மெயின் உருப்படிக்கு வருவதற்கு முன், நேற்றைய
அவரது கச்சேரியைப் பார்ப்போம்
நேற்று, (27-9-2017) நாரத கான சபாவில், பாபநாசம் சிவன் அவர்களின் நினைவாக நடந்த
விழாவில் பாடினார்.
கச்சேரி நடந்து
கொண்டிருக்கும்போது, DMK ன், முக்கிய அரசியல் வாதியான, துரை முருகன்
வந்து உட்கார்ந்தார். சஞ்சய், மெயின்
உருப்படியாக, காம்போதி ராகம் பாடிகொண்டிருக்கும்போது, பக்கத்தில் இருந்த மாமா, காணக் கண் கோடி
வேண்டும், பாடுவார் என்று கூற, பின்னாலிருந்து, “சிக்கல் மேவிய தேவா” என்று ஒருவர்
சொல்ல, நான் ஆடும் தெய்வம் நீஅருள்வாய்
என்ற பாடலத் தான் பாடுவார் என்று சொன்னேன். – நான் சொன்ன பாடலை தான் பாடினார்.
அதில் தான் “துரை” வருகிறது. பாடலில் “தரும் துரையே சபை நடுவில்” என்று ஒரு
வரி வரும். அதைப் பாடும்போது, துரை முருகன் இருந்த இடத்தை நோக்கி கை காமித்து வேறு
பாடினார். எத்தனை பேருக்குப் புரிந்தது
என்று தெரியவில்லை. அனால் எனக்குத் தெரியும்.
மேலும், துரை முருகனுக்கு பிடித்த பாடகர் சோமு. அதனால்
சஞ்சய் பாடிய காம்போதி ராகம் முழுவது, சோமு பிடிதான். நாதஸ்வர மயம். பயில்வான் சோமு “பிடி” யை,
சஞ்சய் ஒரு “புடி” புடித்தார் என்று சொல்லலாம்.
அதனால் துரை முருகன்
தான் என்று தமிழைப் போட்டுத் தாக்கவில்லை. காம்போதிக்கு முன்னால், ஒரு சம்ஸ்க்ருத
பாடலும் பாடினார். அதை அசோக் ரமணி கேட்டதே இல்லை என்று சொன்னார். (இப்படி சொல்லாமல், உடனே கற்றுக் கொண்டால்,
அசோக் ரமணி அவருடைய தாத்தா, பாபநாசம் சிவனுக்கு செய்த பெரிய புண்ணியமாகப் போகும்)
அது தான் சஞ்சய். Instant rapport
with the audience. அவருடைய கச்சேரி விமரசனத்திற்கு அப்பாற்பட்டது.
சங்கீத கலாநிதி
விருது வழங்கிய பிறகு, அவருக்கு ஒரு சிறிய விழா எடுத்தோம். திருவல்லிக்கேணியில்
ஒரு சிறிய இடத்தில நடந்தது. இனிய நண்பர், எஸ்ஸல் அவர்கள் மூலமாக ஏற்பாடு
செய்திருந்தார். அதில் சஞ்சய் பேசும்போது, “இன்னிக்கு ஒரு கச்சேரிக்கு நான்
பாடினால், இந்த கச்சேரி தான் கடைசி கச்சேரி. நாளையிலிருந்து, யாரும்
கூப்பிடமாட்டார்கள், என்று நினைத்து கச்சேரி செய்வேன்” என்றார்.
“யாருக்கு அடங்காத
நீலி”, என்று ஒரு பாட்டு பாடுவார் அதில்
“காளி” என்று ஒரு வார்த்தை வரும். அதை,
மேலே பாடுவார். காளி, சூலாயுதத்துடன்,
கோரைப் பற்களோடு, வருவது போலவே இருக்கும்
எழுத்தாளர் ஜெயமோகன், சஞ்சய் பற்றி எழுதும்போது,
“பைத்தியத்தின் விளிம்புகளில் உலவ விடுகின்ற பல
குறுந்தகடுகள் உங்களுடையவை” – என்று சொல்வார்.
சஞ்சய் என்ற அசகாய
சூரர்- இன்றைய கர்நாடக சங்கீதத்தின் ஒரு பெரிய வரப்ரசாதம்.
நேற்று, எதேச்சையாக YOU TUB ஐ நோண்டும் பொது, கமாஸ்
ராகத்தில், திருமயிலை கபாலி பற்றி ஒரு பாட்டு கேட்கும் வாய்ப்பு கிடைத்தது.
“திருவளர் மயிலையில்” என்று ஆரம்பிக்கும் பாட்டு அது. எப்போதோ upload செய்யப்பட்ட வீடியோ
அந்தப் பாடலில் உள்ள
ஒரு சரணத்தையே, விருத்தமாக பாடுவார். “அகில சராசர பசுபதியாகிய” என்று
ஆரம்பிக்கும். முதல் 2 நிமிடத்தில்
கமாஸை, பிழிந்து கொடுப்பார் பாருங்கள். அட அட அடா. அறுசுவை. அதில் “பகவ” என்று ஒரு இடம் வரும். அதை வரதராஜனுடன் ரசித்து, லயித்து பாடுவார். “பகவ” மட்டும் கேளுங்கள்”- இந்த சங்கீத ராக்ஷஸனைப் புரிந்து கொள்வீர்கள். இப்படியெல்லாம் “நகாசு” வேலை செய்யும்போது, தன் உடலை “பாம்பு” மாதிரி நெளிவார், பாருங்கள். அது கொள்ளை அழகு.
கமாஸை, பிழிந்து கொடுப்பார் பாருங்கள். அட அட அடா. அறுசுவை. அதில் “பகவ” என்று ஒரு இடம் வரும். அதை வரதராஜனுடன் ரசித்து, லயித்து பாடுவார். “பகவ” மட்டும் கேளுங்கள்”- இந்த சங்கீத ராக்ஷஸனைப் புரிந்து கொள்வீர்கள். இப்படியெல்லாம் “நகாசு” வேலை செய்யும்போது, தன் உடலை “பாம்பு” மாதிரி நெளிவார், பாருங்கள். அது கொள்ளை அழகு.
இந்தப் பாடலில், 2 இடங்களில், அவருடைய “ஸ்டைல்” ஐ
காட்டுவார் பாருங்கள்.
-…அடி முடி தொடர் வரும்
-…எனை உனதற்புத சரண மலர்பத
அதுதான் சஞ்சய். Timing sense (TS) நிறைய உண்டு. உனதற்புத என்ற இடத்தில, ஒரு சொழட்டு
சொழட்டுவார் பாருங்கள். அட அடா.....
அவர் தமிழ் விருத்தம்
பாடுவதுபோல, வேறு யாரும், அவ்வளவு, ராகத்தையும், உச்சரிப்பையும் சரி சமமாக
குழைத்து கொடுப்பதில்லை.
“இன்னமும் ஒரு தலம்”
என்ற ஒரு “பெஹாக்” ராக பாடல் பாடும்போது, அதற்கு முன் , “உப்பும் கற்பூரமும்” என்ற
ஒரு விருத்தம் பாடுவார்.
கற்பகாம்பிகை நீ
அல்லவோ என்ற பாபநாசம் சிவன் பாடல் பாடுவதற்கு முன் “ஆடும் மயிலாய் உருவெடுத்து”
என்று ஒரு விருத்தம் பாடுவார்.
“என் தாய் வாழ் எனும்
மந்திர” என்ற பாரதிதாசன் பாடலைப் பாடிய பிறகு, இப்படி கூட அட்டகாசமாக ஒரு பாடல்,
தமிழில் இருக்கிறதா என்று தோன்றும்.
“ஆடுகளும் மாடுகளும்”
என்று பாடினார், வாயப் பிளந்து கேட்டுக் கொண்டு இருக்கும் அவரது ரசிகர்கள் ஏராளம்
எல்லாவற்றையும்
விடுங்கள். போன டிசம்பர் சீசனில், “பணமே உன்னால் என்ன குணமே” என்ற பாடலைக் கேட்டு,
புளகாங்கிதம் ஆகாத ரசிகர் கிடையாது.
சங்கீதத்தின் மேல்
இருக்கும் தீராக் காதல்.- உழைப்பு – இவையெல்லாம் சேர்ந்த கலவை- சஞ்சய்
மகாராஜபுரம்
சந்தானத்திற்குப் பிறகு, தமிழ் பாடல்களை, ஒருவர் பாடி, நான் வேலை மெனக்கெட்டு,
கற்றுக் கொண்டேன் என்றால், அது சஞ்சயின் தமிழ் பாட்டுக்கள்தான்.
கற்பகாம்பிகை நீ
அல்லவோ என்ற ஒரு பாட்டை, இதுவரை சுமார் 20-25 தடவை, கற்பகாம்பாள் சன்னதியில் பாடி இருப்பேன். அரி, மகிழ்
சகோதரி, கபாலி... என்று ஒரு இடம் வரும். அற்புதமாகப் பாடி இருப்பார். அதை
அவர்மாதிரியே சன்னதியில் பாடுவேன். (அதில் ஒரு அற்ப சந்தோஷம்)
சஞ்சய், அவருடைய
வீட்டில் CHARTERED ACCOUNTANCY படித்துதான் ஆக வேண்டும். மியூசிக் பிறகுதான் என்று சொல்ல,
வெறி வந்தவர் மாதிரி CA படித்து முடித்து, இப்போது பாடப் போகிறேன் என்று கிளம்பி
விட்டார். அந்த வெறிக்குணம் தான் அவர் “தொட்டதெல்லாம் துலங்க” காரணமாக இருக்கிறது- என்று எனக்குத் தோன்றுகிறது
சஞ்சய் எனக்குத்தெரிந்து, தன புகழை, தலைக்கு ஏற்றிக் கொள்ளாதவர், அந்தக்
காலத்து மிகப் பெரிய பிரபலமான பாடகர்களை “வஞ்சகமில்லாமல்” புகழ்ந்து, அவர்கள்
பாணியை அடிக்கடி தன பாட்டில் “லாவகமாக நுழைப்பார்”. நாதஸ்வரப் பிடிகள்
ரசிகர்களுக்கு புதுசு, அதனால், INSTANT ஆக ரசிகர்களின்
மனதில் இடம் பிடித்து விட்டார்.
ராம்நாடு கிருஷ்ணன், GNB, SOMU, மதுரை மணி
அய்யர் – அடிக்கடி அவரின்
கச்சேரியில், உயிர்த்து எழுவார்கள்.
ஆலத்தூர் சகோதர்களைப் பற்றி அவர் சொன்னதை YOU TUBE ல் பார்க்கும்போது, நமக்குப் புரியும், அவர் ஏதோ ஆ.சகோ பாடல்களைக்
கேட்டுப் பேசவில்லை. அதை அனுபவித்து இருக்கிறார். ஊறி இருக்கிறார். அப்போதுதான்,
சகோதரர்களைப் பற்றி, அவர்களுடைய சங்கீதத்தைப் பற்றி, அவ்வளவு நன்றாகப் பேச
முடியும்.
TS கல்யாணராமன்
அவர்களின் சார்பாக விழா எடுத்தபோது, அவரைப் பற்றி அருமையாகச் சொல்லி இருந்தார்..
BRAHMA GANA சபாவில்- கான
பத்மம் அவார்ட் வாங்கும்போது, “சங்கீத வித்வான் கச்சேரி பண்ணும்போது, சுதந்தரமாக
இருக்க வேண்டும். QUARANTINE பண்ணக் கூடாது”
என்று சொன்னார். நாதஸ்வர கலைஞரிடம் அவர்
கற்றுக்கொண்டது, பறந்து விரிந்த அவர் சங்கீதத்திற்கு, ஒரு முக்கிய காரணம்- என்றும்
கூறலாம்
T.M.KRISHNA, while
giving a speech on Ramnad Krishnan’s centenary, recently, made this point about
Ramnad Krishnan
What is it about this man’s music?
Something spectacular going on in his music- What
is this ?
We have to analyse what he invested in his music to
turn it to Gold !!
No vagueness
the way it which he conceptualised music.
Youtube ல் இந்த வீடியோ
இருக்கிறது. அவசியம், ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய ஒரு பதிவு
My
view after seeing the video:
May be, down
the line, someone will talk on Sanjay’s
music in line with Ramnad Krishnan.
(அப்பாடா. T.M.Krishna வை சஞ்சய் கட்டுரையில் கொண்டு வந்துவிட்டேன்)
அவருடைய நண்பர்களை மறக்காமல், அடிக்கடி உதவி செய்து, ஒரு மிகச் சிறந்த
நண்பர்கள் குழு, அவர் உருவாக்கி வைத்து இருக்கிறார். அவரது நண்பருக்கு முதல் ROW வில் உட்கார இடம் இல்லை என்று, அந்த சபாவுக்கு
பிறகு பாட மறுத்திருக்கிறார்.
தமிழ் இசை சங்கத்தில், 3 மணி நேரம்
கச்சேரி, செய்து விட்டு, அடுத்த நாள், பார்த்தசாரதி சபாவில், 3 மணி நேரம் கச்சேரி
செய்வார். எந்த விதத்திலும், பாடல்களில். COMPROMISE கிடையாது. கடைசி பாட்டு வரையும், ஒரே TEMPO. EXUBERANCE, POURING OF PRISTINE MUSIC.
பாட ஆரம்பிக்கும் முன்பே, தண்ணீர் குடிக்கும் பாடகர்களின் நடுவில், எப்படித்தான்,
ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்காமல் பாடுகிறாரோ என்று ஆச்சரியமாக இருக்கும் !!! .
ஸ்கூல் புத்தகங்களை தூக்கிக் கொண்டு வரும் குழந்தைகளைப் போல, பாட்டுப்
புத்தகங்களைத் தூக்கிக் கொண்டு வரும் சங்கீத வித்வான்களிடையே, ஒரு பேப்பர் கூட
இல்லாமல் பாடுவது இவருடைய பெரிய பலம்.
கை நிறைய மோதிரம் போட்டுக்கொண்டு, சட்டைக்கு வெளியே செயினை விட்டுக்
கொண்டு, வாட்ச் கட்டிக் கொண்டு, பாடும் பாடகர்களிடையே, இது ஒன்று கூட இல்லாமல்,
ரசிகர்கள், அவர்களுக்காக நான், எனக்காக அவர்கள் என்றே ஒரே குறிக்கோளுடன் சக்கை போடு போடும் ஒரு மிகப் பெரிய கலைஞர்.
இவருக்கு சங்கீத கலாநிதி “அவசியமா” “தகுதியானவர்தானா, 2-3 வருடம் கழித்து கொடுத்திருக்கலாமே
? SENIOR
ARTISTS பலர் இருக்கும்போது இவருக்குக் கொடுக்க என்ன
அவசரம் ? இப்படி பல கேள்விகள் இன்றும் உண்டு. எனக்கே அந்தக் கேள்வி மனதிற்குள்
எழுந்தது உண்மை தான். ஆனால் சில நாட்கள் கழித்து சஞ்சய் கச்சேரி வந்தபோது, முதல்
ஆளாக, சபாவில் உட்கார்ந்து கொண்டிருந்தேன்.
அதுதான் நான் சஞ்சய் மேல் நான் வைத்திருக்கும் அபிமானம்
அதற்கு என் பதில்- ரசிகர்கள், அவரை, தன் மனமென்ற சிம்ஹாசனத்தில்
எப்போதோ அமர்த்தி விட்டனர். ஒரு சங்கீத கலாநிதி AWARD அவருக்கு வராவிட்டாலும்
கூட, நாரத கான சபா- 4 PM மணி கச்சேரி, (ON A WORKING DAY) உட்கார இடம் இல்லாமல் இருக்கும் ஒரே கச்சேரி,
சஞ்சய் சுப்ரமணியம் அவர்களது தான்.- என்று நான் அடித்துச் சொல்வேன். அதை
பார்த்து வியந்தவன் நான்.
சஞ்சய்க்கு நான் எப்போதும் நன்றி சொல்வேன். என்னுடைய சந்கீதத்தின் பரிணாம
வளர்சிக்கு சஞ்சயும் காரணம் அவர்தான், அதனால்.
மகாராஜபுரம் சந்தானம் மறைவுக்குப் பிறகு, கர்நாடக சங்கீதக உலகமே,
அஸ்தமித்துப் போயிருந்த எனக்கு புனர் ஜன்மம் கொடுத்தது, சஞ்சய்.
நேற்று கூட, கச்சேரி முடிந்தவுடன் என்னைப் பார்த்து அவர் செய்த புன்னகை ஒன்று போதும். சஞ்சய் என்ற
கலைஞனை, அருகில் சென்று பார்த்து, பேச முடியும். ஆனால் நான் தள்ளி நிற்கிறேன். அதில் கிடைக்கும் சுகம் அலாதியானது.
பாரதியார் பாடியது போல் “ஈடு உனக்கோர் தெய்வம் உண்டோ, எனக்கு உனையன்றி
சரணமுண்டோ” (இந்த பாட்டையும் சஞ்சய் பாடித்தான் எனக்குத் தெரியும்).
அந்த வார்த்தைகளை மாற்றி- “ஈடு உனக்கோர் வித்வான் உண்டோ, எனக்கு உன் பாடல்கள்
அன்றி வேறு சங்கீதம் உண்டோ” என்று பாடுவேன்
இவ்வளவையும் படித்த பிறகு, சங்கீத ராக்ஷஸன்
(ர்) என்பதை ஒத்துக் கொள்வீர்கள்.....
No comments:
Post a Comment