Wednesday, 27 June 2012

kaRRadhum Suttadhum- Part IV

Another Excellant Article on one of the important rituals.  All ritials, in Hinduism, are connected to God. We were not allowed to do anything alienating God.  The thread woven around us connecting God and rituals is amazing.. This articles again echoes my feeling..


பசும்பொன்முத்துராமலிங்கத் தேவர் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது... தெய்வ பக்தி மிகுந்தவர். அவரது சமகாலத்து அரசியல்வாதிகள், ஆட்சியாளர்களுக்கு, சிம்ம சொப்பனமாக விளங்கியவர்.

சிவகங்கை மன்னர் சண்முகராஜாவின் மகன் கார்த்திகேய வெங்கடாஜலபதி ராஜாவின் காதணி விழாவில் கலந்து கொண்டு, தேவர் பேசினார். அவரது அந்தப் பேச்சு, எந்தத் தொகுப்பிலும் இதுவரை வெளிவரவில்லை... எதிர்பாராத விதமாக என்னிடம் சிக்கியது அந்த தொகுப்பு. பேச்சில் இருந்து ஒரு பகுதி...

காது குத்தல், கல்யாணம் என்ற வைபவம் தமிழன் மட்டுமே ஒரு தெய்வ வழிபாடாகக் கொண்டாடும் வைபவம். சிவகங்கை அரண்மனையில் கோலாகலமாக நடத்தப்பட வேண்டிய இந்த வைபவம், தென்னவராயன் புதுக்கோட்டை கிராமத்தில், பொட்டலில் அமைந்திருக்கும் அய்யனார் கோவிலில் ஏன் நடக்கிறது?

தமிழன் இறை பக்தி மிகுந்தவன். தனக்குக் குழந்தை பிறந்தவுடன் மட்டற்ற மகிழ்ச்சியடைந்து தன் குழந்தையின் முகமண்டலத்தைப் பார்க்கிறான்; மூக்கை பார்க்கிறான்; அழகான வாயைப் பார்க்கிறான்.

அதே சமயம், குழந்தையின் காதைப் பார்க்கிறான்; அதன் வடிவத்தைப் பார்க்கிறான். தனக்கு இந்த குழந்தை பாக்கியத்தை அளித்த இறைவனின் ஓங்கார வடிவமாக காது அமைந்திருப்பதை எண்ணி மகிழ்கிறான்.
ஓங்கார வடிவமாக அமைந்துள்ள ஆண்டவனுக்கு நன்றி செலுத்த எண்ணி, தன் குழந்தைக்கு முதன், முதலாக கொண்டாடும் வைபவத்தை, காது குத்து கல்யாணமாக நடத்தி, ஓங்கார வடிவத்திற்கு நிரந்தர காணிக்கையாக, தங்கத்தாலான ஒரு ஆபரணத்தை காதில் அணிவித்து, அதையே ஒரு விழாவாக நடத்துகிறான்.

கடவுள் நாத வடிவம்; அந்த நாதத்தை அறிவது காது தான். காதின் வழியாகத் தான் ஆதிகாலத்தில் மனிதன் ஞானம் பெற்றான். அதை உணர்ந்து காதணி வைபவத்தை இறைவனுக்குச் செய்யும் தொண்டாக எண்ணினான் தமிழன்.

வினாயகரை வணங்கும் போது, "துங்கக் கரிமுகத்துத் தூமணியே, நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா!' என்று வணங்குகிறான். பிள்ளையாரை ஞானக் கடவுளாகத் தமிழன் உணர்ந்து, தான் வணங்கும் போது, இரு காதுகளையும் இழுத்து வணங்கி, தலையில் குட்டிக் கொள்கிறான், ஏன்?

பழங்காலத் தமிழன் உடற்கூறு சாத்திரத்தை நன்குணர்ந்தவன். காதின் வழியாகச் செல்லும் சிறு நரம்புகள் இயங்கித் தான், தலையில் இருக்கும் மூளைக்கு ஞானம் செல்கிறது என்பதை உணர்ந்திருந்தான்.

ஆசிரியரிடம் படிக்க, குழந்தையை சேர்க்கும் தாய், "ஐயா, நல்லா காதை திருகி, தலையில் குட்டி சொல்லிக் குடுங்க...' என்பாள். ஏன் காதை திருகச் சொல்ல வேண்டும்? தலையில் குட்டச் சொல்ல வேண்டும்?

காதிற்கு சுறுசுறுப்பு ஏற்படுத்தி, தூங்கும் மூளையை எழுப்பி விடத்தான் காதை முறுக்கி, தலையில் குட்டச் சொல்கின்றனர். மூக்கைத் திருகவோ, கையை முறுக்கவோ சொல்வதில்லை!

 
இப்போதெல்லாம் பள்ளியில் மாணவன் காதை வாத்தியார் திருகி, தலையில் குட்டினால், பெற்றோர் கச்சை கட்டி சண்டைக் கோழியாக அல்லவா மாறி விடுகின்றனர்.

No comments: