As the stage
is set for a grand galA “tEErtha snAnam”. (holy dip), let us know some facts about
mahAmaham-2016.
The focal
point of this festival, which falls on Feb 22 this year, is the Mahamaham
tank located in the heart of Kumbakonam town, to the southeast of the
famous Adhi Kumbheswarar temple. A
holy dip for salvation once in 12 years.
Hindus
taking a holy dip in Mahamaham on this day, consider this as a great blessing
and people from all over India come for the sacred bath.
The last Mahamaham
was held on March 6, 2004. Mahamaham tank
located in the heart of Kumbakonam town, to the southeast of the famous Adhi
Kumbheshwarar temple. It covers an area
of 6,2 acres and is trapezoidal in shape.
The temple is surrounded by 16 small mandapams (shrines). The tank has 20 holy wells named after the 20
holy rivers of India. People take bath in these wells which are called tirthams
(holy waters).
It is said
that river Ganga and other holy rivers approached lord Shiva with a prayer, a
wish that had long remained unfulfilled.
“Oh Lord, crores of human beings come to us to seek absolution for their
sins and take bath. We have to carry all
the sins they leave with us, some of them unspeakably horrific. Give us a way to cleanse ourselves of these
sins we have had to take from humans. “
Lord
replied, “Oh tirtha dEvatas..! Visits kumbakonam on Mahamaham day which is a
sacred day. Take a dip of Mahamaham tank
and you will be cleaned fully. This is
an incontrovertible truth.”
All the holy
rivers of our punya bhoomi assemble here on the Mahamaham day every 12 years
and any one who has a bath in the tank gets the benefit of having bathed in all
these punya tirthAs.
Some Tamil
reading of
முழு யுக சக்கரத்தின் முடிவில் ஏற்படும் பெரும் பிரளயத்திலிருந்து
தன்னுடைய படைப்புகளையெல்லாம்
பாதுகாக்க அவற்றையெல்லாம் பிரம்ம தேவர் ஒரு குடத்திலிட்டு இமய மலையின் உச்சியில் வைத்தார் என்றும், பிரளயத்தில் இமயமலை உச்சி வரை சென்ற கடல் நீரில் அடித்துச்செல்லப்பட்டு தெற்கே அக்குடம் தரைதட்டிய இடம் தான் 'கும்பகோணம்' என்றழைக்கப்படுகிறது.
அப்படி கரைதட்டிய அமிர்தம் நிரம்பிய குடத்தை அம்பெய்தி உடைத்து அந்த அமிர்தத்தில் நனைந்த மணலை கொண்டு
லிங்கம் ஒன்றை செய்து சிவபெருமான் அதனுள் ஆதிகும்பேஸ்வரராக ஐய்யிக்கியமானர் என்றும் சொல்லப்படுகிறது.
மேலும் அக்குடத்தில் இருந்து வெளிப்பட்ட அமிர்தமே மகாமக குளமாக மாறியது என்றும் அதோடு ஐந்து குரோசம் தொலைவு அதாவது கிட்டத்தட்ட 24கி.மீ அளவுக்கு பரவியதென்றும் கூறப்படுகிறது.
இந்த 24கி.மீ சுற்றளவுக்குள் இருக்கும் திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், தாராசுரம், சுவாமிமலை, திருப்பாடலவனம் ஆகிய இடங்கள் பஞ்சகுரோசத்தலங்கள் என்றழைக்கப்படுகின்றன.
கும்பகோணம்
நகரின் பிராதன கோயிலாக இருப்பது ஆதிகும்பேஸ்வரர் கோயிலாகும்.
அப்பர், சம்பந்தர் ஆகிய சைவக்குரவர்களால்
பாடப்பெற்ற சிறப்புடைய சிவாலயமாகும். காவிரியின் தென்கரையில் அமைந்திருக்கும்
இக்கோயில் 1300ஆண்டுகள்
பழமையானதாகும்.
இக்கோயிலின் திருக்குளமாக இருக்கும் மகாமக குளத்தில் தான் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாசி மாதத்தில் மகாமகத் திருவிழா நடக்கிறது.
மாசி மகக்குளம் கும்பகோணம் நகரின் மையத்தில் 6.2ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது. இந்தியாவில் இருக்கும் மிகப்பெரிய புனித குலங்களுள் இதுவும் ஒன்றாகும்.
இக்கோயிலின் திருக்குளமாக இருக்கும் மகாமக குளத்தில் தான் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாசி மாதத்தில் மகாமகத் திருவிழா நடக்கிறது.
மாசி மகக்குளம் கும்பகோணம் நகரின் மையத்தில் 6.2ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது. இந்தியாவில் இருக்கும் மிகப்பெரிய புனித குலங்களுள் இதுவும் ஒன்றாகும்.
இந்நாளில் முப்பத்துமுக்கோடி தேவர்களும் இக்குளத்திற்கு வந்து புனித நீராடி செல்வதாக நம்பப்படுகிறது.
தேவர்கள் மட்டுமில்லாது கங்கை, யமுனை, சரசுவதி, நர்மதை, சிந்து, காவிரி, கோதாவரி சரயூ, பொருநை ஆகிய நதிகளும் கன்னியர் ரூபமாக வந்து மகாமகக்குளத்தில் நீராடி தங்கள் பாவத்தை போக்கிக்கொள்வதாக ஐதீகம்.
மகாமகக்
குளத்தை சுற்றிலும் பிரம்மதீர்த்தேஸ்வரர்,
முகுந்தேஸ்வரர்,
தானேஸ்வரர், விருஷபேஸ்வரர், பரணேஸ்வரர், கோணேஸ்வரர், பக்திகேஸ்வரர், பைரேஸ்வரர், அகஸ்தீஸ்வரர், வியாசகேஸ்வரர், உமாபகேஸ்வரர், நிருதீஸ்வரர், பிரம்ளேஸ்வரர், கங்காதேஸ்வரர், முக்ததீர்த்தேஸ்வரர், சேஷஸ்தரபாலேஸ்வரர் என 16 சிவலிங்கங்கள் மற்றும் 21 கிணறுகள் அமைந்துள்ளன.
குளத்தை சுற்றியிருக்கும் 21கிணறுகளில் வாயு தீர்த்தம்,கங்கா தீர்த்தம்,பிரும்ம தீர்த்தம்,யமுனா தீர்த்தம்,குபேர தீர்த்தம்,கோதாவரி தீர்த்தம்,ஈசான தீர்த்தம்,நர்மதை தீர்த்தம்,சரஸ்வதி தீர்த்தம்,இந்திர தீர்த்தம்,அக்னி தீர்த்தம்,காவிரி தீர்த்தம்,யம தீர்த்தம்,குமரி தீர்த்தம்,நிருதி தீர்த்தம்,பயோஷினி தீர்த்தம்,தேவ தீர்த்தம் சிவன்,வருண தீர்த்தம், சரயு தீர்த்தம்,கன்யா தீர்த்தம் ஆகிய தீர்த்தங்கள் இருக்கின்றன.
இவற்றில் நீராடுவது பெரும் பாக்கியமாக கருதப்படுகிறது.
12ஆண்டுகள்
கழித்து இவ்வருடம் நடக்கும் மாசி மகத்தில் கலந்துகொண்டு ஆதிகும்பேஸ்வரரை வழிபட்டு மகாமக
குளத்தில் நீராடி பெறற்கரிய ஆன்மீக அனுபவத்தை பெற்றிடுங்கள்.
63 நாயன்மார்களில் ஒருவராகிய நற்சூதர்
என்ற மூர்க்கநாயனார் சிவனடியார்களுக்கு உணவளித்து தொண்டாற்றி வாழ்ந்து சிவனடியடைந்த
தலமாகும். ஈசன் வேடன் ரூபம் தரித்து அமுத
கும்பத்தை சிதைத்தபோது வில்வம் விழுந்த இடம் நாகேஸ்வரர் கோயிலாகவும், உறி விழுந்த
இடம் சோமேஸ்வரர் கோயிலாகவும், பூனூல் விழுந்த இடம் கவுதமேஸ்வரர் கோயிலாகவும், தேங்காய் விழுந்த இடம் அபிமுகேஸ்வரர் கோயிலாகவும், வேடுவர் உருவம் தரித்து பாணம் எய்த இடம் பாணபுரீஸ்வரர் கோயிலாகவும், பூக்கள் விழுந்த இடம் ஆதிகம்பட்ட விஸ்வநாதர்
கோயிலாகவும், கலசத்தின் மற்ற உதிரி பாகங்கள் விழுந்த இடம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலாகவும், கொட்டையூரில் கிணற்றில் அமிர்தம் விழுந்ததால் இடம் கோடீஸ்வரர் கோயிலாகவும், சந்தனம் விழுந்த இடம் காளஹஸ்தீஸ்வர் கோயிலாகவும், கலசத்தின் நடுப்பாகம் விழுந்த இடம் அமிர்தகலசநாதர் கோயிலாகவும்
உருவெடுத்துள்ளது.
No comments:
Post a Comment