Saturday 25 June 2016

ஹிந்தி படம் .TE3N.. விமர்சனம். (தமிழ் கௌரவம் =கொஞ்சம் comparison).



சினிமா விமர்சனம் தமிழில் எழுதுவது ஒரு சௌகர்யம்.  தமிழில் சில வார்த்தைகள் சரளமாக உபயோகிக்கலாம்.  ஆங்கிலத்தில் கஷ்டப்பட்டு இலக்கணபிழை இல்லாமல் ஒரு கட்டுரை எழுதவது கொஞ்சம் கஷ்டம்.

தாய்மொழி என்பது இன்னொரு சௌகர்யம். உதாரணமாக சல்லி அடித்தான் என்ற வார்த்தைகள் சுஜாதா அவருடைய கதைகளில் உபயோகப்படுத்துவார்.  அது அந்த situation க்கு அழகாக இருக்கும்.  இதற்கு ஆங்கில வார்த்தை தேடுவது கஷ்டம்

சுஜாதாவின் கதைகள், கட்டுரைகள் மேல் எனக்கு தீராக்காதல் உண்டு. சோகக்கதைகள் எழுதும்போது கூட அதில் இழையோடும் ஒரு நகைச்சுவை அலாதியானது.  தமிழ் கதைகள் எழுதும் யாரும் அவரது தாக்கம் இல்லாமல் எழுதவே முடியாது.

சில ஹிந்தி படங்கள் மிக சிறந்த கதைகளுடன், நேர்த்தியான தொழில் நுட்பத்துடன் வருகின்றன என்பதை மறுக்கமுடியாது.

சமீபத்தில் TE3N என்ற ஒரு ஹிந்தி படம் பார்த்தேன். அது அமிதாப்பச்சன், நவாஸ்உதின் சித்திக் மற்றும் வித்யா பாலன் நடித்த ஒரு த்ரில்லர்.  எனக்கு நவாஸ்உதின் சித்திக்கின் நடிப்பு மிகவும் பிடிக்கும்.  பத்லாபூர் என்ற ஒரு ஹிந்தி படத்தில் மிக அருமையாக வில்லன் வேடத்தில் நடித்திருந்தார். ஒரே டைப்பான ரோல் என்றில்லாமல் வில்லன், காமெடியன், ஹீரோ என்று ஒவ்வொரு படத்திலும் விதம் விதமாக பரிமளிக்கும் சிறந்த நடிகர்.
 
அவருடை பஜ்ரங் பாயிஜான் படத்தில் சல்மான் கான் ஹீரோவாக நடிக்க இவர் மிக முக்கியமான கதாபத்திரத்தில் மிக அருமையாக நடித்திருந்தார். 
அதனால் இந்தப் படம் பார்த்தேன். ஒரு கொரியா படத்தின் தழுவல் தான் இந்தப படம் என்பது டைட்டில் பார்க்கும்போது புரிந்தது.

கதை என்னவோ இதுதான். தன் பேத்தி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட அதனுடைய தாக்கத்திலிருந்து மீள முடியாமல் 8 வருடம் மன உளைச்சலில் வாழ்கிறார் அமிதாப்பச்சன்.  அவருடைய மனைவி அந்த அதிர்ச்சியில் சக்கர நாற்காலியில், போலீஸ்காரராக இருந்து இப்போது பாதிரியராக இருக்கும் அவரது நண்பர். (நவாஸ்உதின் சித்திக்)  தற்போது கிரைம் ப்ராஞ்சில் இருக்கும் வித்யா பாலன்.  இவர்கள் மூன்று பேருக்கும் இடையே நடக்கும் இந்த கதை ஒரு thriller  க்கு உண்டான எல்லா   ingredients உள்ள ஒரு படம்.  படம் பேர் இந்த மூவரை சுற்றி கதை என்பதால் “தீன்” என்று வைத்திருக்கிறார் போலும்.

மனதை தளர விடாமல் பச்சன் தினமும் போலீஸ் ஸ்டேஷன் சென்று வித்யா பாலனிடம் விசாரிக்கிறார். போலீஸ் இந்த கேசை கை கழுவி விட தான் மட்டும் “சற்றும் தளராமல்- விக்கிரமாதித்தன் போல” எதாவது தடயம் கிடைக்குமா என்று தேடுகிறார்.  

பாதிரியாரும் அமிதாபின் வைராக்யத்தை புரிந்துகொண்டு மனம் இளகி உதவி செய்ய ஆரம்பிக்கிறார்.

மெதுவாக சிறு சிறு தடயங்களை வைத்து போலிசின் உதவி இல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய கண்டுபிடிக்கும் முயற்சியில் முன்னேறிக்கொண்டிருக்கும்போது, அதே போல் இன்னொரு குழந்தை கடத்தப்படுகிறது.  எட்டு வருடம் முன்பு போல், இந்த கடத்தல் இருப்பதால் போலீஸ் மிக ஜாக்கிரதைய குற்றவாளியை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறது. குற்றவாளியை அதே பாணியில் பிடிக்கப்போக ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. அந்தக்குழந்தையை கடத்தியவர் அந்த சிறியவனின் தாத்தா என்பதுதான்.

இரண்டாவது’ பகுதி பல வித twists & turns உடன் நகருகிறது. கடைசியில் அந்த சிறியவனின் தாத்தா தான் அமிதாபின் பேரனைக்கொன்றவன் என்று படம் முடிகிறது. சந்த்தர்ப்ப வசத்தால் அமிதாபின் பேத்தி இறக்க நேர்ந்தது என்பதும் துரதிர்ஷ்டவசமாக சித்திக்கும் அதற்கு ஒரு காரணம் என்பதும் அதனால் சித்திக் பாதிரியாராக போனார் என்பதும் இன்னொரு twist.

அமிதாப் தான் அந்த குற்றவாளியை கண்டுபிடித்து அவருடைய பேரனேயே கடத்தி அவரையே மாட்டிவிடுகிறார் என்பதும் தெரிய வரும்போது உண்மையாகவே ஒரு த்ரில்லர் படத்தி பார்த்த அனுபவம்

வினை விதைத்தவன் வினை அறுப்பான், திணை விதைத்தவன் திணை அறுப்பான் என்ற பழமொழி போல, குற்றவாளி சட்டம் தண்டிக்க மறந்தாலும் கடவுள் தண்டிப்பார் என்பதை போல இந்த கதையின் அமைப்பு இருந்ததது.

கௌரவம் படம் சிவாஜி அவர்கள் நடித்த அற்புதமான படம். இந்தப் படத்தை இங்கே சொல்வதன் காரணம், இந்தப் படத்தின் கதையும் TE3N படத்தின் கதையும் ஏறக்குறைய ஒரே கதையாம்சத்தை கொண்டது.  வியட்நாம் வீடு சுந்தரம் அவர்களின் அருமையான கதை வசனத்தில் சிவாஜி இரட்டை வேதத்தில் கலக்கியிருந்த படம் இது.

நிஜமாகவே கொலை செய்த ஒருவனை தன்னுடைய வாதத்திறமையால் நிரபராதி என்று விடுதலை வாங்கித் தருகிறார்.ஒரு திறமையான வக்கீல். விடுதலை ஆனபிறகு அந்த நிரபராதி செய்யாத ஒரு கொலைக்கு மாட்டிக்கொண்டு குற்றவாளி ஆகிறான்.  வக்கீலின் திறமையான வாதத்தால் கூட அவனை விடுவிக்க முடிவதில்லை.  கை தேர்ந்த வக்கீலை அவருடைய மகன் ஜூனியர் வக்கீல் வெற்றி பெற்று அந்த நிரபராதிக்கு தண்டனை வாங்கித் தருகிறான்.

தெய்வம் நின்று கொல்லும் என்ற கூற்றை மெய்ப்பிக்கும் கதைஅம்சம் உள்ள இரண்டு படமும் மிகச்சிறப்பான நடிப்பால் உயர்ந்து நிற்கிறது.

சிவாஜியையும் அமிதாப்பச்சனையும் COMPARE பண்ணுவது என் நோக்கோமல்ல.  கதையின் ஒற்றுமைக்காக இந்த COMPARISON.

As an Old man, Amithabh excels in the character of a “helpless”old man.  He portrays the feelings of a grandfather who lost his loving daughter.

Nawazudding siddique is calm and composed.

வித்யா பாலன், சற்று குண்டாக அழகாக இருக்கிறார்.  அவர் வரும் சீனில் ஒரு அழகு இருப்பது உண்மை

No comments: