தீபத்தைப் பற்றி:
தீபம் என்றால், நமக்கு கார்த்திகை தீபம் தான் ஞாபகம் வரும். சௌந்தர்ய லஹரியில் பகவ்த் பாதர்,
அம்பாளின் கடாக்ஷ மகிமையைப்
பற்றிப் பேசும்போது, (57)
புண்ணியம் செய்தவனோ, பாபாம்
செய்தவனோ எல்லா ஜீவன்களும் உனக்கு சமம் அல்லவா ? சந்திரனின் கிரகணங்கள்,
காட்டிலும், வீட்டிலும், சமமாகத்தானே பிரகாசிக்கிறது. அதே போல் மஹா பாபியான எனக்கு
உன் கடாக்ஷத்தின் பலனை எனக்குக் கொடு”
என்கிறார்.
தீபம்/சந்திரனின் ஒளி எல்லாம்
ஒன்றுதானே !
தீபம் என்பது எல்லோரும் பார்க்க,
அதன் மூலம் ஒவ்வொருவருக்கும் தீப வடிவில் இறைவன் காக்ஷி கொடுக்கிறான் என்பது
சத்தியம்
இறைவனை ஜோதி வடிவாக கண்டார்கள் ஆழ்வார்கள். நாமாழ்வார் திருவாய் மொழியில்
“ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது
தேசமோ திருவேங்கடத்தானுக்கு ?
நீசனேன் நிறைவு ஒன்ருமில்லேன் என் கண்
பாசம் வைத்த பரஞ்சுடர் ஜோதிக்கே”
திருவேங்கடமுடையானை ஜோதி உருவில் கண்டு முறையிடுகிறார்.
சொனக மகரிஷி, “கார்த்திகை மாதத்தில் விஷ்ணு சந்நிதியில் பக்தியுடன் ஒருவன்
விளக்கு ஏற்றினால் ஏற்படும் புண்ணியம் அளப்பரியது” என்கிறார்.
காஞ்சீபுரத்தில் உள்ள பெருமாளுக்கு “தீபப் பிரகாசர்” என்று பெயர்..
தீப மங்கள ஜோதி நமோ நம என்று முருகனுக்கு ஆரத்தி காட்டும்போது சொல்லும்
ஸ்லோகம்
செம்மகுடியில் ஸஹஸ்ர தீபம்
ஒரு காரியம் எடுத்தால் அதை
முழுவதும் திருப்தியாக செய்வதில் செம்மங்குடி மக்களுக்கு இணையே இல்லை. நாம்
செம்மங்குடியில் நடந்த விஷயங்களைக் கொண்டாட வேண்டும். கொண்டாடும் தருணம் இது. செம்மகுடியில் முதல்
முறையாக பெருமாள் கோவிலில் ஸஹஸ்ர தீபம் ஏற்றி நம் கிராமத்திற்கும், சுற்றி உள்ள
கிராமத்திற்கும் பெருமை சேர்த்திருக்கிறார்கள்.
ஒரு சிறிய கிராமத்தில் உள்ள ஜனங்களை வைத்துக்கொண்டு நம் பெருமாள் கோவிலில்
சஹஸ்ர தீபம் என்ற 1016 விளக்குகளை ஏற்றி ஒரு சாதனை செய்வது
என்பது சாதாரண விஷயம் இல்லை
கார்த்திகை தீபம் டிசம்பர் ஒன்றாம் தேதி நடக்க, அதனைத் தொடர்ந்து கைசிக ஏகாதசி
டிசம்பர் 15 அன்று நம் செம்மங்குடியில் சஹஸ்ர தீபம்.
எனக்கு, ஆனந்தவல்லிக்கு கொடுக்கும் ஒரு முக்கியத்துவத்தை, நம் பெருமாளுக்கு கொடுக்கவில்லையே என்ற குறை ஒன்று. அது ஸ.தீ மூலமாக எனக்கு தீர்ந்து விட்டது
முதல் தடவையாக நம் பெருமாளுக்கும் பண்ண வேண்டும் என்று தோன்றிய நம் அசேஷ மஹா
ஜனங்களுக்கு, குறிப்பாக, கெளரி அண்ணா, ஸ்ரீ. ராஜகோபாலன், மற்றும் அவர்கள்
சஹோதரிகள் வெங்குட்டு மற்றும் பலருக்கும்
நம் பெருமாள் சகல சௌபாக்யங்களும் கொடுக்கட்டும்
பண உதவி செய்து விடலாம் ஆனால் இந்த பெரிய கைங்கர்யம் செய்வதற்கு ஆள், படை
வசதிகள் ? சுற்று வட்டாரத்தில் இருந்து திரளாக வந்திருந்து மற்றும் மாதாஜி
அவர்களுடைய பள்ளி குழந்தைகள், பலர் வந்து கலந்து கொண்டு விளக்கு ஏற்றி கொண்டாடியது
மிகவும் சிறப்பு.
நாம் ஒரு அடி இறைவனை நோக்கி எடுத்து வைத்தால் போதும், இறைவன் பல அடிகள்
எடுத்து நம்மை ரக்ஷிக்க வருவான் என்பதை இந்த ஒரு வைபவம் மூலம் நமக்கு அந்த இறை
புரிய வைக்கிறது
கோவில் மேலே ஏற்றுவதற்கு கொஞ்சம் ஸ்ரமப்பட்டதால், பிராகாரத்தை சுற்றி ஏற்றிக்
கொண்டாடி இருக்கிறார்கள்.
ஒரு ராம நவமி உத்சவம் போன்று, சித்ரா பௌர்ணமி போன்று, புரட்டாசி சனிக்கிழமை
போன்று, இந்த கைங்கர்யமும் வருடா வருடா நடக்கவேண்டும் என்று அந்த பெருமாளைப்
பிரார்த்திப்போம்.
No comments:
Post a Comment