Wednesday 22 June 2016

மௌனத்தின் மகத்துவம் (Power of silence)



சும்மா இருசொல் லறவென் றலுமே
அம்மா பொரு ளொன்று மறிந்திலனே. 

மௌனமாக இருப்பது நல்லது மட்டுமில்லை, அது புனிதமானதும் கூட என்பதை உணர்த்தும் மேலே உள்ள வரிகள் அருணகிரிநாதரின் கந்தர் அனுபூதியில் வருகிறது.  சும்மா இரு என்று முன்பு சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் புரியாமல் தவித்தேன் என்கிறார் அவர். அர்த்தம் புரிந்த பிறகு அதனுடைய மகத்துவம் அபாரமானது என்பதை சொல்லாமல் சொல்கிறார்

“All great things born on Silence”

காஞ்சி பெரியவா என்று அன்புடன் அழைக்கப்படும் ஸ்ரீ சந்த்ர சேகரேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள் பல பக்தர்களின் குறைகளை, தீர்க்க முடியாத பிரச்னைகளை, தன் மௌனத்தினால் விளக்கியுள்ளார் என்றால் மௌனத்தின் வீர்யம் புரிகிறது.
தக்ஷிணாமூர்த்தி ஸ்வரூபம் நாம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். அவரைப்பற்றி ஓரு அருமையான ஸ்லோகம்

चित्रं वट तरोर्मूले वृद्धशिष्याः गुरुर्युवा गुरोस्तु
मौनं व्याख्यानं शिष्यास्तु छिन्नसंशयाः

குருவாய் தக்ஷிணாமூர்த்தி ஆலமரத்தின் கீழே அமர்ந்திருக்க அவரைச் சுற்றி பல முனிவர்கள் அமர்ந்திருக்கிறார்கள்.  தன்னுடைய சின்முத்திரையின் மூலமாக முனிவர்களின் சந்தேகங்களை மௌனமாக, தன்னுடைய மௌனத்தின் மூலமாக தீர்த்து வைக்கிறார்.

Yes, in silence we speak the most eloquent words.

மௌனத்தின் மூலம் நாம் பல அரிய சக்திகளை அடைய முடியும் என்பது திண்ணம்.
சிவபெருமான் ஒரு பக்கம் அகோர வீரபத்திரராக, தக்ஷன் யாகத்தை த்வம்சம் பண்ணும் அதே வேளையில் தக்ஷிணாமூர்த்தியாக ஒரு ஆலமரத்தின் கீழே உட்கார்ந்து கொண்டு மௌனமாக அருள் பாளித்துக்கொண்டு இருக்கிறார்.  மௌனம்தான் முதல். மௌனம்தான் முடிவு.

யோகா மற்றும் மனப்பயிற்ச்சி இவையெல்லாம் அமைதியை ஆழ் மனதில் கொண்டு வருவதற்குத்தான்.

ஐயப்பன் சின்முத்திரை காட்டிக்கொண்டு இருக்கும் படத்தைத்தான் நாம் சபரிமலையில் பார்க்கிறோம்.  கானகத்தில் இருந்துகொண்டு எல்லோருக்கும் அருள் பாலிக்கும் தர்ம சாஸ்தா, மௌனமாக இருந்து கொண்டு நமக்கு வாழ்க்கையின் தத்துவத்தை எடுத்து சொல்கிறார்.

நம் வாழ்க்கையில் பல தடவை நாம் மனைவியிடம் சண்டை போட வேண்டிய நேரம் வரும்போது நாம் மௌனமாக இருப்பதின் மூலம் ஒரு பெரிய பிரளயத்தை தவிர்க்கலாம்.

ரமண மகரிஷியின் ஆருமையான விளக்கம் மௌனத்தைப் பற்றிய ஒரு பிரமிப்பை நமக்கு தருகிறது.  அவர் சொல்கிறார்= மௌனத்தில் உண்மை புதைந்து இருக்கிறது.  இதை நாம் உணர உணர ஒரு கட்டத்தில் மௌனம் தான் உண்மை என்று புரியும்.

உடம்பின் உள்ளே மௌனமாக இருப்பது என்பது நம் உடம்பு, எண்ணங்கள் மேலும் உணர்ச்சிகள்- இவைகளின் ஒன்றிணைப்பு. (Harmony).

கண்ணதாசன் கூட தன் பாடலில் “மௌனமே பார்வையால் ஒரு பாட்டு பாட வேண்டும்” என்று காதல் ரசம் ததும்பும் ஒரு வரியை சொல்கிறார்.

There is one form of art which is superior to all other forms—the art of remaining quiet and silent....All arts serve a limited purpose and provide only momentary joy. But the art of silence and the resultant peace ensures happiness....That all should cultivate. –Shankara of Kanchi, 1958.

ரமணர் மௌனம் அடைவதற்கு பல மார்கங்கள் இருக்கிறது என்கிறார். நல்ல சங்கீதம் கேட்பதன் மூலம் நாம் நம்மை மறந்து இருப்போம்.  (எனக்கு அப்படி ஒரு அனுபவம் பல தடவை ஏற்பட்டிருக்கிறது.  மதுரை மணி அய்யர் அவர்களின் கச்சேரி ரெகார்டிங் கேட்கும்போது, பாலச்சந்தரின் வீணை கேட்கும்போது, “என் தாய் வாழ் எனும் மந்திர நாதமே” என்று சஞ்சய் சுப்ரமணியம் பாடும் போது...)

உபவாசம் இருக்கும்போது நாம் மௌனத்தின் சிறப்பை உணரலாம்.  பட்டினி கிடக்கும்போது பல அவயவங்கள் வேலை செய்யாது. நம் உடம்பு ஒரு தொழிற்சாலை என்று வைத்துக்கொண்டால், அவையவங்கள் வேலை செய்யாது இருக்கும்பொது கிடைக்கும் அமைதி அலாதியானது தான்.

குண்டலினி சக்தி என்று நாம் சொல்வது மௌனத்தின் ஒலி (voice of silence), சக்தியின் வீச்சு, (fiery power) உலகத்தின் அன்னை (world’s mother)

இதற்கும் மேலாக மௌனத்தின் ஒரு ஆச்சர்யமுட்டும் உண்மை என்னவென்றால் நமக்கு மூன்றாவது கண் இருப்பது போல் மூன்றாவது காது இருக்கிறது. தொண்டைக்கு கீழே, இதை புரிந்துகொள்ள வேண்டும் என்றால் மௌனம் அவசியம்.




No comments: