Wednesday, 3 September 2025

01.9.25 - செம்மங்குடி பிரவேசம்

 

செம்மங்குடியில் ருத்ர த்ரிஷதி (லக்ஷம் ஆவர்த்தி)

செம்மங்குடி போவதென்றால், எனக்கு எப்போதுமே குஷிதான். நான் பிறந்த இடம், வளர்ந்த இடம். நான் முதலில் பார்த்த மனிதர்கள், வீடு, கோவில், குளம், மரங்கள்.....

சர்க்கரைப் பொங்கலை பார்த்துக் கொண்டிருந்த என்னை, முகத்தை திருப்பி, அகஸ்தீஸ்வரரைப் பார்க்க வைத்த என் அன்பு தாத்தா  ஸ்ரீ. ராமமூர்த்தி சாஸ்த்ரிகள் இருந்த, சுவாசித்த இடம். வெள்ளிக்கிழமை குமுட்டியில் பாயசம் வைத்து, அதை நைவேத்யம் பண்ண ஆனந்தவல்லி யிடம், - இவன் வழியில் சாப்பிடமாட்டான் – என்று நம்பி அனுப்ச்ச என் பாட்டி- அலமேலு அம்மாள்-  கோலோச்சிய இடம்.

“யானி காணிச பாபானி” – மாதிரி, எங்கு சென்றாலும் செம்மங்குடி செல்லவேண்டும் என்ற எண்ணம் எப்போதும் எனக்கு உண்டு. மாட்டு வண்டியில் சென்று, திரும்பி வரும்போது, மாடுகள் வேகமாக வரும். -வீட்டில் தீனி இருக்கும். சாப்பிட வேண்டும் என்று.- அது போலதான்.

அகஸ்தீஸ்வரருக்கு, பவித்ரோஸ்வம் நாளில், த்ரிஷதி யில் (லக்ஷம்) தடவை சொல்ல வேண்டும் என்று முடிவாகி, 1.9.25 அன்று என்னையும், சொல்ல அழைத்து இருந்தார்கள். கடந்த 10 நாட்கள், உடல் நிலை சற்று “முன்ன பின்ன” இருந்தாலும், ஒரு வைராக்யத்தில் மன்னை விரவு ரயிலில் ரிசர்வ் செய்து கிளம்பி விட்டேன்.  

மாமா, மாளிகை மாதிரி கட்டி இருக்கும் வீட்டில், இருக்க கசக்குமா என்ன ?

காரில் செல்பவர்கள் விட, ரயிலில் செம்மங்குடி செல்வது சுகம் மன்னை எக்ஸ்ப்ரெஸ் ல், விடியற்காலை 5 மணி சுமாருக்கு திருவாரூரில் இறங்கி, புது பஸ் ஸ்டாண்ட் வந்து, அங்கு முதல் கும்பகோணம் பஸ்ஸில் ஏறி. அரசவனங்காடு ஆஸ்பத்திரியில் இறங்கி, மொபைலில், பிதாமகரின், மாருபல்கவோ, (ஸ்ரீரஞ்சனி) க்ஷீனமையோ (முகாரி)......கேட்டுக்கொண்டு, தீபங்குடி வழியாக, நாயைப் பார்த்து பயப்படாமல், அப்படியே சோழ சூடாமணி ஆற்றின் கரையில் இருக்கும் பிள்ளையாரையும், அய்யனாரையும் பார்த்து, சிவன் கோயில் அருகே, லெப்ட் எடுப்பதற்கு முன்பு, எனக்கு “அ” சொல்லிக்கொடுத்த, சின்ன பள்ளியையும், அ”ண்டசராசரங்களையும் ஆட்டி வைக்கின்ற எங்கள் ஆனந்தவல்லியையும் பார்த்து விட்டு நேரே மேற்கே, தாயாருடன் வரதராஜ பெருமாள்..........

அனுபவித்தேன் . ஆனால் இந்த முறை ஒரு வித்தியாசம். மொபைலில், செம்மங்குடியின், 1956 சங்கீத வித்வத் சபையில், T.N.Krishnan, பிடிலுடன் Vellore Ramabhadran, மிருதங்கம் வாசிக்க Vilvadri Iyer கடம் வாசிக்க, கௌரிமனோஹரியின், தியாகராஜரின் “குருலேக எடுவண்டி” ...ஆஹா.......

அகஸ்தீஸ்வரருக்கு, த்ரிஷதி ல.அர்ச்சனை. பெரும் பாக்கியம். கூடை கூடையாக பூ.  என்கண், செருகளத்தூர் பகுதியில் இருந்து வந்த மிகச் சிறந்த குருக்கள்மார். 10 குருக்கள் சன்னதி உள்ளே உட்கார்ந்து, ஜபிக்க, நாங்கள் ஒரு 15 பேர் வெளியில்.

முதலில், “ஸஞ்சமே, பிறகு ஓம் நமோ பகவதே ருத்ராயா. (நமோ ஆஸ்து பகவன் வரை), பிறகு “த்ரிஷதி” – முடிவில் “த்ராபே அந்த..... கடைசியில் ஸஞ்சமே.....இது ஒரு ஆவர்த்தி...... 

8 மணிக்கு ஆரம்பித்து, நடுவில் 3 முறை 15 நிமிட இடைவெளி கொடுத்து, ஐந்து தீபாராதனை முடிந்து சாப்பிடும்போது மணி 3 PM. பட்டையை கிளப்பும் அர்ச்சனை. தெறிக்க விட்டார்கள் .....

கடைசியில், மஹா தீபாராதனை, 5 பேர் செய்து காட்டிய ஒரு காட்சி இருக்கிறதே,  அட அடா.  இது என் WUP profile photo ஆக போட்டு இருக்கிறேன்.

அழகாக, பிரிண்ட் செய்யப்பட்ட, த்ரிஷதி யுடன் கூடிய, புத்தகம் கொடுத்தார்கள். மறக்காமல் முடிந்தவுடன் திருப்பி வாங்கிக் கொண்டார்கள்

முதுகு வலி, கால் வலி, பசி, மொபைலில் பிசி.......ம்ஹூம் – 

அந்த காலத்தில், ஸ்ரீ சிவகுரு தீட்சிதர், ஸ்ரீ குமாரு தீட்சிதர், என் தாத்தா, நின்று கொண்டே ருத்ரம், சமகம் சொல்வதைப் பார்த்திருக்கிறேன். அதுவும், மகான்யாசத்துடன்) குங்கும பிரசாதம் தான். இப்போது மூன்று தடவை சொன்னால், கஞ்சி ப்ரீ. ஆறு தடவை சொன்னால், ஆப்பிள் ஜூஸ்...... சொல்ல மாட்டேன் என்கிறோம். செம்மங்குடியில்  நம் மக்கள் எங்கே போனார்கள் ????

எப்போதுமே ஆனந்தவல்லிக்கே பூஜை, அபிஷகம், பூப்பந்தல் என்று இருக்க, “சிவனே” என்று இருக்கும் எங்கள் சுவாமிக்கு வட்டியும் முதலுமாக அவருக்கு கிடைக்கப்பெற்ற லக்ஷம் ஆவர்த்தி த்ரிஷதி -மாபெரும் வைபவம். பூவின் அளவு எப்படி என்றால், லிங்கம் மறைந்து, அதன் மேல் வைத்து இருந்த நாகாபாரணமும் மறைந்து, அப்பப்பா ஒரே பூ மயம். ரொம்ப அழகு.

எனக்கு அப்பைய தீட்சிதர் ஸ்லோகம் நினைவுக்கு வந்தது. ஒரு தும்பைப் பூவோ, எருக்கம் பூ வோ போட்டால் போறும். மோக்ஷ சாம்ராஜயம் கொடுக்கும் உன்னை புரிந்து கொள்ளாமல், நான் சம்சார ஸாகரத்தில் உழன்று கொண்டிருக்கிறேனே என்று புலம்பித் தள்ளுகிறார்.

அதையும், அவர் உன்மத்த நிலையில் சொல்கிறார். “அர்கத் த்ரோண ப்ரப்ருதி குசுமை:” என்று ஆரம்பிக்கும் “உன்மத்த பஞ்சஷதி”. யு டியுப் ல், மஹா பெரியவா இந்த விளக்கம் சொல்வது, இன்றும் இருக்கிறது

அப்படி சொன்ன அந்த சுவாமிக்கு, இவ்வளவு பூ !!!

எங்கள் அன்பு ஏகாம்பரம் மாமா, (மூன்று தலைமுறையைப் பார்த்து, இப்போது நான்காவது பார்த்துக் கொண்டிருக்கிறார்)  “நீ வருவ என்று தெரியும்” என்றார்.

நான், மனதிற்குள் என்கண் போய் முருகனைப் பார்க்க முடியவில்லையை என்று தாபப்பட (மத்யானமே கிளம்பி விட்டோம்) என்கண் தியாகராஜ குருக்கள் வந்து பிரசாதம், ஏகாம்பர மாமாவிடம் கொடுக்க, அதை, நான் எதிர் பார்க்க வில்லை” – என்னிடம் கொடுத்தார்

ஹரி குருக்களின் ஆளுமை, எங்கள் ஆனந்த வல்லி ஒரு பொக்கிஷம் என்றால் அதன் காவல் தெய்வம் அவர்.  அவர் கீழ் ஒரு டீம் இருக்கிறது பாருங்கள்.  பம்பரம் போல் சுழன்று வேலை செய்ய. பிரமாதம்  !!!!!!

நான் பக்கத்தாத்து வெங்குட்டு மாமா பேரன், ஸ்ரீ கல்யாணம், மற்றும் கெளரி அண்ணா குடும்பத்தில் ஸ்ரீதர் அண்ணா, என் மாமா இவர்களுடன் கழித்த அந்த தினம் ஒரு  - பொன்னாள்.

முடிவுரை

LKG படிக்கும் குழந்தை, முதல் நாள் பள்ளியில் கொண்டுவிட, அது அழுதுகொண்டே, திரும்பி அம்மாவைப் பார்த்துக் கொண்டே செல்லும்

அது போல நான் செம்மங்குடி கிராமத்தைப் பார்த்துக் கொண்டே சென்னை கிளம்பினேன் 

திரும்பி ஒரு முடிவுரை

நாங்கள் எல்லோரும் சொன்ன த்ரிஷதி யால் சுவாமி மகிழ்ந்து போனாரோ இல்லையோ தெரியாது,  ஆனால் மறுபடியும் திர்ஷதி சொல்ல வேண்டும் என்றஆசையை தூண்டிவிட்டது என்னமோ நிச்சயம்..



No comments: