருந்தும் அனேக பிராஹ்மணர்கள் அங்கு வந்து
கூடியிருந்தனர்.
அவர்களைப்
பாரதத்துடன் ஜனக மகாராஜாவுக்கு, பிராமணன்’ என்ற உபநிஷத் வாக்கியத்தின் படி
உண்மையில் பிரஹ்மத்தை அறிந்த பிராஹ்மணன் யார்” என்று அறியவேண்டும் என்ற எண்ணம்
ஏற்பட்டது. அதற்கு உபாயமாக ஒரு பரந்த திடலில், நடுத்தர வயதுள்ள ஆயிரம் பசுக்களை
நிறுத்தி, ஒரு பசுவிற்கு, இரண்டு கொம்பிலுமாக, இரண்டரை கிராம் தங்கத்தை கட்டி,
வேள்விக்கு வந்திருந்த பிராஹ்மணர்களிடம் “உங்களுள் யார் சிறந்த பிராஹ்மணர்களோ
அதாவது ப்ரஹ்மத்தை நன்கு அறிந்தவர்களோ, அவர்களுக்கு இந்த பசுக்களை பரிசாகத்
தருகிறேன்” என்றார்.
அதைக்
கேட்டு அங்கு இருந்தவர்களுள், யாக்ஞவல்க்யரைத் தவிர, வேறு ஒருவரும், பசுக்களை ஓட்டிச்
செல்ல துணியவில்லை. அப்பொழுது, யாக்ஞவல்க்யர் தன்னிடம் சாம வேதம் பயிலும் ஒரு
சீடனைக் கூப்பிட்டு அவ்வளவு பசுக்களையும் தனது வீட்டிற்க்கு ஒட்டிச்செல்லுமாறு
கூறினார். இதைக் கண்டு திகைத்துப் போன மற்ற ப்ராஹ்மணர்களுள், ஆச்வலர், ஆர்த்த
பாகர், புஜ்யு, உஷஸ்த்தர், கஹோளர், ஆருணி, காரகர், சாகல்யர் போன்றவர்கள், யாக்ஞவல்க்யர்
பொறாமை கொண்டு, நீர் ப்ரஹ்மிஷ்டரா ?
அல்லது பசுக்களை அடைய வேண்டும் என்ற ஆசையில் இதை செய்தீர்களா ? என்று கேட்க, அதற்கு
யாக்ஞவல்க்யர் வினயமாக, “பிரம்மிஷ்டர்களை நாம் வணங்குகிறோம். பசுக்களின் மேல் உள்ள
ஆசையினால் மட்டும் தான் இதை செய்ய துணிந்தேன்.” என்று கூறினார்/
இருந்தாலும்,
அவர் பிரம்மிஷ்டர் அல்ல என்று நிரூபிக்க அவரிடம் பல தரப்பட்ட கேள்விகள்
கேட்டார்கள். அவை யாவற்றிற்கும், சரியான விடை சொல்லி, யாக்ஞவல்க்யர். அவர்களைத்
தோற்கடித்து. நானே உண்மையில் மிகச் சிறந்த ப்ராஹ்மணர் என்று நிரூபித்தார்.
முடிவுரை:
(என்னுரை)
ப்ருஹதாரண்யகம்
– மூன்றாவது அத்தியாயதிலிருந்து ஒரு சிறிய பகுதி இது. இதை எழுதியவர், எங்கள் வரகூரைச் சேர்ந்தவர்
என்பது எனக்குப் பெருமை. சம்ஸ்கருத
பாஷையில் மிகவும் பண்டிதராக விளங்கி இருக்கிறார் என்பதும், பல கிரந்தங்களை இயற்றி
இருக்கிறார் என்பது அவருக்குக் கொடுக்கபட்டு இருக்கிற “அடை மொழியில்” தெரிகிறது.
யாகஞவல்க்யரைப்
பற்றிப் படிக்க பிரமிப்பாக இருக்கிறது – இப்படியும் ஒரு மகான் இருக்க முடியுமா
என்று ?
யாக்ஞவல்க்யர்,
சுக்ல யஜுர் வேதத்தை நமக்கு வழங்கியவர். பிரம்ம ரதன் என்பவர்க்கும், சுனந்தா
தேவிக்கும் பிறந்தவர். பிரசவம், நீண்ட
நாடகள் ஆகாமற் போகவே, சுனந்தா தேவி, உள்ளே இருக்கும் சிசுவிடம் கேட்க, “நான் ஸ்ரீ
மந் நாராயணின் அணுக்ரஹம் கிட்டினால் தான் அவதரிப்பேன்” என்று குரல் வந்தது. உடனே
பிரம்ம ரதன், மகாவிஷ்ணுவை நோக்கித் தவம் இருக்க, ஐந்து வருடம் கழித்து
யாகஞவல்க்யர் பிறந்தாராம். இவர் எழுதிய “யாக்ஞவல்கியர்
ஸ்ம்ருதி” என்ற நூல்தான், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு ஆதாரம் என்பது
ஆச்சர்யம் கலந்த உண்மை.
இதை விட
மேலும் ஒரு ஆச்சர்யம், வேத வியாசரிடம் (or vaisambaayanar) சீடனாக இருந்து, யஜுர் வேதம் கற்றுக்கொண்ட
யாகஞவல்க்யர், பிறகு வியாசரிடம், ஏற்பட்ட, மனக் கசப்பு காரணமாக, தான் கற்ற கல்வியை
மீண்டும் வியாசருக்கே திரும்பித் தர நேரிட்டது.
தான் கற்றதை அப்படியே தன வாய் வழியாக கக்கி விட்டார். அதை வேத மாதா, ஒரு பறவை வடிவில் வந்து உண்டது.
அப்படி வந்ததுதான் “தைத்ரிய உபநிஷத்”.
No comments:
Post a Comment